About Rhema Tamil (ரேமா தமிழ் பற்றி)
ரேமா தமிழ் என்பது, தேவனுடைய வார்த்தையை தமிழில் ஆழமாகவும் எளிமையாகவும் அறிந்துகொள்ள விரும்புகிறவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு வேதாகமக் கற்றல் தளம்.
பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலோடு, வேதாகம சத்தியங்களை தெளிவாக பகிர்ந்து, ஒவ்வொரு விசுவாசியும் தேவனுடைய வார்த்தையில் வளர்ந்து, கிறிஸ்துவைப் போன்ற வாழ்க்கையை வாழ உதவுவதே எங்கள் நோக்கம். எங்களது எழுத்துக்கள் கிறிஸ்தவர்களுக்காகவே, அவர்களது ஆவிக்குரிய வளர்ச்சிக்காக எழுதப்படுகிறது.
இந்த ஊழியத்தின் மூலம் தேவனுடைய ராஜ்யம் விரிவடையவும், அநேகர் சத்தியத்தை அறிந்து ஆவிக்குரிய வளர்ச்சி அடையவும் எங்கள் ஜெபமும் முயற்சியும் தொடர்ந்து உள்ளது.
Our Vision (எங்கள் தரிசனம்)
தமிழ் பேசும் ஒவ்வொருவரும் தேவனுடைய வார்த்தையை சரியாக அறிந்து, சத்தியத்தில் நிலைத்து, ஆவிக்குரிய முதிர்ச்சியடைந்து, இயேசு கிறிஸ்துவின் உண்மையான சீஷர்களாக வளர்வதை காண்பதே எங்கள் தரிசனம்.
About the Author (எழுத்தாளர் பற்றி)
இந்த இணையதளத்தில் உள்ள வேதாகமப் படிப்புகள் மற்றும் கட்டுரைகள், தேவனுடைய வார்த்தையை ஆராய்ந்து தமிழில் பகிர வேண்டும் என்ற பாரத்துடன் எழுதப்படுகின்றன. பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலோடு, வேதாகமத்திற்கு உண்மையாகவும் தெளிவாகவும் போதிக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.
இந்த ஊழியத்தின் நோக்கம் எந்த ஒரு தனிநபரையும் உயர்த்துவது அல்ல; மாறாக, வாசகர்கள் தேவனுடைய வார்த்தையில் வேரூன்றி வளரவும், எல்லா மகிமையும் தேவனுக்கே செலுத்தப்படவும் வேண்டும் என்பதே எங்கள் ஜெபமாகும்.
“எல்லா மகிமையும் தேவனுக்கே.”
