|

விடுதலை – 5 Daniel M.Ross அனுபவம்

Daniel M.Ross அனுபவம்

Porn Addiction என்பது, தனிமையில் நம்மோடு போராடும் சிங்கம். அதற்காக தேவனிடம் நாம் ஜெபிப்பதோடு நிறுத்தி விடாமல், நாமும் ஏதோ ஒரு காரியத்தை செய்ய வேண்டும் என முதல் பதிவில் பார்த்தோம். பாஸ்டர்.விளாட் என்பவர், உக்ரைனில் பிறந்து, 12 வயதில் அமெரிக்காவுக்கு குடியேறி, டீன் ஏஜில் porn addictionல் சிக்கி, அதிலிருந்து வெளிவர போராடி, என்னவெல்லாம் செய்து மீண்டு வந்தார் என இரண்டாம் பதிவில் பார்த்தோம். Porn addictionல் சிக்கியவர்கள், திருமணத்துக்கு பிறகு அதிலிருந்து வெளிவந்து விடுவோம் என நினைப்பார்கள். ஆனால் அப்படி திருமணம் செய்வதன் காரணமாக pornல் இருந்து மீண்டு வர முடியாது என்பதை மூன்றாம் பதிவில் பார்த்தோம். Porn addictionல் நம் துணை சிக்கியிருந்தால், நாம் அவரை திருப்தி படுத்தவில்லை என்பது பொருளல்ல. நம்மால்தான் அவர் இந்த பாவத்தில் சிக்கி விட்டார் என்பதும் உண்மையல்ல. நம்மை சந்திப்பதற்கு முன்பாகவே அவர் ஆபாசபடம் என்னும் வாசலை பெரிதாக திறந்து வைத்து விட்டார் என்பதை நான்காம் பதிவில் பார்த்தோம்.

இந்த தலைப்பில் எழுத உந்தப்பட்ட பிறகு, எப்படி எழுதுவது என திகைத்து நின்றபோது, கர்த்தர் என்னை அருமையாக வழிநடத்தினார். கொரோனா விடுமுறையில் அமேசான் கிண்டிலில், இலவச புத்தகங்கள் டவுன்லொட் செய்து படித்தேன். அதில் அநேக கிறிஸ்தவ புத்தகங்களும் பதிவிறக்கம் செய்து வைத்தேன். மூன்று வருடங்களாக அந்த பக்கமே போகாத நான், இந்த தலைப்பில் எழுத ஆரம்பிக்கும்போது, தற்செயலாக அமேசான் கிண்டிலுக்கு சென்றேன். அதில் Quit Porn என்ற புத்தகத்தை ஏற்கனவே டவுன்லோட் செய்து வைத்திருப்பதைப் பார்த்து திகைத்தேன்.  Daniel M.Ross என்பவர் தனது அனுபவத்தை அதில் பதிவிட்டிருந்தார். அதைப்பற்றி இரு பதிவுகளில் பார்க்கலாம். இந்த பாவத்தைப் பற்றிய ஒரு தெளிவு (understanding) நமக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இப்பதிவுகள்.

இந்த Daniel M.Ross என்பவர், Los Angels, Californiaவில் இருப்பவர். இவர் தன் வாழ்க்கையில், pornக்கு அடிமையாகி, அதிலிருந்து வெளிவர முடியாமல் போராடி, எப்படி அதிலிருந்து வெளிவந்தார் என்பதை, ஒரு குட்டி புத்தகமாக எழுதி, முடிந்தவரையில் இலவசமாக கொடுத்துக் கொண்டிருக்கிறார். நாமும் அவருடைய வாழ்விலிருந்து கற்றுக் கொள்வோம்.

எந்த மனிதனாக இருந்தாலும், மன அழுத்தம் என்பதை நிச்சயமாக அனுபவித்திருப்பான். பள்ளி, கல்லூரி படிப்பு மன அழுத்தத்தைக் கொடுக்கும். வேலை மன அழுத்தத்தைக் கொடுக்கும். திருமண வாழ்வு மன அழுத்தத்தைக் கொடுக்கும். இப்படி பல காரணங்கள் இருக்கும். அதிலிருந்து வெளிவர நாம் எதைக் கையிலெடுக்கிறோம் என்பது முக்கியம். Daniel M.Ross தனது மன அழுத்தத்திலிருந்து வெளிவர தெரிந்து கொண்டது, Porn வீடியோக்கள் பார்ப்பது.

Daniel M.Ross ஒரு எழுத்தாளர். அது ஒரு வியாழக்கிழமை. பொது நூலகத்துக்காக நிறைய காரியங்கள் எழுதவேண்டி இருந்தது. மதியம் 1 மணி. இப்போது எழுதலாம் என்று அவர் மனதில் நினைத்திருக்கும்போது, திடீரென அவரது 10 மாத பெண் குழந்தை வீறிட்டு அழுகிறாள். அவர் மனைவி  சமையல் செய்து கொண்டிருந்ததால், குழந்தையைத் தூக்கிக்கொண்டு வெளியே சென்றார் Daniel M.Ross. ஆனால் குழந்தை அழுகிறது. அமைதிப்படுத்த தன்னால் ஆனமட்டும் முயன்றார். அது தோல்வியில் முடிந்தது. குழந்தை இன்னும் அதிகமாக கத்தவே, அக்கம் பக்கத்தினர் கேள்வி கேட்பார்கள் என்று மீண்டும் வீட்டுக்குள் வந்தார். இப்போது வேகமாக வந்த மனைவி, அவர் கையிலிருந்து பிள்ளையைத் தூக்கினார். உடனடியாக பிள்ளையின் அழுகை நின்று விட்டது. இப்போது Daniel M.Rossக்கு சரியான கோபம். மிகவும் டென்ஷனாகி விட்டார். குழந்தை தன்னை அவமரியாதை செய்வதாக உணர்ந்தார். எனவே மனைவியிடம் கத்தினார். குடும்பத்திடம் கத்தினார். மிகவும் ஆத்திரமடைந்து விட்டார். அவர் தன் கட்டுப்பாட்டை இழந்தார். எழுதுவதற்கான மூட் அவருக்கு போய் விட்டது. அவரது வேலை அன்றைக்கு நடக்கவே இல்லை.

இதிலென்ன இருக்கிறது? எல்லாருடைய வீட்டிலும் இது நடக்கும் என சொல்கிறீர்களா? அது தவறு. இதன் பின்னாலிருப்பது ஒரு ஆவி என்கிறார் Daniel M.Ross. இந்த சம்பவம் வியாழக்கிழமை நடந்தது. ஆனால் அவர் கதவை திறந்தது இரு நாட்களுக்கு முன்னர்.

செவ்வாய் மதியம், தனது காரில் அமர்ந்த Daniel M.Ross, வேலைப்பளுவால் வந்த மன அழுத்தத்தில் இருந்தார். அவர் எழுத வேண்டிய நேரத்தை மன அழுத்தம் எடுத்துக்கொண்டது. அவரால் எழுத முடியவில்லை. பணமில்லாமல் வெகு சோர்வாக இருக்கிறார். ஏறக்குறைய மிக பரிதாபமான சூழலில் இருக்கிறார். கடைசியில், அந்த செவ்வாய் மதியம், தனது காரில், சில வீடியோக்கள் பார்த்து, சுய இன்பம் செய்துள்ளார் Daniel M.Ross. இதைத்தான் தமிழில் சிற்றின்பம் என சொல்வர். மிக மிகச் சிறிய காலத்துக்கு மட்டுமே இன்பம் கொடுக்கும்.

Daniel M.Ross, எப்போதுமே வீடியோக்கள் பார்த்து, தனது விந்தை வெளியேற்றும்போது, ஒரு வித்தியாசமான உணர்வை அடைவாராம். அந்த உணர்வை விளக்கி சொல்வது கடினம் என்கிறார் Daniel M.Ross. அதாவது, அவர் விந்து வெளியேறியதும், ஒரு காற்று (evil force) அவருக்குள் நுழைவதை உணர்வாராம். ஒவ்வொரு முறையும் இந்த உணர்வு அவருக்கு வரும். கண்களுக்கு நடுவே நெற்றியில், ஒரு துளை வழியாக, ஒரு காற்று உள்ளே நுழைவதை அவரால் உணர முடியும் என்கிறார். நிச்சயமாக அப்போது தலைவலி எல்லாம் வராது. ஆனால் தனக்குள் ஒரு Force உள்நுழைவதை அவரால் உணர முடிந்தது. அதாவது, இப்போது அவர் அடைந்த சிற்றின்பத்தால், ஒரு கதவை திறந்தார் அல்லவா! அந்தக் கதவின் வழியாக, வெறும் இச்சையின் ஆவி மட்டுமல்ல, அதனோடு சேர்த்து பல ஆவிகள் உள்ளே நுழைந்தன.

எடுத்துக்காட்டாக, ஒரு மாலின்(mall) கதவை திறந்து வைத்தால், அதனுள்ளே, யாரெல்லாம் செல்வார்கள்? 100 ரூபாய் பொருள் வாங்குபவரும் செல்வார். லட்ச ரூபாய் பொருள் வாங்குபவரும் செல்வார். சும்மா சுற்றிப் பார்க்க போனவரும் செல்வார். அந்தக்கதவின் வழியாக அனைத்து தரப்பட்ட மக்களும் உள்ளே செல்லலாம் அல்லவா? இதே கதைதான் அசுத்த ஆவிகளுக்கும்.

நான் இச்சை என்ற பாவத்தை செய்து, ஒரு கதவைத் திறந்தால், அக்கதவின் வழியாக இச்சை, அசுத்தம், விபச்சாரம், காமவிகாரம், கோபம், வெறுப்பு, கசப்பு, எரிச்சல் என்று பல பிசாசுகள் உள்ளே நுழையலாம்.

செவ்வாய் மதியம் Daniel M.Ross ஆபாசபடம் பார்த்து, கதவைத் திறந்ததால், கோபம், எரிச்சல் போன்ற பிசாசுகள் உள்ளே வந்துவிட்டன. இரண்டு நாட்கள் அமைதியாக இருந்த அந்த பிசாசுகள், வியாழன் மதியம் செயல்படத் துவங்கி விட்டன. இந்த chain (சுழற்சி) அப்படியே நிற்காது. இச்சையின் மூலம் எப்படி கோபம் எரிச்சல் போன்ற பிசாசுகள் உள்ளே வந்ததோ, அதேபோன்று தற்போது கோபத்தின் மூலம் இன்னும் அனேக பிசாசுக்கு கதவைத் திறந்து விட்டார் Daniel M.Ross.

Then Jesus demanded, ‘What is your name?’ And he replied, ‘My name is Legion, because there are many of us inside this man.’ Mark 5:9

மாற்கு 5:9 அப்பொழுது அவர் அவனை நோக்கி: உன் பேர் என்னவென்று கேட்டார். அதற்கு அவன்: நாங்கள் அநேகராயிருக்கிறபடியால் என் பேர் லேகியோன் என்று சொல்லி,

Tamil Easy Reading Version பிறகு இயேசு அவனிடம், “உன் பெயர் என்ன?” என்று கேட்டார். “என் பெயர் லேகியோன், ஏனென்றால் எனக்குள்ளே பல ஆவிகள் உள்ளன” என்று அவன் சொன்னான்.

இயேசு வாழ்ந்த காலத்தில், பிசாசு பிடித்திருந்த ஒரு மனிதனிடம் உன் பேர் என்ன என்று கேட்டார். அதற்கு அது “நாங்கள் அனேகராயிருக்கிறபடியால், எங்கள் பேர் லேகியோன் என்றது. ரோம படையில், லேகியோன் என்பது ஒரு படையினரின் பெயர். அதில் 6100 படைவீரர்களும் 726 குதிரை வீரர்களும் இருப்பர். அந்த மனிதனுக்குள் எத்தனை பிசாசுகள் இருந்தன என்பது துல்லியமாக தெரியாது. ஆனால் கிட்டத்தட்ட 6000 பிசாசுகள் உள்ளே இருந்தன. அந்த 6000ம் இப்படி ஏதோ கதவுகள் திறந்திருக்கும்போது உள்ளே நுழைந்தவை தான். இந்த சம்பவத்தை வாசிக்கும்போது, எப்படி 6000 பேய் ஒரு மனிதனுக்குள் இருக்க முடியும்? அவன் ஏதோ கொடூரமாக இருப்பான் போல என நான் நினைத்த நாட்களுண்டு. ஆனால் இதைக் கற்றுக் கொள்ளும்போது, சாதாரணமாக நமக்குள்ளேயே கோபம், எரிச்சல், பொறாமை, சோம்பேறித்தனம், பெருமை, வெறுப்பு, கசப்பு, மூர்க்கம் என எவ்வளவு அசுத்த ஆவிகள் இருக்கின்றன என நினைத்து பார்த்தேன்.

எபேசியர் 6:12 ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.

Tamil Easy Reading Version நமது போராட்டம் பூமியிலுள்ள மக்களை எதிர்த்தல்ல. நாம் இருட்டில் உள்ள அரசர்களையும், அதிகாரிகளையும், அதிகாரங்களையும் எதிர்த்தே போராடுகிறோம். வானமண்டலங்களில் உள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளுக்கு எதிராகப் போர் செய்கிறோம்.

எனவேதான் இயேசு, நம் போராட்டம் இந்த பூமியில் உள்ளவர்களோடு அல்ல. அது அசுத்த ஆவிகளோடு என கூறி இருக்கிறார். இந்த போராட்டத்தில் நம்மால் வெற்றி பெற முடியும். ஏனெனில் இயேசு சிலுவையில் எல்லாவற்றையும் செய்து முடித்து விட்டார். Daniel M.Ross என்ன செய்தார்? Pastor.Vlad மற்றும் Daniel M.Ross என்ன செய்தார்கள்? நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை வரும் பதிவுகளில் தொடர்ச்சியாகப் பார்க்கலாம்.

Similar Posts

  • இஸ்ரேல் – 10

    ஈசாக்கு முதல் மோசே ஆபிரகாமின் மகன் ஈசாக்கு. ஈசாக்கின் மகன் யாக்கோபு. ஈசாக்கு 60 வயதாகும்போது யாக்கோபு பிறந்து விட்டார். ஈசாக்கு மரிக்கும்போது 180 வயது. யாக்கோபு, ஏசாவுக்கு பயந்து ஓடிப்போன பின்பு தான், யாக்கோபு திருமணம் செய்தார், எனவே ஓடிப் போகும்போது அவருக்கு 40 வயதாக இருக்கும் என்று வைத்துக் கொள்வோம். யாக்கோபுக்கு 40 வயது என்றால், ஈசாக்குக்கு அப்போது 100 வயது. 100 வயதாகும்போதே நான் சாகப்போகிறேன், வந்து ஆசீர்வாதம் வாங்கி கொள்ளுங்கள் என்று…

  • |

    Day 158 (07-06-2025)

    Scripture Portion: Proverbs 13-15 நீதிமொழிகள் 13 1ஞானமுள்ள மகன் தகப்பனுடைய போதகத்தைக் கேட்கிறான்; பரியாசக்காரனோ கடிந்துகொள்ளுதலுக்குச் செவிகொடான். 2மனுஷன் தன் வாயின் பலனால் நன்மையைப் புசிப்பான்; துரோகிகளின் ஆத்துமாவோ கொடுமையைப் புசிக்கும். 3தன் வாயைக் காக்கிறவன் தன் பிராணனைக் காக்கிறான்; தன் உதடுகளை விரிவாய்த் திறக்கிறவனோ கலக்கமடைவான். 4சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெறாது; ஜாக்கிரதையுள்ளவர்களுடைய ஆத்துமாவோ புஷ்டியாகும். 5நீதிமான் பொய்ப்பேச்சை வெறுக்கிறான்; துன்மார்க்கனோ வெட்கமும் இலச்சையும் உண்டாக்குகிறான். 6நீதி உத்தமமார்க்கத்தானைத் தற்காக்கும்; துன்மார்க்கமோ பாவியைக்…

  • |

    Day 139 (19-05-2025)

    Scripture Portion: 2 Samuel 19-21 2 சாமுவேல் 19 1இதோ, ராஜா அப்சலோமுக்காக அழுது புலம்புகிறார் என்று யோவாபுக்கு அறிவிக்கப்பட்டது. 2ராஜா தம்முடைய குமாரனுக்காக மனம் நொந்திருக்கிறார் என்று அன்றையதினம் ஜனங்கள் கேள்விப்பட்டார்கள்; அதினிமித்தம் அன்றையதினம் அந்த ஜெயம் ஜனத்திற்கெல்லாம் துக்கமாய் மாறிற்று. 3யுத்தத்தில் முறிந்தோடுகிறதினால் வெட்கப்பட்டுத் திருட்டளவாய் வருகிறவர்கள்போல, ஜனங்கள் அன்றையதினம் திருட்டளவாய்ப் பட்டணத்திற்குள் வந்தார்கள். 4ராஜா தன் முகத்தை மூடிக்கொண்டு, மகா சத்தமாய்: என் மகனாகிய அப்சலோமே, அப்சலோமாகிய என் மகனே, என்…

  • |

    Day 341 (07-12-2025)

    Scripture Portion: Acts 20:1-3, Romans 1-3 அப்போஸ்தலர் 20:1-3 1கலகம் அமர்ந்தபின்பு, பவுல் சீஷரைத் தன்னிடத்திற்கு வரவழைத்து, வினவிக்கொண்டு, மக்கெதோனியாவுக்குப் போகப்புறப்பட்டான். 2அவன் அந்தத் திசைகளிலே சுற்றி நடந்து, சீஷர்களுக்கு வெகுவாய்ப் புத்தி சொல்லி, கிரேக்கு தேசத்திலே சேர்ந்தான். 3அங்கே மூன்றுமாதம் சஞ்சரித்த பின்பு, அவன் கப்பல் ஏறி, சீரியா தேசத்துக்குப்போக மனதாயிருந்தபோது, யூதர்கள் அவனுக்குத் தீமைசெய்யும்படி இரகசியமான யோசனை கொண்டிருந்தபடியால், மக்கெதோனியா தேசத்தின் வழியாய்த் திரும்பிப்போகத் தீர்மானம்பண்ணினான். ரோமர் 1 1இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும், அப்போஸ்தலனாகும்படி…

  • |

    Day 66 (07-03-2025)

    Scripture Portion: Numbers 28-30 எண்ணாகமம் 28 1கர்த்தர் மோசேயை நோக்கி: 2எனக்குச் சுகந்தவாசனையாக, தகனபலிகளுக்கு அடுத்த காணிக்கையையும், அப்பத்தையும், குறித்தகாலத்தில் எனக்குச் செலுத்தும்படிக்குக் கவனமாயிருக்கக்கடவீர்கள் என்று நீ இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிடு. 3மேலும் நீ அவர்களை நோக்கி: நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தவேண்டிய தகனபலி என்னவென்றால்: நித்திய சர்வாங்கதகனபலியாக நாடோறும் ஒருவயதான பழுதற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகளைப் பலியிடவேண்டும். 4காலையில் ஒரு ஆட்டுக்குட்டியையும், மாலையில் ஒரு ஆட்டுக்குட்டியையும் பலியிட்டு, 5போஜனபலியாக ஒரு மரக்காலிலே பத்தில் ஒரு பங்கானதும் இடித்துப் பிழிந்த காற்படி எண்ணெயிலே…

  • 2025ல் வேத வாசிப்பு அட்டவணை (கால வரிசை வாசிப்பு திட்டம்)

    கர்த்தருடைய பெரிதான கிருபையால், அடுத்த வருடத்துக்குள் அடியெடுத்து வைக்க இருக்கிறோம். நமக்கு தெரிந்த எத்தனையோ பேர், இன்று இல்லை. புதிய வருடத்தை காணாமலே சென்று விட்டார்கள். இன்றும் நாம் உயிருடன் இருப்பது கர்த்தருடைய கிருபையே. இந்த புதிய வருடத்தில், வேதத்தை 2025ல் ஒருமுறை வாசித்து முடிக்க ஒரு அட்டவணை வெளியிடுகிறோம். எத்தனையோ வேத வாசிப்பு அட்டவணையை நீங்கள் பார்த்திருக்கலாம். இந்த அட்டவணை அதிலிருந்து கொஞ்சம் வேறுபாடானது. நாம் பார்த்த அட்டவணைகள், வரிசையாக புத்தகங்களின் வரிசையில் இருக்கும். இங்கோ…

2 Comments

  1. ஆபாச படம் பாரு தால், கோபம், ஏரிச்சேல் வருகிறது, என்று புரிந்து கொண்டேன், angea பிசாசு உள்ள அனுமதி கரேம் என்று artheam.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *