Soul Ties

ஆவி, ஆத்துமா, சரீரம் – 2

ஆவி, ஆத்துமா, சரீரம் பற்றி மிகவும் அடிப்படையான விஷயங்களை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். நாம் வணங்குபவர், பிதாவாகிய தேவன், குமாரனாகிய இயேசு, பரிசுத்த ஆவி என்று மூன்று பேராக இருந்தாலும், ஒரே தேவனாக இருக்கிறார். மூவரும் ஒன்றாக செயல்படுகிறார்கள். திரித்துவத்தை நம்மால் முழுமையாக புரிந்து கொள்ள முடியாது. ஆனால், மூவரும் இணைந்து ஒன்றாக இருக்கிறார்கள் என்று அறிவோம்.

நமது சாயலாகவும், நமது ரூபத்தின்படியும் மனிதனை படைப்போம் என்று படைத்தவர், நம்மையும் மூன்று பகுதிகள் கொண்ட மனிதனாக படைத்திருக்கிறார்.

நாம் ஆவி, ஆத்துமா, சரீரம் என்ற மூன்று பகுதிகளைக் கொண்டவர்களாக இருக்கிறோம்.

நமது உடல் தான் சரீரம் என்று அழைக்கப்படுகிறது. மக்கள் வெளியிலிருந்து உங்களைப் பார்க்கும் பகுதி தான் சரீரம். ஆனால் அது உங்கள் ஆவி மற்றும் ஆத்துமா மூலம் பாதிக்கப்படுகிறது. அதாவது, உள்ளே என்ன இருக்கிறதோ, அதுதான் வெளியே தெரியும்.

நமது மூளையும், இதயமும் இணைந்து ஆத்துமா என்றாகிறது. நமது மூளையின் வழியே ‘காரணம் கூறுதலும்’ (Reasoning), நமது இதயத்தின் வழியே ‘உணர்வுகளும்’ (emotions) வருகிறது. இவை தான் நம் ஆத்துமாவை கட்டுப்படுத்துகிறது.

ஆவி என்பது தான் உண்மையான மனிதன். நம் தேவன் ஆவியாக இருக்கிறார். எனவே ஆவி மூலமாகத்தான் நாம் தேவனுடன் தொடர்பு கொள்ள முடியும்.

“நான் ஒரு ஆவி… எனக்கு ஒரு ஆத்துமா இருக்கிறது… நான் சரீரத்தில் வாழ்கிறேன்.”

“I am a Spirit, I have a Soul, I live in a Body.”

 எல்லா மனிதர்களுமே பிறக்கும்பொழுது ஆவியைப் பற்றிய உணர்வு இல்லாமல் தான் பிறக்கிறார்கள். எழுதப்படாத புத்தகம் போல பிறக்கும் மனிதன், உலகில் பார்க்கும் விஷயங்கள், புத்தகம் மூலம் அறியும் விஷயங்களை மூளையில் சேர்த்து வைக்கிறான். எந்தவொரு விஷயம் நடந்தாலும், மூளை உடனடியாக உள்ளே தான் சேகரித்த தகவல்களைத் திரட்டி, அதிலிருந்து காரணங்களை வைத்து யோசிக்கிறது. இதுதான் reasoning.

உதாரணமாக, வேதத்தில் “ஏன் ஸ்திரீகள் முக்காடு போட வேண்டும்” என்று எழுதப்பட்டு இருக்கிறது என்பதைக் குறித்து விளக்கி, நாம் முக்காடு போட அவசியம் இல்லை என்று நான் பதிவிட்டால், சிலருடைய மூளையில் இப்படிப்பட்ட பிரசங்கங்கள் கேட்டு தகவல் இருப்பதால் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால், இதுவரை அதைப்பற்றி கேள்விப்படாதவர்களால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. அவர்களது மூளை உடனடியாக அதை மறுக்கும். இப்படித்தான் நாம் ஆத்துமாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் அறிந்த, நமது மூளையில் இருக்கும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு வாழ்கிறோம்.

உங்களை “நீங்கள்” ஆக்குவது எல்லாமே ஆத்துமா. Your Soul is everything that makes “You”. அதாவது,

  • உங்கள் உள்ளுணர்வு (Instinct)
  • உங்கள் மனித இயல்பு (Human Nature)
  • உங்கள் மனம் (Mind)
  • உங்கள் இதயம் (Heart)
  • உங்கள் நகைச்சுவை உணர்வு (Humor)
  • உங்கள் அறிவு / புத்தி (Intellect)
  • உங்கள் குணநலன் (Character)
  • உங்கள் உணர்ச்சிகள் (Emotion)
  • உங்கள் பெர்சனாலிட்டி (Personality)

உங்கள் ஆத்துமா முழுவதும் கெட்டது என்று கிடையாது. ஆனால் சில நேரங்களில் உங்கள் ஆத்துமா பிரச்சனை தரலாம். எப்படி என்றால், உங்கள் மனித reasoning, God’s wisdomஐ பின்பற்றாமல், உங்கள் சொந்த எண்ணங்களை பின்பற்ற வைக்கலாம்.

உதாரணமாக, நம் ஆவிக்கு தெரியும், நமது வியாதியை எல்லாம் தேவன் சுமந்து தீர்த்து விட்டார் என்று. ஆனால் இப்போது எனக்கு தலைவலிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். நான் ஆவியில் செயல்பட்டால், “இந்த தலைவலியை இயேசு சிலுவையில் சுமந்து தீர்த்து விட்டார், நான் சுமக்க தேவையில்லை. இயேசுவின் நாமத்தில் சுகத்தைப் பேசுகிறேன், ஜீவனை பேசுகிறேன்” என்று ஜெபிக்க வேண்டும். ஆனால் நாம் என்ன செய்வோம்? “நேற்று இரவு சரியாக தூங்கவில்லை, அதனால்தான் இவ்வளவு தலைவலி” என்று அந்த வலியை நாம் accept செய்கிறோம். இதுதான் ஆத்துமா God’s wisdom பின்பற்றாமல், நமது reasoning பின்னே செல்கிறது.

நாம் பிறக்கும்போது, நமது ஆவி செத்ததாக இருக்கும். ஆதாம் ஏதேனில் இழந்தது ஆவிதான். சாகவே சாவாய் என்று தேவன் சொல்லும்போது, மரித்துப்போனது நமது ஆவி தான். ஆனால், எப்பொழுது ஒரு மனிதன் இயேசுவைப் பற்றி கேள்விப்பட்டு இரட்சிக்கப்படுகிறானோ, அப்பொழுது அவன் ஆவி உயிர்ப்பிக்கப்படுகிறது.

அநேக கிறிஸ்தவர்களிடம், “இரட்சிக்கப்ப்ட்டிருக்கிறாயா?” என்று கேட்டால் பதில் சொல்ல தயங்குவார்கள். ஏனெனில் அவர்களுக்கே தெரியாது, இரட்சிப்பு என்றால் என்ன என்பது.

ரோமர் 10:9 என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.

இவ்வளவு தான்… இயேசு மரித்து உயிர்த்தெழுந்தார் என்பதை நம்ப வேண்டும், அதை வாயினால் சொல்ல வேண்டும். அப்படிச் செய்தால் நாம் இரட்சிக்கப்பட்டு விட்டோம். இரட்சிக்கப்பட்டு விட்டால், அந்த மனிதன் தான் மறுபடியும் பிறந்தவன்.

எத்தனையோ முறை மறுபடியும் பிறத்தல் Born again என்று கேள்விப்பட்டு இருக்கிறோம் அல்லவா! ஆதாமை சாகவே சாவாய் என்று தேவன் சொல்லும்போது, அவன் ஆவி மரித்தது, மறுபடியும் பிறத்தலில் ஆவி உயிர்ப்பிக்கப்படுகிறது.

நமக்குள் இயேசு வாழ்கிறார். எவ்வளவு அருமையான பாக்கியம் அல்லவா! நாம் தேவனுடைய ஆலயமாயிருக்கிறோம். நம் ஆவி மற்றும் ஆத்துமா “உடலுக்குள்” இருக்கிறது. எப்படி ஆசரிப்பு கூடாரத்தில் வெளிப்புறம், நடுப்பகுதி, உட்புறம் என்று இருந்ததோ, அதேபோல நமக்குள் சரீரம், ஆத்துமா, ஆவி இருக்கிறது.

  • வெளிப்புறம் – சரீரம்
  • நடுப்பகுதி – பரிசுத்த ஸ்தலம் – ஆத்துமா
  • உட்புறம் – மகா பரிசுத்த ஸ்தலம் – ஆவி

நம் தேவன் ஆவியாயிருக்கிறார். எனவே நம் ஆவியால் மட்டுமே அவரோடு தொடர்பு கொள்ள முடியும். நம் ஆவி தான், கிறிஸ்துவின் வல்லமை இருக்கும் இடம். அந்த வல்லமை மூலம்தான், பிசாசின் கிரியைகளையும் சோதனைகளையும் நாம் வெல்ல முடியும்.

தொடர்ந்து அடிப்படையிலிருந்து Soul tieக்கு செல்லலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேவனுக்கு தூரமாகி விட்டேனா?

Am I away from God?

வாழும் சாட்சிகள்

Testimonies of God’s People

விடுதலை

ஆபாச பட அடிமைத்தனம்

இஸ்ரேல் – ஆய்வு கட்டுரை

(வேதாகம கால முதல் தற்போது வரை)

வேதாகம பண்டிகைகள்

(யூதர்களின் பண்டிகைகள்)

விசுவாச அறிக்கை

(தினமும் ஜெபிக்க சில அறிக்கைகள்)

நன்றியுடன் 21 நாட்கள்

December 2023

ஒரு வருட வேதாகம வாசிப்பு திட்டம்

2025 Chronological Bible Reading Plan