|

விடுதலை – 7 Vlad மற்றும் Danielன் வெற்றி

இரு ஊழியர்கள், தங்களுடைய வாழ்வில், porn addictionல் இருந்து எப்படி வெளியே வந்தார்கள் என்ற சாட்சியைப் பார்த்தோம். அவர்கள் வாழ்விலிருந்து நாம் என்ன கற்றுக் கொண்டோம் என்பதை இப்பதிவில் பார்க்கலாம். முக்கியமான விஷயம் என்னவென்றால், இருவருமே ஒரு நல்ல ஜெபிக்கிற வீட்டில் பிறந்தவர்கள்.

Vlad:

Vlad சிறுவனாக இருக்கும்போது, டீன் ஏஜ் உந்துதலால், ஆபாச படத்தை பார்க்க ஆரம்பித்தவர், அதற்கு அடிமையாகி விட்டார். ஒரு ஜெபிக்கிற பெற்றோரின் மகனுக்கு, அதிக வருடங்கள் பாவத்தில் நிலைத்திருக்க முடியாது. vladம் நிறைய முறை மனதில் குத்தப்பட்டு, வெளியே வர முயற்சி செய்தார். ஆனால் அவரால் முடியவில்லை.

ஜெபிக்கிற வீட்டு பிள்ளைக்கு, தினமும் வேதம் படிப்பது பழக்கமான ஒன்று. விளாடுக்கு வேதத்தில் அனேக வெளிப்பாடுகள் கிடைத்தது. கோலியாத்தை மேற்கொள்ள, தாவீது தான் முதலில் சென்றான், சிங்கத்தை மேற்கொள்ள, தாவீது தான் முதலில் சென்றான். எனவே இந்த இரகசிய பாவத்திலிருந்து வெளிவர நான்தான் ஏதோ ஒன்று செய்ய வேண்டும் என விளாட் தெரிந்து கொண்டார். என்ன என்பதுதான் தெரியவில்லை.

முதலில் தன் பாஸ்டரிடம் சென்று, “நான் ஆபாச படத்துக்கு அடிமையாக இருக்கிறேன். என் விடுதலைக்காக ஜெபியுங்கள்” என்று கூறினார். பாஸ்டர் வல்லமையாக ஜெபிக்கும்போது, விடுதலை பெற்றதை உணர்ந்தார். ஆனால் சில நாளில் மீண்டும் பாவத்தில் விழுந்தார். பாஸ்டர் விடுதலைக்காக ஜெபிக்கும்போது, வல்லமையை உணர்ந்து, விடுதலையை உணர்ந்தார் விளாட். ஆனால் அது மட்டுமே அவருக்கு போதுமானதாக இருக்கவில்லை,

அடுத்ததாக உபவாசம் என்னும் ஆயுதத்தை கையிலெடுத்தார் விளாட். 21 நாட்கள் உபவாசமிருந்து, ஆத்துமாவை ஒடுக்கி, விடுதலைக்காக ஜெபித்து, விடுதலை பெற்றதைப் போல உணர்ந்தார். ஆனால் உபவாசம் முடிந்ததும், இவ்வளவு நாட்கள் பார்க்காததுக்கும் சேர்த்து, இரட்டிப்பாக பார்க்க ஆரம்பித்தார். “உபவாச ஜெபத்தில் விடுதலை வருவது உண்மைதான். ஆனால், இந்த இடத்தில், வேறு ஏதோ ஒன்றையும் நான் செய்ய வேண்டியுள்ளது” என்று அறிந்து கொண்டார்.

அதன்பின்னர், தேவன் அவருக்கு வெளிப்படுத்தினார். “நீ ஏதோ ஒன்று செய்ய வேண்டும் என நினைக்கிறாயல்லவா! இந்த பாவத்துக்கு பின்னால் இருப்பது அசுத்த ஆவிகள். நீ அந்த பிசாசை முழுமையாக துரத்த வேண்டும்” என தேவன் வெளிப்படுத்தினார். தேவன் தந்த அதிகாரத்தை கையிலெடுத்து, பிசாசை துரத்தினார் விளாட்.

இன்றைக்கும் ஒவ்வொரு மாதமும், முதல் திங்கள், செவ்வாய், புதனில், 3 நாட்கள் உபவாச ஜெபம் பண்ணுகிறார். Fast Forward – “Accelerate your Spiritual Life Through Fasting” என Telegramல், அவருடன் இணைந்து ஜெபிக்க பலரையும் வழிநடத்திக் கொண்டு இருக்கிறார். www.pastorvlad.org என்ற இணையதளத்தில் இதைப்பற்றி அறிந்து கொள்ளலாம். முழுமையாக பூரண விடுதலை பெற்றுக் கொண்டாலும், ஒவ்வொரு மாதம் ஆரம்பிக்கும்போதும், 3 நாட்கள் அந்த மாதத்துக்காக உபவாச ஜெபம் இருந்து, பலவானை முந்திக் கட்டிக்கொண்டு இருக்கிறார் விளாட்.

Daniel

Daniel எப்போதெல்லாம் மன அழுத்தத்தை உணர்கிறாரோ, அப்போதெல்லாம் porn பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தார். ஒரு ஜெபிக்கிற தாயின் மகனாக, ஜெபிக்கிற மனைவியின் கணவனாக இருந்த Danielக்கு, இந்த அடிமைத்தனத்திலிருந்து வெளிவரவேண்டும் என்ற தாகம் இருந்தது. இரட்சிக்கப்பட்டு, அன்னிய பாஷை பேசும் அவரால், இந்த பாவத்திலிருந்து வெளிவருவது அவ்வளவு சுலபமாக இல்லை. இரட்சிக்கப்பட்ட அவரால், தான் ஒவ்வொரு முறை porn பார்த்து முடித்ததும், தனக்குள் அசுத்த ஆவிகள் நுழைவதை நன்றாக உணர முடிந்தது. ஆனால் விடுதலைதான் பெற்றுக் கொள்ள முடியவில்லை.

தனியே முயற்சித்து வெளிவர முயன்று, தோல்வியடைந்ததால், மனைவியிடம் மனம் விட்டு பேசினார். இணைந்து ஜெபித்தார்கள். விடுதலை பெற்றதைப் போல உணர்ந்தார். ஆனால் மீண்டும் பாவத்தில் விழுந்தார். தன் குடும்பத்தாரில் தனக்காக பாரத்தோடு ஜெபிப்பவர்களை அழைத்து, “நான் ஆபாச படத்துக்கு அடிமையாகிவிட்டேன். உங்கள் ஜெபம் எனக்கு வேண்டும்” என கேட்டார். கண்ணீரோடு உறவினர்கள் ஜெபிக்க, தாகத்தோடு Daniel ஜெபிக்க, கர்த்தர் விடுதலையைக் கொடுத்தார். அந்த அசுத்த ஆவி தன்னை விட்டு வெளியேறுவதை உணர்ந்தார். மனைவியுடன் இணைந்து தண்ணீர் கூட குடிக்காமல் உபவாசமிருந்து, முழு விடுதலை பெற்றார்.

அதோடு நிற்கவில்லை. என்னதான் பூரண விடுதலை பெற்றுக் கொண்டாலும், இன்றைக்கும் மாதத்தின் முதல் தேதியில், கணவனும் மனைவியும் இணைந்து, உபவாசமிருந்து, பலவானை முந்திக் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

நாம் என்ன செய்ய வேண்டும்?

இருவருடைய வாழ்க்கையைப் பார்த்தாலே தெரியும். இருவரும் தங்கள் மனைவியுடன் இணைந்து ஜெபித்தார்கள். உபவாசமிருந்து ஜெபித்தார்கள். பிறரிடம் ஜெபிக்க கூறினார்கள். எல்லாம் நடந்தாலும், முழுமையான வெற்றி என்பது அசுத்த ஆவி வெளியேறியபோது தான் கிடைத்தது. அப்படியானால், நாமும் நம் கண்ணால் அசுத்தஆவி வெளியேறுவதைப் பார்த்தால் மட்டுமே, நாம் விடுதலை பெற்றதாக அர்த்தமா? இல்லவே இல்லை.

அற்புதங்கள் ஒரே போல நடப்பது இல்லை. மத்தேயு 9 : 27-30ல் இரு குருடர்கள் வருகிறார்கள். இயேசு அவர்கள் கண்களை தொட்டு, உங்கள் விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது என்று சொல்லி சுகமாக்கினார். மாற்கு 8 : 22-25 பெத்சாயிதாவில், அவர் தொட்டு குணமாக்கும்படி ஒரு குருடனைக் கொண்டு வருகிறார்கள். அவரோ, அவனுடைய கண்களில் உமிழ்ந்து, சுகப்படுத்தினார். யோவான் 9: 1-7ல் பிறவிக்குருடனைக் கொண்டு வருகிறார்கள். அவனுக்கு, தரையில் உமிழ்ந்து, மண்ணோடு கலந்து, சேற்றை கண்களில் பூசி, சீலோவாம் குளத்தில் கழுவச் சொன்னார். மூவருக்கும் நடந்தது ஒரே அற்புதம்தான். ஆனால் இயேசு சுகமாக்கிய ஸ்டைல் வேறு.

“இயேசு என் பாவத்தை சுமந்து விட்டார். இப்போது நான் நீதிமான்” என்பது போன்ற சில சத்தியங்களை நன்றாக மனதில் பதித்து, தேவன் நமக்குக் கொடுத்த அதிகாரத்தை உபயோகித்து, நம்மிடமிருந்து நாமே பிசாசை வெளியேற்றி விடலாம். அதற்கு நமக்கு தேவையானது கர்த்தருடைய வசனம். எவ்வளவு அதிகமாக கர்த்தருடைய வசனத்தை வாசிக்கிறோமோ, அவ்வளவு பிசாசு நம்மை விட்டு ஓடிப்போவான்.

Vlad, Daniel இருவருமே விடுதலை பெற்றுக்கொண்டார்கள். ஆனால் இன்றும் ஏன் மாத துவக்கத்தில் உபவாசமிருந்து ஜெபிக்கிறார்கள்? அப்படியானால் நிரந்தர விடுதலை porn Addictionக்கு கிடையாதா? நிச்சயமாக அவர்கள் விடுதலை பெற்றுக் கொண்டார்கள். பின் ஏன் இந்த உபவாசம்?

பிசாசுக்கு இப்போது வல்லமை இல்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவு, பிசாசு வஞ்சிப்பவன், ஏமாற்றுக்காரன் என்பதும் உண்மை. சிறிதாக கோபம் என்னும் கதவை திறந்தால் போதும், அந்த கதவுக்குள் ஆத்திரம், முணுமுணுப்பு என்று பல பிசாசுகளை உள்ளே அனுப்பும் தந்திரமுள்ள அவன், ஆபாச படத்தின் அடிமைத்தனம் என்னும் பிசாசையும் அனுப்புவது சுலபமான விஷயம்தானே. அதனால்தான் ஒவ்வொரு மாதமும், அவனை முந்திக் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள் ஊழியர்கள்.

இன்றைக்கு பல விஷயங்களில், ஊழியர்கள் தவறுகிறார்கள் என நாம் எவ்வளவோ அவர்களைப் பற்றி பேசுகிறோம். ஆனால், தவறு செய்த அவர்கள், அந்தக் கதவை ஜெபத்தால் மூடிவிட்டு, மறுபடியும் ஆண்டவரோடு இணைந்து விடுவார்கள். ஆனால் நாமோ, அவர்களைப் பற்றி பேசி பேசி, பல கதவுகளை பிசாசுக்கு திறந்து வைத்துக் கொண்டிருப்போம். வெறும் ஊழியர்கள் மட்டுமல்ல, யாரோ ஒருவரைப் பற்றி நாம் கசப்பாக பேசும்போதே, நம் வாழ்வில் பிசாசுக்கு கதவுகளை திறக்கிறோம் என்பதை மறக்கக் கூடாது. முடிந்தவரையில் பிறரைப் பற்றி பேசாமலிருப்பதே நமக்கு நல்லது.

சில பதிவுகள், ஆபாச பட அடிமைத்தனத்திலிருந்து எப்படி வெளிவருவது என்று பார்க்க இருக்கிறோம். பின்னர், சில முக்கியமான சத்தியங்கள் (நான் எப்படி நீதிமான் ஆனேன்?) பார்க்க இருக்கிறோம். வெற்றி தொலைவில் அல்ல. நம் கையிலிருக்கும் வேதத்தை அனுதினமும் எடுத்து படித்தாலே, வெற்றி கிடைத்து விடும். தொடர்ந்து இணைந்திருங்கள்.

Similar Posts

  • |

    Day 21 (21-01-2025)

    Scripture Portion: Genesis 27-29 ஆதியாகமம் 27 1ஈசாக்கு முதிர்வயதானதினால் அவன் கண்கள் இருளடைந்து பார்வையற்றுப் போனபோது, அவன் தன் மூத்த குமாரனாகிய ஏசாவை அழைத்து, என் மகனே என்றான்; அவன், இதோ, இருக்கிறேன் என்றான். 2அப்பொழுது அவன்: நான் முதிர்வயதானேன், என் மரணம் இன்ன நாளில் என்று அறியேன். 3ஆகையால், நீ உன் ஆயுதங்களாகிய உன் அம்பறாத்தூணியையும் உன் வில்லையும் எடுத்துக்கொண்டு வனத்துக்குப்போய், எனக்காக வேட்டையாடி, 4அதை எனக்குப் பிரியமாயிருக்கிற ருசியுள்ள பதார்த்தங்களாகச் சமைத்து, நான்…

  • |

    Day 68 (09-03-2025)

    Scripture Portion: Numbers 33-34 எண்ணாகமம் 33 1மோசே ஆரோன் என்பவர்களுடைய கையின்கீழ்த் தங்கள்தங்கள் சேனைகளின்படியே எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேல் புத்திரருடைய பிரயாணங்களின் விபரம்: 2மோசே தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியே அவர்கள் புறப்பட்ட பிரகாரமாக அவர்களுடைய பிரயாணங்களை எழுதினான்; அவர்கள் ஒவ்வொரு இடங்களிலிருந்து புறப்பட்டுப்பண்ணின பிரயாணங்களாவன: 3முதலாம் மாதத்தின் பதினைந்தாம் தேதியிலே அவர்கள் ராமசேசை விட்டுப் புறப்பட்டார்கள்; பஸ்காவுக்கு மறுநாளிலே, எகிப்தியர் எல்லாரும் பார்க்க, இஸ்ரவேல் புத்திரர் பெலத்தகையுடன் புறப்பட்டார்கள். 4அப்பொழுது எகிப்தியர் கர்த்தர் தங்களுக்குள்ளே சங்கரித்த தலைச்சன் பிள்ளைகளையெல்லாம் அடக்கம்பண்ணினார்கள்; அவர்கள்…

  • |

    Day 150 (30-05-2025)

    Scripture Portion: Psalm 119:1-88 சங்கீதம் 119 கர்த்தரின் கட்டளை 1 கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தமமார்க்கத்தார் பாக்கியவான்கள். 2அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு, அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள். 3அவர்கள் அநியாயம் செய்வதில்லை; அவருடைய வழிகளில் நடக்கிறார்கள். 4உமது கட்டளைகளை நாங்கள் கருத்தாய்க் கைக்கொள்ளும்படி நீர் கற்பித்தீர். 5உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படி, என் நடைகள் ஸ்திரப்பட்டால் நலமாயிருக்கும். 6நான் உம்முடைய கற்பனைகளையெல்லாம் கண்ணோக்கும்போது, வெட்கப்பட்டுப்போவதில்லை. 7உம்முடைய நீதிநியாயங்களை நான் கற்றுக்கொள்ளும்போது, செம்மையான இருதயத்தால் உம்மைத் துதிப்பேன். 8உமது பிரமாணங்களைக்…

  • |

    விடுதலை-2 (பாஸ்டர்.விளாட் அவர்களின் வாழ்க்கை)

    பாஸ்டர்.விளாட் அவர்களின் வாழ்க்கை இந்த பதிவில், ஏற்கனவே இந்த பாவத்தில் மூழ்கி, மீண்டு வந்த பாஸ்டர்.விளாட் (Pastor.Vlad) அவர்கள் அனுபவத்தை பார்க்கலாம். “இது ஆபாச படம் பார்ப்பவர்களுக்கு தானே, எனக்கு இல்லையே” என்று தயவுசெய்து எண்ண வேண்டாம். யாரோ ஒருவருக்கு அறிவுரை சொல்லும் சூழல் வந்தால் உபயோகப்படும். நமது ஆவிக்குரிய வளர்ச்சிக்கும் உதவும் என்பதில் சந்தேகமில்லை. விளாட் உக்ரைனில் பிறந்தவர். நல்ல தேவ பக்தியான குடும்பத்தில் பிறந்தவர். அவரது வீட்டுக்குள் நல்ல அழகான அன்பான குடும்ப வாழ்க்கை…

  • இஸ்ரேல்-8 (நிம்ரோத்)

    நிம்ரோத் பூமியில் இராட்சதர்கள் பெருகி, மனிதர்களை வாழ விடாமல் செய்ததாலும், பூமியில் பாவம் பெருகி விட்டதாலும், தேவன் மனிதர்களை அழிக்க முடிவு செய்தார். ஆனாலும் பரிசுத்த வித்து இருந்த நோவா மற்றும் அவரது 3 மகன், 3 மருமகள், மனைவி என்று 8 பேரை பேழையில் வைத்து பாதுகாத்தார் என்று பார்த்தோம். நோவாவுடைய மகனான காம் ஓரினச்சேர்க்கை பாவத்தில் ஈடுபட்டதால், தேவன் ஆசீர்வதித்த பூமியில் சாபத்தை கொண்டு வந்தார் நோவா.  நோவா சபித்த காமுடைய குமாரன் தான்…

  • |

    Day 82 (23-03-2025)

    Scripture Portion: Joshua 1-4 யோசுவா 1 1கர்த்தருடைய தாசனாகிய மோசே மரித்தபின்பு, கர்த்தர் மோசேயின் ஊழியக்காரனான நூனின் குமாரன் யோசுவாவை நோக்கி: 2என் தாசனாகிய மோசே மரித்துப் போனான்; இப்பொழுது நீயும் இந்த ஜனங்கள் எல்லாரும் எழுந்து, இந்த யோர்தானைக் கடந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு நான் கொடுக்கும் தேசத்துக்குப் போங்கள். 3நான் மோசேக்குச் சொன்னபடி உங்கள் காலடி மிதிக்கும் எவ்விடத்தையும் உங்களுக்குக் கொடுத்தேன். 4வனாந்தரமும் இந்த லீபனோனும் தொடங்கி ஐபிராத்து நதியான பெரிய நதிமட்டுமுள்ள ஏத்தியரின் தேசம் அனைத்தும், சூரியன்…

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *