|

நன்றியுடன் 21 நாட்கள் Day – 14

Day – 14 (14- டிசம்பர், 2023)

புதிய ஆரம்பங்களுக்காக நன்றி

இன்றைய தினத்தில் நாம் நன்றி சொல்ல இருப்பது, நம் வாழ்வில் நடந்த புதிய ஆரம்பங்களுக்காக. என் வாழ்வில் புதிய ஆரம்பம் என்று என்ன நடந்தது? அப்படியே தான் போய்க்கொண்டிருக்கிறது என்று நாம் நினைக்கலாம். நம் வாழ்வில் என்ன புதிய ஆரம்பங்கள் நடந்தது என்று யோசித்து, அதற்காக நன்றி சொல்லப் போகிறோம்.

தேவன் நமக்கு புதிய இருதயத்தை தந்தார் அல்லவா! சிலர் மீது அவர்கள் செய்த காரியத்தினால், நமக்கு கசப்பு இருந்திருக்கும், ஆனால் ஒருகட்டத்தில், “அவர்களைப் பற்றி நினைத்து என்ன ஆகப்போகிறது” என்று, அதை நினைக்காமல், அல்லது நம் கசப்பை மறந்து வாழ்கிறோம் அல்லவா! அப்போது, கசப்பான இருதயம் போய், நமக்கு புதிய இருதயம் தேவன் கொடுத்து இருக்கிறார். அதற்காக தேவனுக்கு நன்றி சொல்வோம்.

சில நேரங்களில், நமக்கு பணத்தேவைகள் இருந்திருக்கும். என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த சூழ்நிலையில், அற்புதமாக நடத்தினார் அல்லவா! இயேசுவை ஏற்றுக்கொண்ட எல்லாருமே ஏதோ ஒரு சூழலில் இதை அனுபவித்திருப்போம். என்ன செய்வது என்று பயந்த வேளைகளில், புதிய ஆரம்பத்தைக் கொடுத்து வழி நடத்தினார் அல்லவா! அதற்காக தேவனுக்கு நன்றி சொல்வோம்.

அவருடைய கிருபைகள் ஒவ்வொரு நாளும் புதிதாக இருக்கிறது என்று வேதத்தில் படிக்கிறோம். அப்படியானால், இந்த வருடம் முழுவதிலும், நமக்கு எத்தனை கிருபைகள் கொடுத்திருப்பார்! ஒரு நாள் தயவு என்ற கிருபையை கொடுத்திருப்பார், ஒரு நாள் ஆசீர்வாதம் என்ற கிருபையைக் கொடுத்திருப்பார், ஒரு நாள் பாதுகாப்பு என்ற கிருபையைக் கொடுத்திருப்பார், ஒரு நாள் சந்தோஷம் என்ற கிருபையைக் கொடுத்திருப்பார். ஒரு நாள் ஆறுதல் என்ற கிருபையைக் கொடுத்திருப்பார். ஒரு நாள் அன்பு என்ற கிருபையைக் கொடுத்திருப்பார். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த வருடம் முழுவதிலும், அவர் கொடுத்த புது கிருபைக்காக நன்றி சொல்லலாம்.

தேவன் நமக்கு புதிய ஆவியைக் கொடுத்தார், நன்றி சொல்லலாம். நமது சூழலால், நம் ஆத்துமா சோர்ந்து போய்க் காணப்பட்டிருக்கும், ஆனால் நாம் வேதத்தை எடுத்து படிக்கும்போது, அல்லது அவருடைய வார்த்தையை ஊழியர் மூலமாகக் கேட்கும்போது, நம் விசுவாசம் தட்டி எழுப்பப்பட்டது அல்லவா! சோர்ந்து இருந்து ஆவி, உற்சாகமாக மாறியது அல்லவா! அந்த புதிய தொடக்கத்துக்காக நன்றி சொல்லலாம்.

நாம் பழைய மனுஷனைக் களைந்து போட்டு, புது சிருஷ்டி ஆகியிருக்கிறோம் அல்லவா! என்றைக்கு நாம் இரட்சிக்கப்பட்டோமோ, அன்றே புது சிருஷ்டி ஆகி விட்டோம். ஆதாமின் DNA நம்மிலிருந்து விலகி, கிறிஸ்துவின் DNA நமக்குள் வந்து விட்டது. இயேசுவின் சொந்த பிள்ளைகளாகி விட்டோம். நமக்குள் வந்த அந்த புதிய ஆரம்பத்துக்காக நன்றி சொல்லலாமே!

புதிய வருடம் 2023ஐ காணச் செய்தார் அல்லவா! 2023ல் ஒவ்வொரு புதிய மாதத்தையும் காணச்செய்தார் அல்லவா! அதற்காக நன்றி சொல்வோம். அனேக மரணங்கள் நடந்தாலும், நாம் 2024ஐ காணப்போகிறோம் என்று கர்த்தருக்குள் விசுவாசிக்கிறோம் அல்லவா! அதற்காக நன்றி சொல்வோம்.

இது போக, நம் பிள்ளைகள் படிப்பில் புதிய ஆரம்பங்கள், நம் வேலையில் புதிய ஆரம்பங்கள், புதிய சேமிப்பு திட்டங்கள், புதிய பொருட்கள் வாங்கி இருப்போம், இன்னும் பல நன்மைகள் செய்தாரே. இந்த புதிய ஆரம்பங்களை நினைவு கூர்ந்து தேவனுக்கு நன்றி சொல்வோம்.

Similar Posts

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 17

    Day – 17 (17- டிசம்பர், 2023) சோதனையில் வெற்றி தந்தீர் நன்றி 1 கொரிந்தியர் 10:13 மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார். Tamil Easy Reading Version எல்லா மனிதர்களுக்கும் வரும் சோதனைகளே உங்களுக்கும் வரும். ஆனால் நீங்கள் தேவனை நம்பமுடியும். நீங்கள் தாங்க இயலாத அளவு சோதனைகளை…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள்Day – 10

    Day – 10 (10- டிசம்பர், 2023) தற்கொலை எண்ணங்களுக்கு விலக்கினீர் செய்தி தாளில் வாசித்த செய்திகளை திரும்பி பார்க்கலாம்.  அப்பா அம்மா ரீசார்ஜ் பண்ணி தராததால், மாணவன் தற்கொலை. நம் காலத்தில், நாம் கேட்ட எல்லாம் நம் பெற்றோர் தந்தார்களா? இல்லையே. ஆனால் நமக்கு தற்கொலை எண்ணம் வரவில்லையே. அதற்காக நன்றி சொல்வோம். வேலையில் அதிக பணிச்சுமை காரணமாக தற்கொலை என்று பார்க்கிறோமே. நமக்கு வேலை சுமையாக இல்லையா? அதிலும் நீங்கள் ஒரு பெண் என்றால்,…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 4

    Day – 4 (04- டிசம்பர், 2023) பலவீனத்தில் பெலன் தந்ததற்காக நன்றி இந்த நன்றிக்கு நான் எழுதவே தேவையில்லை. ஒவ்வொருவரும், 1000 நன்றியை வரிசையாக சொல்லலாம். நம் குடும்பத்தில் அவ்வளவு பலவீனங்கள் வந்திருக்கிறது. நம் பெற்றோருக்கு, நம் பிள்ளைகளுக்கு என்று யாரோ ஒருவர் சுகவீனமாய் இருந்திருப்பார்கள். ஆனால் தேவன் பெலனைக் கொடுத்தார் அல்லவா! அதற்காக நன்றி சொல்வோம். என் அனுபவத்தில், இந்த 2023 ஆரம்பிக்கும் போது, ஜனவரி மாதத்தில் ஒருவர் மாற்றி ஒருவர் மருத்துவமனைக்கு சென்றோம்….

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 19

    Day – 19 (19- டிசம்பர், 2023) இரட்சிப்புக்காக நன்றி தேவன் இந்த உலகத்தை மனிதனிடம் கொடுத்து, பலுகி பெருகுங்கள் என்றும், எல்லாவற்றையும் ஆண்டு கொள்ளுங்கள் என்றும் கூறினார். சாத்தான் சதியால், கீழ்ப்படியாமை வந்து, தேவனோடு இருந்து நெருங்கிய தொடர்பை துண்டித்துப் போட்டது. அதன் பின்னர், இந்த உலகத்தின் அதிபதியாக சாத்தான் இருந்து நம்மை ஆண்டு வந்தான். ஒரு கூட்ட ஜனங்கள் மட்டும் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு, இஸ்ரேல் என்னும் இனமாக வாழ்ந்தார்கள். அவர்களாலும் சாத்தானை ஜெயிக்க முடியவில்லை….

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 16

    Day – 16 (16- டிசம்பர், 2023) தெய்வீக சமாதானத்துக்காக நன்றி தேவனே, நீர் கொடுத்த தெய்வீக சமாதானத்துக்காக நன்றி. நீர் கொடுக்கும் சமாதானம், நிபந்தனையற்றது. அது அளவிட முடியாதது. அதற்கு கால அவகாசம் கிடையாது. நீர் கொடுக்கும் சமாதானம் பூரணமானது. என் நன்மை காலத்தில் மட்டுமல்ல, நீர் என் துன்ப காலத்திலும் எனக்கு சமாதானத்தை தந்தீர் நன்றி அப்பா. உலக மக்கள், தங்கள் வாழ்வில் நன்மையான (good) காரியங்களில், சமாதானமாக இருப்பார்கள். அதேவேளையில், கெட்ட (bad)…

  • |

    விசுவாச அறிக்கை (நீதிமன்ற வழக்கு)

    விசுவாச அறிக்கை (நீதிமன்ற வழக்கு) இன்றைக்கு அனேக கிறிஸ்தவர்களின் கவலை நீதிமன்ற வழக்கு. ஒருவர் தவறு செய்திருந்தால் நீதிமன்றம் செல்ல வேண்டும் என்ற காலம் மாறி, தவறு செய்யாதவர்கள் கூட நீதிமன்றம் செல்லும் நிலை வந்துவிட்டது. தவறு செய்யாதவர்கள் இதனால், அதிக கவலைக்கு உள்ளாகி விடுகின்றனர். விரக்திக்கே சென்று விடுகின்றனர். நமது கஷ்டமான நேரத்தில், நம் வாயால் என்ன அறிக்கையிடுகிறோம் என்பதே நம் கிறிஸ்தவ வாழ்க்கை நிலையைக் காட்டுகிறது. மரணமோ, ஜீவனோ, அது நம் நாவில்தான் இருக்கிறது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *