|

நன்றியுடன் 21 நாட்கள் (Day – 1)

 

Day – 1 (01- டிசம்பர், 2023)

உயிரோடு இருப்பதற்காக நன்றி

இந்த வருடத்தின் முடிவுக்கு வந்துவிட்டோம். கர்த்தருக்கு நன்றி சொல்வது நமது கடமை. இயேசுவே, நீங்க கொடுத்த ஜீவனுக்காக நன்றி என்று பலமுறை சொல்லி இருப்போம். இன்று அதை யோசித்து பார்த்து நன்றி சொல்லலாமா?

என் அனுபவத்தில், கடந்த வருடம் நவம்பர் மாதம் என் தோழியின் பிறந்த நாளுக்கு எல்லாரும் வாழ்த்து அனுப்பினார்கள், Whatsapp Groupல். அப்போது திடீரென கேள்விப்பட்ட செய்தி, அவள் இறந்து 4 மாதங்கள் ஆகிறது என்று. 4 வருடம் கல்லூரி படிப்பில், கிட்டத்தட்ட 2 வருடங்கள் என் அருகில் இருந்தவள், எனக்கு நிறைய பாடங்கள் சொல்லிக் கொடுத்தவள், அநேக நாட்கள் சாப்பாடு கொடுத்தவள்( நான் Hostel மாணவி என்பதால்). அவளுடைய Delivery காலத்தில் அதிக உதிரப்போக்கு ஏற்பட்டு இறந்து விட்டாள் என்றனர். எனக்கு இன்றுமே நம்ப முடியவில்லை.

ஏன் என்று நான் ஆண்டவரிடம் கேள்வி கேட்க முடியாது. ஆனால், நான் ஏன் உயிரோடு இருக்கிறேன் என்பதை யோசிக்க முடிந்தது. அதே 4 வருடத்தில், எனக்கு low BP என்பதால், எவ்வளவோ முறை உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தேன். நான் எப்படி இரு குழந்தைகள், அதுவும் சுகப்பிரசவத்தில் பெற்றேன் என்பதை யோசித்தேன், கிருபையின் அர்த்தம் புரிந்தது. அவள் மேல் கிருபை இல்லையா என்று நான் கேள்வி கேட்க முடியாது, ஆனால் இன்று உயிரோடு இருக்கும் நம் ஒவ்வொருவர் மேலும் கிருபை இருக்கிறது. நாம் ஜீவனோடு இருக்கிறோம். இதற்காகவே நன்றி சொல்லலாமே!

மேற்படிப்பு படித்த கல்லூரியில், எனக்கு எடுத்த professor, நன்றாக இருப்பார், மிகவும் active ஆக இருப்பார். சிறு வயது தான். கொரோனா காலத்தில், ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல், வேலூரில் 5 பேர் சாவு என்ற செய்தியை, வெறும் செய்தியாக செய்தி செயலியில் படித்தேன். ஆனால், அந்த 5 பேரில் ஒருவர், எங்கள் professor என்பதைக் கேள்விபடும்போது, அதிர்ச்சியாக இருந்தது. கணவரின் அலுவலகத்தில் வேலை செய்பவர்களில் சிலர் அந்த கொரொனா அலையில் மரித்தனர். கணவருடன் கல்லூரியில் படித்த ஒருவர் இறந்து விட்டார். இப்போது அனேக இளவயது மரணங்கள். ஜிம்மில் வொர்க் அவுட் செய்பவர்கள் இறந்து விடுகிறார்கள். பள்ளியில் சிறுவனுக்கு மாரடைப்பு. ஷவர்மா சாப்பிட்டவர்கள், சிக்கன் சாப்பிட்டவர்கள் மரணம். இன்னும் எவ்வளவோ மரண செய்திகள் கேட்கிறோம்.  நாம் இன்னும் உயிருடன் இருக்கிறோம்.

ஒருவேளை கஷ்டத்தில் இருக்கலாம், கைவிடப்பட்ட நிலையில் இருக்கலாம், நெருக்கமானவர்களை இழக்க கொடுத்திருக்கலாம், வறுமையில் இருக்கலாம், பிரிவினையில் இருக்கலாம், சாபத்தில் இருக்கலாம், பாவத்தில் கூட இருக்கலாம். ஆனால் உயிருடன் இருக்கிறோமே! அதற்கு என்ன காரணம்? ஒருவேளை இந்த நாளில் நாம் உயிரோடு இல்லை என்றால், நம் பிள்ளைகளின் எதிர்காலம் என்ன? நம் பிள்ளைக்காக யார் திறப்பில் நிற்பார்கள்?

நாம் இருப்பது நம் பெலன் அல்ல. கர்த்தருடைய கிருபை மட்டுமே.. நன்றி சொல்வோம். ஏன் இவ்வளவு யோசித்து நன்றி சொல்ல வேண்டும்?  அனேக நேரங்களில் எனக்கு ஜீவனைத் தந்ததற்காக நன்றி என்று தினமும் சொல்லும்போது, அது வெறும் slogan ஆக மாறி விடுகிறது. எனவே தான் யோசித்து நன்றி சொல்வோம். நமக்கு தெரிந்தவர்கள் மரித்து இருக்கலாம், அவர்கள் கெட்டவர்கள், நாம் நல்லவர்கள் என்பதால் அல்ல. நாம் எப்படிப் பட்டவர்கள் என்பது, நம்மை விட யாருக்கும் நிச்சயமாகத் தெரியாது. எவ்வளவோ நாட்கள் கடையில் சாப்பிட்டோம், எவ்வளவோ நாட்கள் பைக்கிலும், காரிலும், பேருந்திலும், ட்ரெயினிலும் சென்றோம். ஆனாலும் இன்று ஜீவனோடு இருக்கிறோம். இது கர்த்தருடைய கிருபை மாத்திரமே. மனதார நன்றி சொல்வோம்.

Similar Posts

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 15

    Day – 15 (15- டிசம்பர், 2023) ஆவிக்குரிய யுத்தத்தில் துணை நின்றீர் நன்றி பல நேரங்களில், சாத்தான் சில உத்திகளைப்(Strategies) பயன்படுத்தி, நம்மை மேற்கொள்ள பார்ப்பான். ஏமாற்றுதல்(deception), குற்றச்சாட்டு(accusation) ,அலட்சியம்(negligence), கிளர்ச்சி(rebelliousness), பயம்(fear), தெய்வ பக்தியின்மை(ungodliness), சோதனை(temptations) போன்ற பல காரியங்கள் நம் வாழ்வில் இருக்கும். சிலர் நம் கூடவே இருப்பார்கள், ஏமாற்றி விட்டு போயிருப்பார்கள்… நம்மை எல்லாரும் குற்றம்சாட்டி பேசுவார்கள்… மதிப்பு கொடுக்காமல் நம்மை அலட்சியப்படுத்துவார்கள்… நமக்கு நிறைய சோதனை வரும்… நம் நண்பர்களுக்குள்,…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 9

    Day – 9 (09- டிசம்பர், 2023) அடிமைதனம் வராமல் காத்தீர் நன்றி இன்றைக்கு முக்கியமான ஒரு காரியத்துக்காக நன்றி சொல்லப் போகிறோம். ஆண்டவரே, நான் ஒரு பாவி என்பதை நாம் ஈஸியாக ஒத்துக் கொள்வோம். இயேசுவின் இரத்தம் என்னைக் கழுவி விட்டது, நான் இப்பொழுது நீதிமான் என்பதை நாம் அறிந்தாலும்கூட, பல சமயங்களில் நம்மை பாவியாகவே நினைத்துக் கொள்கிறோம். முதலாவது தேவனுக்கு, நம்மை நீதிமான் ஆக்கியதற்காக நன்றி சொல்வோம். நாம் எல்லாரும் மனிதர்கள், நம்மால் ஒருவரை…

  • |

    ஆவிக்குரிய வாழ்க்கைக்கான விசுவாச அறிக்கைகள்

    ஆவிக்குரிய வாழ்க்கைக்கான விசுவாச அறிக்கைகள்  ஆழமான அறிக்கைகள் என்று சொல்வதை விட, ஆவிக்குரிய வாழ்க்கைக்கான அடிப்படை அறிக்கைகள் என்று கூறலாம். நான் நீதிமான் என்னும் தலைப்பில் உள்ள விசுவாச அறிக்கைகள் இன்னும் ஆழமாக தேவனிடம் சேர்க்கும். ஆனால் எந்தவொரு விஷயத்தையும் பாரம்பரியமாக வாசிப்பதால் எந்த பயனும் இல்லை. உண்மையாக புரிந்து தினமும் அறிக்கையிட்டால், தேவனுக்குள் இன்னும் ஆழமாகச் செல்லலாம்.  வசன அறிக்கைகள் நான் கிறிஸ்துவுக்குள் இருக்கிறேன். நான் இப்போது பழைய மனுஷன் அல்ல. புது சிருஷ்டியாயிருக்கிறேன். என்…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 17

    Day – 17 (17- டிசம்பர், 2023) சோதனையில் வெற்றி தந்தீர் நன்றி 1 கொரிந்தியர் 10:13 மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார். Tamil Easy Reading Version எல்லா மனிதர்களுக்கும் வரும் சோதனைகளே உங்களுக்கும் வரும். ஆனால் நீங்கள் தேவனை நம்பமுடியும். நீங்கள் தாங்க இயலாத அளவு சோதனைகளை…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள்Day – 10

    Day – 10 (10- டிசம்பர், 2023) தற்கொலை எண்ணங்களுக்கு விலக்கினீர் செய்தி தாளில் வாசித்த செய்திகளை திரும்பி பார்க்கலாம்.  அப்பா அம்மா ரீசார்ஜ் பண்ணி தராததால், மாணவன் தற்கொலை. நம் காலத்தில், நாம் கேட்ட எல்லாம் நம் பெற்றோர் தந்தார்களா? இல்லையே. ஆனால் நமக்கு தற்கொலை எண்ணம் வரவில்லையே. அதற்காக நன்றி சொல்வோம். வேலையில் அதிக பணிச்சுமை காரணமாக தற்கொலை என்று பார்க்கிறோமே. நமக்கு வேலை சுமையாக இல்லையா? அதிலும் நீங்கள் ஒரு பெண் என்றால்,…

  • |

    விசுவாச அறிக்கை – நான் நீதிமான்

    நீதிமான் நான் பாவி என்று நினைக்கும் வரை, என்னால் அவரிடம் நெருங்க முடியாது. அவர் எனக்காய் ஜீவனை தந்து, என்னை நீதிமான் ஆக்கிவிட்டார். நான் இப்பொழுது நீதிமான். ஐந்து நிமிடத்திற்கு முன் நான் பாவம் செய்திருந்தாலும், அவர் இரத்தம் இருப்பதால், என் மன்னிப்பை ஏற்றுக்கொண்டு, அவர் என்னை மன்னித்து விட்டார். நான் இப்பொழுதும் நீதிமான் தான். மோசேயின் நியாயப்பிரமாணத்தினாலே, ஒருவன் எவைகளினின்று விடுதலையாகி, நீதிமானாகக்கூடாதிருந்ததோ, விசுவாசிக்கிறவனாகிய நான், அவைகளினின்று, இயேசுவாலே, விடுதலையாகி, நீதிமான் ஆக்கப்பட்டேன். (அப் 13-39)…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *