Scripture Portion: 1 Chronicles 3-5
1 நாளாகமம் 3
1தாவீதுக்கு எப்ரோனிலே பிறந்த குமாரர்: யெஸ்ரெயேல் ஊராளான அகிநோவாமிடத்தில் பிறந்த அம்னோன் முதற்பேறானவன்; கர்மேலின் ஊராளான அபிகாயேலிடத்தில் பிறந்த கீலேயாப் இரண்டாம் குமாரன்.2கேசூரின் ராஜாவாகிய தல்மாயின் குமாரத்தி மாக்காள் பெற்ற அப்சலோம் மூன்றாம் குமாரன்; ஆகீத் பெற்ற அதோனியா நாலாம் குமாரன்.3அபித்தாள் பெற்ற செப்பத்தியா ஐந்தாம் குமாரன்; அவன் பெண்ஜாதியாகிய எக்லாள் பெற்ற இத்ரேயாம் ஆறாம் குமாரன்.4இந்த ஆறு குமாரர் அவனுக்கு எப்ரோனிலே பிறந்தார்கள்; அங்கே ஏழு வருஷமும் ஆறு மாதமும் அரசாண்டான்; எருசலேமிலோ முப்பத்துமூன்று வருஷம் அரசாண்டான்.5எருசலேமில் அவனுக்குப் பிறந்தவர்கள்: அம்மியேலின் குமாரத்தியாகிய பத்சேபாளிடத்தில் சிமீயா, சோபாப், நாத்தான், சாலொமோன் என்னும் நாலுபேரும்,6இப்கார், எலிசாமா, எலிப்பெலேத்,7நோகா, நேபேக், யப்பியா,8எலிசாமா, எலியாதா, எலிபேலேத் என்னும் ஒன்பதுபேருமே.9மறுமனையாட்டிகளின் குமாரரையும் இவர்கள் சகோதரியாகிய தாமாரையும் தவிர, இவர்களெல்லாரும் தாவீதின் குமாரர்.10சாலொமோனின் குமாரன் ரெகொபெயாம்; இவனுடைய குமாரன் அபியா; இவனுடைய குமாரன் ஆசா; இவனுடைய குமாரன் யோசபாத்.11இவனுடைய குமாரன் யோராம்; இவனுடைய குமாரன் அகசியா; இவனுடைய குமாரன் யோவாஸ்.12இவனுடைய குமாரன் அமத்சியா; இவனுடைய குமாரன் அசரியா; இவனுடைய குமாரன் யோதாம்.13இவனுடைய குமாரன் ஆகாஸ்; இவனுடைய குமாரன் எசேக்கியா; இவனுடைய குமாரன் மனாசே.14இவனுடைய குமாரன் ஆமோன்; இவனுடைய குமாரன் யோசியா.15யோசியாவின் குமாரர், முதல் பிறந்த யோகனானும், யோயாக்கீம் என்னும் இரண்டாம் குமாரனும், சிதேக்கியா என்னும் மூன்றாம் குமாரனும், சல்லூம் என்னும் நாலாம் குமாரனுமே.16யோயாக்கீமின் குமாரர், எகொனியா முதலானவர்கள்; இவனுக்கு மகனானவன் சிதேக்கியா.17கட்டுண்ட எகொனியாவின் குமாரர் சலாத்தியேல்,18மல்கீராம், பெதாயா, சேனாசார், யெகமியா, ஒசாமா, நெதபியா என்பவர்கள்.19பெதாயாவின் குமாரர், செருபாபேல், சிமேயி என்பவர்கள்; செருபாபேலின் குமாரர், மெசுல்லாம், அனனியா என்பவர்கள்; இவர்கள் சகோதரி செலோமீத் என்பவள்.20அசூபா, ஒகேல், பெரகியா, அசதியா, ஊசாபேசேத் என்னும் ஐந்துபேருமே.21அனனியாவின் குமாரர், பெலத்தியா, எசாயா என்பவர்கள்; இவனுடைய குமாரன் ரெபாயா; இவனுடைய குமாரன் அர்னான்; இவனுடைய குமாரன் ஒபதியா; இவனுடைய குமாரன் செக்கனியா.22செக்கனியாவின் குமாரர் செமாயா முதலானவர்கள்; செமாயாவின் குமாரர், அத்தூஸ், எகெயால், பாரியா, நெயாரியா, செப்பாத் என்னும் ஆறுபேர்.23நெயாரியாவின் குமாரர், எலியோனாய், எசேக்கியா, அஸ்ரீக்காம் என்னும் மூன்றுபேர்.24எலியோனாயின் குமாரர், ஒதாயா, எலியாசிப், பெலாயா, அக்கூப், யோகனான், தெலாயா, ஆனானி என்னும் ஏழுபேர்.1 நாளாகமம் 4
1யூதாவின் குமாரர், பாரேஸ், எஸ்ரோன், கர்மீ, ஊர், சோபால் என்பவர்கள்.2சோபாலின் குமாரன் ராயா யாகாத்தைப் பெற்றான்; யாகாத் அகுமாயியையும், லாகாதையும் பெற்றான்; சோராத்தியரின் வம்சங்கள் இவைகளே.3ஏதாம் என்னும் மூப்பனின் சந்ததியார், யெஸ்ரெயேல், இஷ்மா, இத்பாஸ் என்பவர்கள்; இவர்களுடைய சகோதரியின் பேர் அத்செலெல்போனி;4கேதோருக்கு மூப்பனான பெனுவெல், உஷாவுக்கு மூப்பனான எசேர் என்பவர்கள்; இவர்கள் பெத்லெகேமுக்கு மூப்பனான எப்ராத்தாவுக்கு முதற்பிறந்த ஊரின் குமாரர்.5தெக்கோவாவுக்கு மூப்பனான அசூருக்கு ஏலாள், நாராள் என்னும் இரண்டு பெண்ஜாதிகள் இருந்தார்கள்.6நாராள் அவனுக்கு அகுசாமையும், எப்பேரையும், தெமனியையும், ஆகாஸ்தாரியையும் பெற்றாள்; நாராளின் குமாரர்கள் இவர்களே.7ஏலாளின் குமாரர், சேரேத், எத்சோகார், எத்னான் என்பவர்கள்.8கோஸ் என்பவன் அனூபையும், சோபேபாகையும், ஆருமின் குமாரனாகிய அகர்கேலின் வம்சங்களையும் பெற்றான்.9யாபேஸ் தன் சகோதரரைப்பார்க்கிலும் கனம் பெற்றவனாயிருந்தான். அவன் தாய்: நான் துக்கத்தோடே அவனைப் பெற்றேன் என்று சொல்லி அவனுக்கு யாபேஸ் என்று பேரிட்டாள்.10யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி: தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என் எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடிருந்து, தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும் என்று வேண்டிக்கொண்டான்; அவன் வேண்டிக்கொண்டதை தேவன் அருளினார்.11சூகாவின் சகோதரனாகிய கேலூப் மேகீரைப் பெற்றான்; இவன் எஸ்தோனின் தகப்பன்.12எஸ்தோன் பெத்ராபாவையும், பசேயாகையும், இர்நாகாஷின் தகப்பனாகிய தெகினாகையும் பெற்றான்; இவர்கள் ரேகாவூர் மனுஷர்.13கேனாசின் குமாரர், ஒத்னியேல், செராயா என்பவர்கள்; ஒத்னியேலின் குமாரரில் ஒருவன் ஆத்தாத்.14மெயோனத்தாய் ஒபிராவைப் பெற்றான்; செராயா கராஷீமன் பள்ளத்தாக்குக்கு மூப்பனாகிய யோவாபைப் பெற்றான்; அவர்கள் தொழிலாளிகளாயிருந்தார்கள்.15எப்புன்னேயின் குமாரனாகிய காலேபின் குமாரர், ஈரு, ஏலா, நாகாம்; ஏலாவின் குமாரரில் ஒருவன் கேனாஸ்.16எகலெலேலின் குமாரர், சீப், சீப்பா, திரியா, அசாரெயேல்.17எஸ்றாவின் குமாரர் யெத்தேர், மேரேத், ஏப்பேர், யாலோன்; மேரேத்தின் பெண்ஜாதி மிரியாமையும், சம்மாயியையும், எஸ்தெமோவா ஊருக்கு மூப்பனான இஸ்பாவையும் பெற்றாள்.18அவன் பெண்ஜாதியாகிய எகுதியாள், கேதோரின் தகப்பனாகிய யாரேதையும், சோக்கோவின் தகப்பனாகிய ஏபேரையும், சனோவாவின் தகப்பனாகிய எக்குத்தியேலையும் பெற்றாள்; மேரேத் விவாகம் பண்ணின பார்வோனின் குமாரத்தியாகிய பித்தியாளின் குமாரர் இவர்களே.19நாகாமின் சகோதரியாகிய ஒதியாவினுடைய பெண்ஜாதியின் குமாரர், கர்மியனாகிய ஆபிகேயிலாவும், மாகாத்தியனாகிய எஸ்தேமோவாவுமே.20ஷீமோனின் குமாரர், அம்னோன், ரின்னா, பென்கானான், தீலோன் என்பவர்கள், இஷியின் குமாரர், சோகேதும் பென்சோகேதுமே.21யூதாவின் குமாரனாகிய சேலாகின் புத்திரர்: லேக்காவூர் மூப்பனான ஏரும், மரேசாவூர் மூப்பனான லாதாகும், மெல்லிய புடவை நெய்த அஸ்பெயா வீட்டு வம்சங்களும்.22யோக்கீமும், கோசேபாவின் மனுஷரும், மோவாபியரை ஆண்ட யோவாஸ், சாராப் என்பவர்களும், யசுபிலெகேமுமே; இவைகள் பூர்வகாலத்தின் செய்திகள்.23இவர்கள் குயவராயிருந்து, நெத்தாயிமிலும் கெதேராவிலும் குடியிருந்தார்கள்; ராஜாவின் வேலையை விசாரிக்கிறதற்கு அங்கே வாசம்பண்ணினார்கள்.24சிமியோனின் குமாரர், நெமுவேல், யாமின், யாரீப், சேரா, சவுல் என்பவர்கள்.25இவன் குமாரன் சல்லூம்; இவன் குமாரன் மிப்சாம்; இவன் குமாரன் மிஸ்மா.26மிஸ்மாவின் குமாரரில் ஒருவன் அம்முவேல்; இவன் குமாரன் சக்கூர்; இவன் குமாரன் சீமேயி.27சீமேயிக்குப் பதினாறு குமாரரும் ஆறு குமாரத்திகளும் இருந்தார்கள்; அவன் சகோதரருக்கு அநேகம் பிள்ளைகள் இருந்ததில்லை; அவர்கள் வம்சமெல்லாம் யூதாவின் புத்திரரைப்போலப் பெருகினதுமில்லை.28அவர்கள் பெயெர்செபாவிலும், மொலாதாவிலும், ஆத்சார்சூவாவிலும்,29பில்லாவிலும், ஏத்சாமிலும், தோலாதிலும்,30பெத்தூவேலிலும், ஒர்மாவிலும், சிக்லாகிலும்,31பெத்மர்காபோத்திலும், ஆத்சார்சூசிமிலும், பெத்பிரியிலும், சாராயிமிலும் குடியிருந்தார்கள்; தாவீது ராஜாவாகுமட்டும் இவைகள் அவர்கள் பட்டணங்களாயிருந்தது.32அவர்களுடைய பேட்டைகள், ஏத்தாம், ஆயின், ரிம்மோன், தோகேன், ஆசான் என்னும் ஐந்து பட்டணங்கள்.33அந்தப் பட்டணங்களைச் சுற்றிலும், பாகால்மட்டுமுள்ள அவர்களுடைய எல்லாப் பேட்டைகளும், அவர்கள் வாசஸ்தலங்களும், அவர்களுடைய வம்ச அட்டவணையும் இவைகளே.34மெசோபாபும், யம்லேகும், அமத்சியாவின் குமாரன் யோஷாவும்,35யோவேலும், ஆசியேலின் மகன் செராயாவுக்குப் பிறந்த யோசிபியாவின் குமாரன் ஏகூவும்,36எலியோனாயும், யாக்கோபாவும், யெசொகாயாவும், அசாயாவும், ஆதியேலும், யெசிமியேலும், பெனாயாவும்,37செமாயா பெற்ற சிம்ரியின் மகன் யெதாயாவுக்குப் பிறந்த அல்லோனின் புத்திரனாகிய சீப்பியின் குமாரன் சீசாவும் என்று,38பேர்பேராய் எழுதியிருக்கிற இவர்கள் தங்கள் வம்சங்களில் பிரபுக்களாயிருந்தார்கள்; இவர்கள் பிதாக்களின் வீட்டார் ஏராளமாய்ப் பரம்பினார்கள்.39தங்கள் ஆடுகளுக்கு மேய்ச்சலைத் தேடும்படிக்கு தேதோரின் எல்லையாகிய பள்ளத்தாக்கின் கீழ்ப்புறமட்டும் போய்,40நல்ல செழிப்பான மேய்ச்சலையும், அமரிக்கையும், சுகமுமுள்ள விஸ்தாரமான தேசத்தையும் கண்டுபிடித்தார்கள்; பூர்வத்திலே காமின் சந்ததியார் அங்கே குடியிருந்தார்கள்.41பேர்பேராய் எழுதியிருக்கிற இவர்கள் யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் நாட்களிலே அங்கே போய், அங்கே கண்டுபிடித்தவர்களின் கூடாரங்களையும் தாபரங்களையும் அழித்து, இந்நாளிலே இருக்கிறதுபோல, அவர்களைச் சங்காரம்பண்ணி, அங்கே தங்கள் ஆடுகளுக்கு மேய்ச்சல் இருந்தபடியினால், அவர்கள் அந்த ஸ்தலத்திலே குடியேறினார்கள்.42சிமியோனின் புத்திரராகிய இவர்களில் ஐந்நூறு மனுஷரும், அவர்கள் தலைமைக்காரராகிய இஷியின் குமாரரான பெலத்தியாவும், நெகரியாவும், ரெப்பாயாவும், ஊசியேலும், சேயீர் மலைதேசத்திற்குப் போய்,43அமலேக்கியரில் தப்பி மீதியாயிருந்தவர்களை மடங்கடித்து, இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி அங்கே குடியேறினார்கள்.
1 நாளாகமம் 5
1ரூபன் இஸ்ரவேலுக்கு முதற்பிறந்த சேஷ்டபுத்திரன்; ஆனாலும் அவன் தன் தகப்பனுடைய மஞ்சத்தைத் தீட்டுப்படுத்தினபடியினால், கோத்திரத்து அட்டவணையிலே அவன் முதற் பிறந்தவனாக எண்ணப்படாமல், அவனுடைய சேஷ்டபுத்திர சுதந்தரம் இஸ்ரவேலின் குமாரனாகிய யோசேப்பின் குமாரருக்குக் கொடுக்கப்பட்டது.2யூதா தன் சகோதரரிலே பலத்ததினால் ராஜாதிபத்தியம் அவன் சந்ததியில் உண்டானது; ஆகிலும் சேஷ்டபுத்திர சுதந்தரம் யோசேப்புடையதாயிற்று.3இஸ்ரவேலின் முதற்பேறான ரூபனின் குமாரன் ஆனோக்கு, பல்லூ, எஸ்ரோன், கர்மீ என்பவர்கள்.4யோவேலின் குமாரரில் ஒருவன் செமாயா; இவன் குமாரன் கோக்; இவன் குமாரன் சிமேய்.5இவன் குமாரன் மீகா; இவன் குமாரன் ராயா; இவன் குமாரன் பாகால்.6இவன் குமாரன் பேரா; ரூபனியரின் பிரபுவான இவனை அசீரியா ராஜாவாகிய தில்காத்பில்நேசர் சிறைபிடித்துப்போனான்.7தங்கள் சந்ததிகளின்படியே தங்கள் வம்ச அட்டவணைகளில் எழுதப்பட்ட அவன் சகோதரரில் தலைவர் ஏயேலும், சகரியாவும்,8யோவேலின் மகனாகிய சேமாவுக்குப் பிறந்த ஆசாசின் குமாரன் பேலாவும்; இவன் சந்ததியார் ஆரோவேரிலும், நேபோமட்டும், பாகால்மெயோன்மட்டும் வாசம்பண்ணினார்கள்.9கிழக்கே ஐபிராத்து நதிதொடங்கி வனாந்தரத்தின் எல்லைமட்டும் அவர்கள் வாசம்பண்ணினார்கள்; அவர்கள் ஆடுமாடுகள் கீலேயாத்தேசத்தில் மிகுதியாயிற்று.10சவுலின் நாட்களில் ஆகாரியரோடு அவர்கள் யுத்தம்பண்ணி, தங்கள் கையால் அவர்கள் விழுந்தபின், அவர்கள் கூடாரங்களிலே கீலேயாத்தின் கீழ்ப்புறமெல்லாம் குடியேறினார்கள்.11காத்தின் புத்திரர் அவர்களுக்கு எதிரே பாசான் தேசத்திலே சல்கா மட்டும் வாசம்பண்ணினார்கள்.12அவர்களில் யோவேல் தலைவனும், சாப்பாம் அவனுக்கு இரண்டாவதுமாயிருந்தான்; யானாயும் சாப்பாத்தும் பாசானில் இருந்தார்கள்.13அவர்கள் பிதாக்களின் வீட்டாராகிய அவர்கள் சகோதரர், மிகாவேல், மெசுல்லாம், சேபா, யோராயி, யாக்கான், சீகா, ஏபேர் என்னும் ஏழு பேர்.14இவர்கள் ஊரிக்குப் பிறந்த அபியேலின் குமாரர்; ஊரி என்பவன் யெரொவாவுக்கும், யெரொவா கீலேயாத்துக்கும், கீலேயாத் மிகாவேலுக்கும், மிகாவேல் எசிசாயிக்கும், எசிசாயி யாதோவுக்கும், யாதோ பூசுக்கும் குமாரராயிருந்தவர்கள்.15கூனியின் குமாரனாகிய அப்தியேலின் மகன் அகி, அவர்கள் பிதாக்களின் வீட்டுத் தலைவனாயிருந்தான்.16அவர்கள் கீலேயாத்திலிருக்கிற பாசானிலும், அதின் வெளிநிலங்களிலும், சாரோனின் எல்லாப் பேட்டைகளிலும் அவைகளின் கடையாந்தரங்கள் மட்டும் வாசம்பண்ணினார்கள்.17இவர்களெல்லாரும் யூதாவின் ராஜாவாகிய யோதாமின் நாட்களிலும், இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாமின் நாட்களிலும் தங்கள் வம்சத்து அட்டவணைப்படி தொகை ஏற்றப்பட்டார்கள்.18ரூபன் புத்திரரிலும், காத்தியரிலும், மனாசேயின் பாதிக்கோத்திரத்தாரிலும் கேடகமும் பட்டயமும் எடுத்து, வில்லெய்து, யுத்தத்திற்குப் பழகி, படைக்குப் போகத்தக்க சேவகர் நாற்பத்துநாலாயிரத்து எழுநூற்று அறுபதுபேராயிருந்தார்கள்.19அவர்கள் ஆகாரியரோடும், யெத்தூர் நாப்பீஸ் நோதாப் என்பவர்களோடும் யுத்தம்பண்ணுகிறபோது,20அவர்களோடே எதிர்க்கத் துணைபெற்றபடியினால், ஆகாரியரும் இவர்களோடிருக்கிற யாவரும் அவர்கள் கையில் ஒப்புக்கொடுக்கப்பட்டார்கள்; அவர்கள் யுத்தத்திலே தேவனை நோக்கிக் கூப்பிட்டு, அவர்மேல் நம்பிக்கை வைத்தபடியினால் அவர்கள் விண்ணப்பத்தைக் கேட்டருளினார்.21அவர்கள் இவர்களுக்கு இருந்த மிருகஜீவன்களாகிய ஐம்பதினாயிரம் ஒட்டகங்களையும், இரண்டு லட்சத்து ஐம்பதினாயிரம் ஆடுகளையும், இரண்டாயிரம் கழுதைகளையும், மனுஷரில் லட்சம்பேர்களையும் பிடித்தார்கள்.22யுத்தம் தேவனால் நடந்தபடியினால் அநேகர் வெட்டுண்டு விழுந்தார்கள்; தாங்கள் சிறைப்பட்டுப்போகுமட்டும் இவர்களுடைய ஸ்தலத்திலே குடியிருந்தார்கள்.23மனாசேயின் பாதிக்கோத்திரத்துப் புத்திரரும் அந்த தேசத்தில் குடியிருந்து, பாசான் தொடங்கிப் பாகால் எர்மோன் மட்டும், செனீர் மட்டும், எர்மோன் பர்வதமட்டும் பெருகியிருந்தார்கள்.24அவர்கள் தங்கள் பிதாக்களின் வீட்டுத் தலைவராகிய ஏப்பேர், இஷி, ஏலியேல், அஸரியேல், எரேமியா, ஒதாவியா, யாதியேல் என்பவர்கள் பராக்கிரம வீரரான மனுஷரும் பேர்பெற்ற தலைவருமாயிருந்தார்கள்.25அவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனுக்குத் துரோகம்பண்ணி, தேவன் அவர்களுக்கு முன்பாக அழித்திருந்த தேச ஜனங்களின் தேவர்களைப் பின்பற்றிச் சோரம் போனார்கள்.26ஆகையால் இஸ்ரவேலின் தேவன் அசீரியா ராஜாவாகிய பூலின் ஆவியையும், அசீரியா ராஜாவாகிய தில்காத்பில்நேசரின் ஆவியையும் எழுப்பினதினாலே, அவன் ரூபனியரும் காத்தியரும் மனாசேயின் பாதிக்கோத்திரத்தாருமாகிய அவர்களைச் சிறைபிடித்து, இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல, ஆலாவுக்கும் ஆபோருக்கும் ஆராவுக்கும் கோசான் ஆற்றங்கரைக்கும் கொண்டுபோனான்.








Leave a Reply