|

விசுவாச அறிக்கை (நீதிமன்ற வழக்கு)

விசுவாச அறிக்கை (நீதிமன்ற வழக்கு)

இன்றைக்கு அனேக கிறிஸ்தவர்களின் கவலை நீதிமன்ற வழக்கு. ஒருவர் தவறு செய்திருந்தால் நீதிமன்றம் செல்ல வேண்டும் என்ற காலம் மாறி, தவறு செய்யாதவர்கள் கூட நீதிமன்றம் செல்லும் நிலை வந்துவிட்டது. தவறு செய்யாதவர்கள் இதனால், அதிக கவலைக்கு உள்ளாகி விடுகின்றனர். விரக்திக்கே சென்று விடுகின்றனர். நமது கஷ்டமான நேரத்தில், நம் வாயால் என்ன அறிக்கையிடுகிறோம் என்பதே நம் கிறிஸ்தவ வாழ்க்கை நிலையைக் காட்டுகிறது. மரணமோ, ஜீவனோ, அது நம் நாவில்தான் இருக்கிறது. இயேசு கிறிஸ்து என்னும் விலையேறப்பெற்ற நாமம் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அவரது பெயரைச் சொல்லி, நம் நாவால் அறிக்கையிட்டு, வெற்றியைப் பெற்றுக் கொள்வோம்.

  1. இயேசுவின் நாமத்தில், இந்த வழக்கின் மீது வெற்றியைப் பேசுகிறேன்.

என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன். யோவான் 14-14

  1. எனக்கு விரோதமாய் வழக்காட இருப்பவர்களோடு நீர் வழக்காடி, என்னை இரட்சிக்கிறீர்.

உன்னோடு வழக்காடுகிறவர்களோடே நான் வழக்காடி, உன் பிள்ளைகளை இரட்சித்துக்கொள்ளுவேன்; ஏசாயா 49-25

  1. என் மீது யாரும் குற்றம் சுமத்த முடியாது. தேவனே என்னை நீதிமான் ஆக்கியிருக்கிறீர்.

தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர். ரோமர் 8-33

  1. கர்த்தர் என்னை நீதிமான் ஆக்குகிறவர். அவர் என் பக்கத்தில் இருக்கிறார். யாராலும் என்மீது குற்றம் சுமத்த இயலாது.

என்னை நீதிமானாக்குகிறவர் சமீபமாயிருக்கிறார்; என்னோடே வழக்காடுகிறவன் யார்? ஏசாயா 50-8

  1. கர்த்தர் எனக்காக எல்லாவற்றையும் செய்து முடித்து விட்டீர்.

கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்; சங்கீதம் 138-8

  1. எனக்கு விரோதமாக பிசாசானவன் என்ன திட்டம் போட்டாலும், இயேசுவின் நாமத்தில் அதை ரத்து செய்கிறேன். விசுவாச வார்த்தையைப் பேசுகிறேன்.

பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள். எபேசியர் 6-16

  1. நாவுகளின் சண்டையிலிருந்து கர்த்தர் என்னைக் காப்பாற்றி, அவருடைய கூடார மறைவில் ஒளித்து வைத்திருக்கிறார்.

மனுஷருடைய அகங்காரத்துக்கு அவர்களை உமது சமுகத்தின் மறைவிலே மறைத்து, நாவுகளின் சண்டைக்கு அவர்களை விலக்கி, உமது கூடாரத்திலே ஒளித்து வைத்துக் காப்பாற்றுகிறீர். சங்கீதம் 31-20

  1. எனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போகும். எனக்கு விரோதமாக இப்போது பேசும் எல்லா நாவையும், நியாயத்தீர்ப்பின் நாளில், நான் அவைகளைக் குற்றப்படுத்துவேன்.

உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோகும்; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்; ஏசாயா 54-17

  1. நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். என் தேவனாகிய கர்த்தர் எனக்காக யுத்தம் செய்வார்.

அவர்களுக்குப் பயப்படீர்களாக; உங்கள் தேவனாகிய கர்த்தர் தாமே உங்களுக்காக யுத்தம் பண்ணுவார் என்று சொன்னேன். உபாகமம் 3-22

  1. தேவன் எனக்கு கொடுத்த வார்த்தையை சீக்கிரமாக நிறைவேற்றப் போகிறார்.

என் வார்த்தையைத் தீவிரமாய் நிறைவேற்றுவேன் எரேமியா 1-22

  1. எனக்கு விரோதமான ஒவ்வொரு அநீதியான குற்றச்சாட்டுகளையும், இயேசுவின் நாமத்தில் கேன்சல் செய்கிறேன்.
  2. எனக்கு விரோதமாக அநீதியாக எழும்பி இருக்கிற, என் எதிரணியின் மீது குழப்பத்தை பேசுகிறேன். இயேசுவின் நாமத்தில் தெய்வீக குழப்பம் அவர்களுக்குள் உண்டாவதாக.
  3. எனக்கு விரோதமாக அவர்களோ, அவர்கள் வழக்கறிஞர்களோ, பேச ஆரம்பிக்கும்போது, அகித்தோப்பேல் கட்டளைப்படி முட்டாள்தனமான வார்த்தைகளை பேசுவார்களாக என்று இயேசுவின் நாமத்தில் கட்டளை கொடுக்கிறேன்.
  4. இயேசுவின் நாமத்தில், இந்த வழக்கில் நான் விரைவாக வெற்றி பெறுவேன் என உறுதியளிக்கிறேன்.
  5. இயேசுவின் நாமத்தில், இந்த வழக்கில், எனக்கு எதிராக வந்த ஒவ்வொருவரின் மீதும் வெற்றியைக் கோருகிறேன். இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தில், வெற்றி எனக்கு வருவதாக.
  6. என்னை இழிவுபடுத்த அவர்கள் எடுத்த ஒவ்வொரு காரியத்திலும், இழிவு அவர்களுக்கே சென்று சேருவதாக. இயேசுவின் நாமத்தில் அவைகளை முடக்குகிறேன்.
  7. எனக்கு விரோதமாக எந்த தீய சக்திக்கும் வல்லமை இல்லை. இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த வல்லமையில், எனக்கு விரோதமாக செயல்படுகிற எல்லா பிசாசின் வல்லமையின் மீது வெற்றியைப் பேசுகிறேன்.
  8. இயேசுவின் நாமத்தில், எனக்கு எதிராக பேசும் பொய் சாட்சிகளைத் தடுத்து, அவர்களே அவர்கள் வலையில் சிக்கும்படி செய்யும்.
  9. இந்த வழக்கின் மீதான எனது வெற்றி, உங்கள் மகனாக அது எனக்கு சொந்தமானது. எந்த பயங்கரமும் என்னை நெருங்காது. நான் பயப்பட மாட்டேன். கவலை அடைய மாட்டேன்.
  10. கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்? கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர், யாருக்கு அஞ்சுவேன்? சங்கீதம் 27-1
  11. கர்த்தராகிய ஆண்டவர் எனக்குத் துணைசெய்கிறார்; ஆகையால் நான் வெட்கப்படேன்; நான் வெட்கப்பட்டுப்போவதில்லையென்று அறிந்திருக்கிறேன்; ஏசாயா 50-7
  12. கர்த்தரோ பயங்கரமான பராக்கிரமசாலியாய் என்னோடு இருக்கிறார், ஆகையால் என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் மேற்கொள்ளாமல் இடறுவார்கள்; தங்கள் காரியம் வாய்க்காதபடியால் மிகவும் வெட்கப்படுவார்கள்; மறக்கப்படாத நித்திய இலச்சை அவர்களுக்கு உண்டாகும். எரேமியா 20-11
  13. இயேசு எனக்காக விட்டுச் சென்ற சமாதானம் இருக்கிறது. நான் பயப்படவும் கலங்கவும் மாட்டேன். அவர் என்னை விட்டு விலகவும் மாட்டார். என்னைக் கைவிடவும் மாட்டார்.
  14. கர்த்தருக்கு காத்திருக்கிற நான், இயேசுவின் நாமத்தில் புதுபெலனைப் பெற்றுக்கொள்கிறேன். நான் ஓடினாலும் இளைப்படைய மாட்டேன். நடந்தாலும் சோர்ந்து போக மாட்டேன்.

கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைத்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள். ஏசாயா 40-31

  1. நீதிபதியின் முன் நான் நிற்கும்போது, உம்முடைய இரக்கமும், தயவும், கிருபையும் இருக்கட்டும். சரியாக பேச ஞானத்தை தாரும்.
  2. இயேசுவின் இரத்தத்தால், என் வழக்கறிஞரின் ஆவி, ஆத்துமா, சரீரத்தை நான் பெலப்படுத்துகிறேன்.
  3. எனக்கும், என் வழக்கறிஞருக்கும், எல்லா எதிர்ப்புகளையும் அடக்க, இயற்கைக்கு அப்பாற்பட்ட ஞானம் வழங்கும். (Supernatural Wisdom)
  4. எந்த கேள்விக்கு நான் பதில் சொன்னாலும், நான் சொல்லப்போகும் பதில் ஆவியானவர் தருவதாக இருக்கட்டும்.
  5. இயேசுவின் நாமத்தில், நீதிபதியின் பார்வையில் எனக்கு தயவு, இரக்கம் கிடைப்பதாக.
  6. என்னை ஆதரிக்கும் ஒவ்வொருவருக்கும் தெய்வீக ஞானம் கிடைப்பதாக.
  7. இயேசுவின் நாமத்தில், என்னை சூந்திருக்கும் அக்கிரமங்களின் மீது நான் வெற்றியைப் பேசுகிறேன்.
  8. எனக்கு தீங்கு செய்ய நினைக்கிற எல்லா மனிதர்களுக்கும், இயேசுவின் நாமத்தில் குழப்பதைக் கூறுகிறேன்.
  9. வெற்றி இயேசுவின் பிள்ளையாகிய என்னுடையது. என் அப்பா பெயரில் வெற்றியை பேசுகிறேன். சீக்கிரமாக இந்த வழக்கு முடித்து சந்தோஷமான சாட்சியாக என் தேவன் என்னை உயர்த்தியதற்காக நன்றி சொல்கிறேன். ஆமென்

Similar Posts

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 8

    Day – 8 (08- டிசம்பர், 2023)  நல்ல நண்பர்கள் தந்தீர் நன்றி இந்த வருடத்தில் தேவன் நமக்கு தந்த நண்பர்களுக்காக நன்றி சொல்ல வேண்டும்.  நமக்கு சில ஆவிக்குரிய நண்பர்கள் இருப்பார்கள், ஒருவேளை சபையில் யாரோ ஒருவராக இருப்பார், அல்லது நாம் இணைந்திருக்கும் ஏதோ ஒரு இடத்தில், ஆவிக்குரிய நண்பர் இருப்பார்கள். நமக்கு ஒரு பிரச்சனை என்றவுடன், எனக்காக ஜெபியுங்கள் என்று சொல்ல ஒரு நண்பர் இருந்தால், அதற்காக நன்றி சொல்ல வேண்டும். சிலருக்கு அந்த…

  • |

    பொருளாதாரத்துக்கான விசுவாச அறிக்கை

    பொருளாதாரத்துக்கான விசுவாச அறிக்கை ஏதோ பாரம்பரியமாக விசுவாச அறிக்கைகளைச் சொன்னால், நிச்சயமாக எந்த பலனும் கிடையாது. நாம் தேவனுடைய பிள்ளை என்கிற அதிகாரத்தை உணர்ந்து, விசுவாசத்தோடு கூறி, அதன் பலனைப் பெற்றுக் கொள்வோம். வசன அறிக்கைகள் பரிசுத்தமுள்ள என் தேவன் எனக்கு கொடுத்த அதிகாரத்தினால், மற்றும் இயேசுவின் நாமத்தினால் நான் அறிக்கையிடுகிறேன். என் கடன்கள் யாவும் கட்டி தீர்ந்தது. எனக்கான பொருளாதார ஆசீர்வாதத்தை நான் கட்டவிழ்க்கிறேன். பரலோகத்திலும் அவை கட்டவிழ்க்கப்படுவதாக. தேவன் எனக்கு கொடுத்த அதிகாரத்தினாலே, என்…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 4

    Day – 4 (04- டிசம்பர், 2023) பலவீனத்தில் பெலன் தந்ததற்காக நன்றி இந்த நன்றிக்கு நான் எழுதவே தேவையில்லை. ஒவ்வொருவரும், 1000 நன்றியை வரிசையாக சொல்லலாம். நம் குடும்பத்தில் அவ்வளவு பலவீனங்கள் வந்திருக்கிறது. நம் பெற்றோருக்கு, நம் பிள்ளைகளுக்கு என்று யாரோ ஒருவர் சுகவீனமாய் இருந்திருப்பார்கள். ஆனால் தேவன் பெலனைக் கொடுத்தார் அல்லவா! அதற்காக நன்றி சொல்வோம். என் அனுபவத்தில், இந்த 2023 ஆரம்பிக்கும் போது, ஜனவரி மாதத்தில் ஒருவர் மாற்றி ஒருவர் மருத்துவமனைக்கு சென்றோம்….

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 15

    Day – 15 (15- டிசம்பர், 2023) ஆவிக்குரிய யுத்தத்தில் துணை நின்றீர் நன்றி பல நேரங்களில், சாத்தான் சில உத்திகளைப்(Strategies) பயன்படுத்தி, நம்மை மேற்கொள்ள பார்ப்பான். ஏமாற்றுதல்(deception), குற்றச்சாட்டு(accusation) ,அலட்சியம்(negligence), கிளர்ச்சி(rebelliousness), பயம்(fear), தெய்வ பக்தியின்மை(ungodliness), சோதனை(temptations) போன்ற பல காரியங்கள் நம் வாழ்வில் இருக்கும். சிலர் நம் கூடவே இருப்பார்கள், ஏமாற்றி விட்டு போயிருப்பார்கள்… நம்மை எல்லாரும் குற்றம்சாட்டி பேசுவார்கள்… மதிப்பு கொடுக்காமல் நம்மை அலட்சியப்படுத்துவார்கள்… நமக்கு நிறைய சோதனை வரும்… நம் நண்பர்களுக்குள்,…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 7

    Day – 7 (07- டிசம்பர், 2023) நீரே மெய்தெய்வம் என்று உணர வைத்ததற்காக நன்றி இந்த தளத்தில் வாசித்துக் கொண்டு இருப்போம் என்றால், நாம் இயேசுவை ஏற்றுக் கொண்டவர்களாகத்தான் இருப்போம். இயேசுவே மேசியா என்பதை அறிந்தவர்கள் நாம். கல்லோ மண்ணோ தெய்வம் அல்ல, நம் தேவனுக்கு உருவம் கிடையாது, ஆனால் நம் தேவன் நமக்குள் வசிக்கிறார். அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்குள்ளும் வாழ்கிறார், ஒவ்வொருவருடனும் பேசுகிறார், அற்புதங்களைச் செய்கிறார். இதெல்லாம் நமக்குத் தெரியும். இப்பொழுது கொஞ்சம் சிந்திப்போமா?…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள்Day – 10

    Day – 10 (10- டிசம்பர், 2023) தற்கொலை எண்ணங்களுக்கு விலக்கினீர் செய்தி தாளில் வாசித்த செய்திகளை திரும்பி பார்க்கலாம்.  அப்பா அம்மா ரீசார்ஜ் பண்ணி தராததால், மாணவன் தற்கொலை. நம் காலத்தில், நாம் கேட்ட எல்லாம் நம் பெற்றோர் தந்தார்களா? இல்லையே. ஆனால் நமக்கு தற்கொலை எண்ணம் வரவில்லையே. அதற்காக நன்றி சொல்வோம். வேலையில் அதிக பணிச்சுமை காரணமாக தற்கொலை என்று பார்க்கிறோமே. நமக்கு வேலை சுமையாக இல்லையா? அதிலும் நீங்கள் ஒரு பெண் என்றால்,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *