|

நன்றியுடன் 21 நாட்கள் Day – 15

Day – 15 (15- டிசம்பர், 2023)

ஆவிக்குரிய யுத்தத்தில் துணை நின்றீர் நன்றி

பல நேரங்களில், சாத்தான் சில உத்திகளைப்(Strategies) பயன்படுத்தி, நம்மை மேற்கொள்ள பார்ப்பான். ஏமாற்றுதல்(deception), குற்றச்சாட்டு(accusation) ,அலட்சியம்(negligence), கிளர்ச்சி(rebelliousness), பயம்(fear), தெய்வ பக்தியின்மை(ungodliness), சோதனை(temptations) போன்ற பல காரியங்கள் நம் வாழ்வில் இருக்கும். சிலர் நம் கூடவே இருப்பார்கள், ஏமாற்றி விட்டு போயிருப்பார்கள்… நம்மை எல்லாரும் குற்றம்சாட்டி பேசுவார்கள்… மதிப்பு கொடுக்காமல் நம்மை அலட்சியப்படுத்துவார்கள்… நமக்கு நிறைய சோதனை வரும்… நம் நண்பர்களுக்குள், நம் குடும்பத்துக்குள் கிளர்ச்சி வரும்… வாழவே பயமாக இருக்கும் சூழல் இருக்கும்… இதெல்லாம் ஒரு வகையான ஆவிக்குரிய யுத்தம்தான்.

இத்தனை காரியங்கள் கொண்டுவந்து, நம்மை தோற்கடிக்க சாத்தான் வகை தேடினாலும், இன்னும் நாம் விசுவாசத்தில் இருந்து விழுந்து விடாமல், “இயேசுவே” என்று அவரிடமே செல்கிறோம் அல்லவா! இந்த ஒரு வெற்றிக்காகவே நாம் அவருக்கு நன்றி சொல்லலாம்.  ஆம், நாம் எந்த பிரச்சனை வந்தாலும், நம் விசுவாசத்தை தளர விடவில்லை. அவரை மாத்திரமே நோக்கி பார்க்கிறோம். இதற்காக நன்றி சொல்வோம்.

நாம் ஜெபித்து அனேக காரியங்களில் வெற்றி பெற்றிருக்கிறோம். தானியேல் ஜெபிக்கும்போது, உடனே தூதனுக்கு, தானியேலுக்கு பதில் கொடுக்கும்படி, கட்டளை வெளிப்பட்டது. ஆனால், பதிலைக் கொண்டு வர விடாமல், பெர்சிய தேசத்தின் அதிபதி (பெர்சிய தேசத்தின் மீது ஆளுகை கொண்ட சாத்தான்) தடுக்கிறான். 21 நாட்கள் கழித்து தான், தானியேலுக்கு பதில் கிடைக்கிறது. தானியேலுக்கே 21 நாட்கள் தேவைப்பட்டது, தானியேல் எப்படிப்பட்டவர்? ராஜா ஜெபிக்க கூடாது என்று கட்டளையிட்டாலும் ஜெபிக்கிறவர், சிங்க கெபிக்குள் போட்டாலும் ஜெபிக்கிறவர். அப்படிப்பட்ட அவருக்கே அவ்வளவு நாட்கள் என்றால் நமக்கு??? ஆனால் நம்மை தேவன் கைவிடவில்லையே. நாம் ஜெபிக்கிற காரியங்களைப் பெற்றுக்கொண்டு தான் இருக்கிறோம். ஒருவேளை இன்று தாமதமாக தெரிந்தாலும், தேவன் நமக்காக செய்வார் என்ற விசுவாசம் இருக்கிறதல்லவா! தேவன் நமக்கு பதில் கொடுத்த எல்லா கரியங்களுக்காகவும் நன்றி சொல்வோம். அது எல்லாமே ஒரு ஆவிக்குரிய யுத்தத்தை முடித்து தான் நம் கைகளில் வந்திருக்கிறது. அதற்காக நன்றி சொல்வோம்.  இன்றும் நமக்கான யுத்தம் நடந்துகொண்டு தான் இருக்கிறது, அதை எண்ணி நன்றி சொல்வோம்.

பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, அவருடைய ஆவியினாலே ஆகும் என்று வேதம் சொல்கிறது. அவருடைய ஆவி எங்கு இருக்கிறது? நமக்குள் இருக்கிறது. கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பிய அதே ஆவியானவர், இன்று நமக்குள்ளும் இருக்கிறார். அவர் மரணத்தை ஜெயித்தார், சாத்தானை தோற்கடித்தார், அவர் தங்கும் ஆலயம் நாம். இவ்வளவு பெரிய பாக்கியம் தேவன் நமக்குக் கொடுத்ததற்காக நன்றி சொல்வோம். அந்த ஆவியானவரே நமக்குள் இருக்கும்போது, நாம் ஆவிக்குரிய யுத்தத்தில் தோற்றுப் போவோமா?

  1. நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.
    12. ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.
    13. ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.
    14. சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும், நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும்;
    15. சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும்;
    16. பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள்.
    17. இரட்சணியமென்னும் தலைச்சீராவையும், தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.
    18. எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள்.

எபேசியர் 6

இந்த வசனங்களை விவரிக்க தேவை இல்லை. அனைத்தும் நாம் அறிந்ததே. நாம் ஆவிக்குரிய யுத்தத்தில் ஜெயிப்பதற்கு வேத வசனத்தை பட்டயமாக நம் கைகளில் கொடுத்திருக்கிறார். ஒருவேளை மார்ட்டின் லூத்தர் காலத்துக்கு முன் நாம் பிறந்திருந்தால், வேத புத்தகம் கிடைத்திருக்கவே செய்யாது. இன்று வேதம் நம் கைகளில் தவழ்கிறது. விசுவாச வார்த்தைகளைப் பேச நமக்கு தடை கிடையாது. இயேசு சிலுவையில் வெற்றியை பெற்றதால், நாமும் வெற்றி பெற்றவர்களாக இருக்கிறோம். இதற்காக கர்த்தருக்கு நன்றி சொல்ல வேண்டும்.

Similar Posts

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 5

    Day – 5 (05- டிசம்பர், 2023) குறைவுகளை நிறைவாக்கினீர் நன்றி இந்த வருடம் முழுவதும் நம்மை போஷித்தார், ஆதலால் தேவனுக்கு நன்றி சொல்வோம் என்று சபையில் ஊழியர்கள் சொல்லும்போது, அந்த நேரத்தில் கூட, “ஆண்டவரே என் குறையை மாற்றும்” என்று ஜெபிப்பவர்கள் உண்டு. அல்லது, அடுத்த வருடம் இதே ஜெபத்தில் நானும் நன்றி சொல்கிற அளவு உயர வேண்டும் என்று ஜெபிப்பவர்களும் உண்டு. ஆனால் இன்று, நாம் இருக்கிற இந்த நிலைக்கு, நன்றி சொல்ல வேண்டும்…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 18

    Day – 18 (18- டிசம்பர், 2023) அரசியல் தலைவர்களுக்காக நன்றி நமக்கு தேவன் கொடுத்த அரசியல் தலைவர்களுக்காக நன்றி சொல்லப்போகிறோம். திமுக அல்லது அதிமுக என்ற கட்சிகளுக்காக அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு முன்பாக அதிமுக ஆட்சியில் இருந்து, இப்போது திமுக ஆட்சியில் இருக்கிறது. எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், கிறிஸ்தவர்கள் ஆங்காங்கே தாக்கப்பட்டாலும், இன்றும் நம் தமிழ் நாட்டில் ஓரளவு சுவிசேஷம் அறிவிக்கப்படுகிறது அல்லவா! நன்றி சொல்வோம். உண்மையில், இப்போது தமிழ்…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 3

    Day – 3 (03- டிசம்பர், 2023) அனுதின உணவுக்காக நன்றி இந்த நன்றி சொல்லும் நாளில், இன்று உணவுக்காக நன்றி சொல்லப் போகிறோம். “எல்லாரும்தானே சாப்பிடுகிறார்கள். நான் மட்டும் ஸ்பெஷல் விருந்தா சாப்பிடுகிறேன்?” என்று நினைக்கலாம். ஆனால் உண்மை அதுதான். நாம் விருந்து தான் சாப்பிடுகிறோம். இன்று நம் காஃபியில் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால், அது விருந்து தான். ஏனெனில் எத்தனையோ பேர், ஆசையிருந்தாலும், சுகர் என்பதால் சாப்பிட முடியாமல் இருக்கின்றனர். அசைவ உணவு சாப்பிட்டால்…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 21

    Day – 21 (21- டிசம்பர், 2023) கடைசி கால எழுப்புதலுக்காக நன்றி கடைசி கால எழுப்புதல் என்பது சுக்கோத் அனுபவம். அது ஆவியில் நடக்கிற அனுபவம். மூன்றாம் பெந்தெகோஸ்தே, Joy anointing என்றெல்லாம் அழைக்கப்படுகிறது என்று பண்டிகைகள் பற்றிய பதிவில் அறிந்தோம். இந்த கடைசி கால எழுப்புதலில் என்ன நடக்கும்? ஜனங்கள் கூட்டம்கூட்டமாக இரட்சிக்கப்படுவார்கள். அனேக அற்புத அடையாளங்கள் நடக்கும். மறுரூப அனுபவம் நடக்கும். இன்னும் பல காரியங்கள் சொல்லலாம். ஆனால், இன்று கூட ஆங்காங்கே…

  • |

    விசுவாச அறிக்கை புது வீடு

    எபிரெயர் 3:4 ஏனெனில், எந்த வீடும் ஒருவனால் உண்டாக்கப்படும்; எல்லாவற்றையும் உண்டுபண்ணினவர் தேவன். Thiru Viviliam ஏனெனில், ஒவ்வொரு வீட்டையும் கட்டி எழுப்ப ஒருவர் இருப்பது போல, எல்லாவற்றையும் கட்டி எழுப்புகிறவர் ஒருவர் இருக்கிறார்; அவர் கடவுளே. எல்லாவற்றையும் உண்டு பண்ணின தேவன், தற்போது எங்களுக்கென ஒரு வீட்டைக் கொடுத்ததற்காக நன்றி சொல்லுகிறோம். மத்தேயு 7:24,25 24.ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 2

    Day – 2 (02- டிசம்பர், 2023) நல்ல குடும்பத்துக்காக நன்றி இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள். இன்று நாம் நன்றி சொல்ல இருப்பது நம் குடும்பத்திற்காக. தேவன் நமக்கு குடும்பத்தை தந்திருக்கிறார். நன்றி சொல்வது நம் கடமை. நாம் எப்போதுமே இருப்பதை உணராமல், இல்லாததை நினைத்தே கவலைப்படுபவர்கள். ஒருவேளை, கணவரின் சம்பளம் குறைவு என்றால் அல்லது, கணவர் குடிக்கிறார் என்றால், மனைவி எப்போதும் ஏதாவது சொல்லிக் கொண்டே இருக்கிறார் என்றால், இவரைப் போய் திருமணம் செய்து விட்டோமே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *