|

நன்றியுடன் 21 நாட்கள் Day – 19

Day – 19 (19- டிசம்பர், 2023)

இரட்சிப்புக்காக நன்றி

தேவன் இந்த உலகத்தை மனிதனிடம் கொடுத்து, பலுகி பெருகுங்கள் என்றும், எல்லாவற்றையும் ஆண்டு கொள்ளுங்கள் என்றும் கூறினார். சாத்தான் சதியால், கீழ்ப்படியாமை வந்து, தேவனோடு இருந்து நெருங்கிய தொடர்பை துண்டித்துப் போட்டது. அதன் பின்னர், இந்த உலகத்தின் அதிபதியாக சாத்தான் இருந்து நம்மை ஆண்டு வந்தான். ஒரு கூட்ட ஜனங்கள் மட்டும் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு, இஸ்ரேல் என்னும் இனமாக வாழ்ந்தார்கள். அவர்களாலும் சாத்தானை ஜெயிக்க முடியவில்லை. அதே இனத்தில், இயேசு பிறந்து, நியாயப்பிரமாணத்துக்கு முழுமையாக கீழ்ப்படிந்து, கீழ்ப்படியாமையின் சாபத்தை தொலைத்து போட்டார்.  சிலுவையில் குற்றமில்லாத இரத்தத்தை சிந்தி, யூதர்களை மட்டுமல்ல, வெளியே இருந்து நம்மையும் மீட்டு விட்டார். இது தான் கிறிஸ்தவம். நம் எல்லாருக்கும் தெரியும்.

முதலாவது நாம் வாழும் காலம் சிறந்த காலம், இதற்காக நாம் தேவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். கிறிஸ்து இரத்தம் சிந்தி மீட்ட பின்னர் நாம் பிறந்திருக்கிறோம். அதுவும் நம் நாட்டில் சுவிசேஷம் அறிவிக்கப்பட்ட பின்னர் நாம் பிறந்திருக்கிறோம். அதுவும், வேத புத்தகம் தாராளமாக கிடைக்கும் காலத்தில் நாம் பிறந்திருக்கிறோம். நிறைய வேத வெளிப்பாடுகள் கிடைக்கும் காலத்தில் நாம் பிறந்திருக்கிறோம். அதற்காக நாம் தேவனுக்கு நன்றி சொல்வோம்.

இஸ்ரவேலர்கள், கடவுளின் குழந்தைகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் இன்னும் மேசியாவாகிய இயேசுவைக் கண்டு கொள்ளவில்லை. ஆனால் நாமோ, ஆவிக்குரிய இஸ்ரவேலாக, ஆபிரகாமின் சந்ததியாக வந்து, இயேசுவைக் கண்டு, அவரது அன்பை ருசித்துக் கொண்டிருக்கிறோம். அதற்காக நன்றி சொல்ல வேண்டும்.

வருடத்தில் ஒரு நாள், பாவ நிவாரண பலி செலுத்த வேண்டும், இது வரை செய்த பாவங்களுக்காக. ஒருவேளை அதன் பிறகு பாவம் செய்து விட்டால், மீண்டும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டும் மன்னிப்பு கேட்பதற்காக. ஆனால் இன்று நாம் அந்த நிலையில் இல்லையே. நாம் பாவம் செய்த ஐந்தாவது நிமிடத்தில், உணர்ந்து மன்னிப்பு கேட்டால், உடனடியாக நம் பாவத்தை மன்னித்து நம்மை கட்டி அரவணைக்க நம் நேசர் இருக்கிறார். இது மிகப் பெரிய கிருபை. இதற்காக எவ்வளவு நன்றி சொல்ல வேண்டும்!

இயேசுவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை விசுவாசித்தால் போதும், நாம் இரட்சிக்கப்பட்டு விட்டோம். நாம் இரட்சிக்கப்பட வேண்டுமானால், நமக்கு தேவையானது ஒன்று தான், விசுவாசம் மட்டும் தான். அதற்காக நன்றி சொல்வோம். அவர் ஒரே பேரான குமாரனை நமக்காக தந்தார். இதைவிட சிறந்த பரிசு Precious gift எதுவும் இருக்காது, அதற்காக நாம் நன்றி சொல்வோம்.

இயேசுவின் உயிர்த்தெழுந்த மகிமையினால், இன்றைக்கு நாம் எந்த காரியத்தையும் செய்து விடலாம். அதற்கான அதிகாரம் நமக்கு கொடுத்திருக்கிறார். ஒரு மனிதன் சுகவீனமாக இருக்கும் போது, இயேசுவின் நாமத்தை(Name) சொல்லி, அந்த மனிதனை சுகப்படுத்தும் அதிகாரம் நம் நாவில் இருக்கிறது. அதற்காக நன்றி சொல்வோம்.

Father God, உம் கிருபை அளவிட முடியாதது, உம் அன்பு அளவிட முடியாதது. இதெல்லாம் எனக்கு புரிய வேண்டும் என்றால், நான் இரட்சிக்கப்பட்டு இருக்க வேண்டும். நான் இரட்சிப்பின் அனுபவத்துக்குள் இருப்பதற்காக நன்றி. நீர் ரொம்ப அற்புதமானவர். பாவிகளை, அப்படியே போகட்டும் என்று விடாமல், அவர்கள் மனந்திரும்ப, சந்தர்ப்பம் கொடுக்கிறீர். அப்படி எனக்கும் ஒரு  சந்தர்ப்பம் கொடுத்தீர், அதனால்தான் நான் இரட்சிக்கப்பட்டு இருக்கிறேன். அதற்காக நன்றி. நீர் எங்களை அழைக்கும்போது, எங்கள் இருதயத்தை விசாலமாக்கி, Yes சொல்ல வைத்தீர். அதற்காக நன்றி. உம் வல்லமை பெரிது. நீர் பெரியவர். அற்புதம் செய்பவர். மகிமை நிறைந்தவர், ஆனால், எங்கள் வாயால் நாங்கள் துதிக்கும்போது, நீர் எங்களுக்குள் இறங்கி வருகிறீர். உம் மகிமையை, உம் பிரசன்ன்னத்தை உணரச் செய்கிறீர். அதற்காக நன்றி. எங்களுக்கு தகுதி இருக்கிறதா என்று தெரியாது, ஆனால் நீர் எங்களை தகுதி படுத்திவிட்டீர், நாங்கள் இப்பொழுது நீதிமான்கள். அதற்காக நன்றி இயேசுவே. நாங்கள் மட்டுமல்ல, எங்களை சேர்ந்தவர்கள், மற்றும், உலகில் உள்ள அனைவரும் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். நீர் கிரியை செய்யும். ஆமென்

Similar Posts

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 16

    Day – 16 (16- டிசம்பர், 2023) தெய்வீக சமாதானத்துக்காக நன்றி தேவனே, நீர் கொடுத்த தெய்வீக சமாதானத்துக்காக நன்றி. நீர் கொடுக்கும் சமாதானம், நிபந்தனையற்றது. அது அளவிட முடியாதது. அதற்கு கால அவகாசம் கிடையாது. நீர் கொடுக்கும் சமாதானம் பூரணமானது. என் நன்மை காலத்தில் மட்டுமல்ல, நீர் என் துன்ப காலத்திலும் எனக்கு சமாதானத்தை தந்தீர் நன்றி அப்பா. உலக மக்கள், தங்கள் வாழ்வில் நன்மையான (good) காரியங்களில், சமாதானமாக இருப்பார்கள். அதேவேளையில், கெட்ட (bad)…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் (Day – 1)

      Day – 1 (01- டிசம்பர், 2023) உயிரோடு இருப்பதற்காக நன்றி இந்த வருடத்தின் முடிவுக்கு வந்துவிட்டோம். கர்த்தருக்கு நன்றி சொல்வது நமது கடமை. இயேசுவே, நீங்க கொடுத்த ஜீவனுக்காக நன்றி என்று பலமுறை சொல்லி இருப்போம். இன்று அதை யோசித்து பார்த்து நன்றி சொல்லலாமா? என் அனுபவத்தில், கடந்த வருடம் நவம்பர் மாதம் என் தோழியின் பிறந்த நாளுக்கு எல்லாரும் வாழ்த்து அனுப்பினார்கள், Whatsapp Groupல். அப்போது திடீரென கேள்விப்பட்ட செய்தி, அவள் இறந்து…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 17

    Day – 17 (17- டிசம்பர், 2023) சோதனையில் வெற்றி தந்தீர் நன்றி 1 கொரிந்தியர் 10:13 மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார். Tamil Easy Reading Version எல்லா மனிதர்களுக்கும் வரும் சோதனைகளே உங்களுக்கும் வரும். ஆனால் நீங்கள் தேவனை நம்பமுடியும். நீங்கள் தாங்க இயலாத அளவு சோதனைகளை…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 2

    Day – 2 (02- டிசம்பர், 2023) நல்ல குடும்பத்துக்காக நன்றி இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள். இன்று நாம் நன்றி சொல்ல இருப்பது நம் குடும்பத்திற்காக. தேவன் நமக்கு குடும்பத்தை தந்திருக்கிறார். நன்றி சொல்வது நம் கடமை. நாம் எப்போதுமே இருப்பதை உணராமல், இல்லாததை நினைத்தே கவலைப்படுபவர்கள். ஒருவேளை, கணவரின் சம்பளம் குறைவு என்றால் அல்லது, கணவர் குடிக்கிறார் என்றால், மனைவி எப்போதும் ஏதாவது சொல்லிக் கொண்டே இருக்கிறார் என்றால், இவரைப் போய் திருமணம் செய்து விட்டோமே…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 18

    Day – 18 (18- டிசம்பர், 2023) அரசியல் தலைவர்களுக்காக நன்றி நமக்கு தேவன் கொடுத்த அரசியல் தலைவர்களுக்காக நன்றி சொல்லப்போகிறோம். திமுக அல்லது அதிமுக என்ற கட்சிகளுக்காக அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு முன்பாக அதிமுக ஆட்சியில் இருந்து, இப்போது திமுக ஆட்சியில் இருக்கிறது. எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், கிறிஸ்தவர்கள் ஆங்காங்கே தாக்கப்பட்டாலும், இன்றும் நம் தமிழ் நாட்டில் ஓரளவு சுவிசேஷம் அறிவிக்கப்படுகிறது அல்லவா! நன்றி சொல்வோம். உண்மையில், இப்போது தமிழ்…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 3

    Day – 3 (03- டிசம்பர், 2023) அனுதின உணவுக்காக நன்றி இந்த நன்றி சொல்லும் நாளில், இன்று உணவுக்காக நன்றி சொல்லப் போகிறோம். “எல்லாரும்தானே சாப்பிடுகிறார்கள். நான் மட்டும் ஸ்பெஷல் விருந்தா சாப்பிடுகிறேன்?” என்று நினைக்கலாம். ஆனால் உண்மை அதுதான். நாம் விருந்து தான் சாப்பிடுகிறோம். இன்று நம் காஃபியில் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால், அது விருந்து தான். ஏனெனில் எத்தனையோ பேர், ஆசையிருந்தாலும், சுகர் என்பதால் சாப்பிட முடியாமல் இருக்கின்றனர். அசைவ உணவு சாப்பிட்டால்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *