Day 41 (10-02-2025)
Scripture Portion: Exodus 33-35 யாத்திராகமம் 33 1கர்த்தர் மோசேயை நோக்கி: நீயும், எகிப்துதேசத்திலிருந்து நீ அழைத்துக்கொண்டு வந்த ஜனங்களும் இவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டு. உன் சந்ததிக்குக் கொடுப்பேன் என்று நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுக்கொடுத்த பாலும் தேனும் ஓடுகிற தேசத்துக்குப் போங்கள். 2நான் ஒரு தூதனை உங்களுக்கு முன்பாக அனுப்பி, கானானியனையும் எமோரியனையும் ஏத்தியனையும் பெரிசியனையும் ஏவியனையும் எபூசியனையும் துரத்திவிடுவேன். 3ஆனாலும், வழியிலே நான் உங்களை நிர்மூலம்பண்ணாதபடிக்கு, நான் உங்கள் நடுவே செல்லமாட்டேன், நீங்கள் வணங்காக்கழுத்துள்ள ஜனங்கள்…
