இயேசு என் நண்பர்

இயேசு எப்படி மாம்சமாக (மனிதனாக) வந்தது உண்மையோ, அதேபோல தற்போது இயேசு ஒரு supernatural written format ஆக, நம் கைகளில் இருக்கிறார். வேதம் என்பது, இயேசுவைப் பற்றி சாட்சி கொடுப்பது. வேதத்தை நாம் திறக்கும்போது, இயேசுவை நம்முடன் பேச, invite செய்கிறோம் என்று பார்த்தோம். இப்போது வேதம் வாசிப்பதில் interest வந்ததோ இல்லையோ, இயேசு என் கைகளில் இருக்கிறார் என்ற ஒரு எண்ணம் அவ்வப்போது நமக்கு வருகிறதுதானே! அப்படி வந்தால், நமக்குள் தேவன் கிரியை செய்து கொண்டு இருக்கிறார். விரைவில், வேதம் மூலம் இயேசுவுடன் உறவாடுவது உறுதி.

அடுத்ததாக, ஜெபிக்க என்றே ஒரு இடம் (Prayer room), அல்லது ஒரு chair பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று பார்த்தோம். ஏதோ ஒரு இடம், ஆனால் அவ்விடத்தில் தினம்தோறும் ஜெபிக்க வேண்டும். அதுவும் ஒரு குறிப்பிட்ட நேரம் அதற்கென ஒதுக்கி, அந்நேரத்தில் ஜெபிக்க வேண்டும்.

எடுத்துக்காட்டாக, “நான் தினமும் இரவு 11 முதல் 12 மணிக்கு, bedroomன் அந்த மூலையில் அமர்ந்து ஜெபிப்பேன்” என்று பிரதிஷ்டை செய்திருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். நாம் இரண்டு நாட்கள் அந்த இடத்தில், அந்த நேரத்தில் ஜெபித்தால் போதும். மூன்றாம் நாளில், நாம் அந்த இடத்துக்கு செல்வதற்கு முன்பே, இயேசு அங்கே அமர்ந்து, நமக்காக wait பண்ணுவார். ஏதோ ஒரு நாள், அசதியில் தூங்கி விடுகிறோம் என்றால், அந்த நேரத்தில், அவர் ஏமாற்றமாக அந்த இடத்தில் அமர்ந்திருப்பார். அவர் எதிர்பார்ப்பது பெரிய ஒரு மணி நேர ஜெபத்தை அல்ல. அவரிடம் மனம்விட்டு பேசி, உறவில் இருப்பதை தான் அவர் விரும்புகிறார்.

ஜெபம் பண்ண முடியவில்லை என்று வருத்தப்பட வேண்டாம். அந்த இடத்தில் அமர்ந்து பாடல்கள் பாடினால் போதும். அவர் வந்து நம் அருகே அமர்வார். ஏனெனில் நம் தேவன் துதிகளின் மத்தியில் வாசம் செய்பவர். எங்கள் போதகர் அடிக்கடி சொல்வார், “எனக்கு பாடத் தெரியாது என்று கவலைப்பட வேண்டாம். ஏதேனும் ஒரு worship போட்டு விட்டு, அதனுடன் இணைந்து பாடலாம்” என்று. எப்படியோ, பாடி அவரைத் துதித்து, அவர் பிரசன்னத்தில் அமரலாம்.

நிறைய நேரங்களில், “அவர் பிரசன்னம்” என்பதை, நாம் சரியாகப் புரிந்து கொள்வது இல்லை. Music போட்டு பாடும்போது, அல்லது குறிப்பிட்ட பாஸ்டர் பாடும்போது அவர் பிரசன்னம் வரும் என்று நினைக்கிறோம். ஆனால்,  பிரசன்னம் என்பதன் அர்த்தம் “முன்தோன்றுதல்”, அதாவது நம் முன் வருவதைக் குறிக்கிறது. Presence என்பதன் அர்த்தம், “இருத்தல்”. அதாவது நாம் இருக்குமிடத்தில், தேவன் நம்முடன் இருப்பதைக் குறிக்கிறது. “எப்போதெல்லாம், நாம் அவரைத் துதிக்கிறோமோ, அவருடன் பேசுகிறோமோ, அப்போதெல்லாம், அவர் நம் அருகே வந்து அமர்கிறார். நம் முன் தோன்றுகிறார். நம்முடன் இருக்கிறார்.” இதுதான் பிரசன்னம். அவர் பிரசன்னத்தில் அமரலாம் என்றால், அவருடன் அமரலாம்.

இன்றைக்கு நாம் பார்க்கப்போவது, ‘இயேசு என் நண்பர்’ என்பதைப்பற்றி. “இயேசு என் friend தான். எனக்கே தெரியுமே” என்று நினைக்கிறீர்களா? உண்மைதான். நமக்கு தெரியும் தான். நாம் அவரை எப்படி receive செய்கிறோம்?

உங்கள் வீட்டுக்கு உங்கள் friends வருவார்கள், போவார்கள். என்றைக்காவது, “ஐயோ என் தோழன், என் வீட்டுக்கு எந்த நேரத்திலும் வருவான், எனவே எப்பொழுதும் வீட்டை சுத்தமாக வைத்திருக்கு வேண்டும் என்று நினைப்போமா?” முதல்முறை அவர் வரும்போது, வீட்டை மிக நேர்த்தியாக வைப்போம். அடுத்த முறை, கொஞ்சம் கலைந்து இருக்கும். மூன்றாவது முறை வரும்போது, துவைத்து மடிக்காமல் இருக்கும் துணிக்குவியலை, ஒரு துணியால் மூடி வைப்போம். அதன்பின்னர் அதே தோழர் வீட்டுக்கு வரும்போது, அதைக்கூட செய்ய மாட்டோம். நண்பர் வரும்போது, வீடு எப்படி இருந்தாலும் நாம் அதைப்பற்றிக் கவலைப்பட மாட்டோம். ஏனெனில் அவர் நம் நண்பர். நம் குடும்பத்தில் ஒருவர். இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமானால், நம் status உடன் ஒத்துப்போகக் கூடியவர். அதனால் வீடு எந்த நிலையில் இருந்தாலும், எவ்வளவு குப்பையாக இருந்தாலும் நமக்கு கவலை இல்லை. நாம், இயேசுவைக் கூட அந்த நிலையில் தான் வைத்து விட்டோம்.

இப்பொழுது, இப்படி யோசிப்போம். நீங்கள் புதிதாக வேறு அலுவலகத்துக்கு மாற்றலாகி போய் விட்டீர்கள். உங்களுடன் வேலை பார்ப்பவர், மிகவும் பெரிய மனிதர் ஒருவரின் மகன், மிகப்பெரிய செல்வந்தர். பார்க்கவே டிப்டாப் ஆக இருப்பார். எங்கும் சுத்தமாக இருப்பதை விரும்புவார். ஒருமுறை அவர் வீட்டுக்கு, உங்களை அழைத்துச் செல்கிறார். அந்த வீட்டில், எங்கும், எதிலும் ஒரு நேர்த்தி. அந்த நபர், திடீரென ஒருநாள், உங்கள் வீட்டுக்கு அருகிலுள்ள ஒரு வீட்டை வாங்கி, அங்கு வருகிறார். இனி எப்போது நினைத்தாலும், அவரால் உங்கள் வீட்டுக்கு வர முடியும். அடிக்கடி வர ஆரம்பிக்கிறார்.

அவர் உங்களுக்கு நெருங்கிய நண்பர் தான். ஆனாலும், அவர் வரும்போது, “சோஃபாவில் துணி இருக்கிறது, chairல் அமருங்கள்” என்று சொல்வோமா? நிச்சயமாக சொல்ல மாட்டோம். ஏனெனில் உங்களுக்கு தெரியும், அவருக்கு அசுத்தமாக இருக்கும் இடம் பிடிக்காது என்று. அந்த sofaவை தினமும் எவ்வளவு neat பண்ணி வைப்பீர்கள்! உண்மையில், நம்மால் maintain செய்ய முடியவில்லை என்றால், அவருக்கென ஒரு இருக்கையை ரெடி செய்து, “இது அவருக்கு மட்டும்தான். இதில் பிள்ளைகள் ஏறி விளையாடக்கூடாது” என்றாவது செய்வோம் அல்லவா! ஏனெனில் அவர் statusல் நம்மை விட உயர்ந்தவர். அவர் ரொம்ப neat ஆக இருப்பார். அவருக்கு சுத்தமல்லாத இடம் பிடிக்காது.

இப்போது யோசித்து பாருங்கள். உங்கள் நண்பர், உங்கள் தரத்தில் இருக்கும்போது, நீங்கள் அவருக்கு எந்த முன்னுரிமையும் கொடுக்கவில்லை. ஆனால் இன்னொரு நண்பர், உங்களை விட உயர்ந்த தரத்தில் இருக்கும்போது, அவருக்கு equal ஆக, நீங்கள் உங்கள் தரத்தை உயர்த்த வேண்டியுள்ளது. உண்மைதானே!

இப்போது சொல்லுங்கள், உங்கள் மனதில் இருக்கும் இயேசு, உங்களைப் பொறுத்தவரையில், எப்படி இருக்கிறார்?

“எந்த குப்பையும் இருக்கலாம், இயேசுவும் உள்ளே வரலாம்” என்ற நிலையில் இருக்கிறாரா? இல்லை என்றால்,

“இயேசு, பிதாவினுடைய ஒரே மகன். எவ்வளவு செல்வாக்கானவர். அவர் தரம் எப்படிப்பட்டது? அப்படிப்பட்டவர் எனக்கு நண்பர். அவர், எந்த நேரத்திலும் உள்ளே வருவார். இது எவ்வளவு பெரிய பாக்கியம்! அவருக்கு நான் ஆயத்தப்படுத்தி வைக்க வேண்டும்” இப்படி நினைக்கிறோமா?

இயேசு நமக்கு நண்பர் என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, “இயேசு மிகவும் கனத்துக்கு உரியவர், அவர் ராஜாதி ராஜாவின் பிள்ளை. அவரே ஒரு ராஜா”

இயேசுவை கனத்துக்குரிய(மரியாதைக்குரிய) ஒருவராக பார்க்கிறோமா? இல்லை, வெறுமனே “இயேசு தானே… நாம் எதைச் செய்தாலும் அவர் மன்னித்து விடுவார்” என்று பார்க்கிறோமா?

கர்த்தருடைய வேதம் ‘இருபுறமும் கருக்குள்ள பட்டயம்’ என்பது நமக்கு தெரியும். ‘இயேசு தான் வேதம்’ என்றும் பார்த்தோம். வேதம் பட்டயம் என்றால், அவரும் ஒரு பட்டயம் தான். ஒருபுறம், நம் பாவங்களை தன் மீது ஏற்றுக்கொண்டு, நமக்கு நீதிமான் என்ற பெரிய பாக்கியத்தைக் கொடுத்திருக்கிறார். மறுபுறம், அவர்தான் நியாயாதிபதியாக வந்து, அவரை ஏற்றுக்கொள்ளாதவர்களை நியாயந்தீர்க்க போகிறார். பாவத்துக்கான பரிகாரியும் அவர்தான், பாவத்துக்கான தண்டனை கொடுக்கப்போவதும் அவர்தான்.

இயேசுவை, அவருக்குரிய கனம் கொடுத்து, மிகவும் கனம் பொருந்திய ஒரு நண்பராக வைத்திருக்கிறோமா? இல்லையெனில், அவரையும் நம்மைப்போல குப்பையாக எண்ணி, அவரிடம் advantage எடுக்கிறோமா?

நமது தரத்தில் இயேசுவைப் பார்க்கிறோமா? இயேசுவின் தரத்தில் அவரை வைத்து, அப்படிப்பட்ட செல்வாக்கான நபர் நம் நண்பராக இருக்கிறார் என்று பார்க்கிறோமா?

செய்ய வேண்டியது ஒன்றுதான். இன்று நாம் மாற்றப்போகும் mindset, “இயேசு, மிகவும் செல்வாக்கான ஒரு நபர். அவர் என்னுடைய நண்பராக இருக்கிறார். இந்த உலகத்தில் உள்ள என் நண்பர்களைப் போல அவர் அல்ல. இவர் மிகவும் பெரியவர். இவர் மூச்சு விட்டால் கடல் பிளந்து ரோடு உண்டாகும். இவர் ஒரு வார்த்தை சொன்னால், கடுமையான புயல் அமைதியாகும், மரித்தவர் உயிரோடு எழும்புவார்கள், நோய்கள் மறையும், அற்புதம் நடக்கும், சாபம் மாறும், விடுதலை உண்டாகும், தரித்திரம் மாறும். அப்படிப்பட்ட நபர் என் நண்பராக இருக்கிறார்.

  • என் உற்ற தோழனாகவே இருந்தாலும், அவர் மிகவும் கனம் பொருந்தியவர்.
  • நான் தேர்ந்தெடுத்த மிஸ்பாவில், நான் குறித்த நேரத்தில், அவருக்காக நான் காத்திருக்க வேண்டும்; அவர் எனக்காக காத்திருக்கக் கூடாது.
  • என் வேதத்தை open செய்து, அவரை நான் invite செய்ய வேண்டும். அவருடன் பேச வேண்டும். அவருடன் நெருக்கமான நண்பனாக வேண்டும்.

இதை அடிக்கடி யோசியுங்கள். நம்மால் தேவனை விட்டு தூரம் போகவே முடியாது. நாம் சுலபமாக நெருங்கும் தூரத்தில், தடவி கண்டுபிடிக்கும் தூரத்தில், அவர் இருக்கிறார். தேவனுக்கு தூரமாக இல்லை என்று தொடர்ச்சியாக பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *