|

நன்றியுடன் 21 நாட்கள் Day – 18

Day – 18 (18- டிசம்பர், 2023)

அரசியல் தலைவர்களுக்காக நன்றி

நமக்கு தேவன் கொடுத்த அரசியல் தலைவர்களுக்காக நன்றி சொல்லப்போகிறோம். திமுக அல்லது அதிமுக என்ற கட்சிகளுக்காக அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு முன்பாக அதிமுக ஆட்சியில் இருந்து, இப்போது திமுக ஆட்சியில் இருக்கிறது. எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், கிறிஸ்தவர்கள் ஆங்காங்கே தாக்கப்பட்டாலும், இன்றும் நம் தமிழ் நாட்டில் ஓரளவு சுவிசேஷம் அறிவிக்கப்படுகிறது அல்லவா! நன்றி சொல்வோம்.

உண்மையில், இப்போது தமிழ் நாட்டிலும், எந்த கிராமத்துக்கு சுவிசேஷ ஊழியம் சென்றாலும், மக்கள் தடை பண்ணுகிறார்கள். கணவருடைய ஜெபக்குழுவின் மூலம், நேற்று (16-12-2023) ஒரு கிராமத்துக்கு உதவி செய்ய சகோதரர்கள் சென்றிருந்தார்கள். 187 குடும்பங்களாக, மற்ற மதத்தினரும் சேர்ந்து கூடியிருந்த அந்த கூட்டத்தில் பேச, சகோதரர்களுக்கு அவர்கள் சொன்ன கட்டளை என்ன என்றால், “அல்லேலூயா, ஸ்தோத்திரம், வசனங்கள் என்று எதுவும் சொல்லாமல், சும்மா பேச வேண்டும். அதுவும் 5 நிமிடங்கள் பேசவேண்டும் என்பது தான்” இப்போது முன்பு போல சுவிசேஷம் அறிவிக்க முடியவில்லைதான். ஆனால் கூட்டம் முடிந்த பிறகு, தனித்தனியாக அத்தனை பேரும் ஜெபிக்க கூடினார்கள். ஒவ்வொருவரும் தங்கள் பிரச்சனையை சொல்லி ஜெபிக்க கேட்டார்கள். தேவன் நமக்கு இன்னும் வாசலை திறந்து வைத்திருக்கிறார் என்பதுதான் உண்மை. அதற்காக நாம் தேவனை ஸ்தோத்தரிக்க வேண்டும். இம்மட்டும் கூட்டங்கள் நடத்த தடையாக இல்லாமலிருக்கிற  நம் அரசியல் தலைவர்களுக்காகவும் நாம் நன்றி சொல்ல வேண்டும்.

https://frontline.thehindu.com/news/united-christian-forum-slams-government-denial-of-rising-attacks-on-christians-and-calls-for-independent-probe/article67070728.ece

உத்திரபிரதேசம், கர்நாடகா மாநிலங்களில், எத்தனையோ கஷ்டப்படுகிறார்கள் கிறிஸ்தவர்கள் என்று செய்தியில் படித்தோம். கர்த்தருடைய கிருபையால் ஓரளவு கர்நாடகா பரவாயில்லை என்றாலும், வட மாநிலங்களில் எவ்வளவு நெருக்கப்படுகிறார்கள்.  நாம் இங்கே அவ்வளவு கஷ்டப்படவில்லை. இன்றும் சபைகளில் ஞானஸ்நானம் கொடுக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களில் மத மாற்ற தடை சட்டம் உள்ளது. நம் மாநிலத்தில் இம்மட்டும் தேவன் வாசலைத் திறந்து கொடுத்திருக்கிறார். தேவனுக்கு நன்றி சொல்வோம்.

கிறிஸ்தவர்கள் நெருக்கப்படுகிறார்கள். ஆனால், இம்மட்டும் தேவன் நம்மை பாதுகாத்தாரே. நம் நண்பர்கள் எல்லாரும் கிறிஸ்தவர்களா? இல்லையே. ஆனால் இம்மட்டும் தேவன் நம்மை அனைவரிடமும் நன்றாக பழகும்படி கிருபை செய்தாரே. இந்த மட்டும், நமக்கு தயை செய்கிற அரசியல் தலைவர்களை கொடுத்திருக்கிற தேவனுக்கு நன்றி சொல்வோம். கொடுக்கப்பட்ட இந்த காலத்தை நாம் பிரயோஜனப்படுத்திக்கொள்வோம்.

Similar Posts

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 5

    Day – 5 (05- டிசம்பர், 2023) குறைவுகளை நிறைவாக்கினீர் நன்றி இந்த வருடம் முழுவதும் நம்மை போஷித்தார், ஆதலால் தேவனுக்கு நன்றி சொல்வோம் என்று சபையில் ஊழியர்கள் சொல்லும்போது, அந்த நேரத்தில் கூட, “ஆண்டவரே என் குறையை மாற்றும்” என்று ஜெபிப்பவர்கள் உண்டு. அல்லது, அடுத்த வருடம் இதே ஜெபத்தில் நானும் நன்றி சொல்கிற அளவு உயர வேண்டும் என்று ஜெபிப்பவர்களும் உண்டு. ஆனால் இன்று, நாம் இருக்கிற இந்த நிலைக்கு, நன்றி சொல்ல வேண்டும்…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 16

    Day – 16 (16- டிசம்பர், 2023) தெய்வீக சமாதானத்துக்காக நன்றி தேவனே, நீர் கொடுத்த தெய்வீக சமாதானத்துக்காக நன்றி. நீர் கொடுக்கும் சமாதானம், நிபந்தனையற்றது. அது அளவிட முடியாதது. அதற்கு கால அவகாசம் கிடையாது. நீர் கொடுக்கும் சமாதானம் பூரணமானது. என் நன்மை காலத்தில் மட்டுமல்ல, நீர் என் துன்ப காலத்திலும் எனக்கு சமாதானத்தை தந்தீர் நன்றி அப்பா. உலக மக்கள், தங்கள் வாழ்வில் நன்மையான (good) காரியங்களில், சமாதானமாக இருப்பார்கள். அதேவேளையில், கெட்ட (bad)…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 4

    Day – 4 (04- டிசம்பர், 2023) பலவீனத்தில் பெலன் தந்ததற்காக நன்றி இந்த நன்றிக்கு நான் எழுதவே தேவையில்லை. ஒவ்வொருவரும், 1000 நன்றியை வரிசையாக சொல்லலாம். நம் குடும்பத்தில் அவ்வளவு பலவீனங்கள் வந்திருக்கிறது. நம் பெற்றோருக்கு, நம் பிள்ளைகளுக்கு என்று யாரோ ஒருவர் சுகவீனமாய் இருந்திருப்பார்கள். ஆனால் தேவன் பெலனைக் கொடுத்தார் அல்லவா! அதற்காக நன்றி சொல்வோம். என் அனுபவத்தில், இந்த 2023 ஆரம்பிக்கும் போது, ஜனவரி மாதத்தில் ஒருவர் மாற்றி ஒருவர் மருத்துவமனைக்கு சென்றோம்….

  • |

    விசுவாச அறிக்கை புது வீடு

    எபிரெயர் 3:4 ஏனெனில், எந்த வீடும் ஒருவனால் உண்டாக்கப்படும்; எல்லாவற்றையும் உண்டுபண்ணினவர் தேவன். Thiru Viviliam ஏனெனில், ஒவ்வொரு வீட்டையும் கட்டி எழுப்ப ஒருவர் இருப்பது போல, எல்லாவற்றையும் கட்டி எழுப்புகிறவர் ஒருவர் இருக்கிறார்; அவர் கடவுளே. எல்லாவற்றையும் உண்டு பண்ணின தேவன், தற்போது எங்களுக்கென ஒரு வீட்டைக் கொடுத்ததற்காக நன்றி சொல்லுகிறோம். மத்தேயு 7:24,25 24.ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள…

  • |

    விசுவாச அறிக்கை (நீதிமன்ற வழக்கு)

    விசுவாச அறிக்கை (நீதிமன்ற வழக்கு) இன்றைக்கு அனேக கிறிஸ்தவர்களின் கவலை நீதிமன்ற வழக்கு. ஒருவர் தவறு செய்திருந்தால் நீதிமன்றம் செல்ல வேண்டும் என்ற காலம் மாறி, தவறு செய்யாதவர்கள் கூட நீதிமன்றம் செல்லும் நிலை வந்துவிட்டது. தவறு செய்யாதவர்கள் இதனால், அதிக கவலைக்கு உள்ளாகி விடுகின்றனர். விரக்திக்கே சென்று விடுகின்றனர். நமது கஷ்டமான நேரத்தில், நம் வாயால் என்ன அறிக்கையிடுகிறோம் என்பதே நம் கிறிஸ்தவ வாழ்க்கை நிலையைக் காட்டுகிறது. மரணமோ, ஜீவனோ, அது நம் நாவில்தான் இருக்கிறது….

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 13

    Day – 13 (13- டிசம்பர், 2023) ஆவிக்குரிய ஆசீர்வாதங்களுக்காக நன்றி நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். எபேசியர் 1 -3 Praised be ADONAI, Father of our Lord Yeshua the Messiah, who in the Messiah has blessed us with every spiritual blessing in heaven. கர்த்தர் நம்மை ஆவிக்குரிய சகல ஆசீர்வாதங்களாலும் ஆசீர்வதித்திருக்கிறார்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *