Dr. David (Paul) Yonggi Cho (பால் யாங்கி சோ)
பால் யாங்கி சோவைப் பற்றி தெரியாதவர் யாருமே இருக்க முடியாது. உலகில் மிகப் பெரிய கிறிஸ்தவ சபையின் நிறுவனர். Pastor Cho was the founder of the Yoido Full Gospel Church in Seoul, which, at its peak, became the largest Christian congregation in the world, with over 800,000 members. அவரது வாழ்விலிருந்து சில காரியங்கள்.
The Fourth Dimension – நான்காவது பரிமாணம் என்ற புத்தகத்திலிருந்து சில வரிகள்:
பால் யாங்கி சோ, ஊழிய ஆரம்ப நாட்களில், முற்றிலும் வறுமையின் பிடியில் இருந்தார். ஒரு சிறிய அறையில் வசித்தார். எந்த பொருட்களுமே அந்த அறையில் கிடையாது. சாப்பிடுவதும், படிப்பதும், படுப்பதும் எல்லாமே தரையில் தான் செய்து வந்தார். சில மைல் தூரம் நடந்தே சென்று ஊழியம் செய்து வந்தார்.
ஒருநாள் வேதம் படிக்கும்போது. தேவனுடைய வாக்குத்தத்தங்களை வாசித்து பூரித்துப் போய்விட்டார். “இயேசுவின் மேல் விசுவாசம் வைத்து, அவருடைய நாமத்தில் ஜெபித்தால், எல்லாவற்றையும் பெற்றுக்கொள்ள முடியும்” என்று வேதம் சொல்கிறது. “நான் இராஜாதி இராஜாவும், கர்த்தாதி கர்த்தருமாயிருக்கிறவரின் பிள்ளை” என்று வேதம் சொல்கிறது. எனவே,
“பிதாவே, இராஜாதி இராஜாவும் கர்த்தாதி கர்த்தருமாயிருக்கிறவரின் பிள்ளை, மேஜையில்லாமலும், படுக்கை இல்லாமலும், சைக்கிள் இல்லாமலும் ஏன் இருக்க வேண்டும்? பிதாவே, எனக்கொரு மேஜை, நாற்காலி, சைக்கிள் தாரும்” என்று விசுவாசத்தோடு ஜெபித்தாராம்.
ஆறு மாதங்கள் கடந்து விட்டது. எதுவும் நடக்கவில்லை. மழைக்காலத்தில் ஒருநாள், பசியில் வாடி, சோர்ந்து போய், “தேவனே பல மாதங்களாக மேஜை, நாற்காலி, சைக்கிளுக்காக ஜெபிக்கிறேன். நீர் அவைகளைத் தரவில்லை. நான், ஏழை மக்களிடம் பிரசங்கம் செய்யும் ஒரு ஊழியன். நானே பெற்றுக்கொள்ளாதபோது, நான் போய் மற்றவர்களிடம் ‘கேட்டால் தேவன் தருவார்’ என்று எப்படி பிரசங்கிக்க முடியும்? என் ஜெபத்துக்கு பதில் கொடுக்க விரும்பினால், தயவுசெய்து அதை சீக்கிரம் செய்யும்” என்று கேட்டாராம்.
மெல்லிய சத்தத்தில் தேவன் பதில் கொடுத்தாராம். “மகனே உன் ஜெபத்தை நீண்ட நாட்களுக்கு முன்பாகவே நான் கேட்டேன்” என்று.
“அப்படியானால் என் மேஜை, நாற்காலி, சைக்கிள் எல்லாம் எங்கே?” என்று சோ கேட்க,
“பிரச்சனை உன்னிடத்தில் தான் இருக்கிறது. எல்லாரும் அவர்கள் தேவைக்காக என்னிடம் வருகிறார்கள். ஆனால் அவர்கள் கேட்பதில் தெளிவு இல்லை. மேஜை, நாற்காலி, சைக்கிள்களில் பல மாடல்கள் இருப்பது உனக்கு தெரியுமல்லவா! பொதுவாக சைக்கிள் என்று தான் கேட்டாய், என்ன விதமான சைக்கிள் என்று கேட்கவில்லையே! நீ கேட்டது எந்த மாதிரியான சைக்கிள்? எந்த நிறம்? மேசை எப்படிப்பட்டது? நாற்காலி எப்படி இருக்க வேண்டும்? தெளிவாகச் சொல்லு.” என்று தேவன் பதில் கூறினாராம்.
“நான் உம்மை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை, என்னை மன்னியும். எனக்கு இந்த அளவில், வெண்தேக்கினால் செய்யப்பட்ட மேஜையும்(A mahogany desk), இரும்பு சட்டமுள்ள உயர சிறு நாற்காலியும்(A steel chair with rollers), அமெரிக்காவில் செய்யப்பட்ட உயர் ரக சைக்கிளும்(a brand-new American-made bicycle, with a specific design and color) தாரும்” என்று ஜெபித்தாராம்.
அடுத்த நாள் காலையில் அவர் வாசித்த வேத பகுதியில், ரோமர் 4-17 “இல்லாதவைகளை இருக்கிறவைகளைப் போல அழைக்கிற தேவன்” என்று வாசிக்க, அவரது விசுவாசம் இன்னும் பலப்பட்டது.
அவர் பிரசங்கிக்கிற ஒரு கூடார ஆலயத்துக்கு சென்றவர், பிரசங்கம் முடித்து விட்டு, “ஆண்டவர் எனக்கு வெண் தேக்கு மேஜையும், அழகான சுழல் நாற்காலியும், அமெரிக்கா சைக்கிளும் கொடுத்து இருக்கிறார். நான் பெற்றுக்கொண்டேன். அல்லேலூயா” என்று சாட்சி சொல்லி இருக்கிறார். ‘வறுமையில் இருந்த இந்த ஊழியருக்கு எப்படி இவைகள் கிடைத்தது’ என்று அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.
ஆராதனை முடிந்து வீட்டுக்கு போகும்போது, மூன்று இளைஞர்கள் அவரைப் பின்தொடர்ந்து வந்து, “நாங்கள் அந்தப் பொருட்களைக் காண விரும்புகிறோம்” என்றனர். சோ வுக்கு தூக்கி வாரிப்போட்டது.
“என் அறைக்குள் வந்து பாருங்கள்” என்றார். அந்த வாலிபர்களும் வந்து பார்த்தனர். எதுவும் இல்லை.
சோ அந்த வாலிபர்களிடம், “நான் உங்களிடத்தில் சில கேள்வி கேட்பேன். நீங்கள் பதில் சொன்னால் அவைகளை உங்களிடத்தில் காட்டுவேன்” என்று சொல்லி, “உங்கள் தாயின் வயிற்றில் எவ்வளவு காலம் இருந்தீர்கள்?” என்று கேட்டார்.
“ஒன்பது மாதங்கள்” என்றார்கள். (அந்த மூவரிம் ஒருவரான பார்க் என்ற இளைஞர் இப்போது கொரியாவில் உள்ள ஒரு பெரிய சபையின் போதகராம்)
“அந்த 9 மாதங்களும் உங்களை யாருமே பார்க்கவில்லை. அப்படித்தானே!” என்று கேட்க, “ஆம்” என்றார்கள்.
“பிறர் கண்ணுக்கு தெரியாமல், உன் தாயின் வயிற்றில் நீ வளர்ந்தது எவ்வளவு உண்மையோ, அதுபோல மேஜை, நாற்காலி, சைக்கிள் எல்லாம் எனக்குள் உருவாகி வளர்ந்து கொண்டிருக்கிறது. ஏற்ற காலத்தில் வெளிப்படும்” என்றாராம்.
வாலிபர்கள் விழுந்து விழுந்து சிரித்தனர். “பாஸ்டர் பேறுகாலமாக இருக்கிறார். அவர் வயிற்றுக்குள் மேஜை, நாற்காலி வளர்ந்து கொண்டிருக்கிறது” என்று தம்பட்டம் அடித்தார்கள். சபையினரெல்லாம் அவர் வயிற்றைப் பார்த்து கேலி செய்தார்கள்.
ஆனால் குறித்த நாள் வந்தது. ஒரு அமெரிக்கா மிஷனெரி, தன் தேசத்துக்கு திரும்பி போகும்போது, சரியாக என்ன எழுதி வைத்திருந்தாரோ, அதே மேஜை, நாற்காலி மற்றும் சைக்கிளை பால் யாங்கி சோவுக்கு கொடுத்து சென்றாராம். இந்த நிகழ்வு அவரது ஜெப பழக்கத்தை மாற்றியது.
ஆம், நாம் ஜெபிக்கும்போது தெளிவில்லாமல் கேட்கக் கூடாது. குறிப்பாகவும், தெளிவாகவும் ஜெபிக்க வேண்டும். முதலில், சைக்கிள் வேண்டும் என்று பொதுவாகக் கேட்டது, தெளிவில்லாத ஜெபம். இந்த brand, color, gear என்று குறிப்பிட்டு கேட்டது தேவன் கற்றுக்கொடுத்த தெளிவான ஜெபம்.
பால் யாங்கி சோ, ஒரு போதகர் வீட்டுக்கு சென்றபோது, அவரது “மகளுக்கு திருமணம் ஆகவில்லை. 30 வயதுக்கு மேலாகி விட்டது. 10 வருடங்களுக்கு மேலாக ஜெபிக்கிறோம்” என்று அந்த போதகர் வருத்தப்பட்டாராம். சோ போதகரது மகளிடம், ஒரு பேப்பர் எடுத்து வரச் சொல்லி, “நான் கேட்கும் கேள்விகளுக்கு தெளிவாக பதில் எழுது” என்று சொல்லி,
- “உன் கணவர் கறுப்பு நிறமா? புது நிறமா? வெள்ளை நிறமா?” பதில் – புது நிறம்
- “உயரமானவரா? குள்ளமானவரா? இடைப்பட்டவரா? பதில் – உயரம்
- ஒல்லியா? குண்டா? பதில் – அழகான தோற்றம் வேண்டும்
- அவருக்கு பொழுதுபோக்கு என்ன இருக்க வேண்டும்? பதில் – இசை
- அவருக்கு உத்தியோகம் என்ன இருக்க வேண்டும்? பதில் – ஆசிரியர்
இப்படி 10 கேள்விகளுக்கு பதில் எழுதச் சொன்னவர், “இப்பொழுது நீ, இந்த பேப்பரை வைத்து தினமும் தெளிவாக ஜெபி” என்று சொல்லி சென்றாராம். ஒரு வருடம் கழித்து, மீண்டும் அந்த போதகர் வீட்டுக்கு சென்றபோது, அந்த மகளுக்கு திருமணம் முடிந்து சென்றிருந்தாளாம். அப்பெண்ணின் கணவர் ஒரு பள்ளியின் இசை ஆசிரியராம். அப்பெண் எழுதிய 10 பதில்களும் அவரிடம் இருந்ததாம். இதுதான் தெளிவாக ஜெபிக்கிற ஜெபத்தின் வல்லமை.
Pastor David Yonggi Cho (also known as Paul Yonggi Cho) passed away on September 14, 2021, at the age of 85. இவரும் கூட நாம் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர் தான். அவருக்கு தேவன் கற்றுக்கொடுத்த தெளிவான ஜெபத்தின் மூலம், 1960ல் வருடத்துக்கு 1000 ஆத்துமா என்று ஜெபித்தாராம். 1970ல் மாதம் 1000 ஆத்துமா என்று ஜெபித்தாராம். ஒரு வருடத்தில் 12,000 புதிய ஆத்துமாக்கள் கிடைத்தனர். அடுத்த வருடம், வருடத்துக்கு 20,000 ஆத்துமா என்று ஜெபித்தாராம். இப்படித்தான் பெரிய சபையை நிறுவியுள்ளார்.
ஒரு சபையின் சாட்சியை youTubeல் பார்த்தேன். குழந்தை இல்லாத ஒரு தம்பதி, இப்படி “தெளிவான விசுவாசமான ஜெபம்” என்று, விசுவாசத்தோடு, தனக்கு லூசான ஒரு உடை எடுத்து, தன் வயிற்றில் தலையணை வைத்து, தனது 7வது மாத போட்டோ என்று போட்டோ எடுத்து, விசுவாசமாக frame செய்து, வீட்டில் மாட்டி ஜெபித்தாராம். அடுத்த மாதமே கர்ப்பமாகி, 7வது மாதம் அதே உடையில் போட்டோ எடுத்து பார்க்கும்போது, வயிறு கூட அதே போட்டோவில் உள்ளது போல, அப்படியே இருந்ததாம்.
நாம் செய்ய வேண்டியது என்ன? நமது ஜெபத்துக்கு ஒரு டைரி போட்டு, என்ன தேவை இருக்கிறதோ, அதை தெளிவாக எழுதி ஜெபிக்க வேண்டும். எனக்கு “இந்த பொருள் வேண்டும், என் மகன் இவ்வளவு மதிப்பெண் எடுக்க வேண்டும், இந்த நபரிடமிருந்து இப்படிப்பட்ட உதவிகள் வேண்டும்” என்று தெளிவாக எழுதலாமே! கர்த்தரிடமிருந்து பதில் வெண்டுமானால், தெளிவான ஜெபம் தேவை. ஏதோ ஒரு நாள் இரண்டு நாள் அல்ல, பெற்றுக்கொள்ளும் வரையில், அந்த டைரியை வைத்து தினமும் ஜெபிக்க வேண்டும்.
“ஆண்டவரே என்னை ஆசீர்வதியும்” என்று பொதுவாக ஜெபித்தால், வேதத்தில் 8000 வாக்குத்தத்தங்கள் உள்ளன, அதில் எதற்கு ஜெபிக்கிறோம் என்ற தெளிவு இருக்காது. எனவே, எந்த ஆசீர்வாதம் நமக்கு வேண்டும் என்று தெளிவாக ஜெபிக்க வேண்டும்.
“தெளிவில்லா பிரார்த்தனைக்கு தெளிவான பதில் இல்லை;
தெளிவான நம்பிக்கைக்கு தேவனிடமிருந்து தெளிவான பதில் உண்டு.”“கேட்கும்போது குழப்பமில்லாமல் கேள்; தேவன் பதிலளிக்கும் போது அதிசயமாய் தருவார்.”
“தெளிவான பிரார்த்தனை = தெளிவான அதிசயம்.”



Leave a Reply