நான் நீதிமான்
பல நேரங்களில் நம்மால் ஏன் தேவனிடம் நெருங்க முடியவில்லை தெரியுமா? நமக்குள் ஒரு எண்ணம் ரொம்ப strongஆக இருக்கிறது. “நான் ஒரு பாவி… பாவிகளில் பிரதான பாவி நான் (அதை தாழ்மை என்று நினைத்துக் கொள்வோம்!). கர்த்தருடைய சமுகத்துக்கு வர எனக்கு தகுதி இல்லை” என நினைக்கிறோம்.
இது சரியா? நாம் பாவிகளா? சிலர் ஊக்கமாக ஜெபித்துக் கொண்டு இருக்கின்றனர். “ஆண்டவரே, என்னை நீதிமான் ஆக்கும்” என்று. அந்த ஜெபம் சரிதானா? எத்தனை நீதிமான்கள் இப்பதிவை வாசிக்கின்றீர்கள்?
பல கிறிஸ்தவர்களின் எண்ணம், நான் பரலோகத்துக்கு போனதற்கு பின்னர் தான், நீதிமான் listல் வருவேன் என்பதாக இருக்கிறது. ஆனால் உண்மை என்னவென்றால், நாம் எல்லாருமே இந்த உலகத்திலேயே நீதிமான்களாக வாழுகிறோம்.
நீதிமான் என்பது ஒரு title. இந்த நீதிமான் என்ற title, நம்மால் (நம் செய்கைகளால்) கிடைப்பது இல்லை. இந்த title இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால், யார் யாரெல்லாம் அவரை ஏற்றுக் கொண்டோமோ, அவர்களுக்கெல்லாம் இலவசமாக, அவர் கொடுக்கிற வெகுமதி. இது ஒரு மேன்மையான பதவி. நாம் எல்லாருமே நீதிமான்களாய் இருக்கிறோம்.
ஒரு விஷயம் நமக்குள் பதிய வைக்க வேண்டியது மிக அவசியம். “ஒரு மனிதன் பாவம் செய்வதால் அவன் பாவியும் இல்லை, அதே மனிதன் நீதியைச் செய்வதால் அவன் நீதிமானும் இல்லை.”
கலாத்தியர் 2:15 புறஜாதியாரில் பிறந்த பாவிகளாயிராமல், சுபாவத்தின்படி யூதராயிருக்கிற நாமும் இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலேயன்றி, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே மனுஷன் நீதிமானாக்கப்படுவதில்லையென்று அறிந்து, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலல்ல, கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படும்படிக்குக் கிறிஸ்து இயேசுவின்மேல் விசுவாசிகளானோம்.
மேலே குறிப்பிட்ட வசனத்தை, நிறுத்தி நிதானமாக, கவனமாக வாசித்துப் பாருங்கள். பவுல் கூறுகிறார், நியாயப்பிரமாணத்தின் கிரியைகளால் அல்ல, விசுவாசத்தால் நீதிமான் ஆக்கப்படுகிறோம்.
புறஜாதியாரில் பிறந்த பாவிகளாயிராமல், சுபாவத்தின்படி யூதராயிருக்கிற நாமும் – பவுல் வாழ்ந்த காலத்தில் யூதர்களுக்கு ஒரு தவறான எண்ணம் இருந்தது. யூதர்களைத் தவிர, வேறு எந்த நாட்டில், யாராகப் பிறந்திருந்தாலும் சரி, அவர்கள் பாவிகள். அதைத்தான் பவுல் குறிப்பிடுகிறார்;
பாவியாகப் பிறந்த புறஜாதியாக இல்லாமல், யூதர்களாகப் பிறந்த நாம், எவ்வளவு முயற்சி செய்தாலும், நியாயப்பிரமாணத்தின் சட்டங்களுக்கு கீழ்ப்படிய முடியாமல், தோற்று விட்டோம். கடைசியில் நாமும் பாவம் செய்ததால், பாவிகள் ஆகிவிட்டோம். நம்மால் நியாயப்பிரமாணத்தின் சட்டங்களைப் பின்பற்றி நீதிமான் ஆக முடியாமல் இருக்கலாம். ஆனால், இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தால் நீதிமான்களாக முடியும். இதற்காகவே இயேசுவின் மேல் விசுவாசம் உள்ளவர்கள் ஆனோம்.
யூதராக இருந்தாலும் சரி, இந்தியராக இருந்தாலும் சரி. நன்மையானதைச் செய்வதன் மூலம் நாம் நீதிமான்கள் அல்ல. கிறிஸ்து இயேசுவை ஏற்றுக் கொள்வதால் மட்டுமே நீதிமான்கள் ஆகியிருக்கிறோம்.
‘வாசிக்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் நான் எவ்வளவு பெரிய பாவி தெரியுமா? ஊரில் என்னைக் கேட்டால், என்னைப் போல நல்லவன் யாரும் இல்லை என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில், நான் எவ்வளவு மோசமானவன் என்பது எனக்கு தான் தெரியும்’ என்று நினைத்தால், நாம் இன்னமும் சரியாக அடிப்படை உபதேசத்தை தெரிந்து கொள்ளவில்லை என்று அர்த்தம்.
அது என்ன சரியான உபதேசம்?
பிலிப்பியர் 3:9 நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கும், நியாயப்பிரமாணத்தினால் வருகிற சுயநீதியை உடையவனாயிராமல், கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினால் வருகிறதும் விசுவாசமூலமாய் தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாயிருந்து, கிறிஸ்துவுக்குள் இருக்கிறேனென்று காணப்படும்படிக்கும்,
மேற்கண்ட வசனத்தில் பவுல் என்ன கூறுகிறார்? நியாயப்பிரமாணத்தினால் வருவது சுய நீதி. இன்று அனேக கிறிஸ்தவர்கள் கூட, இந்த சுய நீதியை தான் நம்புகிறார்கள். “நீ பொய் சொல்லவில்லை என்றால் நீ நீதிமான். நீ பாவம் செய்யவில்லை என்றால் நீ நீதிமான். அநியாயம் செய்யாதவன் நீதிமான்” ஆம் உண்மைதான். இதெல்லாம் செய்வதன் மூலம் நாம் நீதிமான் என்று நினைக்கிறோம். நம்முடைய எண்ணம் உண்மையிலே சரியானது தானா?.
“நான் விபச்சாரம் செய்யவில்லை, எனவே நான் நீதிமான்” என்று நாம் நினைத்தால், அது சுய நீதி. நாமே நம்மை நியாயந்தீர்த்துக் கொள்கிறோம். உண்மையில், நாம் நம்மை நீதிமான் என்று சொல்கிறோமோ இல்லையோ, அடுத்தவர்களை “இவன் நீதிமான் அல்ல” என்று நியாயந்தீர்ப்போம். இதன் பெயர் தான் சுய நீதி.
ஆனால் வேதம் என்ன சொல்கிறது? நாம் நற்கிரியை செய்வதால் (நியாயப்பிரமாணத்தினால்) நீதிமான் ஆவதில்லை, நாம் இயேசுவை விசுவாசிப்பதால் மட்டுமே நீதிமான் ஆகிறோம்.
சரி, நாம் என்ன என்று விசுவாசிக்க வேண்டும்?
ஏசாயா 64:6 எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது
நம்முடைய நீதி அழுக்கான கந்தை போல இருக்கிறது. நாம் எதையெல்லாம் நீதி என்று நினைக்கிறோமோ, அது உண்மையில் நீதி அல்ல.
அப்போஸ்தலர் 13:39 மோசேயின் நியாயப்பிரமாணத்தினாலே நீங்கள் எவைகளினின்று விடுதலையாகி நீதிமான்களாக்கப்படக் கூடாதிருந்ததோ, விசுவாசிக்கிறவன் எவனும் அவைகளினின்று இவராலே விடுதலையாகி நீதிமானாக்கப்படுகிறான் என்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கக்கடவது.
மேற்கண்ட வசனத்தின்படி, பாவத்தின் பிடியிலிருந்து விடுதலையாக நியாயப்பிரமாணம் உதவவில்லை. ஆனால் அந்த பாவத்தின் பிடியிலிருந்து விடுதலையாக வேண்டுமென்றால், விசுவாசிக்க வேண்டும். அப்படி எதைத்தான் விசுவாசிப்பது? எதை விசுவாசித்தால் (நம்பினால்) நாம் நீதிமான் ஆக முடியும்.
1 கொரிந்தியர் 6:11 உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்.
“நாம் இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டிருக்கிறோம். பரிசுத்தமாக்கப் பட்டிருக்கிறோம். நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம்” இனி கழுவப்படுவாய் என்று சொல்லவில்லை. ஏற்கனவே நாம் கழுவப்பட்டு இருக்கிறோம். ஏற்கனவே நீதிமான்கள் ஆக்கப்பட்டு இருக்கிறோம். இதெல்லாம் எப்போது நடந்தது? நாம் பிறப்பதற்கு முன்பே, 2000 ஆண்டுகளுக்கு முன்பே, கல்வாரி சிலுவையில் அவர் நம்முடைய பாவத்தை சுமந்து தீர்க்கும்போது நடந்தது.
நாம் இப்போது வரை செய்த பாவங்கள், ஒருவேளை இனி நம்மை அறியாமல் செய்யப்போகும் பாவங்கள், எல்லாவற்றையும் அவர் ஏற்கனவே சிலுவையில் சுமந்து தீர்த்து விட்டார். நாம் பிறப்பதற்கு முன்பதாகவே அவர் நம்மை நீதிமானாக்கி விட்டார். இதை ஏற்றுக் கொள்வது கடினமாக இருந்தாலும், இதுதான் உண்மை. நாம் பிறக்கும் போதே நீதிமான் என்ற title நமக்குள் இருக்கிறது.
ஒரு புதிய mobile வாங்கும்போது, எல்லா applicationயும் உள்ளே இருந்தாலும், நாம் அதை install செய்ய வேண்டியது அவசியமல்லவா! அதேபோல இந்த நீதிமான் என்ற டைட்டில் நமக்குள் இருந்தாலும், நமக்கு அது வேண்டும் என்றால், நாம் செய்ய வேண்டிய ஒன்று “விசுவாசிப்பது மட்டும் தான்”. நாம் பிறப்பதற்கு முன்பதாகவே நம் பாவத்துக்கான பரிகாரம் செலுத்தப்பட்டு விட்டது. என் பாவங்கள் ஏற்கனவே மன்னிக்கப்பட்டு விட்டது. கர்த்தர் என்னை ஏற்கனவே நீதிமான் ஆக்கி விட்டார் என்பதை நாம் மனப்பூர்வமாக விசுவாசிக்க வேண்டும்.
2 கொரிந்தியர் 5:21 நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார். (we might become the righteousness of God in him)
நாம் தான் “தேவனுடைய நீதி” என்று தேவன் கூறி விட்டார். அதாவது தேவனுடைய நீதி நமக்குள் இருக்கிறது, நாம் ஏற்கனவே நீதிமான் என்றால், நாம் இப்போதே தேவனுடைய நீதி ஆக இருக்கிறோம். இதற்கு மேல் என்னை நீதிமான் ஆக்கும் என்று கேட்டால், மிஞ்சின நீதிமானாகத் தான் முடியும்.
எனவே நாம் பாவிகளாய் இருந்தாலும், கிறிஸ்துவின் இரத்தம் நம்மை நீதிமான் ஆக்கி விட்டது. நாம் நீதிமான் என்பது, நம் கையில் தான் இருக்கிறது. நாம் விசுவாசிப்பதன் மூலம் நீதிமான் ஆகமுடியும். அதை விட்டு, நான் பாவி என்று சாத்தான் கூறும் பொய்யைக் கேட்டு, நாம் தேவனை விட்டு தூரம் போக வேண்டிய தேவையில்லை. அவர் ஏற்கனவே நம்மை நீதிமான் ஆக்கி விட்டார். இதை மனதில் பதிய வைப்போம்.
ஒரே ஒரு கவனம் தேவை. இனி செய்ய இருக்கும் பாவத்தையும் அவர் மன்னித்து விட்டார் என்பதால், நாம் சுலபமாக பாவம் செய்து, பின்னர் மன்னிப்பு கேட்கலாம் என்று எண்ணக்கூடாது. கிருபையின் காலத்தை கவனமாக கையாளுவோம். ஆமென்
தேவனுக்கு தூரமாகி விட்டேனா? -6
2 responses to “தேவனுக்கு தூரமாகி விட்டேனா? -6”
-
Lavi, this is wonderful explanation but”மேற்கண்ட வசனத்தில் பவுல் என்ன கூறுகிறார்? நியாயப்பிரமாணத்தினால் வருவது சுய நீதி. இன்று அனேக கிறிஸ்தவர்கள் கூட, இந்த சுய நீதியை தான் நம்புகிறார்கள். “நீ பொய் சொல்லவில்லை என்றால் நீ நீதிமான். நீ பாவம் செய்யவில்லை என்றால் நீ நீதிமான். அநியாயம் செய்யாதவன் நீதிமான்” ஆம் உண்மைதான். இதெல்லாம் செய்வதன் மூலம் நாம் நீதிமான் என்று நினைக்கிறோம். நம்முடைய எண்ணம் உண்மையிலே சரியானது தானா?.”
In the above explanation, if we tell this in openly, which leads the peope to do sin or they will understand that are all not sin
And Jesus also mentioned in many places in the book of gospels, :”un paavanga unaku mannikapattathu”…..
So can we say the above explanation in openly??-
Praise the Lord Sis,
அதனால் தான், கடைசியில் இந்த வரிகளை இணைத்திருக்கிறேன்…
“ஒரே ஒரு கவனம் தேவை. இனி செய்ய இருக்கும் பாவத்தையும் அவர் மன்னித்து விட்டார் என்பதால், நாம் சுலபமாக பாவம் செய்து, பின்னர் மன்னிப்பு கேட்கலாம் என்று எண்ணக்கூடாது. கிருபையின் காலத்தை கவனமாக கையாளுவோம்”
கர்த்தர் நம்மை நீதிமான் ஆக்கி விட்டார் என்பதை வெளிப்படுத்த நினைத்தேன்… எனினும் இனி இன்னும் கவனமாக எழுதுகிறேன் சகோதரி.
நன்றி
-








Leave a Reply