Women in the Bible
வேதாகமத்தில் பெண்கள்
வேதத்தில் நிறைய பெண்கள் இருக்கிறார்கள். பலரின் பெயர் சொல்லப்பட்டாலும், சில முக்கியமான பெண்களின் பெயர் கூட வேதத்தில் இல்லாமலும் இருக்கும். நாம் தொடர்ச்சியாக வேதாகம பெண்களைப் பற்றி பார்க்க இருக்கிறோம். பல பெண்களுடைய வாழ்க்கை நமக்கு நல்ல example ஆக இருந்தாலும், சில பெண்களுடைய வாழ்க்கை நமக்கு warningஆகவும் இருக்கும். நாம் அதைப்பற்றி தொடர்ச்சியாகப் பார்க்கலாம்.
நாம் தாராளமாக நிறைய பிரசங்கங்கள் கேட்டிருப்போம். “வேத காலத்தில் பெண்கள் அடிமையாக இருந்தனர். பெண்கள் எதையும் செய்ய முடியாது. பவுலின் பிரசங்கங்களில் ஆணாதிக்கம் இருக்கும்” இப்படி நிறைய கருத்துக்கள் பரவி கிடக்கின்றன. பவுல் தன் நிருபங்களில், பெண்கள் சபையில் பேசக்கூடாது, கணவனுக்கு கீழ்ப்படிய வேண்டும் என்று எழுதினார். அதேபோல பேதுரு பெண்களை “பலவீனமான பாண்டம்” என்றார். அப்படியானால் உண்மையில் ஆதிகால சபையின் தலைவர்கள் பெண்களை வலிமையற்றவர்களாகத்தான் நடத்தினார்களா?
Orthodox Jews பவுலின் நாட்களில் ஒரு ஜெபம் செய்வார்களாம். இப்போதும் கூட யூதர்கள் அந்த ஜெபத்தை செய்கிறார்கள். இந்த ஜெபம் வேதத்தில் சொல்லப்படவில்லை. ஆனால் இன்றும் வழக்கத்தில் இருக்கிறது.
“Blessed are you, Hashem, Our God and king of Universe, for not having made me a Gentile”
“Blessed are you, Hashem, Our God and king of Universe, for not having made me a Slave”
“Blessed are you, Hashem, Our God and king of Universe, for not having made me a Women”
என்னை ஒரு புறஜாதியானாய் படைக்கவில்லை, அடிமையாய் படைக்கவில்லை, ஒரு பெண்ணாய் படைக்கவில்லை. அதற்காக நன்றி என ஜெபம் செய்வாராம். அப்படியானால் பெண் பிறப்பு என்பது சாபமா? இதே ஜெபத்தில் பெண்கள் மூன்றாவது ஜெபத்துக்கு பதில் கீழ்க்கண்டவாறு ஜெபிப்பார்களாம்.
“Blessed are you, Hashem, Our God and king of Universe, who made me according to his will”
ஒரு யூதனுடைய மனநிலை இப்படித்தான் இருந்திருக்கும். ஆனால் பவுல் இதற்கு எதிராக எழுதி இருக்கிறார்.
கலாத்தியர் 3:28 யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.
அதேபோல, ரோமரில் பெபேயாள் என்ற பெண், சபை ஊழியர் என்று பவுலே அறிமுகப்படுத்துகிறார். எனவே, பவுல் பெண்களை அடிமையாக நடத்தினார் என்பது மிகவும் தவறானது.
Wives, Submit to your Husbands
22.மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குங் கீழ்ப்படியுங்கள்.
23.கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்; அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார்.
24.ஆகையால், சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்கள் சொந்தப் புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும்.
எபேசியர் 5
பவுல் வாழ்ந்த கலாச்சாரம், யூதருடைய கலாச்சாரமே. அங்கு ஆண் தன்னை பெரியவனாக நினைப்பான், பெண்களை மதிக்கவே மாட்டான். அதேநேரம், அங்கு ரோம ஆட்சி நடந்து கொண்டிருந்தது. எனவே ரோம கலாச்சாரத்தின்படி, அங்கு ஒழுக்கம் கிடையாது. (நமது இஸ்ரேல் பதிவில், ரோம சாம்ராஜ்யம் பற்றி படித்தால் புரியும்) ஒரு ஆணுக்கு தன் மனைவியோடு வாழ்ந்து போரடித்து விட்டால், வெகுசுலபமாக டைவர்ஸ் செய்து விடலாம். இங்கு பவுல் பெண்களை கணவனுக்கு கீழ்ப்படிய வேண்டும் என்று கூறியதுமல்லாமல், ஆண்களுக்கும் கூறுகிறார். பவுல் ஆண்களுக்கு, “உங்கள் மனைவியை just take care பண்ணுவது போதாது. நீங்கள் அவளை நேசிக்க வேண்டும். அதுவும், கிறிஸ்துவைப்போல நேசிக்க வேண்டும், அதாவது அவளுக்காக உயிரையும் கொடுக்குமளவு நேசிக்க வேண்டும்” என்று கூறுகிறார். இவ்விடத்தில் பெண்களை, ‘ஆண்களிடத்தில் பயபக்தியோடு இருக்க வேண்டும்’ என கூறுவது போல இருந்தாலும், அதோடு ஆண்களை, நீங்கள் பெண்களில் அன்பு கூறுங்கள் என குடும்ப கட்டமைப்பைக் கற்றுக்கொடுத்தார் பவுல்.
Women Should be at home
4.தேவவசனம் துக்கப்படாதபடிக்கு பாலிய ஸ்திரீகள் தங்கள் புருஷரிடத்திலும், தங்கள் பிள்ளைகளிடத்திலும் அன்புள்ளவர்களும்,
5.தெளிந்த புத்தியுள்ளவர்களும், கற்புள்ளவர்களும், வீட்டில் தரித்திருக்கிறவர்களும், நல்லவர்களும், தங்கள் புருஷருக்குக் கீழ்ப்படிகிறவர்களுமாயிக்கும்படி, அவர்களுக்குப் படிப்பிக்கத்தக்க நற்காரியங்களைப் போதிக்கிறவர்களுமாயிருக்கவும் முதிர்வயதுள்ள ஸ்திரீகளுக்குப் புத்திசொல்லு.
4 That they may teach the young women to be sober, to love their husbands, to love their children,
5 To be discreet, chaste, keepers at home, good, obedient to their own husbands, that the word of God be not blasphemed.
தீத்து 2
பவுல் வாழ்ந்த நாட்கள் ஆணாதிக்கம் நிறைந்த சமூகம். அன்றைய நாட்களில் பெண்கள் மிகவும் குறைவாக படித்து இருப்பார்கள், அல்லது படிப்பறிவு அற்றவராக இருப்பார்கள். அவர்களுக்கு வெளியே வேலை கிடையாது. அதுவும் அன்றைய யூத கலாச்சாரத்தில் பெண்கள் வெளியே அதிகம் செல்ல மாட்டார்கள்.
யூத கலாச்சாரம் முடிந்து, தற்போது புதிதாக பரவும் கிறிஸ்தவம், (பவுலின் காலம்) வித்தியாசமான போதனைகளைக் கூறியது. அதாவது, ‘ஆணும் பெண்ணும் சமம்’ என்ற போதனையைக் கூறியது கிறிஸ்தவக் கலாச்சாரம். ‘யாரும் அடிமை கிடையாது, விடுதலை ஆக்கப்பட்டோம்’ என கிறிஸ்தவம் கூறியது. எனவே சில பெண்கள், கணவரை மதிக்காமல் வெளியே வரத் தொடங்கினர். அப்போதுதான் பவுல், பெண்களே, உங்கள் கணவருக்கு கீழ்ப்படியுங்கள் என்ற கருத்தை கூறினார். நீங்கள் வீட்டிலே தரித்திருக்க வேண்டும் என்ற கருத்தைக் கூறினார். “பெண்ணே, நீ அடிமை இல்லைதான். ஆனால் குடும்பம் என்ற கட்டமைப்பில் இருக்கிறாய். அது உடையாமல் பார்த்துக்கொள்” என்பதுதான் பவுலின் நோக்கம்.
Women Should be Silent
34.சபைகளில் உங்கள் ஸ்திரீகள் பேசாமலிருக்கக்கடவர்கள்; பேசும்படிக்கு அவர்களுக்கு உத்தரவில்லை; அவர்கள் அமர்ந்திருக்கவேண்டும்; வேதமும் அப்படியே சொல்லுகிறது.
35.அவர்கள் ஒரு காரியத்தைக் கற்றுக்கொள்ள விரும்பினால், வீட்டிலே தங்கள் புருஷரிடத்தில் விசாரிக்கக்கடவர்கள்; ஸ்திரீகள் சபையிலே பேசுகிறது அயோக்கியமாயிருக்குமே.
1 கொரிந்தியர் 14
நாம் ஏற்கனவே பார்த்தபடி பவுல் வாழ்ந்த காலம், ரோமர்களின் ஆட்சிக்காலம். ரோமர்களின் கலாச்சாரம் நிறைந்து இருக்கும். ரோம வழக்கப்படி, Patar Families என்பது வீட்டிலுள்ள Oldest Living Maleஐக் குறிக்கும். அதாவது வீட்டிலுள்ள வயதான ஆண்தான் வீட்டின் தலைவர். மற்ற அனைவர் மீதும், அந்த தலைவருக்கு தான் அதிகாரம் இருக்கும். அவருடைய முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும்.
புதிதாக பரவிய கிறிஸ்தவமோ, ‘ஆணும் பெண்ணும் சமம்’ என்று பரவியது. அதுபோக, “சீஸர் கடவுள் அல்ல, சிலுவையில் அறையப்பட்ட இயேசு தான் கடவுள்” என்ற கருத்தும் பரவியது. ஏற்கனவே யூத முறைப்படி, பெண்ணாக பிறக்கவில்லை என நன்றி சொல்வார்கள். ஆனால் புதிதாக பரவிய கிறிஸ்தவமோ, “ஆண், பெண், குழந்தை என யாராக இருந்தாலும், அவர்கள் தேவ சாயலில்(God’s Image) படைக்கப்பட்டார்கள்” என்று பரவியது. இந்த கருத்துக்கள் பரவ பரவ, பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர ஆரம்பித்தனர். கணவரை எதிர்க்க ஆரம்பித்தனர். பொதுவெளியில் தங்கள் கருத்தை, மற்றும் புதிதாக பரவிய கிறிஸ்தவ மார்க்கத்தை பற்றி கூற ஆரம்பித்தனர்.
ரோம சட்டத்தின்படி, பெண்கள் பொதுவெளியில் பேசினால் தண்டிக்கப்படுவார்கள். ஏற்கனவே அந்த நேரத்தில், கிறிஸ்தவர்கள் மரண தண்டனையை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் வீணாக பெண்களும் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கத்தில் பவுல் சபையில் பெண்களை பேசவேண்டாம் என கூறினார். ரோமர் 16ம் அதிகாரத்தில், சபை ஊழியராக இருந்த பெபேயாளை தன் சகோதரி என பவுல் கூறியிருக்கிறார். எனவே பவுல் பெண்களுக்கு எதிரானவர் அல்ல.
பவுலின் கருத்துப்படி, அந்த ரோம சாம்ராஜ்யத்தில் வாழ்ந்த பெண்கள், தண்டனைக்குள்ளாக வேண்டாம் என்ற நோக்கத்தில் இப்படி கூறினார். “நீங்கள் பெண்களாக இருப்பதால் இந்த காரியத்தை செய்யக்கூடாது” என இந்த காலத்தில் யாரும் சொல்ல அவசியமில்லை. ஏனென்றால் பெண்கள் படித்திருக்கிறார்கள். அதோடு நாம் வாழும் சூழல் ரோம ஆட்சியைப்போல இல்லை. எனவே இந்த காலத்தில் சபையில் பெண்கள் பேசக்கூடாது என்று சொல்லி, அதற்கு பவுலை எடுத்துக்காட்டாக சொல்வது தவறு.
ஆனால் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். பெண்கள் எவ்வளவு பேசினாலும் சரி, எவ்வளவு சம்பாதித்தாலும் சரி, அவர்கள் குடும்பம் என்ற கட்டமைப்பில் இருப்பதால், “கணவரை நேசிக்க வேண்டும்”. பொதுவாக ஒருவரை நேசித்தால், அவருக்காக எதுவும் செய்வோம். அதேபோலத்தான், நம் குடும்பத்தை நேசித்தால், அவர்களுக்காக நாம் விட்டுக்கொடுக்க பழகிக்கொள்வோம். வேதத்தின்படி, அன்பினால் நாம் நம் குடும்பத்திலுள்ளவர்களுக்கு, அதிலும் முக்கியமாக கணவருக்கு கீழ்ப்படிய வேண்டும். பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் தங்கள் மனைவியை நேசிக்க வேண்டும். கிறிஸ்து நமக்காக உயிரைக் கொடுக்குமளவு நம்மை நேசித்தது போல, கணவர்களும் மனைவியை நேசிக்க வேண்டும். இதுதான் பவுல் கூறவந்த கருத்து. உண்மையில் வேதத்திலுள்ள பெண்கள் (பழைய ஏற்பாட்டு மற்றும் புதிய ஏற்பாட்டு பெண்கள்) எப்படி இருந்தார்கள்? வரும் பதிவுகளில் தொடர்ச்சியாகப் பார்க்கலாம்.
Leave a Reply