யூதர்கள் என்று அழைக்கப்படுகிற, இன்றைய இஸ்ரவேலர்களின் வளர்ச்சி பற்றி இப்பதிவில் காணலாம்.
யூதர்களைப் பற்றி தமிழ் மக்களின் கருத்து:
யூதர்கள் இனவெறி பிடித்தவர்கள். தங்கள் தெய்வம் மட்டுமே உண்மையான தெய்வம் என்று கருதுபவர்கள். தங்கள் தெய்வத்துக்காக, தங்கள் தேசத்துக்காக எந்த எல்லைக்கும் போகிறவர்கள். உலகை ஆளுகை செய்கிறவர்கள். இல்லுமினாட்டிகள். உலகினை ஆளப்பிறந்தவர்கள் யூதர்கள் என்ற திமிர் பிடித்தவர்கள். பழிவாங்குபவர்கள். மோசமானவர்கள். வந்தேறிகள். இரத்த வெறி பிடித்தவர்கள். பாலஸ்தீன தேசத்தைப் பிடித்துக்கொண்டு, பாலஸ்தீனியர்களை சுட்டுக் கொல்பவர்கள்
இதெல்லாம் YouTube comments களில் நான் படித்து அறிந்தது. (2 வருடங்களுக்கு முன்பு எடுத்த கருத்துக்கள் இவை. இப்பொழுது இன்னும் மோசமாக இஸ்ரேலைப் பற்றி பேசுகின்றனர்) இவைகள் எல்லாம் நம் தமிழ் மக்கள் கமெண்ட்களில் யூதர்களைப் பற்றிக் கூறிய வார்த்தைகள். உண்மையில் யூதர்கள் யார்? அவர்கள் கடந்து வந்த பாதைகள் என்ன? யூதர்களின் இரத்த சரித்திரம் என்ன என்று இக்கட்டுரையில் தொடர்ச்சியாக காண்போம்.
தற்போதைய இஸ்ரேல் (After 1948)
இப்போது இருக்கும் இஸ்ரேல் தேசத்தின் வளர்ச்சிகளை முதலாவது நாம் காணலாம்.
- 1. கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளாக, தங்களுக்கென்று ஒரு தேசம் இல்லாமல், பல தேசத்திலும் அடிமைப்பட்டு, சிறைபிடிக்கப்பட்டு, கொல்லப்பட்டு, அவமானப்பட்டு இருந்த மக்கள், தங்களுக்கு என்று ஒரு சுய தேசத்தை உருவாக்கி, அதில் இந்த 75 ஆண்டுக்குள்ளாக மாபெரும் புரட்சி செய்து, உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்திருப்பது, இஸ்ரேலின் சிறப்புகளில் மிகச் சிறந்தது.
- 2. 1948ல் தான் இஸ்ரேல் என்ற நாடு உருவாகி, அதை சுதந்திர நாடு என்று பிரகடனப்படுத்தியதே மே14,1948 தான். அதற்கு அடுத்த நாளே, சுற்றிலும் இருந்த அரபு நாடுகள் சேர்ந்து, இஸ்ரேலின் மீது போர் தொடுத்தது. அப்போதைய இஸ்ரேலின் மக்கள் தொகை வெறும் ஐந்து லட்சம். சுற்றி இருந்த அரபு நாடுகளின் மக்கள் தொகை கிட்டத்தட்ட ஆறு கோடி. அதாவது 120 மடங்கு அதிகம் மக்கள் தொகை கொண்ட அரபு நாடுகள், வெறும் ஒருநாள் வயது குழந்தையான இஸ்ரேலை சுற்றி படையெடுத்தது.
- இஸ்ரேல் என்ற பெயர், உலக வரைபடத்தில் இல்லாமல் போக வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். இந்தப் போரைப் பற்றி விரிவாக வரும் பகுதிகளில் படிக்கலாம். ஆனால் அவ்வளவு படைவீரர்கள் சூழ்ந்து நின்ற போதிலும், இஸ்ரேல் தனது படைவீரர்கள் பலரை இழக்கக் கொடுத்தாலும், அந்தப் போரில் வெற்றி பெற்றது. அதுதான் இஸ்ரேல். எட்டு முறை அண்டை நாட்டினருடன் போரிட்டாலும், ஒரு முறை கூட தோற்காத நாடு என்று பெருமையுடன் காணப்படுவது இஸ்ரேல்.
- 3. பாலஸ்தீனியர்கள் மட்டுமே கிட்டத்தட்ட 170 முறை, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். யாரிடமும் தோற்றுப் போகாத நாடாக, எதிர்ப்பவர்களின் கண்களில் விரல் விட்டு ஆட்டிக் கொண்டிருப்பது இஸ்ரேல்.
- 4. படித்தவர்கள் அதிகம் காணப்படும் நாடு இஸ்ரேல். கிட்டத்தட்ட 99 சதவீத பேர் படித்தவர்களாக இருப்பதுடன், அதிக அளவு போஸ்ட் கிராஜுவேட்(PG) முடித்தவர்கள் கூட இஸ்ரேலில் தான் இருக்கிறார்கள்.
- 5. தனி நாடாக இஸ்ரேல் உருவான பின்னர் 13 பேர் அறிவியலில் நோபல் பரிசு பெற்றுள்ளனர். உலக அளவில் டாப் யூனிவர்சிட்டிஸ் என்ற வரிசையில், முதல் 100 இடத்தில், மூன்று இஸ்ரேலிய கல்லூரிகள் உள்ளன.
- 6. சாட்டிலைட் சொந்தமாக தயாரித்து அனுப்பும் 10 நாடுகளில், இஸ்ரேலும் ஒன்று. இதுவரை 13 சாட்டிலைட்டுகள் அனுப்பப்பட்டு இருக்கிறது. நமது இந்தியா கூட ஒரு சாட்டிலைட் இஸ்ரேலிடம் இருந்து வாங்கி, அதைத்தான் பிற நாடுகளை கண்காணிப்பதற்காக அனுப்பி இருக்கிறோம்.
- 7. பள்ளிப் பிள்ளைகள் தயாரித்த சாட்டிலைட்டை, வானிற்கு அனுப்பிய முதல் நாடு இஸ்ரேல் தான். இதிலிருந்து அறிந்து கொள்ளலாம், அவர்களின் குழந்தைகள் எவ்வளவு அறிவாளிகளாக இருக்கிறார்கள் என்று.
- 8. குடிப்பதற்கு தண்ணீரே இல்லாத நாடு என்றால் அது இஸ்ரேல்தான். ஆனால் அவர்கள் பாலைவனத்தில் கூட விவசாயம் செய்கிறார்கள். எப்படி? கடல் தண்ணீரை சுத்திகரித்து, குடிநீராக மாற்றி ,அதைத்தான் உபயோகித்துக் கொண்டிருக்கிறார்கள்.
- 9. கழிவுநீரை அதிகமாக மறுசுழற்சி செய்கிற நாடும் இஸ்ரேல்தான். வீடுகளில் இருந்து வரும் 60% கழிவுநீரும், ஃபேக்டரிகளில் இருந்து வெளிவரும் 85 சதவீத தண்ணீரையும், சுத்திகரித்து, அதிலிருந்து வரும் தண்ணீரை 97% விவசாயத்திற்கு உபயோகித்துக் கொண்டிருக்கின்றனர். விவசாயத்திற்கு அவர்கள் உபயோகிக்கிற நீரில் 55 சதவீத தண்ணீர் drainage water.
- 10. தண்ணீரை எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்பதைத் தெரிந்தவர்கள் இஸ்ரவேலர்கள் தான். அவர்கள் தான் சொட்டுநீர் பாசனம் முறையை கண்டுபிடித்தவர்கள்.
- 11. உலக அளவில் பால் உற்பத்தியில் முதலிடம் பிடிப்பதும் இஸ்ரேல்தான். அதிகளவு பால் உற்பத்தி பண்ணுகிற மாடு இஸ்ரேலில் தான் கிடைக்கும்.
- 12. உலகிலேயே மியூசியம் அதிகம் உள்ள நாடு இஸ்ரேல் தான். உலகிலே அதிக ஆர்கெஸ்ட்ரா உள்ள நாடும் இஸ்ரேல்தான்.
- 13. இஸ்ரேல் நாட்டில் மட்டும் 137 பீச் இருக்கிறது.
- 14. அதிக வரலாற்று சிறப்புமிக்க இடம் கொண்ட நாடு இஸ்ரேல் தான். எருசலேமில் மட்டும் கிட்டத்தட்ட 2000 இடங்கள் வரலாற்று இடங்களாக உள்ளது.
- 15. உலகிலேயே உயரமான இடம் எவரெஸ்ட் என்பது அனைவருக்கும் தெரியும்(8848m). World lowest pointஎது என்று கேட்டால், அது இஸ்ரேலில் உள்ள Dead seaதான். 1315m low ஆக இருக்கும். அங்குள்ள உப்புத்தன்மை அதிகம் என்பதால், அதில் சுலபமாக மிதக்க முடியும்.
- 16. நாம் கையில் வைத்திருக்கிற smart phoneக்கு foundation போட்டது இஸ்ரேல் தான். Israelல் உள்ள Motorola company ன் Research and Development engineers, இன்றைக்கு உபயோகிக்கும் மொபைல் போன்களுக்கு அடித்தளம் போட்டவர்கள்.
- 17. Google, Apple, Microsoft, Intel இப்படி பெரிய நிறுவனங்களுக்கு Research and Development team இன்றும் இஸ்ரேலில் இருக்கும். டெக்னாலஜியில் அதிகம் பெயர் பெற்ற நாடு இஸ்ரேல்.
- 18. ஒரு வருடத்துக்கு மட்டும் கிட்டத்தட்ட 1000 கடிதங்கள் கடவுளுக்கு(To God) என்று பெயர் போட்டு வரும். இதை டீல் செய்வதற்காகவே ஒரு தனி டிபார்ட்மெண்ட் போஸ்டல் துறையில் உள்ளது.
- 19. Mount of Olives என்று ஒரு சுடுகாடு இஸ்ரேலில் உள்ளது. இதுவரை அது சுடுகாடாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. பொதுவாக ஒரு இடம் சுடுகாடாக பயன்படுத்தப்படும். பின்னர் அந்த இடம் வேறொரு பயன்பாட்டில் வந்து சேரும். அல்லது வேறொரு பயன்பாட்டில் இருந்த இடம், சுடுகாடாக மாறும். ஆனால் இஸ்ரேலிலுள்ள இந்த ஒரு இடம் மட்டும் , உலகிலே மிகப் பழமையான சுடுகாடு என்ற பெருமையை பெற்றது.
- 20. மிகப் பழமையான பட்டணங்கள் பட்டியலில், எருசலேமும் ஒன்று. ஆனால் இந்த எருசலேம் இரண்டு முறை முற்றிலுமாக அழிக்கப்பட்ட நகரம். அதே போல 23 முறை எதிரி படையால் சூழப்பட்டிருந்தது. 53 முறை எதிரியால் தாக்கப்பட்டிருந்தது. 44 முறை பிடிக்கப்பட்டுள்ளது. இத்தனையும் தாண்டி இன்றும் எருசலேம் என்ற பட்டணம் அங்கே காணப்படுவது ஒரு சிறப்பு தானே!
Leave a Reply