Thanksgiving

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் (Day – 1)

      Day – 1 (01- டிசம்பர், 2023) உயிரோடு இருப்பதற்காக நன்றி இந்த வருடத்தின் முடிவுக்கு வந்துவிட்டோம். கர்த்தருக்கு நன்றி சொல்வது நமது கடமை. இயேசுவே, நீங்க கொடுத்த ஜீவனுக்காக நன்றி என்று பலமுறை சொல்லி இருப்போம். இன்று அதை யோசித்து பார்த்து நன்றி சொல்லலாமா? என் அனுபவத்தில், கடந்த வருடம் நவம்பர் மாதம் என் தோழியின் பிறந்த நாளுக்கு எல்லாரும் வாழ்த்து அனுப்பினார்கள், Whatsapp Groupல். அப்போது திடீரென கேள்விப்பட்ட செய்தி, அவள் இறந்து…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 2

    Day – 2 (02- டிசம்பர், 2023) நல்ல குடும்பத்துக்காக நன்றி இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள். இன்று நாம் நன்றி சொல்ல இருப்பது நம் குடும்பத்திற்காக. தேவன் நமக்கு குடும்பத்தை தந்திருக்கிறார். நன்றி சொல்வது நம் கடமை. நாம் எப்போதுமே இருப்பதை உணராமல், இல்லாததை நினைத்தே கவலைப்படுபவர்கள். ஒருவேளை, கணவரின் சம்பளம் குறைவு என்றால் அல்லது, கணவர் குடிக்கிறார் என்றால், மனைவி எப்போதும் ஏதாவது சொல்லிக் கொண்டே இருக்கிறார் என்றால், இவரைப் போய் திருமணம் செய்து விட்டோமே…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 3

    Day – 3 (03- டிசம்பர், 2023) அனுதின உணவுக்காக நன்றி இந்த நன்றி சொல்லும் நாளில், இன்று உணவுக்காக நன்றி சொல்லப் போகிறோம். “எல்லாரும்தானே சாப்பிடுகிறார்கள். நான் மட்டும் ஸ்பெஷல் விருந்தா சாப்பிடுகிறேன்?” என்று நினைக்கலாம். ஆனால் உண்மை அதுதான். நாம் விருந்து தான் சாப்பிடுகிறோம். இன்று நம் காஃபியில் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால், அது விருந்து தான். ஏனெனில் எத்தனையோ பேர், ஆசையிருந்தாலும், சுகர் என்பதால் சாப்பிட முடியாமல் இருக்கின்றனர். அசைவ உணவு சாப்பிட்டால்…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 4

    Day – 4 (04- டிசம்பர், 2023) பலவீனத்தில் பெலன் தந்ததற்காக நன்றி இந்த நன்றிக்கு நான் எழுதவே தேவையில்லை. ஒவ்வொருவரும், 1000 நன்றியை வரிசையாக சொல்லலாம். நம் குடும்பத்தில் அவ்வளவு பலவீனங்கள் வந்திருக்கிறது. நம் பெற்றோருக்கு, நம் பிள்ளைகளுக்கு என்று யாரோ ஒருவர் சுகவீனமாய் இருந்திருப்பார்கள். ஆனால் தேவன் பெலனைக் கொடுத்தார் அல்லவா! அதற்காக நன்றி சொல்வோம். என் அனுபவத்தில், இந்த 2023 ஆரம்பிக்கும் போது, ஜனவரி மாதத்தில் ஒருவர் மாற்றி ஒருவர் மருத்துவமனைக்கு சென்றோம்….

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 5

    Day – 5 (05- டிசம்பர், 2023) குறைவுகளை நிறைவாக்கினீர் நன்றி இந்த வருடம் முழுவதும் நம்மை போஷித்தார், ஆதலால் தேவனுக்கு நன்றி சொல்வோம் என்று சபையில் ஊழியர்கள் சொல்லும்போது, அந்த நேரத்தில் கூட, “ஆண்டவரே என் குறையை மாற்றும்” என்று ஜெபிப்பவர்கள் உண்டு. அல்லது, அடுத்த வருடம் இதே ஜெபத்தில் நானும் நன்றி சொல்கிற அளவு உயர வேண்டும் என்று ஜெபிப்பவர்களும் உண்டு. ஆனால் இன்று, நாம் இருக்கிற இந்த நிலைக்கு, நன்றி சொல்ல வேண்டும்…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 6

    Day – 6 (06- டிசம்பர், 2023) விபத்து நடக்காமல் காத்தீர் நன்றி இன்றைய கால கட்டத்தில், தெருவில் நடந்து சென்றால் கூட accident நடக்கிறது. நாம் சரியாக வண்டி ஓட்டி சென்றால் கூட, முன்னால் சென்று கொண்டு இருக்கும் வண்டி, சடன்பிரேக் போட்டால் அவ்வளவு தான். நமக்கு ஆக்ஸிடன்ட். எந்தவொரு பாதுகாப்பும் இல்லாத நிலையில்தான் வெளியே செல்கிறோம். இப்பொழுது சிந்தித்து பார்க்கலாம். நம் பிள்ளைகளோ, பேரக்குழந்தைகளோ, அனுதினமும் பள்ளிக்கு அல்லது கல்லூரிக்கு சென்று வருகிறார்கள். இந்த…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 7

    Day – 7 (07- டிசம்பர், 2023) நீரே மெய்தெய்வம் என்று உணர வைத்ததற்காக நன்றி இந்த தளத்தில் வாசித்துக் கொண்டு இருப்போம் என்றால், நாம் இயேசுவை ஏற்றுக் கொண்டவர்களாகத்தான் இருப்போம். இயேசுவே மேசியா என்பதை அறிந்தவர்கள் நாம். கல்லோ மண்ணோ தெய்வம் அல்ல, நம் தேவனுக்கு உருவம் கிடையாது, ஆனால் நம் தேவன் நமக்குள் வசிக்கிறார். அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்குள்ளும் வாழ்கிறார், ஒவ்வொருவருடனும் பேசுகிறார், அற்புதங்களைச் செய்கிறார். இதெல்லாம் நமக்குத் தெரியும். இப்பொழுது கொஞ்சம் சிந்திப்போமா?…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 8

    Day – 8 (08- டிசம்பர், 2023)  நல்ல நண்பர்கள் தந்தீர் நன்றி இந்த வருடத்தில் தேவன் நமக்கு தந்த நண்பர்களுக்காக நன்றி சொல்ல வேண்டும்.  நமக்கு சில ஆவிக்குரிய நண்பர்கள் இருப்பார்கள், ஒருவேளை சபையில் யாரோ ஒருவராக இருப்பார், அல்லது நாம் இணைந்திருக்கும் ஏதோ ஒரு இடத்தில், ஆவிக்குரிய நண்பர் இருப்பார்கள். நமக்கு ஒரு பிரச்சனை என்றவுடன், எனக்காக ஜெபியுங்கள் என்று சொல்ல ஒரு நண்பர் இருந்தால், அதற்காக நன்றி சொல்ல வேண்டும். சிலருக்கு அந்த…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 9

    Day – 9 (09- டிசம்பர், 2023) அடிமைதனம் வராமல் காத்தீர் நன்றி இன்றைக்கு முக்கியமான ஒரு காரியத்துக்காக நன்றி சொல்லப் போகிறோம். ஆண்டவரே, நான் ஒரு பாவி என்பதை நாம் ஈஸியாக ஒத்துக் கொள்வோம். இயேசுவின் இரத்தம் என்னைக் கழுவி விட்டது, நான் இப்பொழுது நீதிமான் என்பதை நாம் அறிந்தாலும்கூட, பல சமயங்களில் நம்மை பாவியாகவே நினைத்துக் கொள்கிறோம். முதலாவது தேவனுக்கு, நம்மை நீதிமான் ஆக்கியதற்காக நன்றி சொல்வோம். நாம் எல்லாரும் மனிதர்கள், நம்மால் ஒருவரை…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள்Day – 10

    Day – 10 (10- டிசம்பர், 2023) தற்கொலை எண்ணங்களுக்கு விலக்கினீர் செய்தி தாளில் வாசித்த செய்திகளை திரும்பி பார்க்கலாம்.  அப்பா அம்மா ரீசார்ஜ் பண்ணி தராததால், மாணவன் தற்கொலை. நம் காலத்தில், நாம் கேட்ட எல்லாம் நம் பெற்றோர் தந்தார்களா? இல்லையே. ஆனால் நமக்கு தற்கொலை எண்ணம் வரவில்லையே. அதற்காக நன்றி சொல்வோம். வேலையில் அதிக பணிச்சுமை காரணமாக தற்கொலை என்று பார்க்கிறோமே. நமக்கு வேலை சுமையாக இல்லையா? அதிலும் நீங்கள் ஒரு பெண் என்றால்,…