1972ல் ஒலிம்பிக்கில் பங்கேற்க, இஸ்ரேலில் இருந்து 11 விளையாட்டு வீரர்கள் ஜெர்மனி சென்றனர். அங்கு அன்றைய இரவில், தங்களுக்கென ஒதுக்கப்பட்ட அறையில் தூங்கிக்கொண்டு இருக்கும்போது, திடீரென அவர்கள் அறையின் கதவைத் தட்டினார்கள். யார் தட்டுகிறார்கள் என்பது புரியாமல், கதவை வீரர்கள் திறந்து பார்க்க, வெளியே வந்து நின்ற பாலஸ்தீன தீவிரவாதிகள், 3 பேரைக் கொலை செய்து, 8 வீரர்களை பிணையக்கைதிகளாக பிடித்து வைத்தனர்.
1967ல் சுற்றிலுமிருந்த அரபு நாடுகள் எதிராக வந்தாலும், ஆறு நாட்களில் இஸ்ரேல் என்னும் குட்டி நாடு, மிகப்பெரிய வெற்றி பெற்றதை, கடந்த பதிவில் பார்த்தோம். அப்போது வரை அரபு நாட்டின் ராஜாவாக இருந்தது எகிப்தும், ஜோர்தானும்தான். கடைசியில் எகிப்தின் நாசர் இஸ்ரேலிடம் மன்னிப்பு கேட்டது அதன் மதிப்பை இழக்க வைத்தது. அதேபோல, ஜோர்தான் தன்னிடமிருந்த எருசலேமை இழந்தது மிகப்பெரிய தோல்வியாக அமைந்தது. ஒரு நாடு தன்னிடமிருந்த ஏதோ ஒரு காரியத்தை இழந்தால், அங்கு ஒரு எதிர்ப்பு கூட்டம் உருவாகும். அவர்களைத்தான் தீவிரவாதிகள் என்று கூறுவோம். அரபு நாடுகளில், ஒரு கூட்டம் இணைந்து, அப்படி ஒரு தீவிரவாத அமைப்பு உருவாகியது. ஏற்கனவே, பாலஸ்தீன எதிர்ப்பாளர்கள் என்ற ஒரு தீவிரவாத குழு PLO என் இருக்கிறது. இப்போது மற்றொரு அமைப்பு தான், Black September(மொசாட் வைத்த பெயர்).
இந்த தீவிரவாத குழு, எப்படியாவது இஸ்ரேலின் இராணுவ வீரர்கள் தனியே சிக்கினால், கொலை செய்ய வேண்டும் என திட்டம் போட்டது. ஆனால் யாரைக் கொலை செய்வது? இஸ்ரேலின் எல்லா மக்களுமே இராணுவ வீரர்கள் அல்லவா! அந்த சமயத்தில் தான், இந்த Black Septemberக்கு ஒரு தகவல் கிடைக்கிறது. 1972ல் (ஆகஸ்ட் 16- செப்டம்பர் 11) ஜெர்மனியில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு, இஸ்ரேலிய வீரர்கள் வருகிறார்கள் என்று. அதனால் இந்த குழு, அவர்கள் தூங்கிக்கொண்டு இருக்கும்போது உள்நுழைந்து, 3 பேரைக் கொன்று, 8 பேரை பணயக்கைதியாக பிடித்துக்கொண்டு சென்றது.
இஸ்ரேல், “பாலஸ்தீன போராட்ட வீரர்கள் என்று அழைக்கப்படும் பாலஸ்தீன தீவிரவாதிகள் 230 பேரை விடுதலை செய்ய வேண்டும்” என்று Black September கோரிக்கை வைத்தனர். அப்போது இஸ்ரேலின் அதிபர் ஒரு பெண், Golda Meir. அவர், “எங்களுக்கு கொஞ்சம் டைம் தாங்க” என்று காலத்தை நீட்டிக்கொண்டே இருக்கிறார். அந்த நேரத்தில், மொசாடுடன் இணைந்து பயங்கரமாக யோசித்துக்கொண்டிருந்தனர்.
எவ்வளவோ முறை, ஜெர்மனியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். “இஸ்ரேல் வீரர்களை ஜெர்மனிக்குள் அனுமதியுங்கள். நாங்கள் வந்து, எங்கள் வீரர்களை விடுவித்துக்கொள்கிறோம்” என்று. ஆனால் ஜெர்மனி பிடிவாதமாக மறுத்து விட்டது. காரணம், ஜெர்மனியில், Neo Nazis இருந்தார்கள். எப்படி, ஜெர்மனி நாசி படைகளை வைத்து யூதர்களைக் கொன்று குவித்ததோ, அதேபோல இரண்டாம் உலக யுத்தத்துக்கு பிறகு, Neo Nazis உருவாகி இருந்தார்கள். மீண்டும் ஒரு போர் ஏற்பட்டால் என்ன செய்வது என தயங்கிய ஜெர்மனி, இஸ்ரேல் வீரர்களை அனுமதிக்க மறுத்தது. ஆனால் எப்படியும் வீரர்களை காப்பாற்றிக் கொடுப்பதில், முனைப்புடன் இருந்தது.
ஆனால் இஸ்ரேலோ, ‘தீவிரவாதிகளை விடுவிக்க முடியாது’ என்று கூறியதுடன், ‘இறந்த மூன்று பேருக்கு பதிலாக, மீதமிருக்கும் எட்டு பேரை பத்திரமாக திரும்ப அனுப்பச் சொல்லியது’. இஸ்ரேல் எப்படியும் அந்த 8 பேருக்காக, தங்கள் தீவிரவாத குழுவை விடுதலை செய்யும் என அவர்கள் நினைத்திருக்க, இப்போது இஸ்ரேலின் பதிலில், செய்வதறியாது திகைத்த பாலஸ்தீனியர்கள் (Black September), ஜெர்மனியிடம் ஒரு கோரிக்கை வைத்தனர். ஜெர்மனியில் இருந்து இஸ்ரவேல் வீரர்கள் கடத்தப்பட்டதால், ஜெர்மனியும் செய்வது அறியாது திகைத்தது. எனவே ஜெர்மனியிடம், “நாங்கள் போவதற்கு ஒரு விமானம், நாங்கள் இறங்க சேஃப் ஆன ஒரு இடம், எங்களுடன் 8 பேர் பிணையக்கைதிகளாய் வரவேண்டும்” என்று கோரிக்கையை வைக்க, அதை ஏற்றுக்கொண்டது ஜெர்மனி.
ஜெர்மன் மிலிட்டரி உடன், இஸ்ரேல் மிலிட்டரி ஆட்களையும் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த இஸ்ரேலின் கோரிக்கையை நிராகரித்தது ஜெர்மனி. அவர்கள் நாட்டில் இது நடந்திருப்பதால், ஜெர்மனி முழு பொறுப்பையும் ஏற்று, இஸ்ரேலிய வீரர்களைக் காப்பாற்ற நினைத்தது. அவர்கள் மிலிட்டரியில் இருந்த best gun shooters ஆயத்தமாக்கி, அருமையான திட்டம் போட்டு வைத்திருந்தார்கள். சேஃப் ஆன இடத்தில் விமானம் தரை இறங்கியதும், தீவிரவாதிகளை இந்த shooters வைத்து தாக்க நினைத்திருந்தார்கள். Shooters வெளியே மறைவான இடத்தில் காத்திருக்க, பிளேன் வந்து நின்றது.
மொத்தம் பிளேனில் 8 தீவிரவாதிகள் இருந்தனர். பிளேனில் இருந்து வெளியே வந்த ஐந்து பேரை சுட்டு கொலை செய்து விட்டு, உள்ளே இருந்த மீதி மூன்று பேரை கைது செய்தது ஜெர்மன் படை. ஆனால் அதற்குள், உள்ளே இருந்த 3 பேரும், இனி தப்பிக்க முடியாது என்று அறிந்து, பிணையக்கைதிகளாக வைத்திருந்த எட்டு இஸ்ரேலிய வீரர்களைக் கொன்றது தீவிரவாத கும்பல். எனவே இஸ்ரேலுக்கு, தன் வீரர்களைக் காப்பாற்ற முடியாமல் போய் விட்டது.
இந்த நேரத்தில் ஜெர்மனி, இறந்த வீரர்களுக்காக, பெயருக்கு துக்கம் அனுசரிப்பதாக சொல்லிவிட்டு, பின்னர் தொடர்ந்து ஒலிம்பிக்கை நடத்தியது. இது இஸ்ரேலருக்கு இன்னும் அதிக கோபத்தைக் கொடுத்தது. இந்த நேரத்தில், “11 பேருக்காக அவர்கள் வேட்டையாடப்படுவார்கள்” என கோல்டா மேயர் அறிவிப்பு வெளியிட்டார்.
மூன்று நாட்கள் கழித்து, பாலஸ்தீன PLO மீது குண்டு போட்டது இஸ்ரேல். ஆனால் நிறைய பெண்கள், குழந்தைகள் என 100 பேர் இறந்ததால், உலகம் முழுவதும் இஸ்ரேலுக்கு எதிராக திரும்பியது. இதன் பிறகு தான் மொசாட் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்தது. இந்த தாக்குதலுக்கு எதிராக திட்டம் போட்டவர்கள் யார்? அதாவது இந்த தாக்குதலின் மூளை யார் என மொசாட் தேடி அலைந்தது. ஆனால் மொசாடுக்கு அதில் தோல்விதான் கிடைத்தது.
எனவே தங்கள் விளையாட்டு வீரர்களைக் கொல்வதற்கு பின்னால் இருந்து திட்டம் தீட்டியவர்கள், பண உதவி செய்தவர்கள், ஆயுதம் கொடுத்து உதவியவர்கள், டிரெயினிங் கொடுத்தவர்கள் என்று பெரிய லிஸ்ட் தயார் செய்தது, இஸ்ரேலிய உளவுப்படை மொசாட். அவர்கள் கையில் இப்போது 25-35பேர் பெயர் இருக்கிறது. அவர்களைக் கொல்வதற்காக ஒரு குழு உருவாக்கினார்கள். அந்த குழுவில் இருந்தது, மொத்தமே 15 பேர் தான். அதை ஐந்தாகப் பிரித்து வைத்தனர்.
முதல் பிரிவு – 2 Trained killers
2nd Group – 2 Guards – who would shadow the 1st Group
3rd Group – 2 Agents – Cover for rest team by renting Hotel Room, Apartment… etc
4th Group – (6-8) Agents – Backbone of Operation/ Shadowing the Targets/ Escape Route
5th Group – 2 Agents – Specializing in Communications
1972 முதல் 1988 வரை, அந்த லிஸ்ட்டில் இருந்த ஒவ்வொருவரையும் தேடிச் சென்று கொலை செய்தது மொசாட். Operation wrath of God என்று தேடிப்பார்த்தாலே, இதைப்பற்றி பல இன்ட்ரஸ்ட்டிங் ஆன சம்பவங்களைப் பார்க்க முடியும். தமிழில் மொசாட் பற்றி அநேக வீடியோக்கள் உள்ளன. ஒவ்வொரு நாட்டிற்குள்ளும், அந்த நாட்டுக்கே தெரியாமல் உள்நுழைந்து, எந்த தடயமும் இல்லாமல், கொலை செய்து விட்டு சென்று விடுவது மொசாட்டின் வழக்கம்.
சிலரை 11 புல்லட் வைத்து கொன்றனர். சிலருக்கு படுக்கையின் கீழே பாம்ப் Bomb வைத்து வெடிக்க வைத்தனர். உண்ணும் உணவில் விஷம்.கார் ஆக்ஸிடென்ட். சிலரை தேடிப்போய் வேட்டையாடி கொலை செய்தனர். ஜெர்மனி பிடித்து வைத்திருந்த மூன்று தீவிரவாதிகளை, ஜெர்மன் விமானத்தைப் பிணையமாக பிடித்து வைத்துக்கொண்டு, அந்த மூன்று பேரையும் விடுதலை செய்ய சொல்லி, அவர்களைத் தேடிக் கொலை செய்தனர். சிலவற்றை வரும் பதிவில் பார்க்கலாம்.
இஸ்ரேலிடம் மோதினால் தப்பித்து போய் வாழ்வது என்பது கூடாத காரியம் என்று உலகுக்கு உணர்த்திய தருணம் இது.
இஸ்ரேலர்கள் இன்றும் பழைய ஏற்பாட்டை மட்டுமே பின்பற்றுவதால், கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்று பழி வாங்கிக் கொண்டு இருக்கின்றனர். அவர்கள் தங்கள் தேசத்துக்காக எந்த எல்லைக்கும் போக தயாராக இருக்கிறார்கள். இயேசு என்ற ஒருவரை மாத்திரம் அவர்கள் தெரிந்து கொண்டால், அவர்கள் வாழ்க்கை இன்னும் வெகு சிறப்பாக இருக்கும். அவர்களின் இரட்சிப்புக்காக ஜெபிப்பது நம் கடமையல்லவா! தொடர்ந்து பார்க்கலாம் Operation – Wrath Of God.
Leave a Reply