ஏன் என்னால் வேதம் வாசிக்க முடியவில்லை?
நிறைய நேரங்களில், நாம் சோர்ந்து போவதற்கான முக்கிய காரணமே, “அய்யயோ, என்னால் வேதம் வாசிக்கவே முடியவில்லையே” என்ற குற்ற உணர்ச்சி தான். இது நமக்கு பெரிய மன அழுத்தத்தைக் கொடுக்கிறது. பெரிய பாவியாக நம்மை சித்தரிக்கிறது. தேவனிடமிருந்து விலகி விட்டேன் என்பதன் பெரிய அடையாளமாக நாம் நினைப்பதே, “நம்மால் ஜெபிக்க முடியாது, வேதம் வாசிக்க முடியாது” என்ற நிலைதான்.
யாருக்கெல்லாம் இந்த அனுபவம் இருக்கிறது, அதாவது சில நாட்கள் தொடர்ச்சியாக வேதம் வாசிக்காமல் இருந்திருக்கிறீர்கள். வேதம் வாசிக்க நினைத்தாலே Boring feel வரும். ஏசாயா, எரேமியா போன்ற புத்தகங்கள், வெளிப்படுத்தின விசேஷம் இதெல்லாம் வாசிக்க நினைத்தாலே, “புரியவா போகுது” என்ற எரிச்சல் வரும், வேதம் வாசிக்க யோசித்தால் நேரமில்லாமல் இருக்கும். நிறைய பெயர்கள், அவர்கள் சந்ததிகள், அவர்களின் எண்ணிக்கை என்று வேதம் வாசிக்கவே வெறுமையாக உணர்வோம். இப்படி போராடி இருக்கிறீர்களா? ரொம்ப யோசிக்காதீர்கள்… நாம் எல்லாருமே ஒரே படகில் தான் பயணம் செய்கிறோம். கிறிஸ்தவர்கள் பலருடைய வாழ்க்கை இப்படித்தான் உள்ளது.
முதலாவது புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவெனில், வேத வாசிப்பு என்பது ஒரு சடங்கு (ritual) கிடையாது. வேதம் அதிகமாக வாசித்து, அதிலிருந்து அறிவை பெற்றுக்கொண்டால், தேவன் நமக்கு அவார்டு கொடுக்கப்போவது இல்லை. சரியாகப் புரிந்து கொள்ளுங்கள். (வேதம் வாசித்து அதிலிருந்து தேவன் எப்படிப்பட்டவர் என்பதை புரிய முடியும். ஆனால் அது வெறும் அறிவு மட்டுமே! தேவனோடு உறவில் இருந்து அவரைப் பற்றி தெரிந்து கொள்வது மட்டுமே உன்னதமானது. எடுத்துக்காட்டாக, நமது முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்களைப் பற்றி, நான் படித்து தெரிந்து கொள்வது ஒரு அறிவு என்றால், அவரோடு உறவிலிருந்து அவரது மனைவி அவரை அறிந்து கொள்வது உன்னதமானது)
சரி, ஏன் நம்மால் வேதம் வாசிக்க முடியவில்லை? முதலாவது காரணம், நாம் நமது எண்ணங்களை (Thoughts) நம்புகிறோம். அதாவது, நமது சிந்தை சொல்கிறது,
- வேதம் வாசிக்க நேரமில்லை
- அது எனக்கு relevant ஆக இல்லை.
- தீர்க்கதரிசன புத்தகங்கள் வாசித்தால் என்னால் புரிந்து கொள்ள முடியாது
- Boring ஆக இருக்கும்
- தூக்கம் வரும்
- வேதத்தை கையில் எடுக்கவே மனமில்லை
இதெல்லாம் காரணம் என்ன தெரியுமா? நம் சிந்தையில், இந்த காரியங்கள் பதிந்து விட்டது. நமது சிந்தை சொல்வதை நாம் கேட்கிறோம். நாம் வேதத்தை மூடி விடுகிறோம். யோசித்து பாருங்கள், You Tube, Instagram, Face book என்று Social Mediaவில் பல மணி நேரம் செலவு செய்கிறோம். கேட்டால் “படுக்கையில் இருந்து phone பார்த்துக்கொண்டு இருக்கிறோம், தூங்குவதற்கு முன்னர் சின்ன relaxation” என்று யோசிக்கிறோம். ஆனால் அந்த நேரத்தில் ஏன் Audio Bible ஓட விட்டு, நம்மால் வசனங்களை கேட்க முடியவில்லை. ஏனெனில் நமது சிந்தையில் பதிந்து விட்டது, Bible வாசிப்பது ரொம்ப Boring என்று.
How do you approach the Bible? நாம் வேதத்தை எப்படி அணுகுகிறோம் என்பது மிக முக்கியம். அதை ஒரு புத்தகம் என்று நினைத்தால், ஆம், அது Boring தான். அப்படியானால் எப்படி approach செய்ய வேண்டும்? “Bible பற்றி Bible என்ன சொல்கிறது?” என்று தெரிந்து கொண்டு, அப்படி approach செய்ய வேண்டும்.
யோவான் 1:14 அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.
Tamil Indian Revised Version அந்த வார்த்தை சரீரமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராக, நம்மிடையே வாழ்ந்தார்; அவருடைய மகிமையைப் பார்த்தோம்; அது பிதாவிற்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.
Tamil Easy Reading Version வார்த்தை ஒரு மனிதனாகி நம்மிடையே வாழ்ந்தார். அவரது மகிமையை நாம் பார்த்தோம். அந்த மகிமை தந்தையின் ஒரே மகனுக்கு உரியது. அவ்வார்த்தை கிருபையும், உண்மையும் நிறைந்ததாயிற்று.
The Word became flesh and made his dwelling among us. We have seen his glory, the glory of the one and only Son, who came from the Father, full of grace and truth.
இங்கு அந்த வார்த்தை (Word) அதாவது பைபிள், மாம்சமாகி (became flesh) சரீரமாகி, நமக்குள் வாழ்ந்தார். அவர் கிருபை நிறைந்தவர். சத்தியம் நிறைந்தவர் என்று வேதம் சொல்கிறது. யார் அந்த அவர்? நமக்கு தெரிந்தபடி, அவர் இயேசு தான்.
எப்போதெல்லாம் வேதத்தை பார்க்கிறோமோ, அப்போது எல்லாம் நமக்கு தெரிய வேண்டியது, நமது சிந்தையில் வர வேண்டியது, “நான் பார்ப்பது இயேசுவை” என்று. நான் அந்த வேதத்தை திறந்தால், நான் இயேசுவை experience செய்யப் போகிறேன். இயேசுவை சந்திக்கப் போகிறேன். இயேசுவைப் பற்றிக் கேட்கப் போகிறேன். இயேசுவைப் பற்றி வாசிக்கப் போகிறேன். இதை நம் சிந்தையில் பதிய வைத்தால் போதும். வேதத்தை திறக்கும்போதெல்லாம் SUPERNATURAL காரியங்கள் நடக்க ஆரம்பிக்கும்.
யோவான் 5:39 வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே.
Tamil Easy Reading Version நீங்கள் வேதவாக்கியங்களைக் கவனமாகப் படித்துப் பாருங்கள். அவை நித்திய ஜீவனை உங்களுக்குக் கொடுக்குமென்று நீங்கள் நினைக்கிறீர்கள். அந்த வாக்கியங்களே என்னைப்பற்றி கூறுகின்றன.
வேதத்தில் உள்ள ஒவ்வொரு வரியும், இயேசுவைக் குறிக்கிறது என்று யோசித்து, நேசித்து வேதம் வாசிக்க வேண்டும். இயேசுவே கூறி இருக்கிறார், ஒவ்வொரு வசனமும் என்னைக் குறித்து கூறுகின்றன என்று. நாம் ஒரு 5 வசனம் வாசித்தால் கூட போதும், அதிலிருந்து இயேசு பேசுவார்.
வேதத்தை நாம் திறக்கும்போதெல்லாம், நாம் இயேசுவுக்கு ஒரு INVITATION கொடுக்கிறோம், அவருடன் உறவாட நாம் விரும்புகிறோம் என்பதை அவருக்கு தெரியப்படுத்துகிறோம். பைபிள் என்பது வெறும் மத புத்தகமோ, அல்லது சரித்திர புத்தகமோ அல்ல. பைபிள் என்பது Jesus. இயேசு supernatural written format ஆக நம் கையில் இருக்கிறார். இதை நாம் உணர்ந்து கொண்டால் போதும். பைபிள் ஒரு நாளும் Boring ஆக இருக்காது. ஒருவருடன் மிகவும் நெருக்கமாக இருக்க வேண்டுமானால், நாம் தினமும் அவருடன் பேச வேண்டும்.
ஏன் நாம் வேதத்தை வாசிக்கும்போது, Boring ஆக feel பண்ணுகிறோம். வேதம் வாசிக்காமல் மிகவும் அசட்டையாக இருக்கிறோம். ஏதோ ஒன்று என்னைத் தடுக்கிறது. சரியாக சொல்ல வேண்டுமானால், சாத்தான் என்னைத் தடுத்துக்கொண்டு இருக்கிறான். என்னால் Hotstar, Netflix, Insta, You Tube, Kdrama, Video Games இதெல்லாம் மணிக்கணக்கில் போரடிக்காமல் பார்க்க முடியும். ஆனால் பைபிள் மட்டும் படிக்க முடியவில்லை.
ஏன் தெரியுமா? நாம், “இயேசு தான் பைபிள்” என்பதை புரிந்து படிக்கும்போது, சாத்தானுடைய பொய்கள் நமக்கு புரிந்து விடும். அவனை எதிர்க்க வேண்டிய ஆயுதம் நமக்கு கிடைத்து விடும். இயேசுவை பிசாசு சோதிக்கும்போது, அவர் வசனத்தை பேசி ஜெயித்தார்.
எபிரெயர் 4:12 தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.
Tamil Easy Reading Version தேவனுடைய வார்த்தையானது எப்பொழுதும் உயிரோடு இருப்பதும், செயல்படுவதுமாகும். அது இரு புறமும் கூரான வாளைவிட மிகவும் கூர்மையானது. அது ஆன்மாவையும், ஆவியையும், எலும்புகளையும், கணுக்களையும் வெட்டிப் பிரிக்கிறது. அது நம் உள்ளான மனதின் எண்ணங்களையும், நம் இதயம் கொண்டுள்ள கருத்துக்களையும் நியாயம் தீர்க்கிறது.
பைபிள் இருபுறமும் கருக்கான பட்டயத்தை விட கூர்மையான பட்டயம் என்று வேதம் சொல்கிறது. வசனம் வைத்து சுலபமாக சாத்தானை ஜெயித்து விடலாம். யோவான் 8:32 சத்தியத்தை அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலை ஆக்கும் என்று சொல்கிறது. வேதத்தை சரியாக புரிந்து வாசித்தால், சுலபமாக விடுதலை அடைவோம். இதெல்லாம் நாம் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காகத்தான், சாத்தான் வேதம் வாசிக்காதபடி நம்மை தடுத்துக் கொண்டு இருக்கிறான்.
கடைசியாக ஒன்றே ஒன்று தான். இயேசு நமக்குள் இருக்கிறார், நம்மை சுற்றிலும் இருக்கிறார், வானங்களில் இருக்கிறார். எல்லாம் சரிதான். இயேசு நம் கைகளில் இருக்கிறார். அந்த வேத புத்தகத்தை நாம் எவ்வளவு அசட்டையாக உபயோகிக்கிறோம் அல்லவா! அது இயேசு. வேத காலத்தில், இயேசு எப்படி மனிதனாக வாழ்ந்தாரோ, அதேபோல, super natural ஆக, நம் கைகளில் இருக்கிறார். அதைப் புரிந்து கொண்டால் போதும். வேதம் வாசிக்க Bore அடிக்காது.
அப்போஸ்தலர்17:27 கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார்; அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே.
தேவன் நம்மை விட்டு தூரம் போகவில்லை. நாம் தடவி கண்டுபிடிக்கும் தூரத்தில் அவர் இருக்கிறார். நம் கைகளில் இருக்கிறார். தொடர்ந்து பார்க்கலாம், நாம் தேவனுக்கு தூரமாக இல்லை என்பதை. இன்று மனதில் பதிய வைக்க வேண்டியது, “இயேசு என் கைகளில் இருக்கிறார். அவரை தினமும் நான் invite செய்வேன்” என்பதே.
Leave a Reply