Day – 13 (13- டிசம்பர், 2023)

ஆவிக்குரிய ஆசீர்வாதங்களுக்காக நன்றி

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்.

எபேசியர் 1 -3

  1. Praised be ADONAI, Father of our Lord Yeshua the Messiah, who in the Messiah has blessed us with every spiritual blessing in heaven.

கர்த்தர் நம்மை ஆவிக்குரிய சகல ஆசீர்வாதங்களாலும் ஆசீர்வதித்திருக்கிறார். அதற்காக நன்றி சொல்வோம். அது என்ன ஆவிக்குரிய ஆசீர்வாதம்? நிறைய நாட்கள், ஆவிக்குரிய ஆசீர்வாதம் என்றால் என்ன என்றே தெரியாமல், அதற்கு நன்றி சொல்லி இருப்போம். ஆனால் நமக்கு தெரிந்த காரியங்கள்தான், ஆனால் இவை தான் ஆவிக்குரிய ஆசீர்வாதம் என்பதை உணராமல் நன்றி சொல்லியிருப்போம். எபேசியர் 1ம் அதிகாரத்தில், வரிசையாக அந்த ஆசீர்வாதங்கள் சொல்லப்பட்டிருக்கும்.

  1. In the Messiah, he chose us in love before the creation of the universe to be holy and without defect in his presence.

அவருக்கு முன்பாக, நாம் பரிசுத்தமுள்ளவர்களாய் இருக்கிறோம், குற்றமற்றவர்களாய் இருக்கிறோம் என்பது ஆவிக்குரிய ஆசீர்வாதம். கொஞ்சம் யோசித்து பார்ப்போம், நாம் யார் என்பது நமக்கு தெரியும். “நான் பரிசுத்தவான், நான் குற்றமற்றவன்” என்று ஒரு மனிதன் கூறினால், அது சுயமாக அவனாலேகூட, ஏற்றுக்கொள்ள முடியாதது. ஏனெனில் எல்லாரும் மனிதர்கள் தான். ஆனால், தேவனுடைய பார்வையில் நாம் பரிசுத்தமானவர்கள், குற்றமற்றவர்கள். இன்னும் சொல்லப்போனால், பிதா நம்மைப் பார்க்கும்போது, நாம் பரிசுத்தமானவர்களாக தெரிவோம், ஏனெனில் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் நம்மைக் கழுவி விட்டது. எத்தனை பெரிய பாக்கியம் அல்லவா! பிதாவினுடைய பார்வையில் நாம் பரிசுத்தவான்களாக தெரிகிறோம். இந்த பெரிய ஆவிக்குரிய ஆசீர்வாதத்துக்காக நாம் நன்றி சொல்லலாமே!

  1. In the Messiah, he chose us in love before the creation of the universe to be holy and without defect in his presence.

உலகத்தோற்றத்துக்கு முன்னரே நம்மை தெரிந்து கொண்டாராம். அதாவது, வெளிச்சம் உண்டாகக்கடவது என்று வெளிச்சத்தை படைக்கும் முன்னரே, நமக்கான திட்டம் உருவாக்கி, நம்மை தெரிந்து கொண்ட ஒரு நல்ல தேவன் நமக்கு இருக்கிறார். தேவனுக்கு முன்பாக நம்முடைய நிலை (Status) இப்படி இருக்கும் என்று அப்போதே முன் குறித்து இருக்கிறார். ஒருவேளை நாம், இயேசு பிறப்பதற்கு முன்பாக, கிமு காலத்தில் பிறந்து இருந்தால், நாம் அவருடைய இரத்தத்தால் கழுவப்பட முடியாது. ஒருவேளை கிபி காலத்தில், சுவிசேஷம் இவ்வளவு பரவுவதற்கு முன் நாம் பிறந்திருந்தால், அவரை அறிந்திருக்க முடியாது. இப்போது, நாம் இருக்கும் காலம் ஒரு பொற்காலம். உலகம் நம் கைக்குள் வந்து விட்டது. வேத புத்தகம் நம் கைகளில் தவழ்கிறது. உலகத் தோற்றத்துக்கு முன்னரே, நமக்கு இவ்வளவு சிறப்பான காலத்தில் பிறக்க அவர் வைத்திருந்த திட்டத்தை எண்ணி, அந்த ஆவிக்குரிய ஆசீர்வாதத்துக்காக நன்றி சொல்லலாமே!

  1. He determined in advance that through Yeshua the Messiah we would be his sons – in keeping with his pleasure and purpose –

தமக்கு சுவிகார புத்திரராகும்படி, நம்மை முன்குறித்திருக்கிறார். இஸ்ரவேலர் ஆபிரகாமின் சந்ததி என்று பெருமை பாராட்டுவார்கள். அவர்கள் மாம்சத்தின்படி ஆபிரகாமின் பிள்ளைகள், நாமோ, இஸ்ரவேலர் அல்ல. அவர்கள் பார்வையில் புற ஜாதிகள்(Gentiles). ஆனால் தேவன் நம்மை தத்தெடுத்து இருக்கிறாராம், அதுவும் அவருடைய சொந்த பிள்ளைகளாய். இயேசுவின் மூலமாக, நாம் தேவனுக்கு பிள்ளைகளாகி விட்டோம். சொந்த பிள்ளைகளே, இயேசுவை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிறார்கள். ஆனால், நாம் இயேசுவை ஏற்றுக் கொண்டதால், அவருடைய சொந்த பிள்ளைகளாகி விட்டோம். இஸ்ரவேலரிலும் மேன்மையான ஆசீர்வாதங்களை சுதந்தரித்து விட்டோம். தேவனுக்கு நன்றி சொல்வோம்.

7.In union with him, through the shedding of his blood, we are set free – our sins are forgiven; this accords with the wealth of the grace

நாம் விடுதலையாக்கப்பட்டு விட்டோம். நாம் பாவிகள் அல்ல. இயேசுவின் இரத்தம் நம்மைக் கழுவி விட்டது.  அவருடைய கிருபைக்குள் இருக்கிறோம்.  நம் பாவங்கள் மன்னிக்கப்பட்டு விட்டது என்ற நிச்சயம் நமக்கு வேண்டும். பாவ மன்னிப்பு என்ற ஆவிக்குரிய ஆசீர்வாதம் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை ஏற்றுக்கொண்டு, அதை நினைத்து கர்த்தருக்கு நன்றி சொல்லலாமே!

இன்னும் அனேக ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் வேதத்தில் உள்ளது. ஞானஸ்நானம் மூலமாக அவருடன் மரித்து உயிர்த்தெழுந்து விட்டோம். நாம் ஆவிக்குரியவர்கள் ஆகிவிட்டோம், நீதிமான்கள் ஆகிவிட்டோம். ஆதாம் இழந்த ஆசீர்வாதங்கள் நமக்கு கிடைத்து விட்டது. கிறிஸ்துவின் மணவாட்டி ஆகிவிட்டோம். அதை எல்லாம் நினைத்துப் பார்த்து தேவனுக்கு நன்றி சொல்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *