|

நன்றியுடன் 21 நாட்கள் Day – 8

Day – 8 (08- டிசம்பர், 2023)

 நல்ல நண்பர்கள் தந்தீர் நன்றி

இந்த வருடத்தில் தேவன் நமக்கு தந்த நண்பர்களுக்காக நன்றி சொல்ல வேண்டும்.  நமக்கு சில ஆவிக்குரிய நண்பர்கள் இருப்பார்கள், ஒருவேளை சபையில் யாரோ ஒருவராக இருப்பார், அல்லது நாம் இணைந்திருக்கும் ஏதோ ஒரு இடத்தில், ஆவிக்குரிய நண்பர் இருப்பார்கள். நமக்கு ஒரு பிரச்சனை என்றவுடன், எனக்காக ஜெபியுங்கள் என்று சொல்ல ஒரு நண்பர் இருந்தால், அதற்காக நன்றி சொல்ல வேண்டும். சிலருக்கு அந்த நண்பர் குடும்பத்தில், உறவினராக அல்லது உடன் பிறந்தவராக, அல்லது பெற்றோராக, பிள்ளைகளாக இருப்பர். ஜெபிக்க சொல்லும்படி, நம் சபையில் யாரோ ஒருவர் இருப்பார்கள், அல்லது குடும்பத்தில் யாரோ ஒருவர் இருப்பார்கள். அப்படிப்பட்ட உறவுக்காக நன்றி சொல்ல வேண்டும்.

யார் ஒருவராலும், யாரிடமும் 100 சதவீதம் முழுமையாக பகிர்ந்து கொள்ள முடியாது. ஆனால் ஒவ்வொரு பிரச்சனைக்கும், ஒருவரிடம் பகிர்ந்து கொள்ளுமளவு, சில நண்பர்கள் இருக்கிறார்கள் அல்லவா? அதாவது, குடும்பத்தில் உள்ளவர் நெருக்கடி கொடுத்தால், ஜெபத்தேவைக்காக பகிர வெளியே ஒரு நண்பர், வேலை செய்யுமிடத்தில் நெருக்கடி என்றால் பகிர ஒரு குடும்பத்தினர், இப்படி நமக்கு அனேகர் இருக்கிறார்கள். இன்று அனேக குழந்தைகள் தற்கொலைக்கு காரணமே, பகிர்ந்து கொள்ள யாரும் இல்லாத சூழ்நிலை தான். நமக்கு தேவன் கிருபை பாராட்டி இருக்கிறாரே. அதற்காக நன்றி சொல்வோம்.

பண உதவி செய்தால்தான் நண்பர்கள் என்றால், யாருக்கும் நண்பர்களே இருக்க முடியாது. நாம் பேசுவதைக் கேட்க யார் இருக்கிறார்களோ, அவர்கள் தேவன் நமக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு. இந்த பிசியான உலகில், நம் பேச்சையும் கேட்க ஒருவர் இருக்கிறாரே. நன்றி சொல்லலாமே! நம் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு யாரெல்லாம் உதவியாக இருக்கிறார்களோ, அவர்கள் தேவன் தந்த பரிசு.

என் அனுபவத்தில், எனக்கு சில நண்பர்கள் தேவன் கொடுத்தார். நாங்கள் மதிய நேரத்தில் இணைந்து ஜெபித்தோம், பல காரியங்கள் புதிதாக கற்றுக் கொண்டோம். நான் சென்னை, ஒருவர் நாகர்கோவில், மற்றொருவர் துபாய். எங்கெங்கோ இருந்து இணைந்து ஜெபித்தோம். நல்ல நண்பர்கள் மூலமாக தேவன் என்னை வழி நடத்தினார். சபையில் நல்ல ஐக்கியத்தை தந்தார். நல்ல போதகர்கள் வழியாக நல்ல ஆவிக்குரிய வளர்ச்சி கொடுத்தார். கணவருடைய ஜெபக்குழுவில் நல்ல ஐக்கியத்தை தந்தார். கல்லூரியில் படித்த நண்பர் ஒருவர், தினமும் தவறாமல் என் பதிவை வாசித்து, இப்படி எழுது, இது நன்றாக இருந்தது என்று, அவருடைய பிஸி வாழ்க்கையிலும் ஊக்குவிக்கிறார், ஒவ்வொரு பதிவுக்கும், குடும்பத்தினர் சிலர் வாசித்து Thumbs up கொடுத்து ஊக்குவிக்கிறார்கள். நல்ல குடும்ப உறவுகளைத் தந்திருக்கிறார். ஜெபிக்கும் பெற்றோரை தந்திருக்கிறார். ஒவ்வொரு உறவுக்காகவும் தேவனுக்கு நன்றி சொல்கிறேன்.

நம் வாழ்க்கையில் ஒருவேளை நாம் சிலரை முக்கியமானவராக நினைக்காமல் இருப்போம், ஆனால் அவர்கள் நமக்கு நிறைய நேரங்களில் ஆலோசனை தந்திருப்பார்கள். நம்முடன் இருந்திருப்பார்கள். நமக்காக ஜெபித்திருப்பார்கள். அப்படிப்பட்ட யாரை எல்லாம் தேவன் இப்போது, நினைவு படுத்துகிறாரோ, அவர்களுக்காக இன்று நன்றி சொல்லலாமே!

Similar Posts

  • |

    பொருளாதாரத்துக்கான விசுவாச அறிக்கை

    பொருளாதாரத்துக்கான விசுவாச அறிக்கை ஏதோ பாரம்பரியமாக விசுவாச அறிக்கைகளைச் சொன்னால், நிச்சயமாக எந்த பலனும் கிடையாது. நாம் தேவனுடைய பிள்ளை என்கிற அதிகாரத்தை உணர்ந்து, விசுவாசத்தோடு கூறி, அதன் பலனைப் பெற்றுக் கொள்வோம். வசன அறிக்கைகள் பரிசுத்தமுள்ள என் தேவன் எனக்கு கொடுத்த அதிகாரத்தினால், மற்றும் இயேசுவின் நாமத்தினால் நான் அறிக்கையிடுகிறேன். என் கடன்கள் யாவும் கட்டி தீர்ந்தது. எனக்கான பொருளாதார ஆசீர்வாதத்தை நான் கட்டவிழ்க்கிறேன். பரலோகத்திலும் அவை கட்டவிழ்க்கப்படுவதாக. தேவன் எனக்கு கொடுத்த அதிகாரத்தினாலே, என்…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 13

    Day – 13 (13- டிசம்பர், 2023) ஆவிக்குரிய ஆசீர்வாதங்களுக்காக நன்றி நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். எபேசியர் 1 -3 Praised be ADONAI, Father of our Lord Yeshua the Messiah, who in the Messiah has blessed us with every spiritual blessing in heaven. கர்த்தர் நம்மை ஆவிக்குரிய சகல ஆசீர்வாதங்களாலும் ஆசீர்வதித்திருக்கிறார்….

  • |

    விசுவாச அறிக்கை Intro

    விசுவாச அறிக்கை நமது அமைச்சர், திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு, ஏதோ ஒரு பிரச்சனை என்றால், நம்மை போல சாதாரண குடிமக்கள் பயப்படுவது போல அவர் பயப்படுவாரா என்பது சந்தேகமே. ஏனென்றால், அவரது அப்பா, தமிழ் நாட்டின் முதலமைச்சர். ஒரு முதலமைச்சரின் மகன் பயமில்லாமல் வாழ முடியுமானால், ஒரு ராஜாவின் மகன் பயமில்லாமல் வாழ முடியுமென்றால், தேவாதி தேவனின் பிள்ளைகள் நாம் எப்படி வாழ வேண்டும். ஆனால், அப்படிப்பட்ட வாழ்வு வாழ்கிறோமா என்பது சந்தேகமே! அநேக சபைகளில் விசுவாச…

  • |

    விசுவாச அறிக்கை (நீதிமன்ற வழக்கு)

    விசுவாச அறிக்கை (நீதிமன்ற வழக்கு) இன்றைக்கு அனேக கிறிஸ்தவர்களின் கவலை நீதிமன்ற வழக்கு. ஒருவர் தவறு செய்திருந்தால் நீதிமன்றம் செல்ல வேண்டும் என்ற காலம் மாறி, தவறு செய்யாதவர்கள் கூட நீதிமன்றம் செல்லும் நிலை வந்துவிட்டது. தவறு செய்யாதவர்கள் இதனால், அதிக கவலைக்கு உள்ளாகி விடுகின்றனர். விரக்திக்கே சென்று விடுகின்றனர். நமது கஷ்டமான நேரத்தில், நம் வாயால் என்ன அறிக்கையிடுகிறோம் என்பதே நம் கிறிஸ்தவ வாழ்க்கை நிலையைக் காட்டுகிறது. மரணமோ, ஜீவனோ, அது நம் நாவில்தான் இருக்கிறது….

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 7

    Day – 7 (07- டிசம்பர், 2023) நீரே மெய்தெய்வம் என்று உணர வைத்ததற்காக நன்றி இந்த தளத்தில் வாசித்துக் கொண்டு இருப்போம் என்றால், நாம் இயேசுவை ஏற்றுக் கொண்டவர்களாகத்தான் இருப்போம். இயேசுவே மேசியா என்பதை அறிந்தவர்கள் நாம். கல்லோ மண்ணோ தெய்வம் அல்ல, நம் தேவனுக்கு உருவம் கிடையாது, ஆனால் நம் தேவன் நமக்குள் வசிக்கிறார். அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்குள்ளும் வாழ்கிறார், ஒவ்வொருவருடனும் பேசுகிறார், அற்புதங்களைச் செய்கிறார். இதெல்லாம் நமக்குத் தெரியும். இப்பொழுது கொஞ்சம் சிந்திப்போமா?…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 20

    Day – 20 (20- டிசம்பர், 2023) அபிஷேகத்துக்காக நன்றி அப்பா, என் மீதுள்ள உம் அபிஷேகத்துக்காக நன்றி. இந்த 2023ல் எத்தனையோ முறை சோர்ந்து போயிருக்கிறேன், மனம் தளர்ந்து போயிருக்கிறேன், பாவத்தில் விழுந்திருக்கிறேன், வேதத்தை மறந்து ஓடியிருக்கிறேன், உம்மிடம் பேச நேரம் கொடுக்காமல் போயிருக்கிறேன், துணிகரமாக சில காரியங்கள் செய்திருக்கிறேன். உம்மை மறுதலித்திருக்கிறேன், ஊழியர்களை குறை சொல்லி இருக்கிறேன், தேவனுடைய ராஜ்யத்துக்கான வேலையில் ஈடுபடவில்லை, தேவையற்ற வெட்டி கதைகளில் நேரம் செலவழித்தேன், அடுத்தவரை பொறாமையுடன் பார்த்தேன்,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *