Bible Study

  • இஸ்ரேல்-11 (மோசேயின் மனைவி)

    மோசேயின் மனைவி 1 எத்தியோப்பியா தேசத்து ஸ்திரீயை மோசே விவாகம்பண்ணியிருந்தபடியினால், மிரியாமும் ஆரோனும் அவன் விவாகம்பண்ணின எத்தியோப்பியா தேசத்து ஸ்திரீயினிமித்தம் அவனுக்கு விரோதமாய்ப் பேசி: எண்ணாகமம் 12:1 இந்த மோசே தான், ஆண்டவரிடமிருந்து கற்பனைகளை பெற்றுக் கொண்டு வந்தவர். பிற ஜாதிகளிடம் கலக்கக்கூடாது என்று மக்களுக்கு உத்தரவு கொடுத்தவர். ஆண்டவரிடமிருந்து கட்டளை பெற்று மக்களை வழிநடத்தியவர். இதே மோசே என்ன தவறு செய்கிறார்? எத்தியோப்பிய ஸ்திரீயை விவாகம் செய்து கொள்கிறார். வழிநடத்திய அவரே தவறு செய்ததால் மிரியாமுக்கு…

  • இஸ்ரேல்-12 (யோசுவா)

    யோசுவா ஆதாமிலிருந்து, மோசேயின் மனைவி வரை நாம் கடந்த பதிவுகளில் பார்த்தோம். மோசே தவறு செய்தபோதும், மோசேயின் கீழ் அடங்கி இருந்தவர் யோசுவா. இன்னொரு சிறப்பான குணாதிசயம் என்னவென்றால், இந்த யோசுவா, கர்த்தருடைய சமுகத்தை விட்டு பிரியாதிருந்தவர். அதனால் தான் மோசேயின் பிள்ளைகளைத் தேவன் தெரிந்து கொள்ளாமல், யோசுவாவைத் தெரிந்து கொண்டார் கர்த்தர். 11 ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார்; பின்பு, அவன் பாளயத்துக்குத் திரும்பினான்; நூனின் குமாரனாகிய யோசுவா என்னும்…

  • இஸ்ரேல்-13 (சாமுவேல்)

    சாமுவேல் வரிசை எண் ராஜாக்கள்/ இரட்சகர் இருப்பிடம் வருடங்கள் 1 கூஷான் ரிஷதாயீம் – மெசொப்பொத்தாமியாவின் ராஜா  நியாயாதிபதிகள் 3-8 8 2 ஒத்னியேல் என்னும் இரட்சகன் 3-11 40 3 எக்லோன் – மோவாபின் ராஜா 3-14 18 4 ஏகூத் என்னும் இரட்சகன் 3-30 80 5 சம்கார் 3-31 – 6 யாபீன் சிசெரா – கானானியரின் ராஜா 4-3 20 7 பாராக் / தெபோராள் 5-31 40 8 மீதியானியர்…

  • இஸ்ரேல்-14 (இஸ்ரேலுக்கு ராஜா)

    இஸ்ரவேலுக்கு ராஜா சாமுவேல் இஸ்ரவேலின் கடைசி நியாயாதிபதி என்று பார்த்தோம். சாமுவேல் தனக்கு அடுத்ததாக தன் பிள்ளைகளை நியாயாதிபதியாக வைக்கிறார். ஆனால் அது தேவ சித்தம் அல்ல. இன்றைக்கு ஊழியர்கள் கூட அந்த தவறை செய்கிறார்கள். தங்களுக்கடுத்து தங்கள் பிள்ளைகளை ஊழியத்தில் ஏற்றுகிறார்கள். நிச்சயமாக அப்பாவின் அபிஷேகம் பிள்ளைகள் மீது இருக்கும். ஆனால், கர்த்தருடைய அழைப்பு இருக்கிறதா என்பதை சரிபார்த்து, ஊழியத்துக்கு வரவேண்டும். இதுவரை நியாயாதிபதிகளாய் இருந்தவர்கள், வேறு வேறு கோத்திரத்திலிருந்து வந்தார்கள். அவர்களையும் தெரிவு செய்தவர்…

  • இஸ்ரேல்-15 (சவுல் முதல் ராஜா)

    சவுல் முதல் ராஜா முதல் ராஜா சவுல் பற்றி பார்க்க இருக்கிறோம். கர்த்தர் கானான் தேசத்தை இஸ்ரவேலருக்கு கொடுப்பதற்கு முன்பே, பிற்காலத்தில் என்ன நடக்கும் என்று மோசேயிடம் கூறி இருப்பார். ஒரு ராஜா எப்படி இருக்க வேண்டும் என்று, கர்த்தர் ஏற்கனவே மோசே மூலமாக வழிகாட்டியிருப்பார். 14.உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச் சேர்ந்து, அதைச் சுதந்தரித்துக்கொண்டு, அதில் குடியேறினபின், நீ; என்னைச் சுற்றிலும் இருக்கிற சகல ஜாதிகளையும் போல, நானும் எனக்கு…

  • இஸ்ரேல்-16 (பத்சேபாள்)

    தாவீது – பத்சேபாள் சவுலுக்கு அடுத்து அரசாண்ட தாவீதைப் பற்றி பார்க்க இருக்கிறோம். நிறைய பேருக்கு, தாவீது என்றாலே நினைவுக்கு வருவது, பத்சேபாள் தான். முதலாவது, இன்று பத்சேபாள் பற்றி பார்த்து விட்டு, பின்னர் தாவீதைப் பற்றி படிக்கலாம். வேதத்தில் 1 சாமுவேல் 11ம் அதிகாரத்தில் ஒரு யுத்தம் நடக்கிறது. பொதுவாக, மக்களாட்சி என்றால், பிரதமர் அவர் இடத்திலிருக்க, வீரர்கள் போருக்கு செல்வார்கள். தாவீது செய்ததுஅரசாட்சி. யுத்தத்துக்கு அரசன் செல்ல வேண்டும். ஆனால் தாவீதோ, மற்றவர்களை யுத்தத்துக்கு…

  • இஸ்ரேல்-17 (தாவீது – 1)

    தாவீது நியாயாதிபதிகள் காலம் முடிவடைந்த பிறகு, ராஜாக்களின் காலம் ஆரம்பித்தது. ஆதாம் பழம் சாப்பிட்டது தவறா? கீழ்ப்படியாதது தவறா? என்று ஏற்கனவே பார்த்தோம். அதேபோல தான், சவுல் ராஜாவும், தேவனுக்கு கீழ்ப்படியவில்லை என்பதே தேவ கோபத்துக்கு காரணமாக இருந்தது. எனவே சாமுவேல் மூலமாக தாவீதை ராஜாவாக அபிஷேகம் செய்கிறார். அதற்கு பின்பு, சவுலின் மேல், பொல்லாத ஆவி இறங்கும்போது, தாவீது சுரமண்டலம் வாசிப்பார், சவுல் சரியாகிவிடுவார். எனவே சவுல், தாவீதை மிகவும் நேசித்தார். 21.அப்படியே தாவீது சவுலிடத்தில்…

  • இஸ்ரேல்-18 (பரிசுத்த வித்து)

    பரிசுத்த வித்து இஸ்ரேல் தேசத்தின் கடந்த காலங்களை, வேதப்பிரகாரமாகவும், சரித்திர ரீதியிலும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இடையிடையே, பரிசுத்த வித்து, என்ற ஒன்றையும் சேர்த்து பார்த்தோம். அந்த பரிசுத்த வித்து, எப்படி பயணம் செய்தது? யார் மூலமாக அடுத்த தலைமுறைக்கு வந்தது என்பதையும் பார்த்தோம். அதையே கொஞ்சம் விரிவாக இன்று பார்க்கலாம். முதலாவது தேவன் ஏன் ஆதாமை உருவாக்கினார்? மல்கியா 2:15 அவர் ஒருவனையல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்தில் பரிபூரணமாயிருந்ததே; பின்னை ஏன் ஒருவனைப்படைத்தார்? தேவபக்தியுள்ள, சந்ததியைப் பெறும்படிதானே…

  • இஸ்ரேல்-19 ( தாவீது -உடன்படிக்கை பெட்டி மேலோட்டம்)

    தாவீது -2 (உடன்படிக்கை பெட்டி மேலோட்டம்) ஏற்கனவே தாவீதைப் பற்றி, பத்சேபாள் பதிவிலும், தாவீது முதல் பதிவிலும் பார்த்தோம். தாவீது 17 வயது வரை பெத்லகேமில் இருந்தார், 22 வயது வரை கிபியாவில் சவுலுடன் இருந்தார், 30 வயது வரை அதுல்லாம் குகைகளில் முறுமுறுக்கிறவர்கள், கடன்பட்டவர்கள், ஓடிவந்தவர்களோடு இருந்து, அவர்களுக்கு யுத்தம் சொல்லிக்கொடுத்தார். 37 வயது வரை எப்ரோனிலிருந்து யூதா கோத்திரத்தை ஆட்சி செய்தார். பின் உயிரோடிருந்த 70வயது வரை எருசலேமில் இருந்தார் என்று பார்த்தோம். தாவீது…

  • இஸ்ரேல்-20 ( தாவீது – இஸ்ரவேலர் பாளையமிறங்கிய வரிசை)

    தாவீது -3 (இஸ்ரவேலர் பாளையமிறங்கிய வரிசை) ஆதாம் கீழ்ப்படியாததால், (சாகவே சாவான்)ஜீவனை இழந்தான். எனவே மனிதன் முழுமையாக கீழ்ப்படிந்து, அதன் மூலம் இழந்த ஜீவனை மறுபடி பெற்றுக்கொள்ளும்படி, தேவன் நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தார். ஆனால், அப்போதும் மனிதர்களால், கீழ்ப்படிய முடியவில்லை. பொய் சொல்லக்கூடாது என்று தேவன் சொல்லி இருக்க, மனிதன் சுலபமாக பொய் சொல்லி பாவம் செய்து விட்டான். அதை சரிசெய்ய வேண்டுமானால், ஏதோ ஒன்று செய்ய வேண்டும். தேவன், ஆசரிப்பு கூடாரம் என்ற ஒன்றை, மோசேக்கு காண்பித்து,…