இஸ்ரவேல் என்ற அந்த தேசம், அதிலிருக்கும் ஒரு இடம், எவ்வளவு முக்கியமானதாக கருதுகிறார்கள் யூதர்கள் என்று இப்பதிவில் காணலாம்.

யூதர்களின் கருத்து

யூதர்களுக்கு தோரா என்ற புனிதநூல் உள்ளது. முதல் ஐந்து பழைய ஏற்பாட்டு புத்தகங்கள் அவர்களின் தோரா. பழைய ஏற்பாடு மட்டும் தான் யூதர்களின் பைபிள். பழைய ஏற்பாட்டை மூன்று பிரிவுகளாக பிரித்துள்ளார்கள்.

Torah – மோசேயினால் எழுதப்பட்ட முதல் 5 ஆகமங்கள் (நியாயப்பிரமாணம்)

Neviim – தீர்க்கதரிசன புத்தகங்கள்

Ketuvim – மற்றவை

நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனமும் என்று அடிக்கடி புதிய ஏற்பாட்டில் பார்ப்பதன் அர்த்தம், யூதர்களின் வேதத்தைக் குறிப்பது தான், அதாவது பழைய ஏற்பாட்டை குறிக்கும். யூதர்கள் இன்றும் தோராவை புத்தகச்சுருள் போன்றுதான் வைத்திருக்கிறார்கள். அதை உள்ளே வைத்து படிக்க ஒரு  Boxம் வைத்திருப்பார்கள்.

அதேபோல், தல்மூத் என்ற மத நூலும் யூதர்களுக்கு உள்ளது. அது யூத ரபீமார்கள் எழுதிய நூல். வேதத்தில் கூறப்பட்ட ஒவ்வொரு சம்பவத்தையும் தெளிவாக விளக்கி இருக்கும், வேதத்தில் இல்லாத நிகழ்வுகளும் இருக்கும். யூத முனிவர்களின் நம்பிக்கையின்படி, குறிப்பிட்ட ஒரு இடம் இருக்கிறது. ஆங்கிலத்தில் “The Place”. அந்த இடத்தைத் தேடித்தான் பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் சென்றனர். அதுதான் உலகின் மையப்புள்ளி. இப்பதிவில் உள்ள எல்லாமே யூதர்களின் நம்பிக்கை மட்டுமே.

(Moriah mountain என்பது, collection of mountains. நிறைய சிறு சிறு மலைகள் சேர்ந்து இருப்பது தான் மோரியா. மோரியா என்பது ஒரு பெரிய மலை அல்ல.) அந்த மோரியா மலை தான் பரிசுத்தவான்கள் தேடிச்சென்ற the place என்பது யூதர்களின் நம்பிக்கை.

1. Creation

ஆண்டவர் முதலில் உலகத்தைப் படைக்கும் போது, அதாவது பூமியில் first stone உருவான இடம் மோரியா.

2. Adam

ஆதாமை ஆண்டவர் உருவாக்கியது மோரியா மலையில்.

3. Abraham

ஆபிரகாம் ஈசாக்கை பலியிட அழைத்துச் சென்ற இடம் மோரியா மலை.

தேவனே கட்டிய அந்த சிட்டியின் பெயர் சாலேம் என்றும், அதன் ராஜா மெல்கிசெதேக்கு என்றும் யூத ரபீமார்கள் நம்புகிறார்கள்.

ஆபிரகாம் தான் தேடிப்போன அந்த இடத்தை ஒரு நாள் கண்டுபிடித்தார்.

ஆம், தேவன் ஈசாக்கைப் பலியிட அழைத்த இடம் அதே மோரியா மலை. ஆபிரகாம் தன் வாழ்க்கையில், தான் தேடி அலைந்த பகுதி அது.

4. Jacob

இஸ்ரவேலின் ரபாய் எழுதி இருந்த ஒரு article மூலம் அறிந்தது…

தேவனுடைய வீடு என்று யாக்கோபு நினைக்குமளவு பயங்கரமாக இருந்த இடம், the place. யாக்கோபு படுத்த இடம், ஆபிரகாம் ஈசாக்கைப் பலி கொடுக்கச் சென்ற இடம். பலிபீடமாக இருந்து அந்தக் கல்லையே யாக்கோபு புரட்டிப் போட்டு படுத்ததாக நம்புகிறார்கள்.

யாக்கோபு திரும்பி வரும்போது, தேவனே அவரைக் கூப்பிட்டு, அவ்விடத்தில் பலி கொடுக்கச் சொன்னார். ஆபிரகாம் அந்த இடத்துக்கு போக வேண்டுமானால், பலி செலுத்த வேண்டி இருந்தது. ஆபிரகாமுக்கு, ஈசாக்குக்கு பதிலாக ஆட்டுக்கடா தேவைப்பட்டது. அதே இடத்தை யாக்கோபு அடையும்போதும், பலி செலுத்த வேண்டி இருக்கிறது.

5. David

அதன் பின்னர், அதிக வருடங்களாக மறைத்து வைக்கப்பட்ட இடம், காத் தீர்க்கதரிசியின் மூலம் தாவீதுக்கு வெளிப்படுத்தப்பட்டது.

தாவீதும் அந்த இடத்தில் பலி செலுத்தினார். தாவீதும் அந்த இடத்துக்கு போக வேண்டுமானால் பலி செலுத்த அவசியம் இருந்தது.

6. Solomon

அந்த இடத்தில் தான் சாலொமோன் ஆலயம் கட்டத் தொடங்கினர். கர்த்தரின் முழு மகிமையும் நிரம்பிய இடமாக இருந்தது. அந்த இடத்தில் ஆலயத்தில் பலி செலுத்தப்பட்டது.

7. Jeremiah

நேபுகாத் நேச்சார் காலத்தில் ஆலயம் இடிக்கப்படும் என்றும்,70 வருட சிறையிருப்பு என்றும் எரேமியாவுக்கு வெளிப்பாடு கிடைத்ததினால், எரேமியா தீர்க்கதரிசி யாருக்கும் தெரியாமல், உடன்படிக்கை பெட்டியைத் தூக்கி ஒளித்து வைத்திடுவார். அதுவும் மோரியா மலை தான் என்று தள்ளுபடி ஆகமத்தில் குறிப்பிட்டுள்ளது.

8. இயேசு கிறிஸ்து

நம்‌ தேவன் நமக்காக குற்றமற்ற பாவ நிவாரண பலியாக, தன்னையே கொடுத்தது கூட மோரியா மலையின் ஒரு பகுதியான கொல்கதாவில் தான் என்று சில வேத அறிஞர்கள் கூறுகின்றனர். நமக்கான பலியும் அங்கே செலுத்தப்பட்டு விட்டது.

இந்த நம்பிக்கைகள் எல்லாமே அந்த இடம் இஸ்ரவேலருக்கு எவ்வளவு முக்கியமான இடம் என்பதைக் குறிக்கிறது. இயேசு மரித்து உயிர்த்தெழுந்ததினாலே, நம் எல்லாரையுமே அவர் ஆலயமாக்கிவிட்டார். எனவே நாம் எருசலேமுக்கு சென்று வழிபட வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் இயேசுவை இன்னும் ஏற்றுக் கொள்ளாததால், யூதர்களுக்கு எருசலேம் தேவை. எருசலேமில் இருந்த அந்த பழைய தேவாலயமும் யூதர்களுக்குத் தேவை.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *