Soul Ties
மாம்சமா? பிசாசா?
Demons we cast out (வெளியேற்ற வேண்டும்)
Flesh, we crucify (சிலுவையில் அறைய வேண்டும்)
எல்லா தாக்குதல்களும் பிசாசின் தாக்குதல்கள் அல்ல. நம் மாம்சமே பல பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கும். கலாத்தியர் 5: 19-21 பவுல், மாம்சத்தின் கிரியைகள் (works of the flesh) என்று தான் கூறியிருக்கிறார், பிசாசின் கிரியைகள் (works of demons) என்று கூறவில்லை. கலாத்தியர் 5:24 கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள். நாம் மாம்சத்தை சிலுவையில் அறைய வேண்டும் என்று வேதம் சொல்கிறது, சிலுவையில் அறைய வேண்டும் என்றால், சுய கட்டுப்பாடு (Self-Control), ஒழுக்கம் (Discipline) தேவை. பாவத்துக்கு வழிவகுக்கும் விஷயங்களை விட்டு விலக வேண்டும். வலி இல்லாமல், சிலுவையில் அறைய முடியாது.
கடந்த பதிவில், நம் போராட்டங்களுக்கு காரணம் மாம்சம் என்று பார்த்தோம். இன்று பிசாசின் தாக்குதல்களைப் பற்றி பார்க்க இருக்கிறோம். மாம்சத்தை ஜெயிக்க வேண்டுமென்றால், self control and discipline கொண்டு வர வேண்டும் என்று பார்த்தோம். அப்படி சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தும், நம்மால் விடுதலை பெற முடியவில்லை என்றால், அந்தப் பகுதியில் ஒருவேளை பிசாசின் தாக்குதல்கள் இருக்கிறது.
நாம் மாம்சத்தின் கிரியை செய்யும்போது, அது தேவனுக்கு எதிரானது என்பதால், தேவனுக்கு எதிராக பாவம் செய்கிறோம். அப்படி பாவம் செய்யும்போது, அசுத்த ஆவிகளுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. அசுத்த ஆவிகள் நம்மைத் தாக்குவதற்கு ஒரு வாசல்(gateway) உருவாகிறது.
கண் இடறலாயிருக்கிறது என்றால், நாம் கண்ணை பிடுங்கி விட வேண்டும். அது literalஆக இல்லை, symbolicalஆக. இப்படி, கண்ணைப் பிடுங்குவது போன்ற வலி வந்தாலும் அந்தக் காரியத்தை செய்யாமல் இருப்பது தான், மாம்சத்தை சிலுவையில் அறைவது என்று பார்த்தோம். அப்படி சிலுவையில் அறைந்த பின்னரும், கண் மீண்டும் மீண்டும் இடறல் தருகிறது என்றால், நாம் பிசாசுக்கு திறந்து விட்ட வாசலை அடைக்கவே இல்லை என்று அர்த்தம். பாவம் செய்வதற்கு நம்மை அதிகமாக தூண்டிக்கொண்டே இருக்கிறது என்றால், நம் மாம்சத்தின் பின்னே பிசாசின் தாக்கம் இருக்கிறது என்று அர்த்தம்.
“பிசாசின் தாக்கம்” என்பது வேறு, “பிசாசு பிடித்தவன்” என்பது வேறு. ‘மாம்சம் தொடர்கிறது என்றால் பிசாசின் தாக்கம் இருக்கிறது’ என்பதால், ‘பிசாசு நமக்குள் வசித்து வருகிறான்’ என்பது பொருளல்ல. பிசாசு நம்மைத் தாக்குவதற்கு நாம் ஒரு வாசலைத் திறந்து வைத்துள்ளோம் என்பதே உண்மை.
நமது மாம்சம் ஒரு நெருப்பை போல என்று வைத்துக் கொள்வோம். பிசாசு திறந்து வைத்திருக்கும் கதவின் வழியாக எரிவாயு(gas) ஊற்றுவான். சீரியல் பார்க்க வேண்டும் என்று உங்கள் மாம்சம் சொல்லும்போது, நீங்கள் self control ஆக இருக்க முயற்சி செய்வீர்கள். ஆனால் பிசாசு gas ஊற்றும்போது, உங்கள் ஆசை, அளவுக்கடங்காததாக மாறி விடும். மிக வலுவான சிந்தனைகள்(overwhelming thoughts) மிக வலுவான ஆசைகள்(overwhelming desires) வந்து உங்களை கவரும். அதன்பின் உங்களால் அந்த சீரியலை பார்க்காமல் இருக்கவே முடியாது.
இங்கு “சீரியல்” என்ற இடத்தில், உங்களது அடிமைத்தனத்தை போட்டுக் கொள்ளுங்கள். அது ஒருவேளை வீடியோ கேம்ஸ் ஆக இருக்கலாம், கார்ட்டூனாக இருக்கலாம், pornography ஆக இருக்கலாம், web series ஆக இருக்கலாம், பிக் பாஸாக இருக்கலாம். காதலாக இருக்கலாம். தவறான உறவாக இருக்கலாம். எந்த பாவமாக இருந்தாலும், அது ஆரம்ப நிலையில் தான் மாம்சம் காரணமாக இருக்கும். மாம்சத்தை சிலுவையில் அறையவில்லை என்றால், பின்னர் அது பிசாசின் தாக்குதல்களுக்கு நம்மைக் கொண்டு சென்று விடும். ஓரு பிசாசு நாம் திறந்து வைத்திருக்கும் வாசல் வழியே gas ஊற்றி, நெருப்பை கொழுந்து விட்டு எரியச் செய்து கொண்டு இருக்கிறான். அதுவும் கடந்தால், கடைசியில் பிசாசு நமக்குள் வந்து தங்குமளவுக்கு சென்றுவிடும்.
பொதுவாக பேய்கள் அல்லது பிசாசு என்பதை இறந்து போன ஒருவரின் ஆவி என்று நினைப்போம். அது எந்த அளவுக்கு உண்மை என்பதை நாம் தெரிந்து கொள்ள அவசியம் இல்லை. ஆனால், அசுத்த ஆவி, பேய், பிசாசு, சாத்தான் என்று நாம் பொதுவாக சொல்பவை விழுந்து போன தூதர்கள்.
சாத்தானை இயேசு ஜெயித்து விட்டார் என்பதால், சாத்தானை வெகு சுலபமாக எண்ணி விடக்கூடாது. நாம் பிறப்பதற்கு முன்பே அந்த அசுத்த ஆவிகள் இருக்கின்றன, கொஞ்சம் முன்னாகச் சென்றால் இயேசு பிறப்பதற்கு முன்பே அவை இருக்கின்றன. இன்னும் முன்பாகச் சென்றால் மோசே, ஆபிரகாம், நோவா பிறப்பதற்கு அவை இருக்கின்றன. இன்னும் முன்னாகச் சென்றால் ஆதாம் உருவாவதற்கு முன்பே அவை இருக்கின்றன. இன்னும் முன்னாகச் சென்றால் பூமி உருவாகும் முன்பே அந்த அசுத்த ஆவிகள் இருக்கின்றன. எசேக்கியேல் புத்தகத்தில், அவன் ஞானம் நிறைந்தவன் என்று சொல்லி இருக்கிறது. ஒரு மனிதனை எப்படி ஏமாற்ற வேண்டும் என்பது அந்த ஆவிகளுக்கு தெரியும். இயேசுவுடன் உலாவிக் கொண்டு, நல்ல உறவிலிருந்த ஆதாம் மற்றும் ஏவாளையே வஞ்சிக்க முடியுமானால், நம்மை வஞ்சிப்பது, நம் மாம்சத்தின் பின்னாக இருந்து, நம்மை பாவத்தில் விழ வைப்பது சாத்தானுக்கு லேசான காரியம். ஆனால் இன்னொன்றையும் மறக்கக்கூடாது, அந்த சாத்தானை ஜெயித்தவர் நமக்குள் இருக்கிறார், அவனை நாம் ஜெயிக்கும் அதிகாரத்தையும் நமக்குத் தந்திருக்கிறார்.
ஒரு சிந்தனை உங்களுக்கு வந்து, அதை நீங்கள் நீக்க முடியாமல் தவிக்கலாம்…
இந்த சிந்தனை ஏன் என்னை விட்டு போகவே இல்லை என்று வருந்தலாம்..
எதிர்பாராத நேரங்களில் திரும்ப திரும்ப அந்த சிந்தனை வரலாம்…
ஒருவேளை அது அசுத்த ஆவியின் (unclean spirit) தாக்கமாக இருக்கலாம்…
மாம்சம் திறந்த கதவுகள் வழியாக தாக்கிக் கொண்டிருக்கலாம்.
பிசாசின் தாக்குதல்கள் இவை.
இந்த பிசாசின் தாக்குதலுக்கு நாம் விடுதலை பெற வேண்டும். அதை விட்டு, மீண்டும் மீண்டும் பாவத்தில் விழுந்தால், அநேக கதவுகளை திறந்து, அநேக பிசாசின் தாக்குதலுக்கு வழி விடுகிறோம். ஒரு கட்டத்தில் “பிசாசின் தாக்குதல்” என்ற நிலையிலிருந்து, “பிசாசு பிடித்தல்” என்ற நிலைக்கு செல்லும்.
பிசாசின் தாக்குதலில், பிசாசுகள் நாம் திறந்து வைத்த கதவுகள் வழியே தாக்கும். பிசாசு பிடித்தலில், நமக்குள் நுழைந்து, நம் உடலையும், சிந்தையையும் கட்டுப்படுத்தும். பொதுவாக அசுத்த ஆவிகள் நமக்குள்ளிருந்தால், அது ஒரு மனிதனைக் காயப்படுத்தும்.
மாற்கு 5:2-5ல், லேகியோன் பற்றிப் பார்க்கலாம். லேகியோனுக்குள் அநேக அசுத்த ஆவிகள் வசித்தன. எனவே அவன் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டான். கத்திக் கொண்டிருந்தான்.
ஒரு மனிதனுக்கு, தனக்குள் யாரோ பேசும் சத்தங்கள் கேட்டால், நிச்சயமாக அவனுக்குள் பிசாசு வசித்துக் கொண்டிருக்கும். இப்போதெல்லாம் கல்லூரி மாணவர்கள் தற்கொலைக்கு பின்னால் கூட, இந்த மாதிரி சத்தங்கள் கேட்டது என்று எழுதி வைத்திருப்பதைக் காண முடிகிறது. மாம்சத்துக்கும் பேய்க்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம், மாம்சம் உள்ளிருந்து பேசாது, பிசாசின் தாக்குதல் கூட உள்ளிருந்து பேசாது, அவை மாம்சத்தின் பின்னிருந்து உங்களை தாக்கும். ஆனால், பிசாசு பிடித்தலில், உங்களிடம் பிசாசு பேசும். இதைச் செய், அதைச் செய் என்று கட்டாயப்படுத்தும்.
இப்போது நல்ல செய்தி… பிசாசை நம்மால் துரத்த முடியும். அந்த அதிகாரம் நமக்கு இருக்கிறது. லூக்கா 10:19 இதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங் கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது. மாற்கு 16-17 விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள்;
நம்மால் பேய்களை துரத்த முடியும். எனக்கு பிசாசின் தாக்குதல்கள் இருக்கிறது என்பது புரிகிறது. இயேசு என்ற நாமத்தில், அவர் எனக்கு கொடுத்த அதிகாரத்தில், இந்த பிசாசின் கிரியகளுக்கு நான் திறந்து வைத்த கதவுகளை இப்போது மூடுகிறேன். அந்த empty spaceல் பரிசுத்த ஆவியானவரை வரவேற்கிறேன் என்று தினமும் ஜெபிப்போம்.
இது மாம்சமா? அல்லது பேயா? என்று இன்னமும் தெரியவில்லை என்றாலும்,
கர்த்தரிடம் கேளுங்கள்.
Deliverance prayer செல்லுங்கள்
ஏதாவது வெளியேறுகிறதை உணர முடிகிறதா பாருங்கள்.
ஆனால்,
எதுவும் செய்யாமல், சும்மா இருக்காதீர்கள்
நாம் மாம்சத்தை சிலுவையில் அறைய வேண்டும்.
அசுத்த ஆவிகளை துரத்த வேண்டும்.
soul tie and generational curse பற்றி தொடர்ச்சியாக பார்க்கலாம்.








Leave a Reply