அறிவியல் கூறுவது என்ன?

சில ஊழியர்களின் வாழ்க்கையை வைத்து, “ஆபாச படம் பார்ப்பது பாவம். அதன் பின்னாலிருப்பது, அசுத்த ஆவிகள். அதை நாம் துரத்த வேண்டுமென பார்த்தோம். இப்போது அறிவியல் என்ன சொல்கிறது என பார்க்கலாம்.

மனிதர்கள் சந்தோஷமாக இருப்பதற்கு காரணம், டோபமைன் என்னும் ஹார்மோன் தான். இந்த ஹார்மோன் சரியான அளவில் இருக்க வேண்டும். இந்த ஹார்மோன் அளவு குறைந்தால், மனச்சோர்வு, நம்பிக்கையின்மை, கவலை அதிகரிக்கும். ஒருவேளை இந்த ஹார்மோன் அளவு அதிகரித்தால், கோபம் போட்டி பொறாமை அதிகரிக்கும். இந்த டோபமைன் ஹார்மோன் சரியான அளவில் இருந்தால், மனிதன் உற்சாகமாக மகிழ்ச்சியாக இருப்பான்.

Mood: Dopamine is known as the “feel-good” hormone because it gives you a sense of pleasure and motivation.

Addiction: Dopamine can create a good feeling after you do something enjoyable, which can make you want to do it again.

Dopamine release: Pornography can trigger a higher release of dopamine than sex. The brain interprets pornography as valuable and essential for survival, which activates biological processes to maintain it. 

Cravings: When dopamine is triggered repeatedly, it can lead to cravings. 

Sexual dysfunction: Research suggests that excessive or long-term pornography use can lead to sexual dysfunction, such as erectile dysfunction.

ஒரு மனிதனுக்கு, உடலுறவு கொள்ளும்போது சுரக்கும் டோபமைன் அளவைவிட, அம்மனிதன் porn பார்க்கும்போது சுரக்கும் அளவு அதிகமாக இருக்கும். “இதுதான் சந்தோஷம்” என அவன் மூளையில் பதிவு செய்யப்பட்ட கருத்துக்கள் மாறி, “உடலுறவை விட porn தான் மகிழ்ச்சியானது” என மூளையில் பதிவு செய்யப்பட்டு விடும். அதன்பின்னர் அவன் வாழ்க்கையில் உடலுறவு மகிழ்ச்சியானதாக இருக்காது. இதுதான் அறிவியல் சொல்லும் கருத்து.

கொஞ்சம் சிந்தித்து பார்க்கலாம். ஒரு 20 நிமிட porn வீடியோ எடுப்பதற்கு, 3 மணி நேரத்துக்கும் மேலாக செலவிடுவார்களாம். ஆனால் மனித மூளை, அந்த 20 நிமிடத்தில் உள்ளதை மட்டுமே பார்த்து, இதுதான் இன்பம் என மூளை தன்னுள் பதிவு செய்துவிடும். எந்த ஒரு ஆணும், அல்லது எந்த ஒரு பெண்ணும் அந்த 20 நிமிட வீடியோவைக் கூட, முழுவதுமாக பார்க்க மாட்டார்களாம். முதலில் வருகிற காட்சிகளை ஸ்கிப் செய்துவிட்டு, கடைசியில் வருகிற காட்சிகளை மட்டும்தான் பார்த்து இரசிப்பார்களாம். இதுதான் டோபமைன் செய்கிற வேலை. டோபமைன் நம்மை அடிமைப்படுத்தி விடும் ஒரு மோசமான ஹார்மோன். ஏதோ ஒரு காரியத்தை, மூளையில் பதிவுசெய்து விட்டு, அந்த இன்பத்தை அனுபவிக்க மீண்டும் மீண்டும் நம்மைத் தூண்டும். அந்த டோபமைனிடம் சிக்கியவர்கள் தான், ஆபாசபட அடிமைத்தனத்தில் விழுந்தவர்கள்.

தேவன் ஆண்களுக்கு, வித்தைக் கடத்தும் பொறுப்பை கொடுத்திருக்கிறார். பெண்களுக்கு, பத்திரமாக சுமந்து குழந்தை பெற்றுக்கொள்வதை கொடுத்திருக்கிறார். எனவே, ஆண்களைப் பொறுத்தவரையில், அந்த வித்தை வெளியேற்றுவதில்தான் கவனமாக இருப்பர். அதில்தான் அவர்கள் சந்தோஷமும் இருக்கிறது. ஆனால் பெண்கள் கருவை சுமப்பவர்கள். எனவே அவர்கள் உணர்ச்சி பூர்வமானவர்கள். அவர்களுக்கு உறவில் உணர்வு தேவைப்படும். அதாவது பெண்கள் உறவில் அன்பையும், ஆண்கள் உறவில் மரியாதையையும் எதிர்பார்ப்பர். இந்த இருவரும் கூடும்போது, இருவருமே சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காக தேவன் கொடுத்ததுதான், தாம்பத்திய உறவு.

இப்படியிருக்க, ஆண்கள், தங்கள் வாழ்க்கைத்துணையிடம் காதலைக் காண்பிக்க தடையாக இருப்பதுதான் porn. பெண்கள் தங்கள் கணவரை மதிக்க தடையாக இருப்பது porn. இந்த porn addictionல் இருந்து நாம் வெளிவர வேண்டும்.

“ஓ… என் மூளையில் program செய்யப்பட்டு விட்டது. இனி என்னால் வெளிவர முடியாது” என நினைக்கிறீர்களா? ஒன்றை நினைவில் வையுங்கள். அந்த மூளையைப் படைத்தவர் நம்முடன் இருக்கிறார். நம் மூளையில் இருக்கும் தேவையற்ற காரியங்களை தூக்கிப் போட வல்லவர் அவர். உலகத்தில் இருப்பவனிலும் நம்முடன் இருக்கிறவர் பெரியவர். அவரால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை.

என்ன செய்தால் விடுதலை பெற முடியும்? தேவனோடு உறவிலிருந்தால் விடுதலை தான். நாம் எவ்வளவு ஜெபம் செய்தாலும், நமக்காக ஒருவர் எவ்வளவு பாரத்தோடு ஜெபித்தாலும், பெற்ற விடுதலையை நாம் அப்படியே தக்க வைத்துக்கொள்ள வேண்டுமானால், தேவனோடு உறவில் இருக்க வேண்டும். தேவனோடு உறவு கொள்ள என்ன செய்ய வேண்டும்? பெரிதாக ஒன்றும் செய்ய தேவையில்லை. அவர் பேச நேரம் கொடுக்க வேண்டும். அவ்வளவு தான்.

பொதுவாக நமக்கு ஜெப நேரம் நிச்சயமாக இருக்கும். ஒருவேளை அது, ஒரு மணி நேரமாக இருக்கலாம், அல்லது வெறும் ஐந்து நிமிடமாக இருக்கலாம். ஆனால் ஏதோ ஒரு நேரத்தை “ஜெப நேரம்” என வைத்திருக்கிறோம். நல்லது. அந்த நிமிடத்தில் யார் பேசுகிறார்கள் என்பது மிக முக்கியம். நம்முடைய ஜெப நேரங்களில், நாம் மட்டுமே பேசிக்கொண்டு இருக்கிறோம். அதாவது one way communication. அவரைப் புகழ்வது என்றாலும் சரி, நம் விண்ணப்பத்தை அவரிடம் சொல்வது என்றாலும் சரி. நாம் மட்டும்தான் பேசுவோம். தேவனுக்கு பேச நேரம் கொடுக்க மாட்டோம். சரி, ஜெப நேரத்தில் நேரம் கொடுக்கவில்லை. வேதம் வாசிக்கும்போது, அதன்மூலமாகவாது நம்மிடம் பேசலாம் என தேவன் காத்திருக்க, நாம் அதையும் கடமைக்கு என வாசித்து, மூடி வைத்து விடுகிறோம். நம்மிடம் பேச, ராஜாதி ராஜா காத்திருக்கிறார் என்பதை யோசிக்கவே மாட்டோம். அதனால்தான் தேவனால் நம்மோடு பேச முடியவில்லை.

ஒரு காரியம் செய்யலாம். இனி ஜெபிக்கும்போது, “நீங்க பேசுங்க அப்பா” என அவருக்கு கொஞ்ச நேரம் ஒதுக்கி காத்திருக்கலாம். உடனடியாக அந்த நாளே அவர் பேசுவார் என்பது கிடையாது. ஆனால் நிலையாக, அந்த நேரத்தில் நாம் அவருக்காக காத்திருந்தால், ஒரு நாள் நிச்சயமாக தேவன், அவருடைய மெல்லிய சத்தத்தால் நம்முடன் பேசுவார். ஏனென்றால், அந்த நேரத்தை நாம் ஒதுக்குவது அவருக்காக. அது அவருடைய நேரம். நிச்சயமாக ஒருநாள் பேசுவார்.

வேதம் படிப்பது வேறு. வேதம் தியானிப்பது வேறு. இரண்டுக்கும் நேரம் ஒதுக்க வேண்டும். படிப்பது (வாசிப்பது) என்பது, நாம் வேகமாக வாசித்து செல்வது. சில வருடங்களுக்கு முன் எனக்கு ஒரு பழக்கம் இருந்தது. ஒரு நாளுக்கு வேதத்தில் ஒரு புத்தகம் வாசிப்பேன். அதாவது, மத்தேயு புத்தகம் எடுத்துக்கொண்டால், ஒரே நாளில் அந்த புத்தகம் முழுவதும் படிப்பேன். ஒரே நாளில் முழுமையாக படிக்கும்போது, “தேவனுடைய ராஜ்யம்” என்ற வார்த்தை என்னுடன் இடைபட்டது. அதன்பின் அதைக் குறித்து தியானிக்க ஆரம்பித்தேன். இப்படி ஒவ்வொரு புத்தகத்தையும், ஒரே நாளில் படிப்பதும், அதன்பின் தேவன் கற்றுக்கொடுக்க நினைக்கும் காரியங்களை தியானிப்பதும் வழக்கமாக இருந்தது. அப்படி கற்றுக்கொண்ட காரியங்கள் ஏராளம். வேதம் வாசிப்பதும் நம் வாழ்வில் இருக்க வேண்டும், தியானிப்பதும் நம் வாழ்வில் இருக்க வேண்டும். நிச்சயமாக தேவன் நம்முடன் பேசுவார்.

உபவாசம் என்பது மிக மிக முக்கியமானது. ஏற்கனவே நாம் பார்த்த இரு ஊழியர்களான, Pastor.Vlad, Pastor.Daniel M Ross இருவருமே, மாத துவக்கத்தில், உபவாச ஜெபம் செய்து, பலவானை முந்திக் கட்டுகிறார்கள். ஜெபம், வேதவாசிப்பு எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் உபவாசமிருந்து ஜெபிப்பது. நமது சோர்ந்து போயிருக்கிற ஆவி உற்சாகமாக வேண்டுமானால், உபவாசம் அவசியம். தேவனோடு நெருங்க உபவாசம் அவசியம். எனவே உபவாச ஜெபத்தை தொடர்ந்து செய்யுங்கள்.

சில முக்கியமான சத்தியங்களை அறிந்து கொள்ள வேண்டும். அதாவது, “நான் கிறிஸ்துவுக்குள் இருக்கிறேன்” என்பதை உணர வேண்டும். கிறிஸ்துவுக்குள் இருக்கிறேன் என்றால், நமக்கு சில காரியங்கள் ஏற்கனவே கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதை நாம் அறியாமல் இருக்கிறோம். “கிறிஸ்துவுக்குள்” என்ற சத்தியத்தை தனியாக நாம் பார்க்க இருக்கிறோம். எனவே “நான் கிறிஸ்துவுக்குள் இருக்கிறேன்” என்பது போன்ற சத்தியங்களை அறிந்து கொள்ள முயற்சியுங்கள். விடுதலை நம்மைத் தேடி வரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *