|

நன்றியுடன் 21 நாட்கள் Day – 21

Day – 21 (21- டிசம்பர், 2023)

கடைசி கால எழுப்புதலுக்காக நன்றி

கடைசி கால எழுப்புதல் என்பது சுக்கோத் அனுபவம். அது ஆவியில் நடக்கிற அனுபவம். மூன்றாம் பெந்தெகோஸ்தே, Joy anointing என்றெல்லாம் அழைக்கப்படுகிறது என்று பண்டிகைகள் பற்றிய பதிவில் அறிந்தோம். இந்த கடைசி கால எழுப்புதலில் என்ன நடக்கும்? ஜனங்கள் கூட்டம்கூட்டமாக இரட்சிக்கப்படுவார்கள். அனேக அற்புத அடையாளங்கள் நடக்கும். மறுரூப அனுபவம் நடக்கும். இன்னும் பல காரியங்கள் சொல்லலாம். ஆனால், இன்று கூட ஆங்காங்கே இதெல்லாம் நடைபெறுகிறதே!

சாதாரணமாக, ஓரிடத்தில் கொள்ளை நோய் வந்தால், அந்த மாநிலம் மட்டும் தான் இருக்கும். ஆனால், கொரொனா வரும்போது, உலக அளவில், எல்லா நாடுகளுக்கும் பரவியது அல்லவா! இது போல தான், கடைசி கால எழுப்புதலும் இருக்கும். இது வரை, ஒரே ஒரு மனிதன் ஜெபிக்க ஆரம்பிக்கும் போது, அந்த தேசம் முழுவதுக்கும் எழுப்புதல் நடந்தது. ஆனால், இனி வரப்போகிற கடைசி கால எழுப்புதலில், உலகம் முழுவதும் எழுப்புதல் பரம்பும்.

எங்கள் வீட்டில் சகோதரர்.சாம் ஜெபத்துரை அவர்களின் புத்தகங்கள் நிறைய இருக்கும். சிறு வயதிலிருந்தே, அந்த புத்தகங்களில் உள்ள கதைகளை மட்டும் படிப்பது வழக்கம். கொரொனா காலத்தில், ஜெபிக்கலாம் வாங்க பார்க்காதவர்கள் இருந்திருக்க முடியாது. அப்போது சகோதரர். மோகன் சி லாசரஸ் அவர்கள், எழுப்புதல், தமிழ் நாட்டிலிருந்து பரவி, உலகம் முழுவதும் செல்லும் என்று கூறினார். எனக்கு எங்கோ படித்த ஞாபகம். எனவே எங்கள் வீட்டில் அந்த புத்தகத்தை தேடி எடுத்தேன். இந்தியாவிலிருந்து எழுப்புதல் பரவி, உலகம் முழுவதும் செல்லும் என்று அவருடைய புத்தகத்திலும் படித்த ஞாபகம். அதை விட, இன்னொரு தகவல் கிடைத்தது. இந்திய எழுப்புதலுக்காக, இப்போது உள்ள ஊழியர்கள் மட்டும் ஜெபிக்கிறார்கள் அல்ல. 1965க்கு முன்பே, இந்த எழுப்புதலுக்காக ஜெபித்து ஜெயிலிலே ஜீவனை விட்ட, ரிச்சர்ட் உம்பிராண்ட் உடன் இருந்தவர் பற்றி படித்தேன். நீங்களும் படிப்பதற்காக அதை பதிவிட்டு இருக்கிறேன்.

ஒரு ரஷ்ய வாலிபன், தன் தேசத்துக்காக கூட ஜெபிக்காமல், இந்தியாவின் வரைபடத்தை வைத்து ஜெபித்து, அப்படியே உயிரை விட்டு இருக்கிறார். இன்று நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம்? பிற தேசத்தை கூட விட்டு விடலாம், நாம் நம்முடைய தேசத்துக்காக ஜெபிக்கிறோமா? நம் தமிழ் நாட்டுக்காக ஜெபிக்கிறோமா? Atleast உடன் விசுவாசிகளாக இருக்கிற சபையினருக்காக ஜெபிக்கிறோமா? நம் ஜெப ஆவி எப்படி இருக்கிறது? சிந்திப்போம்.

இயேசுவே, நீர் எங்களுக்கு தந்த ஜெப ஆவிக்காக நன்றி. மற்றவர்களுக்காக ஊக்கத்தோடு ஜெபிக்க, நீர் எங்களை தெரிந்து கொண்டதற்காக நன்றி. எழுப்புதலுக்காக, எங்கள் தேசத்தை தெரிந்து கொண்டதற்காக நன்றி. யாரோ ஒருவர் ஜெபிப்பதால், எழுப்புதல் வரும் என்ற எண்ணத்தில் நாங்கள் இல்லை. நான் ஜெபிக்கும்போது எழுப்புதல் வருகிறது. என் தேசம் அசைகிறது. அந்த அலை உலகம் முழுவதும் பரவப் போகிறது. அதற்காக நன்றி. நான் ஒருவர் ஜெபிப்பதால், தேசம் அசையப்போகிறது, அந்த  அதிகாரம் எனக்குள் இருக்கிறது. அதற்காக நன்றி.

எங்களுடைய சொந்தங்கள், நண்பர்கள் கூட இன்னும் உம்மை அறியாமல், அறியாமையில் இருக்கிறார்களே. அவர்களை எங்களை நம்பி நீர் கொடுத்திருக்கிறீர். அவர்களுக்காக ஜெபிப்பது எங்கள் கடமை அல்லவா! அதை நாங்கள்  செய்து கொண்டிருப்பதால் நன்றி இயேசுவே. இன்னும் அதிகமாக ஜெபிக்க வரும் ஆண்டிலும் நீர் பெலன் தருவீர் என்று விசுவாசிக்கிறோம். அதற்காக நன்றி ஆண்டவரே. எங்கள் பிள்ளைகள், வருங்கால சந்ததிகள், கடைசி நாட்களில் உமக்கு சாட்சியாக இருக்க நீர் தெரிந்து கொண்டதற்காக நன்றி இயேசுவே. வருகிற 2024ல் இன்னும் ஆழமாக உமக்குள் நாங்களும் எங்கள் பிள்ளைகளும் வளரப்போகிறோம். அதற்காக நன்றி தேவனே! நன்றி

Similar Posts

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 3

    Day – 3 (03- டிசம்பர், 2023) அனுதின உணவுக்காக நன்றி இந்த நன்றி சொல்லும் நாளில், இன்று உணவுக்காக நன்றி சொல்லப் போகிறோம். “எல்லாரும்தானே சாப்பிடுகிறார்கள். நான் மட்டும் ஸ்பெஷல் விருந்தா சாப்பிடுகிறேன்?” என்று நினைக்கலாம். ஆனால் உண்மை அதுதான். நாம் விருந்து தான் சாப்பிடுகிறோம். இன்று நம் காஃபியில் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால், அது விருந்து தான். ஏனெனில் எத்தனையோ பேர், ஆசையிருந்தாலும், சுகர் என்பதால் சாப்பிட முடியாமல் இருக்கின்றனர். அசைவ உணவு சாப்பிட்டால்…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 5

    Day – 5 (05- டிசம்பர், 2023) குறைவுகளை நிறைவாக்கினீர் நன்றி இந்த வருடம் முழுவதும் நம்மை போஷித்தார், ஆதலால் தேவனுக்கு நன்றி சொல்வோம் என்று சபையில் ஊழியர்கள் சொல்லும்போது, அந்த நேரத்தில் கூட, “ஆண்டவரே என் குறையை மாற்றும்” என்று ஜெபிப்பவர்கள் உண்டு. அல்லது, அடுத்த வருடம் இதே ஜெபத்தில் நானும் நன்றி சொல்கிற அளவு உயர வேண்டும் என்று ஜெபிப்பவர்களும் உண்டு. ஆனால் இன்று, நாம் இருக்கிற இந்த நிலைக்கு, நன்றி சொல்ல வேண்டும்…

  • |

    விசுவாச அறிக்கை (நீதிமன்ற வழக்கு)

    விசுவாச அறிக்கை (நீதிமன்ற வழக்கு) இன்றைக்கு அனேக கிறிஸ்தவர்களின் கவலை நீதிமன்ற வழக்கு. ஒருவர் தவறு செய்திருந்தால் நீதிமன்றம் செல்ல வேண்டும் என்ற காலம் மாறி, தவறு செய்யாதவர்கள் கூட நீதிமன்றம் செல்லும் நிலை வந்துவிட்டது. தவறு செய்யாதவர்கள் இதனால், அதிக கவலைக்கு உள்ளாகி விடுகின்றனர். விரக்திக்கே சென்று விடுகின்றனர். நமது கஷ்டமான நேரத்தில், நம் வாயால் என்ன அறிக்கையிடுகிறோம் என்பதே நம் கிறிஸ்தவ வாழ்க்கை நிலையைக் காட்டுகிறது. மரணமோ, ஜீவனோ, அது நம் நாவில்தான் இருக்கிறது….

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 17

    Day – 17 (17- டிசம்பர், 2023) சோதனையில் வெற்றி தந்தீர் நன்றி 1 கொரிந்தியர் 10:13 மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார். Tamil Easy Reading Version எல்லா மனிதர்களுக்கும் வரும் சோதனைகளே உங்களுக்கும் வரும். ஆனால் நீங்கள் தேவனை நம்பமுடியும். நீங்கள் தாங்க இயலாத அளவு சோதனைகளை…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 20

    Day – 20 (20- டிசம்பர், 2023) அபிஷேகத்துக்காக நன்றி அப்பா, என் மீதுள்ள உம் அபிஷேகத்துக்காக நன்றி. இந்த 2023ல் எத்தனையோ முறை சோர்ந்து போயிருக்கிறேன், மனம் தளர்ந்து போயிருக்கிறேன், பாவத்தில் விழுந்திருக்கிறேன், வேதத்தை மறந்து ஓடியிருக்கிறேன், உம்மிடம் பேச நேரம் கொடுக்காமல் போயிருக்கிறேன், துணிகரமாக சில காரியங்கள் செய்திருக்கிறேன். உம்மை மறுதலித்திருக்கிறேன், ஊழியர்களை குறை சொல்லி இருக்கிறேன், தேவனுடைய ராஜ்யத்துக்கான வேலையில் ஈடுபடவில்லை, தேவையற்ற வெட்டி கதைகளில் நேரம் செலவழித்தேன், அடுத்தவரை பொறாமையுடன் பார்த்தேன்,…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 18

    Day – 18 (18- டிசம்பர், 2023) அரசியல் தலைவர்களுக்காக நன்றி நமக்கு தேவன் கொடுத்த அரசியல் தலைவர்களுக்காக நன்றி சொல்லப்போகிறோம். திமுக அல்லது அதிமுக என்ற கட்சிகளுக்காக அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு முன்பாக அதிமுக ஆட்சியில் இருந்து, இப்போது திமுக ஆட்சியில் இருக்கிறது. எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், கிறிஸ்தவர்கள் ஆங்காங்கே தாக்கப்பட்டாலும், இன்றும் நம் தமிழ் நாட்டில் ஓரளவு சுவிசேஷம் அறிவிக்கப்படுகிறது அல்லவா! நன்றி சொல்வோம். உண்மையில், இப்போது தமிழ்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *