மிஸ்பா (Mizpah)
தேவனுக்கு தூரமாகி விட்டேனா என்ற இந்த பதிவுகளை எழுத ஆரம்பிக்கும்போது, எனக்கு நிச்சயமாக தெரியாது. இந்த நாட்கள் Teshuvahவின் நாட்கள் என்று. நாம் ஏற்கனவே வேத பண்டிகைகள் பற்றி படிக்கும்போது, மோசே முதல்முறை மலைக்கு போய், 40 நாட்கள் தேவனுடன் இருந்து, கற்பலகைகள் கொண்டு வந்தார். இரண்டாவது முறை, மோசேயே மலைக்கு போனார். ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. நீ அழைத்து வந்த உன் ஜனம், உன் மக்கள் என்று இஸ்ரவேலரைப் பற்றி மோசேயிடம் தேவன் கூறினார்.
ஆனால் மூன்றாவது முறை, தேவனே initiate செய்து, மோசேயை மலைக்கு அனுப்பினார். யாத் 34:10 அதற்கு அவர்: இதோ, நான் ஒரு உடன்படிக்கைபண்ணுகிறேன்; பூமியெங்கும் எந்த ஜாதிகளிடத்திலும் செய்யப்படாத அதிசயங்களை உன் ஜனங்கள் எல்லாருக்கு முன்பாகவும் செய்வேன்; உன்னோடேகூட இருக்கிற ஜனங்கள் எல்லாரும் கர்த்தருடைய செய்கையைக் காண்பார்கள்; உன்னோடேகூட இருந்து, நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும். என்று வாக்கு கொடுத்தார்.
இனி ஒன்றும் செய்ய முடியாது என்று மோசே தோல்வியடைந்த நிலையில், தேவனே ஆரம்பித்து, 40 நாட்கள் மலையில் வைத்த அனுபவம் தான், a new season, தற்போது டெசுவாவாக கொண்டாடுகிறார்கள். இது மக்களுக்கு தேவன் கொடுக்கிற காலம். மனம் திரும்புதலின் காலம். ஜீவ புத்தகத்தில் பெயரெழுதப்படும் காலம் என்று கூறுகிறார்கள்.
“கர்த்தரை கண்டடையத்தக்க சமயத்தில், அவரைத் தேடுங்கள்” என்ற வசனத்தின், கண்டடையத்தக்க காலம் இதுதான் என்கிறார்கள். இது மனம் திரும்புதலின் நாட்கள் என்று கொண்டாடுகிறார்கள். எபிரேய ஆறாம் மாதம் முதல் தேதியிலிருந்து, எபிரேய ஏழாம் மாதம் 10ம் தேதி வரை, 40 நாட்கள் உபவாச நாட்களாக கொண்டாடுகிறார்கள். சிலர், 7ம் மாதம் முதல் தேதியிலிருந்து, 7ம் மாதம் 10ம் தேதி வரை மட்டும், 10 நாட்கள் உபவாசம் இருப்பார்கள். இந்த Teshuvah நாட்கள் இந்த வருடம், ஆகஸ்ட் 25ஆம் தேதி தொடங்குகிறது. இஸ்ரேலில், நாள் தொடக்கம் என்பது, முந்தின நாள் மாலையிலிருந்து ஆரம்பிக்கும் என்பதால், ஆகஸ்ட் 24 மாலை 6 மணியிலிருந்து இந்த நாட்கள் ஆரம்பிக்கிறது.
- In 2025, the period known as the Teshuvah (Repentance) period begins on the evening of Monday, August 25, 2025, which marks the start of the Hebrew month of Elul, and concludes on the evening of Wednesday, October 1, 2025, with the start of Yom Kippur.
- The month of Elul will begin on Jewish Year 5785: sunset August 24, 2025 – nightfall August 25, 2025
- The 40 Days of Teshuvah, a sacred time in the Jewish calendar, invites us to draw closer to God with open hearts. Beginning on Elul 1 (August 24, 2025, at sunset) and ending on Yom Kippur (nightfall on October 2, 2025), this season is a great opportunity to return to our Heavenly Father and recommit our lives to His purpose.
ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதியிலிருந்து, அக்டோபர் 1ம் தேதி வரையில், 40 நாட்கள் உபவாச நாட்களாக, தேவனிடம் கிட்டிச் சேரும் நாட்களாக கருதுகிறார்கள். அதே நாட்களில், நாம் தேவனுக்கு தூரமாயிருக்கவில்லை என்று தேவன் நமக்கு கற்றுக்கொடுப்பதற்காக தேவனுக்கு நன்றி சொல்கிறேன்.
தேவனுக்கு தூரமில்லை என்ற இந்த தொடர் பதிவில், இந்த நாளில் கர்த்தர் கொடுத்த வார்த்தைகள், “மிஸ்பா” மற்றும் “ஜெபிக்க ஒரு இடம்”. கர்த்தர் கற்றுக்கொடுத்த காரியங்களை உங்களுடன் பகிர்கிறேன்.
1 சாமுவேல் 7
3 அப்பொழுது சாமுவேல் இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரையும் நோக்கி: நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் கர்த்தரிடத்தில் திரும்புகிறவர்களானால், அந்நிய தேவர்களையும் அஸ்தரோத்தையும் உங்கள் நடுவிலிருந்து விலக்கி, உங்கள் இருதயத்தைக் கர்த்தருக்கு நேராக்கி, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்யுங்கள்; அப்பொழுது அவர் உங்களைப் பெலிஸ்தருடைய கைக்கு நீங்கலாக்கிவிடுவார் என்றான்.
4 அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் பாகால்களையும் அஸ்தரோத்தையும் விலக்கிவிட்டு, கர்த்தர் ஒருவருக்கே ஆராதனைசெய்தார்கள்.
5 பின்பு சாமுவேல்: நான் உங்களுக்காகக் கர்த்தரை மன்றாடும்படிக்கு, இஸ்ரவேலர் எல்லாரையும் மிஸ்பாவிலே கூட்டுங்கள் என்றான்.
6 அவர்கள் அப்படியே மிஸ்பாவிலே கூடிவந்து தண்ணீர் மொண்டு, கர்த்தருடைய சந்நிதியில் ஊற்றி, அன்றைய தினம் உபவாசம்பண்ணி, கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தோம் என்று அங்கே சொன்னார்கள்; மிஸ்பாவிலே சாமுவேல் இஸ்ரவேல் புத்திரரை நியாயம் விசாரித்துக்கொண்டிருந்தான்.
7 இஸ்ரவேல் புத்திரர் மிஸ்பாவிலே கூடிவந்ததைப் பெலிஸ்தர் கேள்விப்பட்டபோது, பெலிஸ்தரின் அதிபதிகள் இஸ்ரவேலுக்கு விரோதமாக எதிர்த்து வந்தார்கள்; அதை இஸ்ரவேல் புத்திரர் கேட்டு, பெலிஸ்தரினிமித்தம் பயப்பட்டு,
8 சாமுவேலை நோக்கி: நம்முடைய தேவனாகிய கர்த்தர் எங்களைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கும்படிக்கு, எங்களுக்காக அவரை நோக்கி ஓயாமல் வேண்டிக்கொள்ளும் என்றார்கள்.
9 அப்பொழுது சாமுவேல் பால்குடிக்கிற ஒரு ஆட்டுக்குட்டியைப் பிடித்து, அதைக் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாகச் செலுத்தி, இஸ்ரவேலுக்காகக் கர்த்தரை நோக்கி வேண்டிக்கொண்டான்; கர்த்தர் அவனுக்கு மறுமொழி அருளிச் செய்தார்.
10 சாமுவேல் சர்வாங்க தகனபலியைச் செலுத்துகையில், பெலிஸ்தர் இஸ்ரவேலின்மேல் யுத்தம்பண்ண நெருங்கினார்கள்; கர்த்தர் மகா பெரிய இடிமுழக்கங்களைப் பெலிஸ்தர்மேல் அந்நாளிலே முழங்கப்பண்ணி, அவர்களைக் கலங்கடித்ததினால், அவர்கள் இஸ்ரவேலுக்கு முன்பாகப் பட்டு விழுந்தார்கள்.
11 அப்பொழுது இஸ்ரவேலர் மிஸ்பாவிலிருந்து பெலிஸ்தரைப் பின் தொடர்ந்துபோய், பெத்காரீம் பள்ளத்தாக்குமட்டும் அவர்களை முறிய அடித்தார்கள்.
12 அப்பொழுது சாமுவேல் ஒரு கல்லை எடுத்து, மிஸ்பாவுக்கும் சேனுக்கும் நடுவாக நிறுத்தி, இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவிசெய்தார் என்று சொல்லி, அதற்கு எபெனேசர் என்று பேரிட்டான்.
13 இந்தப்பிரகாரம் பெலிஸ்தர் அப்புறம் இஸ்ரவேலின் எல்லையிலே வராதபடிக்குத் தாழ்த்தப்பட்டார்கள்; சாமுவேலின் நாளெல்லாம் கர்த்தருடைய கை பெலிஸ்தருக்கு விரோதமாய் இருந்தது.
கர்த்தருடைய உடன்படிக்கை பெட்டி, சீலோவில் உள்ள தேவாலயத்தில் இல்லாமல், அம்மினதாப் என்பவரது வீட்டில் இருப்பதால், மக்கள் சோகமடைந்து, சாமுவேலிடம் சொல்கிறார்கள். சாமுவேல் மக்களை உபவாசித்து ஜெபிக்கும்படி, மிஸ்பாவுக்கு வரச் சொன்னார். அந்த நேரத்தில் பெலிஸ்தர் யுத்தம் பண்ண வந்தார்கள். தேவனிடம் ஜெபிக்கும்போது, பெரிய இடி முழக்கம் கொடுத்து, தேவன் அவர்களை விடுவித்தார். ஒரு supernatural victory கிடைத்தது.
The name Mizpah means “watchtower” or “lookout”. மிஸ்பா என்றால் காவற்கோபுரம் என்று அர்த்தம். காவற்கோபுரங்கள் என்பது, உயரமான ஒரு கட்டமைப்பைக் குறிக்கிறது. மக்கள் அந்த உயர்ந்த இடத்திலிருந்து, தூங்காமல் விழித்திருந்து பார்க்க வேண்டும். ஒருவேளை, பிற நாட்டிலிருந்து யுத்தத்துக்கு வரலாம், நமது வயல்களைக் கெடுக்க வரலாம், விவசாய விழிப்புணர்வு மற்றும் இராணுவ பாதுகாப்புக்காக, காவற்கோபுரங்களை வைத்திருந்தார்கள். நாமும், தூங்காமல் விழித்திருந்து ஜெபிக்க வேண்டும், நல்ல காவற்காரர்களாக இருக்க வேண்டும் என மிஸ்பா கற்றுக்கொடுக்கிறது. நமக்கு எதிராக சாத்தான் என்ன திட்டம் வைத்திருந்தாலும், நாம் நல்ல காவற்காரராய் இருந்தால், எதுவும் நம்மை நெருங்காது.
சாமுவேல், ஜனங்களை அழைத்து, மிஸ்பாவில் உபவாசமிருந்து தங்கள் பாவங்களை அறிக்கையிட வைத்தார். நாமும் இப்பொழுது இருக்கிற நாட்கள், மனம் திரும்புதலின் நாட்கள். உபவாச நாட்கள். முடிந்தவர்கள் இந்த 40 நாட்களில் உபவாசமிருந்து தேவனிடம் நெருங்கலாம்.
11 அப்பொழுது யெப்தா கீலேயாத்தின் மூப்பரோடே கூடப்போனான்; ஜனங்கள் அவனைத் தங்கள்மேல் தலைவனும் சேனாபதியுமாக வைத்தார்கள். யெப்தா தன் காரியங்களையெல்லாம் மிஸ்பாவிலே கர்த்தருடைய சந்நிதியிலே சொன்னான். நியாயாதிபதிகள் 11:11
யெப்தா என்பவர், தவறான பொருத்தனையால், தன் மகளையே பலி கொடுத்தார். அவர் யுத்தத்துக்கு போவதற்கு முன், கர்த்தரிடம் பேசிய இடம் மிஸ்பா.
சாமுவேல் ஜனங்களை மிஸ்பாவிலே கர்த்தரிடத்தில் வரவழைத்து, 1சாமு 10:17
வேதத்தில் அநேக இடத்தில், மிஸ்பாவில் கூடினார்கள் என்று பார்க்கலாம். வேதத்தில், யாக்கோபு லாபானை விட்டு தன் மனைவி பிள்ளைகளோடு திரும்பி வரும்போது, மாமனார் லாபான் தொடர்ந்து வந்து யாக்கோபோடு, ஒரு உடன்படிக்கை செய்வார். அந்த இடத்துக்கு யாக்கோபு கலயெத் என்று பேரிட்டார். அது தான் மிஸ்பா என்று கூறுகிறார்கள்.
நாம் என்ன செய்ய வேண்டும்?
மிஸ்பா ஒன்றை நம் வீட்டில் ஏற்படுத்துவது தான் இப்பொழுது நாம் செய்ய வேண்டிய காரியம். தேவனுக்கு தூரமாகி விட்டேனா என்று யோசிப்பதை விட, தேவனுக்கு அருகில் இருப்பதற்கு, நமது வீட்டில் ஒரு இடத்தை ஆயத்தப்படுத்தலாம். நாம் எந்த இடத்தில் தினமும் ஜெபிக்க முடியுமோ, அந்த இடத்தை தேர்வு செய்யுங்கள். அது வெறும் ஒரு நாற்காலியாக கூட இருக்கலாம். பிரச்சனையில்லை. ஆனால் தேர்வு செய்யுங்கள். ஒரு குறிப்பிட்ட நேரத்தையும் தேர்வு செய்யுங்கள்.
“இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இந்த இடத்தை நான் மிஸ்பாவாக பிரதிஷ்டை செய்கிறேன். இது தான் என் காவற்கோபுரம். நான் தினமும் அதிகாலையில் 4 மணிக்கு இந்த இடத்தில் வந்து தேவனுடன் பேசுவேன். இதிலிருந்து ஜெபித்து, நான் சத்துருவின் திட்டங்களை முறியடிக்கப் போகிறேன். என் உபவாச நாட்களை கொண்டாடப் போகிறேன். இயேசுவுடன் உறவாடப் போகிறேன்” என்று பிரதிஷ்டை செய்யுங்கள். ஒரு குறிப்பிட்ட நேரத்தை நியமியுங்கள்.
இதெல்லாம் ஏற்கனவே எங்கள் வீட்டில் இருக்கிறது, ஆனாலும் தேவனை விட்டு தூரம் போன உணர்வு வருகிறது என்று யோசிக்கிறீர்களா? நாம் மாற்ற வேண்டியது நம் mindset. இப்பொழுது வேதம் கையில் எடுத்தால், “இது இயேசு என் கரத்தில் இருக்கிறார்” என்று உங்களுக்கு தோன்றுகிறதல்லவா? அதேபோல அந்த குறிப்பிட்ட நேரத்தில், “அந்த இடத்தில் இயேசு எனக்காக wait செய்கிறார்” என்று நினையுங்கள்.
துதிகளின் மத்தியில் வாசம் செய்கிறவர் அவர். ‘அவருக்கு என்று நாம் ஒரு இடம் ரெடியாக வைத்தால், நிச்சயமாக இயேசு அந்த இடத்தில் நமக்காக காத்துக் கொண்டிருப்பார். உடனடியாக எல்லாம் மணிக்கணக்கில் ஜெபிக்க முடியாது. ஏனெனில் நம் சிந்தையில் இன்னும் மாற்ற வேண்டிய காரியம் ஏராளம் தாராளம் உள்ளது. முதலில், அந்த இடத்தில், குறித்த நேரத்தில் அமர்ந்து, தேவனை துதித்து நிறைய பாடல்கள் பாடுங்கள். உங்களது ஜெபம் எவ்வளவு நிமிடமோ அதை தொடருங்கள். ஆவியானவர் உதவியால் தொடர்ந்து தேவனிடம் நெருங்குவோம்.
Leave a Reply