இஸ்ரேல்-23 (தாவீது – 5 (இராட்சதர்கள்)

தாவீது –5

தாவீது சுதந்தரித்த எல்லை – இராட்சதர்கள் யார்?

இஸ்ரவேல் என்ற நாடு, ஆபிரகாம் என்கிற ஒரு மனிதனின், குடும்பம் என்பது நமக்கு தெரியும். தேவன் ஆபிரகாமுக்கு 3 வித ஆசீர்வாதங்கள் கொடுத்தார் என்பது வேதத்தில் உள்ளது.

1. இந்த தேசத்தை உனக்கு கொடுத்தேன் என்று ஒரு நிலத்தைக் கொடுத்தார். (Land)

2. உன் சந்ததி ஒரு நாடாக உருவாகுவார்கள் என்று தேச ஜனங்கள் வாக்களித்தார். (People)

3. உனக்கும் உனக்கு பின் வரும் சந்ததிக்கும் நித்திய உடன்படிக்கை ஏற்படுத்துவேன் (பரிசுத்த வித்து -Seed)

பரிசுத்த வித்து எப்படி ஆதாமிலிருந்து பயணம் செய்தது என்று, ஏற்கனவே பார்த்தோம். அதேபோல, யாக்கோபின் பிள்ளைகள் 70 பேராக எகிப்துக்கு சென்றார்கள், அங்கே அடிமையாக இருந்தபடியால், எகிப்தியரோடு கலக்காமல், தனியாக எபிரேயர் என்ற இனமாக உருவாகி, கிட்டத்தட்ட 30லட்சம் பேராக திரும்பி வந்தார்கள். எனவே, ஆபிரகாமுக்கு வாக்களித்த ஒரு தேச ஜனங்களும் கிடைத்தார்கள். ஆபிரகாமுக்கு தேவன் ஒரு எல்லை வாக்களித்திருந்தார்.

God to Abraham – 10 Tribes

அதேபோல மோசேக்கும் ஒரு வாக்குத்தத்தத்தை தேவன் வாக்கு கொடுத்தார். கானான் தேசத்தில் இந்த ஜனங்களை எல்லாம் நீங்கள் வெற்றி பெற்று தேசத்தை சுதந்தரிப்பீர்கள் என்றார்.

God to Moses – 6 Tribes

யார் இந்த கானானியர்? நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம், ஏனோக்கின் புத்தகத்தின்படி(Book of Enoch), நோவாவின் காலத்தில், 120 தேவபுத்திரர் மனுஷ குமாரத்திகளுடன் கலந்ததால், இராட்சத இனம் (The Anakim and Nephilim) உருவானது. அந்த இராட்சதர், மற்ற மனுஷருடன் கலக்கும்போது, இராட்சதர்கள் உருவானார்கள். இந்த 120 இராட்சதர்களும், அவர்களுக்குள் கலக்கும்போது, ஒரிஜினல் இராட்சதர்(Giants) உருவானார்கள், அவர்களை ஏனாக்கின்(Anak) புத்திரர் “Anakim” என்று அழைத்தார்கள். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், இரண்டு வகையான இராட்சதர்கள் இருந்தார்கள். ஒன்று, ஒரிஜினல் இராட்சதர் ஏனாக்கின் புத்திரர் Anakim, மற்றொன்று, கலப்பின இராட்சதர்கள் Nephilim. இந்த இராட்சத இனம்தான் கானான் முழுவதும் நிரம்பி இருந்தது. ஆபிரகாமின் சந்ததி இவர்களுடன் கலந்து, தங்கள் பரிசுத்த வித்தைக் கெடுக்கக்கூடாது என்பதற்காகத்தான், தேவன் அவர்களை எகிப்துக்கு கொண்டு சென்று பாதுகாத்தார். இப்போது மீண்டும் இந்த தேசத்துக்கு அழைத்துவரும்போது, அந்த இராட்சதர்களை துரத்திவிட்டு தான் உள்ளே செல்ல வேண்டும். மோசேக்கு வாக்கு கொடுக்கும்போது, தேவன் சொல்கிற அத்தனை தேசமும் இராட்சதர்கள் இருக்கும் பட்டணம். ஆனாலும் மோசே தேவனை நம்பி ஜனங்களை அழைத்து வந்துவிட்டார். இப்போது ஒவ்வொரு கோத்திரத்தில் ஒருவராக, 12 பேரை அனுப்பி, தேசத்தை சுற்றி பார்க்கும்படி மோசே அனுப்பிகிறார். யோசுவா, காலேப் தவிர மற்ற 10 பேரும் என்ன சொன்னார்கள் என்பதை கீழே பார்க்கலாம்.

அவர்கள் பார்வைக்கு வெட்டுக்கிளி என்பது நாம் சாதாரணமாக வாசித்து போயிருப்போம். ஆனால் உண்மையில் அவர்கள் அப்படித்தான் இருந்தார்களாம். ஏனோக்கின் புத்தகத்தில் 300 Cubits உயரம் இருந்தார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது. 1 cubit is 18 inches (46 cm) என்றால், அவர்கள் 450 feet (140 m) இருந்திருப்பார்கள். முதலாவது இதைப்பற்றி படிக்கும்போது, என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அது எப்படி அவ்வளவு உயரம் இருக்க முடியும் என்று யோசித்தேன். ஒருமுறை ஏதோ ஒரு செய்தியில், பண்டைய மனிதர்கள் மிகவும் உயரமாக இருந்ததாகவும், வரவர மனிதனின் உயரம் குறைந்து 6 அடிக்கு வந்ததாகவும் படித்தேன். 450 அடியில் மனிதன் இருந்திருப்பானா என்பது இன்னமும் எனக்கு குழப்பமே. ஒருவேளை, அவன் 15 அடி உயரமாக இருந்திருக்கலாம் என்பதை ஏற்றுக்கொண்டேன். அதுவும் வேத வசனங்களை வைத்துதான்.

இங்கு ஒரு இராட்சத பட்டணத்தின் ராஜாவைப்பற்றி வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அவன் கட்டில் இரும்பினால் செய்யப்பட்டதாம் (அவ்வளவு weight). ஒன்பது முழ நீள கட்டிலாம் (அவ்வளவு Height). இங்கு 9 முழ நீளம் என்பது தவறான மொழிபெயர்ப்பு. 9 Cubits, அதாவது 13 அடி நீளம். எனவே இந்த இராட்சத ராஜா 12 அடி உயரமாக இருந்திருக்கலாம். நாம் 6 அடி, அவர் 12 அடி என்றால் கூட, அவர் பார்வைக்கு இஸ்ரவேலர் வெட்டுக்கிளிகள் தானே. உண்மையில் அங்கிருந்தவர்கள் இராட்சதர்கள் தானா? வேதத்தின் வசனங்கள் என்ன சொல்கிறது?

11.அவர்களும் ஏனாக்கியரையொத்த இராட்சதர் என்று எண்ணப்பட்டார்கள்; மோவாபியரோ அவர்களை ஏமியர் என்று சொல்லுகிறார்கள்.

20. அதுவும் இராட்சதருடைய தேசமாக எண்ணப்பட்டது; முற்காலத்தில் இராட்சதர் அதிலே குடியிருந்தார்கள், அம்மோனியர் அவர்களைச் சம்சூமியர் என்று சொல்லுகிறார்கள்.

உபாகமம் 2

ஆக வேதத்தின்படியும், இராட்சதர்கள் இருந்தார்கள், இராட்சத தேசம் இருந்தது என்பதை அறியலாம்.

மோசே இஸ்ரவேலரிடம் கடைசியாக பேசியது தான், உபாகமம் புத்தகத்தில் இருக்கும். அதில் ஆதி முதல் தேவன் தங்களை நடத்திவந்த விதம் குறித்து கூறினார். அவர் கூறியதில் ஒரு பழமொழி பேசியிருப்பார், ஏனாக் புத்திரருக்கு முன்பாக நிற்பவன் யார் என்று. அப்படி பழமொழி சொல்லும் அளவுக்கு அந்த இராட்சதர்கள் மிகவும் பெரியவர்கள்.

தேவன் இவர்களை ஜெயிப்பாய் என்று கூறினார். ஆனால் சுற்றி பார்த்த 10 பேர் மாற்றி சொன்னார்கள். எனவே தேவன், யோசுவா காலேப் தவிர வேறொருவரும் கானான் போவதில்லை என்பார்.

காலேப் போய் வந்த தேசத்தை அவனுக்கு கொடுப்பேன் என்று, தேவன் இங்கு வாக்குத்தத்தம் கொடுக்கிறார். இப்போது 40 வருடம் வனாந்திர பயணம். மோசேயும் மரித்து விட்டார். அடுத்து யோசுவா நடத்தி வந்தார். இப்போது யோசுவா 14ம் அதிகாரத்தில், தேசத்தை பங்கு போடுகின்றனர். ஆனால் எபிரோன் பக்கமே போகவில்லை. ஏனெனில் இன்னும் எபிரோன் சுதந்தரிக்கவேயில்லை. அப்போது காலேப் வந்து யோசுவாவிடம் பேசுகிறார். எனக்கு வாக்கு பண்ணியபோது 40 வயது. இப்போது எனக்கு 85 வயது. ஆனாலும் அதே பலத்தோடு இருக்கிறேன். நான் போய் சுதந்தரித்துக்கொள்கிறேன் என்று கேட்கிறார். இதனால்தான் தேவன் காலேபை வேறே ஆவி உள்ளவர் என்று கூறுகிறார். எனக்கு, வாக்கு கிடைத்து விட்டது, தேவன் தருவார் என்று சும்மா உட்காராமல், அதை சுதந்தரிக்க நினைக்கிறார். அப்பட்டணத்தில் ஏனாக்கியர் இருக்கிறார்கள் என்பது காலேபுக்கு தெரியும், ஆனாலும் அதை போய் சுதந்தரித்தார்.

தேவன் ஆபிரகாமுக்கு கொடுத்த எல்லை எல்லாம் இஸ்ரவேலர் வசம் வந்ததா என்றால், இன்னும் இல்லை. முக்கியமான பட்டணமாகிய (எருசலேம்) எபூசியர் பட்டணம் இன்னும் பிடிக்கப்படவில்லை. அந்த எபூசியர் பட்டணத்தை பிடித்தவர்தான் தாவீது. அதுபோல, கானானிலிருந்த எல்லா இராட்சதரையும் அழித்தவர் தாவீது. அடுத்த பதிவில் அதைப்பற்றி பார்க்கலாம். தாவீது வீழ்த்திய காத் ஊரானாகிய கோலியாத் கூட, இராட்சதன் தான், அவனும் 9 அடி உயரமுள்ளவன். பிற புராணங்களில் எப்படி இராட்சதர் பற்றி கூறுவார்கள் என்பது எனக்கு தெரியாது, ஆனால் வேத இராட்சதர்கள் மனித இனம்தான். அவர்களின் எலும்புகூடு அனேக இடங்களில் கிடைத்துள்ளது.

Similar Posts

  • |

    Day 41 (10-02-2025)

    Scripture Portion: Exodus 33-35 யாத்திராகமம் 33 1கர்த்தர் மோசேயை நோக்கி: நீயும், எகிப்துதேசத்திலிருந்து நீ அழைத்துக்கொண்டு வந்த ஜனங்களும் இவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டு. உன் சந்ததிக்குக் கொடுப்பேன் என்று நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுக்கொடுத்த பாலும் தேனும் ஓடுகிற தேசத்துக்குப் போங்கள். 2நான் ஒரு தூதனை உங்களுக்கு முன்பாக அனுப்பி, கானானியனையும் எமோரியனையும் ஏத்தியனையும் பெரிசியனையும் ஏவியனையும் எபூசியனையும் துரத்திவிடுவேன். 3ஆனாலும், வழியிலே நான் உங்களை நிர்மூலம்பண்ணாதபடிக்கு, நான் உங்கள் நடுவே செல்லமாட்டேன், நீங்கள் வணங்காக்கழுத்துள்ள ஜனங்கள்…

  • |

    Day 79 (20-03-2025)

    Scripture Portion: Deuteronomy 28-29 உபாகமம் 28 1இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருக்கும்படிக்கு, அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுப்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார். 2நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்குச் செவிகொடுக்கும்போது, இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்குப் பலிக்கும். 3நீ பட்டணத்திலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்; வெளியிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய். 4உன் கர்ப்பத்தின் கனியும், உன் நிலத்தின் கனியும், உன் மாடுகளின் பெருக்கமும், உன் ஆடுகளின் மந்தைகளுமாகிய உன்…

  • |

    Day 237 (25-08-2025)

    Scripture Portion: Lamentations 1,2, 3:1-36 புலம்பல் 1 1ஐயோ! ஜனம்பெருத்த நகரி தனிமையாக உட்கார்ந்திருக்கிறாளே! விதவைக்கு ஒப்பானாளே! ஜாதிகளில் பெரியவளும், சீமைகளில் நாயகியுமாயிருந்தவள் கப்பங்கட்டுகிறவளானாளே! 2இராக்காலத்திலே அழுதுகொண்டிருக்கிறாள்; அவளுடைய கண்ணீர் அவள் கன்னங்களில் வடிகிறது; அவளுடைய நேசர் எல்லாருக்குள்ளும் அவளைத் தேற்றுவார் ஒருவரும் இல்லை; அவளுடைய சிநேகிதர் எல்லாரும் அவளுக்குத் துரோகிகளும் சத்துருக்களுமானார்கள். 3யூதா ஜனங்கள் உபத்திரவப்படவும், கொடுமையான அடிமைவேலைசெய்யவும் சிறைப்பட்டுப்போனார்கள். அவள் புறஜாதிகளுக்குள்ளே தங்குகிறாள், இளைப்பாறுதல் அடையாள்; அவளைத் துன்பப்படுத்துகிற யாவரும் அவளை இடுக்கமான…

  • |

    Day 206 (25-07-2025)

    Scripture Portion: Isaiah 37-39, Psalm 76 ஏசாயா 37 1ராஜாவாகிய எசேக்கியா அதைக்கேட்டபோது, தன் வஸ்திரங்களைக் கிழித்து, இரட்டு உடுத்திக்கொண்டு, கர்த்தருடைய ஆலயத்தில் பிரவேசித்து, 2அரமனை விசாரிப்புக்காரனாகிய எலியாக்கீமையும், சம்பிரதியாகிய செப்னாவையும், ஆசாரியர்களின் மூப்பரையும், ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசியினிடத்திற்கு இரட்டு உடுத்தவர்களாக அனுப்பினான். 3இவர்கள் அவனை நோக்கி: இந்த நாள் நெருக்கமும், கண்டிதமும், தூஷணமும் அநுபவிக்கிற நாள்; பிள்ளைப்பேறு நோக்கியிருக்கிறது; பெறவோ பெலன் இல்லை. 4ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படி, அசீரியா ராஜாவாகிய தன் ஆண்டவனால் அனுப்பப்பட்ட…

  • |

    பண்டிகைகள்-3 (பாவ நிவிர்த்தி நாள்)

    Yom Kippur (Day of Atonement) பாவ நிவிர்த்தி நாள் Happy Yom kippur (Day of Atonement) September 24,2023 Evening 6லிருந்து, September 25 Evening வரை பாவ நிவிர்த்தி நாள் என்கிற  ஆறாம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆம், இன்று எபிரேய காலண்டரில் ஏழாவது மாதம் 10ம் தேதி. கர்த்தர் கொண்டாடச் சொல்லிய ஏழு பண்டிகைகளில், ஆறாவது பண்டிகை இன்று. எபிரேய ஏழாம் மாதத்தில் முதல் நாள் Rosh Hashannah என்று, முதல் பதிவாகப்…

  • |

    Day 130 (10-05-2025)

    Scripture Portion: Psalm 50,53,60,75 சங்கீதம் 50 (ஆசாபின் சங்கீதம்) 1வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் வசனித்து, சூரியன் உதிக்குந் திசை தொடங்கி அது அஸ்தமிக்குந் திசை வரைக்குமுள்ள பூமியைக் கூப்பிடுகிறார். 2பூரண வடிவுள்ள சீயோனிலிருந்து தேவன் பிரகாசிக்கிறார். 3நம்முடைய தேவன் வருவார், மவுனமாயிரார்; அவருக்குமுன் அக்கினி பட்சிக்கும்; அவரைச் சுற்றிலும் மகா புசல் கொந்தளிப்பாயிருக்கும். 4அவர் தம்முடைய ஜனத்தை நியாயந்தீர்க்க உயர இருக்கும் வானங்களையும் பூமியையும் கூப்பிடுவார். 5பலியினாலே என்னோடே உடன்படிக்கைபண்ணின என்னுடைய பரிசுத்தவான்களை என்னிடத்தில் கூட்டுங்கள் என்பார். 6வானங்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *