எபிரெயர் 3:4 ஏனெனில், எந்த வீடும் ஒருவனால் உண்டாக்கப்படும்; எல்லாவற்றையும் உண்டுபண்ணினவர் தேவன்.
Thiru Viviliam ஏனெனில், ஒவ்வொரு வீட்டையும் கட்டி எழுப்ப ஒருவர் இருப்பது போல, எல்லாவற்றையும் கட்டி எழுப்புகிறவர் ஒருவர் இருக்கிறார்; அவர் கடவுளே.
எல்லாவற்றையும் உண்டு பண்ணின தேவன், தற்போது எங்களுக்கென ஒரு வீட்டைக் கொடுத்ததற்காக நன்றி சொல்லுகிறோம்.
மத்தேயு 7:24,25 24.ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்.
25.பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும் அது விழவில்லை; ஏனென்றால் அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.
Thiru Viviliam “ஆகவே, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறை மீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார்.
மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டின் மேல் மோதியும் அது விழவில்லை. ஏனெனில், பாறையின்மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது.
எங்கள் புதிய வீட்டின் அஸ்திபாரத்தை, இயேசுவின் மீது போடுகிறோம். கற்பாறையின் மீது அசையாமல் இருக்கும் வீட்டைப் போல, எந்த புயல், மற்ற இயற்கை சீற்றம் வந்தாலும், இந்த வீட்டின் அஸ்திபாரம் அசையாமல் இருக்கும். இயேசுவின் நாமத்தில் இந்த வீட்டை உம் கரங்களில் ஒப்புக் கொடுக்கிறேன்.
லூக்கா 10:5 ஒரு வீட்டில் பிரவேசிக்கிறபோது: இந்த வீட்டுக்குச் சமாதானம் உண்டாவதாகவென்று முதலாவது சொல்லுங்கள்.
Thiru Viviliam நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், ‘இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!’ என முதலில் கூறுங்கள்.
எங்களது வீட்டுக்கு சமாதானம் உண்டாகட்டும் என்று இயேசுவின் நாமத்தில் சொல்கிறோம். நாங்கள் கட்டுகிற இந்த வீட்டின் மீது சமாதானத்தை பேசுகிறோம். அமைதியான கூடாரமாக கட்டி எழும்பட்டும்.
ஏசாயா 32:18 என் ஜனம் சமாதான தாபரங்களிலும், நிலையான வாசஸ்தலங்களிலும், அமைதியாய்த் தங்கும் இடங்களிலும் குடியிருக்கும்.
Thiru Viviliam என் மக்கள் அமைதி சூழ் வீடுகளிலும், பாதுகாப்பான கூடாரங்களிலும், தொல்லையற்ற தங்குமிடங்களிலும், குடியிருப்பர்.
என்ற உம் வார்த்தையின்படி, எங்கள் வீடு அமைதியான, பாதுகாப்பான இடமாக இருக்கப் போவதற்காக உமக்கு நன்றி
பிலிப்பியர் 4:19 என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாங் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்.
Thiru Viviliam என் கடவுள், கிறிஸ்து இயேசுவின் வழியாய்த் தம் ஒப்பற்ற செல்வத்தைக் கொண்டு, உங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்வார்.
இந்த வீடு கட்டப்படுவதற்கு தேவையான அனைத்து தேவைகளையும், என் தேவன் சந்திப்பார்.
சங்கீதம் 127:1 கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா;
Thiru Viviliam ஆண்டவரே வீட்டைக் கட்டவில்லையெனில், அதைக் கட்டுவோரின் உழைப்பு வீணாகும்; ஆண்டவரே நகரைக் காக்கவில்லையெனில், காவலர்கள் விழித்திருப்பதும் வீணாகும்.
இந்த வீட்டை நாங்கள் கட்டவில்லை. கர்த்தரே எங்களுக்கு கட்டித் தருகிறார். எங்கள் வீட்டில், செல்வம், மகிழ்ச்சி, சமாதானம், சுகம் எல்லாம் பரிபூரணமாக நிலைத்திருக்கும்படி, ஆண்டவரே எங்களுக்கு கட்டித் தருகிறார் என விசுவாசிக்கிறோம்.
2 சாமுவேல் 6:11 கர்த்தருடைய பெட்டி கித்தியனாகிய ஓபேத்ஏதோமின் வீட்டிலே மூன்று மாதம் இருக்கையில் கர்த்தர் ஓபேத்ஏதோமையும் அவன் வீட்டார் அனைவரையும் ஆசீர்வதித்தார்.
Thiru Viviliam ஆண்டவரின் பேழை கித்தியனான ஓபேது — ஏதோமின் இல்லத்தில் மூன்று மாதங்கள் தங்கிற்று. ஆண்டவர் ஓபேது ஏதோமுக்கும் அவன் வீட்டார் அனைவருக்கும் ஆசி வழங்கினார்.
கர்த்தர் ஓபேத் ஏதோம் மற்றும் அவன் வீட்டார் அனைவரையும் ஆசீர்வதித்தது போல, இந்த வீட்டில் தங்கப் போகிற, ஒவ்வொருவரையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக.
1 நாளாகமம் 13:14 தேவனுடைய பெட்டி ஓபேத்ஏதோமின் வீட்டிலே அவனிடத்தில் மூன்றுமாதம் இருக்கையில், கர்த்தர் ஓபேத்ஏதோமின் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார்.
Thiru Viviliam கடவுளின் பேழை ஓபேது-ஏதோம் வீட்டில் அவர் வீட்டாரோடு மூன்று மாதம் இருந்தது. அந்நாளில் அவர் வீட்டாருக்கும் அவருக்கு உரிய அனைத்திற்கும் ஆண்டவர் ஆசி வழங்கினார்.
கர்த்தர் ஓபேத் ஏதோமின் வீட்டையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தது போல, எங்களுக்கு உண்டான எல்லாவற்றையும், (எங்கள் கார், பைக், மொபைல், டிவி, லேப்டாப்…) ஆசீர்வதிப்பார்.
நீதிமொழிகள் 3:33 துன்மார்க்கனுடைய வீட்டில் கர்த்தரின் சாபம் இருக்கிறது, நீதிமான்களுடைய வாசஸ்தலத்தையோ அவர் ஆசீர்வதிக்கிறார்.
Thiru Viviliam பொல்லாரது வீட்டின்மேல் ஆண்டவரது சாபம் விழும்; அவருக்கு அஞ்சி நடப்போரின் உறைவிடங்களில் அவரது ஆசி தங்கும்.
எங்களது வீட்டில் தேவனுடைய ஆசி தாங்கும் என விசுவாசிக்கிறோம். பொல்லாங்கன் வீட்டுக்கு வரும் சாபம் எதுவும் எங்கள் வீட்டுக்கு வருவதில்லை.
சங்கீதம் 91:10 ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது.
Thiru Viviliam ஆகவே, தீங்கு உமக்கு நேரிடாது; வாதை உம் கூடாரத்தை நெருங்காது.
எங்கள் வீட்டை எந்த வாதையும் நெருங்காது. எங்களுக்கு எந்த தீங்கும் நேரிடாது.
உபாகமம் 28:6 நீ வருகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய், நீ போகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்.
Thiru Viviliam நீ வருகையிலும் செல்கையிலும் ஆசி பெற்றிடுவாய்.
எங்கள் வீடு ஆசீர்வதிக்கப்பட்ட வீடாக இருக்கும். எங்கள் வீட்டுக்கு வருபவர்கள் கூட, ஆசீர்வதிக்கப்பட்டவர்களாய் திரும்பி செல்வர்.
சங்கீதம் 122:7 உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக.
Thiru Viviliam உன் கோட்டைகளுக்குள் அமைதி நிலவுவதாக! உம் மாளிகைகளில் நல்வாழ்வு இருப்பதாக!
எங்கள் வீட்டில் எப்போதும் அமைதி நிலவும். எங்கள் வீட்டில் சுகம் தங்கியிருக்கும். வியாதிக்கு எங்கள் வீட்டில் இடமில்லை.
ஜெபம்:
பரலோகத் தகப்பனே, எங்கள் புதிய வீட்டைக் கட்டுவதற்கான Entire Processயும் உமது திறமையான கரங்களில் ஒப்படைக்கிறோம். உமது சித்தம் நிறைவேறட்டும், இந்த வீட்டைக் கட்டி முடிக்கும்போது, உமது பெயர் மகிமைப்படட்டும்.
எங்கள் புதிய வீட்டில் வேலை செய்யும், ஒவ்வொருவரின் கைகள் மற்றும் திட்டதுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். அவர்களின் பணிகளில் ஞானம், திறமை மற்றும் துல்லியம் ஆகியவற்றை அவர்களுக்கு வழங்கும்.
பரலோக ஆண்டவரே, கட்டிடக்கலை திட்டங்களையும் வடிவமைப்புகளையும் (architectural plans and designs) உங்கள் கைகளில் ஒப்படைக்கிறேன். இயேசுவின் பெயரில், உங்கள் அழகையும் எங்கள் வாழ்வின் நோக்கத்தையும் பிரதிபலிக்கும் இடத்தை உருவாக்க கட்டிடக் கலைஞர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களுக்கு வழிகாட்டுங்கள்.
ஆண்டவரே, எங்கள் புதிய வீட்டைக் கட்டுவதில் ஏதேனும் தாமதங்கள் அல்லது பின்னடைவுகளுக்கு எதிராக நான் பிரார்த்தனை செய்கிறேன். உங்கள் தெய்வீக நேரம் மேலோங்கட்டும், ஒவ்வொரு அடியும் சரியான தருணத்தில் எடுக்கப்படட்டும். பணப்பற்றாக்குறை எதுவும் வராதபடி இயேசுவின் நாமத்தில் இப்போதே ஜெபிக்கிறேன். சரியான நேரத்தில் கட்டி முடிக்க கர்த்தர் உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில், ஆமென்.
Leave a Reply