நியாயப்பிரமாண காலத்தில், நான் செய்த தவறுக்கு எனக்கு தண்டனை உண்டு. அதனால் எனக்கு வியாதி, தரித்திரம், சாபம் எல்லாம் வந்தது. சரியாகச் சொல்ல வேண்டுமானால், ஆதாம் செய்த தவறினால் உலகத்துக்கே சாபம் வந்தது. அது உண்மையாக இருக்குமானால், அதேபோல பிந்தின ஆதாமாகிய இயேசுவால், உலகத்தின் எல்லா சாபமும், வியாதியும், தரித்திரமும் மாறிவிட்டது. இப்பொழுது நான் கிருபைக்குள்ளாக வந்து விட்டேன். என் பலவீனங்கள் எல்லாம் அவர் சுமந்து தீர்த்து விட்டார். நான் சுமக்க தேவை இல்லை. நான் விடுதலை பெற்று விட்டேன்.

கலாத்தியர் 3-13 கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்.

வசன அறிக்கைகள்

1.கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பிய அதே ஆவியானவர் எனக்குள் இருக்கிறார். அதைப்போல உள்ள ஆவியானவரல்ல, அந்த ஆவியானவரின் பாதி அல்ல, அதே ஆவியானவர்(The Same Spirit) எனக்குள் இருக்கிறார். சாவுக்கேதுவான எந்த வியாதியையும் அவர் உயிர்ப்பிப்பார்.

ரோமர் 8:11 அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.

2.கர்த்தர் என் அப்பத்தையும் தண்ணீரையும் ஆசீர்வதித்தால், எனக்கு பிரஷ்ஷர் வராது, சுகர் வராது, கொலஸ்ட்ரால் வராது

யாத்திராகமம் 23:25 உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக்கடவீர்கள்; அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன்.

3.கர்த்தர் என் அக்கிரமங்களை மன்னித்து விட்டார், என் நோய்களை குணமாக்கி விட்டார். எனக்கு மரணம் இப்பொழுது இல்லை, என் நோய் சுகமாகி விட்டது.

சங்கீதம் 103- 3அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி,
4. உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி,
5.நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வாலவயது போலாகிறது.

4.இயேசு என் பாவங்களை சிலுவையில் சுமந்து தீர்த்து விட்டார். அவருடைய தழும்புகளால் நான் சுகமானேன்.

1பேதுரு 2 – 24. நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.

ஏசாயா 53 – 5 நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.

5.கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார், என் கண்ணீரைக் கண்டார், என்னை குணமாக்கி விட்டார்.

2 இராஜாக்கள் 20- 5 உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன்;

6.பொல்லாப்பு எனக்கு நேரிடாது,  எந்த வாதையும் என் வீட்டை அணுகாது.

சங்கீதம் 91- 10 ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது.

  1. கர்த்தர் சகல நோய்களையும் என்னை விட்டு விலக்கி விட்டார்.

உபாகமம் 7-15 கர்த்தர் சகல நோய்களையும் உன்னைவிட்டு விலக்குவார்;

  1. எகிப்தியருக்கு வந்த எந்த வியாதியும் எனக்கு வராது என்று தேவன் வாக்கு கொடுத்து இருக்கிறார். அவரே என் பரிகாரி.

யாத்திரகாமம் 15- 26 நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார்.

  1. கர்த்தர் அவரது வசனத்தை அனுப்பி, என்னை குணமாக்கி, என்னை அழிவுக்கு தப்புவித்தார்.

சங்கீதம் 107-20 அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்.

  1. கர்த்தர் எனக்கு சவுக்கியம் ஆரோக்கியம் வரப்பண்ணி என்னை குணமாக்குகிறார்.

எரேமியா 33-6 இதோ, நான் அவர்களுக்குச் சவுக்கியமும் ஆரோக்கியமும் வரப்பண்ணி, அவர்களைக் குணமாக்கி, அவர்களுக்குப் பரிபூரண சமாதானத்தையும் சத்தியத்தையும் வெளிப்படுத்துவேன்.

 

விசுவாச அறிக்கைகள்

  1. இயேசு என் சாபத்தை முறித்து விட்டார். இனி நான் எந்த பலவீனத்திலும் இருக்க அவசியம் இல்லை. தேவை இல்லாத கட்டிகள், வளர்ச்சிகள் என் சரீரத்தில் வளருவது இல்லை.
  2. தேவன் என் அக்கிரமத்தை எல்லாம் மன்னித்து விட்டார். என் நோய்களை எல்லாம் குணமாக்கி விட்டார். என் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு விட்டார். கழுகு போல என் வயது, வாலிப வயதைப் போல ஆகிறது.
  3. என் சரீரமே, என்னுடைய விசுவாசத்தை பேசுகிறேன். என் சரீரத்திலுள்ள எல்லா உறுப்புக்ளும், சரியானபடி வேலை செய்யட்டும். ஏனென்றால், என் சரீரம் பரிசுத்த ஆவியானவர் வாழும் வீடு. இயேசுவின் நாமத்தில் என் சரீரத்தை புதுப்பிக்கிறேன்.
  4. எல்லா அங்கமும், திசுக்களும் மிகவும் சரியாக செயல்படட்டும். ஏனெனில் இயேசுவின் இரத்தத்தால் நான் கழுவப்பட்டு இருக்கிறேன்.
  5. கர்த்தருடைய ஆவியானவர் என் மேலிருக்கிறார். என் இரத்த அழுத்தம், சுகர், கொலஸ்ட்ரால் எல்லாம் நார்மலாக இருக்கும். எனக்கு வாதம், பலவீனம், பயங்கள், மன அழுத்தங்கள் எதுவும் வராது. என் இதயம், கிட்னி, லங்க்ஸ், கண்கள், மூட்டுகள், தமனி, நரம்புகள், இரத்தம் எல்லாம் இயேசுவால் மீட்கப்பட்டு விட்டது.
  6. பலவீனத்தைக் கொண்டு வரும் பொல்லாத ஆவியே, இயேசுவின் நாமத்தில் உனக்கு குழப்பத்தைக் கட்டளையிடுகிறேன். என்னைத் தொட உனக்கு அனுமதி இல்லை, என் குடும்பத்தை தொட உனக்கு அனுமதி இல்லை. என் நாவில் அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இயேசுவின் நாமத்தால், எனக்கு கொடுத்த அதிகாரத்திலிருந்து உனக்கு கட்டளையிடுகிறேன். எங்கள் வீட்டை விட்டு மாத்திரமல்ல, எங்கள் தெருவை விட்டு வெளியே போ.
  7. எல்லா பலவீனமும் இயேசுவின் நாமத்தில் மறையட்டும். பிசாசினால் வந்த பலவீனங்கள், சாபத்தால் வந்த பலவீனங்கள், தலைமுறை நோய்கள் எல்லாவற்றையும் இயேசுவின் நாமத்தில் எரித்து அழிக்கிறேன்.
  8. என் சரீரம் தேவன் தங்கும் ஆலயம். சரீரத்தில் எந்த பலவீனமும் வராதபடி இயேசுவின் நாமத்தில் வேலியடைக்கிறேன்.
  9. பலவீனத்தின் மேல் பலவீனம் வராது எங்களுக்கு. யாத் 23-25ல் வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன் என்று கர்த்தர் சொல்லி இருக்கிறார். சங் 9-10ல் வாதை உன் கூடாரத்தை அணுகாது என்று சொல்லி இருக்கிறார்.
  10. பலவீனமே, எங்கள் வீடு உனக்கு தவறான முகவரி. Wrong address க்கு வந்திருக்கிறாய். எங்கள் சரீரத்தை தொடும் எல்லா வியாதியின் ஆவியே, எல்லா வியாதியையும் எங்கள் ஆண்டவர் கல்வாரியில் ஏற்றுக்கொண்டார். எங்களுடைய சரீரம் அவருடைய உயிர்த்தெழுதலில் இருக்கிறது. எங்கள் வீட்டை விட்டு போ இயேசுவின் நாமத்தில்.
  11. Generation to generation எந்த நோயும் வராது. பரம்பரை நோய்களுக்கு எங்கள் வீட்டில் இடமில்லை. நாங்கள் ஆரோக்கியமாக இருப்போம். எங்கள் சரீரம் செழித்திருக்கும். வயதான நாட்களிலும் நாங்கள் ஆரோக்கியமாக இருப்போம். மருத்துவத்துக்காக வீண் செலவு நாங்கள் செய்யப் போவதில்லை.
  12. எனக்கு வந்த நோய்க்கு காரணம் கர்த்தருடைய நாமம் இதன்மூலம் மகிமைப்படும்படி வந்தது. நான் நிச்சயமாக சுகம் பெற்று அனைவரிடமும் சாட்சி சொல்லுவேன். அன்னிய கண்கள் அல்ல. என் சொந்த கண்களே காணப்போகிறது. நன்றி இயேசுவே!
  13. பலவீனத்தை (tiredness) உணர வைக்கும் பொல்லாத பிசாசே, என் சரீரத்தை விட்டு இயேசுவின் நாமத்தில் உன்னை வெளியேற்றுகிறேன்.
  14. மரண பயத்தை உருவாக்கும் ஆவியே, என் வாழ்வை விட்டு போ இயேசுவின் நாமத்தில்.
  15. என் சிந்தனையை கெடுக்கிற ஆவியே, இயேசுவின் நாமத்தில் கட்டுகிறேன் உன்னை.
  16. மைக்ரேன் தலைவலியை உண்டு பண்ணும் ஆவியே, சரீரத்தை விட்டு போ இயேசுவின் நாமத்தில்.
  17. என் கால்களை முடக்கி வைத்திருக்கும் பக்கவாதத்தின் ஆவியே, இயேசுவின் நாமத்தினாலும், அவருடைய இரத்தத்தினாலும் உன்னை எரித்து அழித்து சாம்பலாக்குகிறேன்.
  18. என்னுடைய எதிர்ப்பு சக்தி (immune system) ஒவ்வொரு நாளும் பெருகுகிறது. என் நோயெதிர்ப்பு சக்தி மீது ஜீவனை (Life) பேசுகிறேன். கிறிஸ்துவை எழுப்பிய அதே ஆவியானவர் எனக்குள்ளும் இருக்கிறார். அவர் என் சரீரத்தை, என் ஜீவனைக் காக்கிறார்.
  19. என் மூளையில் கிரியை செய்யும் ஆவியே, இயேசுவின் நாமத்தில் போ சரீரத்தை விட்டு.
  20. தோல் பிரச்சனையை உண்டாக்கும் எல்லா பிடியிலிருந்தும் நான் விடுதலை பெற்று விட்டேன் இயேசுவின் நாமத்தில்.
  21. என் இதயம் புதுப்பிக்கப்படுகிறது. எல்லா அடைப்புகளும் நீங்குகிறது இயேசுவின் நாமத்தில். என் இதயத்துடிப்பு சீராக இருக்கிறது.
  22. நான் என்னுடையவன் அல்ல. நான் விலை கொடுத்து வாங்கப்பட்டவன். என்னை அவர் இர்த்தம் சிந்தி, சம்பாதித்துக் கொண்டார். நான் கிறிஸ்துவுக்குள் இருக்கிறேன். என் நோய்களை அவர் சுமந்து விட்டார். நான் சுகம் பெற்று விட்டேன்.
  23. என் சரீரத்தை திருட, அழிக்க, கொல்ல நினைக்கிற சத்துருவை அவர் ஏற்கனவே ஜெயித்து விட்டார். நான் நீடித்த நாட்கள் வாழ போகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *