|

இஸ்ரேல்–36 (தானியேல் 2ம் அதிகாரமும் ராஜ்யங்களும்)

வேதத்தில் காணப்படும் அனேக தரிசனங்கள் நிறைவேறி விட்டன. நம்மில் ஒரு சிலர் அதைப் பற்றி அறியாமலே வேதம் வாசிக்கலாம். சில காரியங்களை நாம் வரும் பதிவுகளில் படிக்கலாம். பழைய ஏற்பாடு, இஸ்ரவேலருக்காக எழுதப்பட்டதால், இஸ்ரவேலில் அநேக தீர்க்கதரிசனங்கள் நிறைவேறி இருக்கின்றன. இஸ்ரேல்-35 பதிவில், இதுவரை பார்த்த எல்லா ராஜ்யம் பற்றியும் சுருக்கமாக, இவ்வளவு நாட்கள் படித்தை பதிவிட்டேன். அதை படித்தால் இப்பதிவு புரிந்து கொள்ள உபயோகமாக இருக்கும். அதாவது, இஸ்ரேல் எந்தெந்த சாம்ராஜ்யங்களின் கீழ் அடிமைப்பட்டது என பார்த்தோம். அசீரிய சாம்ராஜ்யம், பாபிலோனிய சாம்ராஜ்யம், மேதிய பெர்சிய சாம்ராஜ்யம், கிரேக்க சாம்ராஜ்யம், ரோம சாம்ராஜயம், ஒருங்கிணைந்த ரோம சாம்ராஜ்யம் என பல சாம்ராஜ்யங்களின் கீழ் இஸ்ரவேலர் இருந்தனர். இஸ்ரேல் என்ற தேசம் கிபி 70ல் அழிக்கப்பட்டு, பின்னர் கிபி 1900களில் மீண்டும் உருவாக்கப்பட்டு, 1948ல் சுதந்திர நாடாக உருவானது.

தானியேல் 2ம் அதிகாரம்

தானியேல் 2ம் அதிகாரத்தில் நேபுகாத்நேச்சார் ஒரு கனவு காண்கிறார். அந்த அதிகாரத்தை வாசித்துப் பார்த்தால் புரியும். அவரது கனவை கீழே வாசிக்கலாம்.

இது என்ன தரிசனம்? நிஜமாகவே இப்படி எல்லாம் கனவு காண முடியுமா என்று தான் தோன்றுகிறது அல்லவா! தானியேல் பார்க்கும் தரிசனத்தில், பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, களிமண், ஒரு கல் எல்லாம் பார்க்கிறார். இவை எல்லாம் ஒவ்வொரு ராஜ்யத்தைக் குறிக்கிறது. மேலே உள்ள படத்தில் விவரமாக பார்க்கலாம்.

தானியேல் ராஜாவிடம், நீர் பார்த்த தலை, தங்கம் ஆக இருந்தது உம்முடைய ராஜ்யம். அதாவது பாபிலோனிய சாம்ராஜ்யம். உமக்கு பின், நீர் பார்த்த வெள்ளி, உமக்கு அடுத்து வரும் சாம்ராஜ்யம் என்று கூறி இருப்பார். இதை வெளிப்படுத்தும் போது, தானியேலுக்கே சரியாக விளங்கி இருக்குமா என்பது தெரியாது. ஆனால் இப்பொழுது நம்முடைய காலத்தில் அவை நிறைவேறி முடிந்து விட்டதால், நம்மால், எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

நேபுகாத் நேச்சாரைத் தொடர்ந்து, மூன்று பெரிய சாம்ராஜ்யங்கள் வந்தன. மேதிய பெர்சிய சாம்ராஜ்யம், கிரேக்க சாம்ராஜ்யம், ரோம சாம்ராஜ்யம். அவைகள் நேபுகாத் நேச்சார் கனவில் கண்டதைப் போல, அந்தந்த குணங்களைக் கொண்டிருந்தன. பாபிலோனுக்கு ஏன் தங்கம் கொடுக்கப்பட்டது (தங்க தலை) என்றால், நேபுகாத் நேச்சார் நல்ல ஒரு அதிகாரம், ஆளுகை நிறைந்த ராஜாவாக இருந்தார். அவருக்குப் பிறகு வந்த ராஜ்யங்கள், அவரைக் காட்டிலும் அதிக வருடங்கள் நிலைத்திருந்தாலும், நேபுகாத் நேச்சாரை விட தாழ்ந்தவையாகவே இருந்தன.

முதலில் தங்கமாக இருப்பது, பாபிலோனிய சாம்ராஜ்யம். அது ஒரு முழுமையான சாம்ராஜ்யம். அடுத்து மார்பு மற்றும் புயம் பகுதியில் உள்ள வெள்ளி, மேதிய பெர்சிய சாம்ராஜ்யத்தைக் குறிக்கிறது. அடுத்ததாக உள்ள வெண்கல வயிறு மற்றும் தொடை, கிரேக்க சாம்ராஜ்யத்தைக் குறிக்கிறது. வெண்கலம் என்பது பித்தளை. அது இன்னும் குறைந்த மதிப்புடையது. அலெக்சாண்டர் மகாராஜா தான் இந்த படத்தில் உள்ள ராஜ்யத்தில், அதிக அளவு நாடுகளை அரசாண்டவர். அதாவது உலகையே ஆண்டவர் என்ற பெருமை உடையவர். இரும்பு கால் என்பது கொடுமையான ரோம சாம்ராஜ்யத்தைக் குறிக்கிறது. அதாவது, சிலுவை மரணம் போன்ற கடுமையான தண்டனை கொண்டு வந்த, இராணுவ கொடுங்கோல் ஆட்சி தான் ரோம். பாதி இரும்பு மற்றும் பாதி களிமண் கலந்த பாதம், வர இருக்கும் அந்தி கிறிஸ்து சாம்ராஜ்யத்தைக் குறிக்கிறது.

இந்த தரிசனங்கள் இஸ்ரேலைப் பற்றி மட்டுமே குறிப்பதால், இவை சரியாக இஸ்ரேலுடன் பொருந்துகிறது. ரோம சாம்ராஜ்யத்தைக் கடந்த பின்னர், தரிசனத்தின்படி வரப் போகிற கொடுமையான சாம்ராஜ்யம், அந்தி கிறிஸ்துவின் ஆட்சி.

அந்திக் கிறிஸ்துவின் ஆட்சியில், முதலில் இஸ்ரவேலர்கள் (யூதர்கள்) அவனுடன் இணைந்து இருப்பார்கள். ஆனால் களிமண் இரும்போடு ஒட்டாதது போல அவர்கள் கலந்து இருக்க முடியாது. கடைசியாக இஸ்ரவேலரை கொடுமைப் படுத்த போகும் ராஜ்யம், அந்தி கிறிஸ்துவின் ஆட்சி. ஏனெனில் அவர்களில் அனேகர் இன்னும் இயேசுவை ஏற்றுக் கொள்ளவில்லை.

இங்கே நேபுகாத் நேச்சார் கண்ட தரிசனத்தின்படி, ரோம சாம்ராஜ்யத்துக்கு அடுத்து உடனே அந்திக்கிறிஸ்துவின் ஆட்சி. அதன்பின் ஒரு கல் வந்து எல்லா ராஜ்யத்தையும் அடித்து நொறுக்குகிறது. அவர் தான் (அந்தக்கல்) மூலைக்கல்லாகிய நம் இயேசு. என்றைக்கும் அழியாத ராஜ்யம் என்றால், அது நம் ஆண்டவரின் ஆயிரம் வருட அரசாட்சி. ஆண்டவரின் 1000 வருட அரசாட்சி இந்த பூமியில் நடக்க போகிறது என்னும் விசுவாசத்தோடு நாம் காத்து இருக்கிறோம்.

நாம் உயிரோடு இருந்தால், மறுரூபமாகி அவருடன் செல்வோம். மரித்திருந்தால், உயிர்த்தெழுந்து அவரோடு செல்வோம். இது இஸ்ரவேலருக்கு மட்டும் அல்ல. அவரை ஏற்றுக் கொண்ட நம் எல்லாருக்கும் பொதுவானது. ஒரு நாள் இயேசு ராஜாவாக வரப் போகிறார். அவருடன் நாமும் இணைந்து வந்து ஆட்சி செய்ய போகிறோம். அந்த உலகில், சண்டை இல்லை. வறுமை இல்லை. வியாதி இல்லை. அன்பு மட்டுமே சூழ்ந்த உலகம். என்றைக்கும் அழியாத ராஜ்யம் அவரின் ராஜ்யம்.

சுவாரஸ்யமான விசயம்

தானியேல் இந்த தரிசனத்தை நேபுகாத் நேச்சாருக்கு சொன்ன பின்னர் தான், நேபுகாத் நேச்சார் ராஜா, “அது என்ன தலை மட்டும் நான்? எல்லாமே நானாக மட்டுமே இருக்க வேண்டும்” என்று பெருமையோடு, முழு தங்கத்திலான சிலை செய்து, எல்லாரும் தன்னை பணிந்து கொள்ளும்படி சொன்னது. ஆனால் என்றைக்கும் ராஜ்யபாரம் செய்யப் போகிற நம் ஆண்டவர், நான்காவது நபராக தீச்சூளைக்குள் வந்து, ராஜாவை மண்டியிட செய்தார். அடுத்தடுத்த தரிசன நிறைவேறுதலை வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

Similar Posts

  • |

    Day 149 (29-05-2025)

    Scripture Portion: 1 kings  1-2, Psalm 37,71,94 1 இராஜாக்கள் 1 1தாவீது ராஜா வயதுசென்ற விர்த்தாப்பியனானபோது, வஸ்திரங்களினால் அவனை மூடினாலும், அவனுக்கு அனல் உண்டாகவில்லை. 2அப்பொழுது அவனுடைய ஊழியக்காரர் அவனை நோக்கி: ராஜசமுகத்தில் நின்று, அவருக்குப் பணிவிடை செய்யவும், ராஜாவாகிய எங்கள் ஆண்டவனுக்கு அனல் உண்டாகும்படி உம்முடைய மடியிலே படுத்துக்கொள்ளவும் கன்னியாகிய ஒரு சிறு பெண்ணை ராஜாவாகிய எங்கள் ஆண்டவனுக்குத் தேடுவோம் என்று சொல்லி, 3இஸ்ரவேலின் எல்லையிலெல்லாம் அழகான ஒரு பெண்ணைத் தேடி, சூனேம்…

  • |

    இஸ்ரேல்-2 (அந்த இடம்)

    இஸ்ரவேல் என்ற அந்த தேசம், அதிலிருக்கும் ஒரு இடம், எவ்வளவு முக்கியமானதாக கருதுகிறார்கள் யூதர்கள் என்று இப்பதிவில் காணலாம். யூதர்களின் கருத்து யூதர்களுக்கு தோரா என்ற புனிதநூல் உள்ளது. முதல் ஐந்து பழைய ஏற்பாட்டு புத்தகங்கள் அவர்களின் தோரா. பழைய ஏற்பாடு மட்டும் தான் யூதர்களின் பைபிள். பழைய ஏற்பாட்டை மூன்று பிரிவுகளாக பிரித்துள்ளார்கள். Torah – மோசேயினால் எழுதப்பட்ட முதல் 5 ஆகமங்கள் (நியாயப்பிரமாணம்) Neviim – தீர்க்கதரிசன புத்தகங்கள் Ketuvim – மற்றவை நியாயப்பிரமாணமும்…

  • |

    விடுதலை – 4 திருமணத்துக்கு பிறகு ஆபாச படம் – 2

    திருமணத்துக்கு பிறகு ஆபாச படம் – 2 (வாழ்க்கை துணையின் அடிமைத்தனம்) திருமணமானவர்களுக்குத்தான் இப்பதிவு… எனக்கல்ல என நினைக்கும் வாலிபர்களே, ஆபாச படத்துக்கு அடிமையானவர்களுக்கு தான் இப்பதிவு… எனக்கல்ல என்று நினைப்பவர்களே, முன்னொரு காலத்தில் அடிமையாக இருந்தேன்… அதிலிருந்து வெளிவந்து விட்டேன் என நினைக்கும் நட்புகளே, சில உளவியல் பிரச்சனைகளையும், திருமணத்துக்கு பின்னர் வரும் பிரச்சனைகளையும் மேலோட்டமாக பதிவிட்டிருக்கிறேன். தயவுசெய்து படித்து உங்கள் வாழ்க்கை துணையை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். ஏற்கனவே, உங்கள் வாழ்க்கைத்துணை ஆபாசபடத்துக்கு…

  • |

    Day 249 (06-09-2025)

    Scripture Portion: Ezekiel 32-34 எசேக்கியேல் 32 1பன்னிரண்டாம் வருஷம் பன்னிரண்டாம் மாதம் முதலாந்தேதியிலே கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 2மனுபுத்திரனே, நீ எகிப்தின் ராஜாவாகிய பார்வோனைக்குறித்துப் புலம்பி, அவனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: ஜாதிகளுக்குள்ளே நீ பாலசிங்கத்துக்கு ஒப்பானவன்; நீ பெருந்தண்ணீர்களில் முதலையைப்போல் இருந்து, உன் நதிகளில் எழும்பி, உன் கால்களால் தண்ணீர்களைக் கலக்கி, அவைகளின் ஆறுகளைக் குழப்பிவிட்டாய். 3ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்: நான் வெகு ஜனக்கூட்டத்தைக்கொண்டு உன்மேல் என் வலையை வீசுவேன்; அவர்கள் என் வலையில் உன்னை இழுத்துக்கொள்வார்கள்….

  • |

    Day 241 (29-08-2025)

    Scripture Portion: Ezekiel 9-12 எசேக்கியேல் 9 1பின்பு அவர் என் காதுகள் கேட்க மகா சத்தமாய்; நகரத்தின் விசாரிப்புக்காரர் சங்கரிக்கும் ஆயுதங்களைத் தங்கள் கைகளில் பிடித்துக்கொண்டுவரக்கடவர்கள் என்று சொன்னார். 2அப்பொழுது இதோ, ஆறு புருஷர், வெட்டுகிற ஆயுதங்களைத் தங்கள் கைகளில் பிடித்துக்கொண்டு, வடக்கே பார்த்த உயர்ந்த வாசலின் வழியிலிருந்து வந்தார்கள்; அவர்களில் சணல்நூல் அங்கிதரித்து, தன் அரையில் கணக்கனுடைய மைக்கூட்டை வைத்திருக்கிற ஒருவன் இருந்தான்; அவர்கள் உள்ளே பிரவேசித்து, வெண்கல பலிபீடத்தண்டையிலே நின்றார்கள். 3அப்பொழுது இஸ்ரவேலின்…

  • |

    பண்டிகைகள் – 16 (கூடாரப் பண்டிகை)

    Feast of Tabernacle (Sukkot) நாம் கர்த்தருடைய கிருபையால், ஆறு பண்டிகைகள் முடித்து இப்போது ஏழாவது பண்டிகைக்குள் வந்திருக்கிறோம். முதல் மூன்று பண்டிகைகள் முதலாம் மாதம் 14,15,16ம் தேதியில் கொண்டாடப்படுகிறது. பஸ்கா (Pass over, Pesach), புளிப்பில்லாத அப்ப பண்டிகை (unleavened Bread), முதற்கனி (First Fruit) பண்டிகை. பின்பு 50வது நாளில், மூன்றாம் மாதம் 6வது தேதியில், நான்காவது பண்டிகையான வாரங்களின் பண்டிகை அதாவது பெந்தெகோஸ்தே பண்டிகை (Shavuot) கொண்டாடப்படுகிறது. நீண்ட இடைவெளிக்கு பின்னர், ஏழாவது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *