|

நன்றியுடன் 21 நாட்கள் Day – 20

Day – 20 (20- டிசம்பர், 2023)

அபிஷேகத்துக்காக நன்றி

அப்பா, என் மீதுள்ள உம் அபிஷேகத்துக்காக நன்றி. இந்த 2023ல் எத்தனையோ முறை சோர்ந்து போயிருக்கிறேன், மனம் தளர்ந்து போயிருக்கிறேன், பாவத்தில் விழுந்திருக்கிறேன், வேதத்தை மறந்து ஓடியிருக்கிறேன், உம்மிடம் பேச நேரம் கொடுக்காமல் போயிருக்கிறேன், துணிகரமாக சில காரியங்கள் செய்திருக்கிறேன். உம்மை மறுதலித்திருக்கிறேன், ஊழியர்களை குறை சொல்லி இருக்கிறேன், தேவனுடைய ராஜ்யத்துக்கான வேலையில் ஈடுபடவில்லை, தேவையற்ற வெட்டி கதைகளில் நேரம் செலவழித்தேன், அடுத்தவரை பொறாமையுடன் பார்த்தேன், சிலரிடம் பெருமையாக நடந்தேன், அகந்தையுடன் இருந்தேன், பிறரை மதிக்க மறந்தேன், ஊர் பெருமை, இன பெருமை பேசினேன். இன்னும் அதிக காரியங்கள் அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால், இவை எல்லாவற்றையும் நான் இப்போது உங்களிடம் சொல்லும்போது, அடுத்த வினாடியே, உங்களிடம் இருந்து எனக்கு கிடைக்கும் பதில், “நான் மன்னித்து விட்டேன் மகளே” என்பதே. இந்த உம் அன்புக்காக நன்றி இயேசப்பா.

எந்த நிலையிலும் என் மீதுள்ள உம் அபிஷேகம் என்னை விட்டு போகவில்லை. சத்துரு, சில காரியங்கள் மூலம் என்னை விழவைக்க நினைத்தது உண்மைதான். ஆனால் என் மீதுள்ள உம் அபிஷேகம், அவன் என்னை தொட விடாமல் என்னை பாதுகாத்தது அல்லவா! அதற்காக நன்றி.

நான் ஊழியம் செய்யாமல் இருக்கலாம். தினமும் வேலைக்கு செல்பவராக இருக்கலாம். ஆனால், என் மீதும் உம் அபிஷேகம் இருக்கிறதல்லவா! நான் இன்று வரை பாதுகாக்கப்பட்டிருக்கிறேன் என்றால், அதற்கு என் மீதுள்ள அபிஷேகம் தான் காரணம். அதற்காக நன்றி இயேசப்பா

அப்பா, என் மீது இருக்கும் உம் அபிஷேகத்துக்காக, உம் பிரசன்னத்துக்காக, உம் வல்லமைக்காக நன்றி இயேசப்பா. என் ஆவி புதுப்பிக்கப்பட்டு, உம்மோடு இணைந்து இருக்கிறது. நான் வேறு, நீர் வேறு அல்ல தகப்பனே. எனக்குள் நீர் இருக்கிறீர், உமக்குள் நான் இருக்கிறேன். இது ஒரு அற்புதமான உறவு. வரையறுக்கப்பட முடியாத உறவு. உம்மைத் தவிர யாரிடமும் கிடைக்காத உறவு. இந்த உறவில் வாழும்படி, என்னை அபிஷேகம் செய்து இருக்கிறீர் அல்லவா! நன்றி இயேசப்பா!

என்னோடு எப்போதும் இருக்கும்படி பரிசுத்த ஆவியானவரை தந்திருக்கிறீர். நான் சோர்ந்து போகும்போது, பெலன் தருபவராக, குழப்பத்தில் இருக்கும்போது, தெளிவின் ஆவியானவராக, பலவீன நேரத்தில் பெலன் தருபவராக என்னோடு இருக்கிறீரே. நன்றி இயேசப்பா. நீர் வருகிற 2024ல் இன்னும் ஆழமாக என்னோடு உறவாடப்போகிறீர் என்று விசுவாசிக்கிறேன். 2024ல் மட்டுமல்ல, என் ஜீவன் உள்ளவரை, என் மீதுள்ள அபிஷேகம் குறையாது என்று விசுவாசிக்கிறேன். அதற்காக நன்றி தகப்பனே. ஆமென்

Similar Posts

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 13

    Day – 13 (13- டிசம்பர், 2023) ஆவிக்குரிய ஆசீர்வாதங்களுக்காக நன்றி நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். எபேசியர் 1 -3 Praised be ADONAI, Father of our Lord Yeshua the Messiah, who in the Messiah has blessed us with every spiritual blessing in heaven. கர்த்தர் நம்மை ஆவிக்குரிய சகல ஆசீர்வாதங்களாலும் ஆசீர்வதித்திருக்கிறார்….

  • |

    நன்றியுடன் 21 நாட்கள்Day – 10

    Day – 10 (10- டிசம்பர், 2023) தற்கொலை எண்ணங்களுக்கு விலக்கினீர் செய்தி தாளில் வாசித்த செய்திகளை திரும்பி பார்க்கலாம்.  அப்பா அம்மா ரீசார்ஜ் பண்ணி தராததால், மாணவன் தற்கொலை. நம் காலத்தில், நாம் கேட்ட எல்லாம் நம் பெற்றோர் தந்தார்களா? இல்லையே. ஆனால் நமக்கு தற்கொலை எண்ணம் வரவில்லையே. அதற்காக நன்றி சொல்வோம். வேலையில் அதிக பணிச்சுமை காரணமாக தற்கொலை என்று பார்க்கிறோமே. நமக்கு வேலை சுமையாக இல்லையா? அதிலும் நீங்கள் ஒரு பெண் என்றால்,…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 17

    Day – 17 (17- டிசம்பர், 2023) சோதனையில் வெற்றி தந்தீர் நன்றி 1 கொரிந்தியர் 10:13 மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார். Tamil Easy Reading Version எல்லா மனிதர்களுக்கும் வரும் சோதனைகளே உங்களுக்கும் வரும். ஆனால் நீங்கள் தேவனை நம்பமுடியும். நீங்கள் தாங்க இயலாத அளவு சோதனைகளை…

  • |

    விசுவாச அறிக்கை புது வீடு

    எபிரெயர் 3:4 ஏனெனில், எந்த வீடும் ஒருவனால் உண்டாக்கப்படும்; எல்லாவற்றையும் உண்டுபண்ணினவர் தேவன். Thiru Viviliam ஏனெனில், ஒவ்வொரு வீட்டையும் கட்டி எழுப்ப ஒருவர் இருப்பது போல, எல்லாவற்றையும் கட்டி எழுப்புகிறவர் ஒருவர் இருக்கிறார்; அவர் கடவுளே. எல்லாவற்றையும் உண்டு பண்ணின தேவன், தற்போது எங்களுக்கென ஒரு வீட்டைக் கொடுத்ததற்காக நன்றி சொல்லுகிறோம். மத்தேயு 7:24,25 24.ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 12

    Day – 12 (12- டிசம்பர், 2023) தெய்வீக பாதுகாப்பிற்காக நன்றி தேவன் நம்மை எவ்வளவோ கிருபையாக, அருமையாக பாதுகாத்து வருகிறார். அதற்காக நன்றி சொல்வது நமது கடமை. இந்த 2023 முழுவதும், கிருபையாக பாதுகாத்து வந்தார் அல்லவா! நம் பிள்ளைகளை, நம் குடும்பத்தாரை தேவன் தான் பாதுகாத்தார் என்பது நிச்சயம். அதற்காக நன்றி சொல்ல வேண்டும். ஒரு மனிதன் கர்த்தரை ஏற்றுக் கொண்டான் என்றாலே அவன், மறுபடியும் பிறந்த அனுபவத்துக்குள் வந்துவிட்டான். அப்போதே தெய்வீக பாதுகாப்பிற்குள்…

  • |

    விசுவாச அறிக்கை (நீதிமன்ற வழக்கு)

    விசுவாச அறிக்கை (நீதிமன்ற வழக்கு) இன்றைக்கு அனேக கிறிஸ்தவர்களின் கவலை நீதிமன்ற வழக்கு. ஒருவர் தவறு செய்திருந்தால் நீதிமன்றம் செல்ல வேண்டும் என்ற காலம் மாறி, தவறு செய்யாதவர்கள் கூட நீதிமன்றம் செல்லும் நிலை வந்துவிட்டது. தவறு செய்யாதவர்கள் இதனால், அதிக கவலைக்கு உள்ளாகி விடுகின்றனர். விரக்திக்கே சென்று விடுகின்றனர். நமது கஷ்டமான நேரத்தில், நம் வாயால் என்ன அறிக்கையிடுகிறோம் என்பதே நம் கிறிஸ்தவ வாழ்க்கை நிலையைக் காட்டுகிறது. மரணமோ, ஜீவனோ, அது நம் நாவில்தான் இருக்கிறது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *