வெளிப்படுத்தின விசேஷம் 17ம் அதிகாரம்

இதை எழுதியவர் அப்போஸ்தலனாகிய யோவான். அவரது காலத்தில், ஐந்து பேர் விழுந்தார்கள். ஒருவன் இருக்கிறான். இன்னொருவன் வரவேண்டும் என்று கூறுகிறார். விழுந்த ஐந்து பேர் யார் என்று பார்த்தால், யோவான் காலத்தில் இதற்கு முன் இருந்த ஐந்து சாம்ராஜ்யம். எகிப்து, அசீரியா, பாபிலோன், மேதிய பெர்சிய ராஜ்யம், கிரேக்க சாம்ராஜ்யம். இந்த ஐந்தும் விழுந்தது. ஒருவன் இருக்கிறான் என்பது யோவான் காலத்தில் இருந்த ரோம சாம்ராஜ்யத்தை குறிக்கிறது.

இன்னொருவன் வரவேண்டும். வந்து கொஞ்ச காலம் தரித்திருக்க வேண்டும் என்பது, ஒருங்கிணைந்த ரோம சாம்ராஜ்யம் அல்லது போப்‌ சாம்ராஜ்யத்தைக் குறிக்கிறது. எல்லா சாம்ராஜ்யமும் 400 வருடங்களுக்கு குறைவாக இருந்தது. போப் ரோம சாம்ராஜ்யம் மட்டுமே, கிட்டத்தட்ட 1260 வருடங்கள் ஆட்சி செய்துள்ளனர்.

1. எகிப்து (கிமு1400-1000) 400வருடங்கள்

2. அசீரியா (கிமு1000-700) 300 வருடங்கள்

3. பாபிலோன் (கிமு 700-538) 250 வருடங்கள்

4. மேதிய பெர்சியர் (கிமு538-333) 200 வருடங்கள்

5. கிரேக்கு (கிமு333-64) 250 வருடங்கள்

6. ரோம் (கிமு 64- கிபி 538)

7. ஒருங்கிணைந்த ரோம சாம்ராஜ்யம் (538- 1798) 1260 வருடங்கள்

8. அதிலிருந்து எட்டாவது தோன்றும்.

ஏழாவது சாம்ராஜ்யத்தில் இருந்து எட்டாவது தோன்றும். அந்த பத்து நாடுகள் பிரிந்து போனாலும், அவர்கள் வேர் தான். அடுத்த சாம்ராஜ்யமாக வந்த ஆங்கிலோ சாக்சன் என்ற இங்கிலாந்து அந்த பத்து நாடுகளில் ஒன்று தான். அடுத்த சாம்ராஜ்யமாக வந்த அமெரிக்க சாம்ராஜ்யம், ஓரளவு வேர் என்றே கூறலாம். 1560ல் ஸ்பெயினில் இருந்து நிறைய யூதர்கள் அமெரிக்காவில் குடியேறினார்கள். ஸ்பெயின் ரோம சாம்ராஜ்யத்தின் வேர். ஆனால் அமெரிக்கா, இங்கிலாந்து எல்லாம் எட்டாவது சாம்ராஜ்யம் கிடையாது.

கடைசியாக எட்டாவது சாம்ராஜ்யம் என்பது அந்திக்கிறிஸ்து ஆட்சியைக் குறிக்கும். தற்போதைய வேதவல்லுநர்கள் கருத்துப்படி, European union மூலமாக உலகம் முழுவதுக்கும் ஒரே ராஜ வருவார், அவர்தான் அந்திக்கிறிஸ்து. European union நாடுகள் இணைந்து ஒற்றுமையாக, ஒருவருக்கு ஆட்சிப்பொறுப்பை கொடுப்பர். அவர்தான் அந்திக்கிறிஸ்துவாக வருவார். கர்த்தருக்கு சித்தமானால், European union பற்றிய சில காரியங்களை படிக்கலாம்.

நாம் ஏற்கனவே பல முறை எல்லா சாம்ராஜ்யங்களையும் பற்றி பார்த்ததால், இங்கே விளக்கமாக தரவில்லை. ஒருவேளை நீங்கள் புதிதாக இந்த பதிவை படித்தால், முந்தைய பதிவுகளில் ஒவ்வொரு சாம்ராஜ்யம் பற்றிய விளக்கமும் இருக்கும். இப்பொழுது இஸ்ரவேலை பற்றி படித்துக்கொண்டிருக்கிறோம். இஸ்ரவேலின் சாகசங்கள், வரும் காலத்தில் தொடர்ச்சியாக பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *