இஸ்ரேலருடைய பண்டிகை பற்றி படிக்க இருக்கிறோம். அதற்கு முன்பாக, கிறிஸ்தவர்களின் பண்டிகை மற்றும் புறஜாதிகளின் பண்டிகை கொண்டாட்டம் பற்றி பார்க்கலாம்.

நம் பரிதாபமான ஆவிக்குரிய வாழ்க்கை

இன்றைய காலகட்டத்தில், பண்டிகைகள் பற்றி பேசுவது மிக மிக அவசியமானது. தீபாவளி அன்று கிறிஸ்தவ சிறுவர்கள் பட்டாசு வெடிக்கிறார்களே என்று வருத்தப்பட்டால், (பட்டாசு தானே! வழிபாடு செய்து கொள்ளவில்லையே என்ற பதில் சுலபமாக கிடைக்கிறது) பொங்கல் அன்று குடும்பமாக வீட்டில் பொங்கல் வைத்து கொண்டாட்டம், ஆலயத்தில் பொங்கல் கொண்டாட்டம் என்று சுலபமாக ஏற்றுக் கொண்டு விட்டோம்.  (அறுப்பின் பண்டிகை தான் பொங்கல் பண்டிகை என்ற பதில் கிடைக்கிறது) எனவே பண்டிகைகள் பற்றி கொஞ்சம் பேசிவிட்டு பின்னர் யூதருடைய பண்டிகைகள் பற்றி  தியானிக்கலாம்.

பிற மதத்தினர் பண்டிகையைக் கொண்டாடலாமா?

முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது, இரண்டு வகையான பண்டிகைகள் இருகக்கின்றன.

  1. Cultural Festival
  2. Religious Festival

கலாச்சார பண்டிகை என்பது, நமது  நாடு, வரலாறு சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது. நமது குடியரசு தினம், சுதந்திர தினம் இவை நம் வரலாறு மற்றும் நாட்டைச் சார்ந்து கொண்டாடும் பண்டிகை. நாம் அனைவரும் ஆண்டவர் நமக்குக் கொடுத்த இந்த நாட்டில், நமக்கான பண்டிகையைக் கொண்டாடலாம். அது தவறல்ல.

பொங்கல் பண்டிகை என்பது தமிழர்‌ திருநாள். அதைக் கொண்டாடலாம் என்று பல போதகர்களே கூறுகின்றனர். நாம் அப்படியே அதை ஏற்றுக்கொள்ள முடியாது. பொங்கல் பண்டிகை எதற்கு கொண்டாடுகின்றனர் என்று தேடிப்பார்க்க வேண்டும்.

ஆடி மாதத்தில் பயிரிடப்பட்ட நெல் தை மாதத்தில் அறுவடை செய்யப்பட்டு நல்ல விளைச்சலை தரும் மாதமே இந்த பொங்கல். இந்த விளைச்சலை கொடுத்த இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நன்றி செலுத்தும் விதமாக சர்க்கரை பொங்கல் சமைத்து மாட்டுக்கும், சூரியனுக்கும் படைத்து நாமும் உண்டு வாழ்வது தான் இந்த பொங்கல் பண்டிகை.

சில மூத்த ஊழியர்கள் பொங்கல் கொண்டாட்டம் பற்றி இப்படி கூறுகிறார்கள்.

பொங்கல் என்பது இந்துக்களின் பண்டிகை கிடையாது. அது தமிழர் பண்டிகை. கார்த்திகை, தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கு, ஒரு குறிப்பிட்ட தெய்வம் ஒரு புராண கதை இருக்கும். பொங்கலுக்கு எந்த தெய்வமும் கிடையாது. புது பானையில் புது அரிசி பொங்கி, கொண்டாடும் ஒரு பண்டிகை இது. வேதத்தில் கூறியிருக்கிற அறுவடை பண்டிகை தான் பொங்கல் பண்டிகை. இந்துக்கள் இயற்கையை வழிபடுவார்கள். அது அவர்களின் நம்பிக்கை. நாம் இயற்கைக்கு மேலான, நம் நீதியின் சூரியன் இயேசு என்று அறிந்திருக்கிறோம். எனவே நாம்தான் அதை சிறப்பாகக் கொண்டாட வேண்டும்.

இக்கருத்து ஏனோ ஏற்றுக் கொள்ள முடியாததாய் இருக்கிறது. இயற்கைக்கு அதாவது சூரியனுக்கு நன்றி சொல்வதற்காக கொண்டாடப்படுகிற பண்டிகை தான் பொங்கல்.

முக்கியமாக கிறிஸ்தவர்கள் பலர், ‘வேதாகமத்தில் இருக்கும் பண்டிகை தான் பொங்கல் பண்டிகை. பைபிளில் உள்ள அறுப்பின் பண்டிகையைத்தான் நாங்கள் பொங்கல் என்ற பெயரில் கொண்டாடுகிறோம். இதில் என்ன தவறு இருக்கிறது?’ என்று கேட்கிறார்கள். (வேதாகம பண்டிகைகளைப் பற்றி நாம் இப்பொழுது விரிவாக படிக்க இருக்கிறோம். அறுப்பின் பண்டிகை என்பது பெந்தெகோஸ்தே பண்டிகையைக் குறிக்கும். அது ஒருபுறம் இருக்கட்டும்)  ஏன் வேதத்தில் உள்ள பண்டிகை என்று, ஒரே ஒரு பண்டிகையை மட்டும் கொண்டாட வேண்டும்? அப்படியானால் வேதத்தில் இருக்கிற 7 பண்டிகையையும் கொண்டாடலாமே!

இயேசு இப்படி கூறியிருக்க, நாமோ, உலக சிநேகத்தை நாடி ஓடுகிறோம். உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகை. ஒரு மனிதன் இரட்சிக்கப்பட்டு, இயேசுவே மெய்யான தேவன் என்று உணர்ந்து, இங்கு ஆலயம் வந்தபின், அவனை மீண்டும் பொங்கல் கொண்டாடலாம் என்று நாம் சொல்வது, ‘மீண்டும் நீ சூரியனை நமஸ்கரித்துக் கொள்ளலாம்’ என்று சொல்வதற்குச் சமமானது. “ எதை விட்டு கிறிஸ்தவத்துக்கு வந்தாயோ, அதை திரும்ப நீ எடுத்துக் கொள்ளலாம், ஆனால் கிறிஸ்தவன் என்ற பெயரில்”, என்ற உரிமையை நாம் அவனுக்குக் கொடுக்கிறோம்.  இதுதான் நமது பரிதாபமான ஆவிக்குரிய நிலை.

புறஜாதி மார்க்கம் எதையும் கற்றுக் கொள்ளக்கூடாது என்று வேதம் தெளிவாகக் கூறுகிறது. சிலர் நினைக்கிறார்கள், இங்கு அன்பு தான் முக்கியம். எனவே பிறரிடம் அன்பு கூறுவோமானால், அவர்களுடன் இணைந்து பொங்கல் கொண்டாட வேண்டும் என்று நினைக்கிறார்கள். அது முற்றிலும் தவறானது. அன்பு கூறுவதற்கும், பிறருடைய பண்டிகைகளில் கலந்து கொவள்வதற்கும் வித்தியாசம் உண்டு. எல்லாருக்கும் எல்லாமும் ஆனேன் என்று பவுல் கூறுகிறார். எனவே பொங்கல் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளலாம்‘ என்பதாக நினைக்கிறார்கள். இது முற்றிலும் முற்றிலும் தவறானது.   அன்பு மட்டும் தான் பிரதானமானது என்பது நூற்றுக்கு நூறு உண்மைதான். ஆனால் இந்த கேள்விக்கும் பதில் வேண்டுமே.

  1. அன்று பாபிலோனில் மூன்று இளைஞர்கள் ஊரோடு ஒத்துப்போயிருக்கலாமே… ஏன் எரிகிற அக்கினிச்சூளைக்குள் போடப்பட வேண்டும்.
  2. அதே பாபிலோனில், தானியேல் ஊரோடு ஒத்துப் போயிருக்கலாமே! ஏன் சிங்கங்களின் கெபியில் போடப்பட வேண்டும்?
  3. ஆதிகால கிறிஸ்தவர்கள், அப்போஸ்தலர்கள் ஊரோடு ஒத்துப் போயிருக்கலாமே! ஏன் இரத்த சாட்சியாய் மரிக்க வேண்டும்? தேவனுடைய பிள்ளைகள் சிந்திக்க வேண்டிய காலம் இது.

அப்படியானால் நான், “பிற மதத்தினர் பண்டிகை கொண்டாடக் கூடாது. கிறிஸ்தவ பண்டிகை மட்டும் தான் கொண்டாட வேண்டுமா?” என்ற அடுத்த சந்தேகம் வருகிறது. கிறிஸ்தவ பண்டிகைகள் எப்படி வந்தது? யார் ஆரம்பித்தார்கள்? அப்போஸ்தலர்கள் இந்தப் பண்டிகை கொண்டாடினார்களா? கிறிஸ்தவ பண்டிகைகள் பற்றி கொஞ்சம் படிக்கலாம்

கிறிஸ்தவ பண்டிகைகள்

முக்கிய கிறிஸ்தவ பண்டிகைகளாகிய ஈஸ்டர் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இப்பண்டிகைகளை, உண்மையாகவே நமது ஆதிகால கிறிஸ்தவர்கள் கொண்டாடினார்களா? உண்மையாகவே இந்த நாளில் தான் இயேசு பிறந்தாரா? என்பது பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

கிறிஸ்துமஸ்

வருடந்தோறும் டிசம்பர் மாதம் 25ஆம் தேதி, கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் வெகுவிமர்சையாக சிறப்புடன் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இயேசு பிறந்தது டிசம்பர் மாதமா‌? என்று கேட்டால், இல்லை என்ற பதில் தான் வரும். இரண்டு வகையான கருத்துக்கள் பரவிக் கிடக்கிறது. இயேசு மார்ச்-ஏப்ரல் மாதத்தில் பிறந்திருப்பார் என்றும், இயேசு செப்டம்பர் மாத நடுவில் பிறந்திருக்கலாம் என்றும் கருத்துக்கள் உள்ளன. இரண்டு கருத்துக்களையும் தெரிந்து கொள்ளலாம்.

நோவா காலத்தில் வெள்ளம் எப்போது வந்தது என்பதை அவ்வளவு துல்லியமாக, தெளிவாகத் தந்த நம் தேவன், அவரது பிறப்பைக் குறித்த தகவலை மறைத்திருக்கிறார் என்றால், அது நமக்குத் தேவையில்லை என்று மட்டும் பொருள். நமக்கு எது தெரிய வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். அவரது பிறந்த நாளை நாம் விக்கிரகமாக்கி விடக்கூடாது என்று தேவன் நினைத்திருக்கலாம். அப்படியானால் கிறிஸ்துமஸ் கொண்டாடுவது தவறா?

நம் தேவன் நமக்காக பிறந்து பாடுகள் அனுபவித்து, இரட்சிப்பை ஈந்து, நம்மை நீதிமான்கள் ஆக்கியிருக்கிறார். இவ்வளவு பெரிய தேவனுக்கு நாம் தினந்தோறும் பண்டிகை கொண்டாடலாம். ஆனால் பட்ஜெட் தாங்காது என்பதால், வருடத்துக்கு ஒருமுறை கொண்டாடுகிறோம். ஒரு பிள்ளைக்கு பிறந்தநாள் என்றால், அப்பிள்ளைக்குத்தான் நாம் முதலாவதாக ஆடைகள் எடுப்போம். அதேபோல இயேசுவுக்கு எப்படி துணி வாங்கிக் கொடுப்பது? அதற்கும் இயேசு வசனத்தில் பதில் சொல்லி இருக்கிறார். “இந்த சிறியரில் ஒருவருக்கு எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்” என்று கூறி இருக்கிறார். அந்த வார்த்தையின்படி, அவரது பிறந்தநாளை நாம் கொண்டாடும்போது, நிச்சயமாக நம்மால் முடிந்த அளவுக்கு, முதலாவது ஏழைகளுக்கு உதவி செய்து விட்டு, பின்னர் நாம் பண்டிகையை சிறப்புடன் கொண்டாடலாமே.

இயேசு செப்டம்பரில் பிறந்தாரா?

குறிப்பு 1

இவ்வசனத்தின்படி, யோவான்ஸ்நானகன் பிறந்து ஆறு மாதங்கள் கழித்து இயேசு பிறந்திருக்கலாம்.

குறிப்பு 2

சகரியா அபியா என்னும் ஆசாரிய வகுப்பைச் சேர்ந்தவர்.  1 நாளாகமம் 24: 7-19ல், ஒவ்வொரு ஆசாரியரின் வரிசை, எந்த நாட்களில் யார் தூபம் காட்ட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. எல்லா வகுப்பிலுள்ள ஆசாரியர்கள் இணைந்து பெரிய பண்டிகைகளின்போது(பஸ்கா, பெந்தெகோஸ்தே, கூடார பண்டிகை), வழிபடுவர்.

10 ஏழாவது அக்கோத்சின் பேர்வழிக்கும், எட்டாவது அபியாவின் பேர்வழிக்கும்,

1 நாளாகமம் 24:10

இவ்வட்டவணையின்படி, எபிரேய மூன்றாம் மாதத்தின் கடைசியில் யோவான்ஸ்நானகன் கரு உருவாகியிருக்கலாம். அது நமது காலண்டர் படி, ஜூன் மாதத்தைக் குறிக்கிறது. எனவே யோவான்ஸாநானகன் எபிரேய முதல் மாதம் பிறந்திருக்கலாம், அல்லது எபிரேய கடைசி மாத இறுதியில் பிறந்திருக்கலாம். யோவானுக்கு ஆறு மாதங்கள் கழித்து இயேசு பிறந்திருக்கலாம் என்பதால், இயேசு நமது காலண்டர்படி, டிசம்பர் மாதம் உருவாகி, செப்டம்பர் மாதத்தில் பிறந்திருக்கலாம் என்று கருதுகின்றனர்.

குறிப்பு – 3

இயேசு 30ம் வயதில் ஊழியத்தை ஆரம்பித்தார், மூன்றரை வருடங்கள் ஊழியம் செய்து மரித்தார் என்று அறிவோம். அவர் மரித்தது பஸ்கா பண்டிகையின் போது என்றால், அவர் பிறந்தது கூடாரப் பண்டிகையின் போதாகத்தான் இருக்க வேண்டும். கூடாரப்பண்டிகை செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில்தான் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

  • கர்த்தருக்கு வழியை ஆயத்தம் பண்ண வேண்டிய எலியா, பஸ்கா பண்டிகையில் பிறந்திருப்பார் என்று யூதர்கள் நம்புகின்றனர். எனவே யோவான்ஸ்நானகன் முதல் மாதத்தில் பிறந்திருக்கலாம்.
  • எருசலேம், பெத்லகேம் போன்ற மலைபகுதிகளில், டிசம்பர் மாதத்தில் குளிர் அதிகமாக இருக்கும். மேய்ப்பர்கள் வெளியே இராத்தங்க முடியாது. சிலசமயங்களில் பனிமழை கூட பெய்யும். எனவே டிசம்பர் மாதம் என்பது தவறானது.
  • இயேசு செப்டம்பர் மாதம் பிறந்திருந்தால், அவர் சுக்கோத் பண்டிகையில் பிறந்திருக்கலாம். சுக்கோத் பண்டிகையில் யூதர்கள் கூடாரங்களில் குடியிருப்பார்கள். இயேசுவுக்கு கூடாரம் போட்டு வரைந்த படங்கள், நடிக்கும் நாடகங்கள், ஒருவேளை அவர் சுக்கோத் பண்டிகையில் பிறந்திருக்கலாம் என்று நம்ப வைக்கிறது.
  • 14 அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார், அவருடைய மகிமையைக் கண்டோம், அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.

இவ்வசனத்தின் ஆங்கில பதிப்பு

 Dwelling என்பதை Tabernacled among us என்றும் மொழிபெயர்க்கலாம். யோவான் சுவிசேஷம் எழுதிய, அப்போஸ்தலனாகிய யோவானுக்கு, ஒருவேளை இயேசு பிறந்த நாள் தெரிந்து இதை எழுதியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

  • செப்டம்பரில் பிறந்தது உண்மையானால், மூன்று முக்கிய யூதபண்டிகையிலும் தொடர்புடையவராக இருந்திருப்பார் இயேசு.

இயேசு பிறந்தது சுக்கோத்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்தது பஸ்கா

பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்பட்டது பெந்தேகோஸ்தே பண்டிகை

ஒரு காரியம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். இது எல்லா வருடத்திற்கும் பொருந்தாது. ஏனெனில் யூதர்களின் காலண்டரில், ஒவ்வொரு மாதமும் 30 நாட்கள் அல்லது 29 நாட்கள் மட்டுமே இருக்கும். அது சந்திரனோடு தொடர்புடைய காலண்டர். ஒவ்வொரு ஆறு வருடத்துக்கு ஒருமுறை, 19 நாட்கள் கொண்ட ஒரு மாதம் இணைக்கப்படும்.

இயேசு மார்ச் மாதத்தில் பிறந்தாரா?

மேய்ப்பர்கள் இராத்தங்குவது நவம்பர் டிசம்பரில் நிச்சயமாக முடியாது. அவர்கள் மார்ச் முதல் ஜூன் வரை இராத்தங்க நன்றாக இருக்கும். அது கோடைகாலம். ஒருவேளை அப்போது இயேசு பிறந்திருக்கலாம்.

சீனாவின் ஹன்சு சரித்திரக்குறிப்பில், மூன்று நட்சத்திரங்களைப் பற்றிய குறிப்பு உள்ளது.

  • கிமு 12ல் ஆகஸ்ட் 26ல் ஒரு நட்சத்திரம் தோன்றி, கிட்டத்தட்ட 56 நாட்கள் வானில் இருந்தது
  • கிமு 5ல், மார்ச் 9 முதல் ஒரு நட்சத்திரம் தோன்றி, 70 நாட்கள் வானில் இருந்தது.
  • கிமு 4ல் ஒரு நட்சத்திரம் வானில் தோன்றியது.

ஏரோது ராஜா வாழ்ந்த காலம் கணக்கிட்டுப் பார்த்து, ஒருவேளை கிமு5ல் மார்ச் ஏப்ரல் மாதங்களில் பிறந்திருக்கலாம் என்று நம்புகின்றனர்.

இயேசு டிசம்பர் மாதத்தில் பிறந்தாரா?

  1. மேய்ப்பர்கள் இராத்தங்குவது நவம்பர் டிசம்பரில் நிச்சயமாக முடியாது. அவர்கள் மார்ச் முதல் ஜூன் வரை இராத்தங்க நன்றாக இருக்கும். அது கோடைகாலம். ஒருவேளை அப்போது இயேசு பிறந்திருக்கலாம்.
2.      லூக்கா 2ம் அதிகாரத்தில் சென்சஸ் census எழுத Caesar Augustus அறிவிப்பு கொடுத்தார். எல்லோரும் அவரவர் சிட்டிக்கு செல்ல வேண்டும் என்பதால் யோசேப்பு தாவீதின் வம்சமான பெத்லகேமுக்கு செல்ல வேண்டும். ரோமானிய அதிகாரிகள், குளிர்காலத்தில் மிகவும் குளிராக இருக்கும் போது, ​​சாலைகளில் நடந்து செல்ல முடியாத நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று கோருவது, நடைமுறையில் சாத்தியம் இல்லை. எனவே, குளிர்காலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு சாத்தியமற்றது. எனவே இயேசு டிசம்பர் மாதத்தில் பிறக்கவில்லை என்பது தெளிவாகிறது.
 
டிசம்பர் 25:
  • கிபி 270ல் சிரியாவின் சூரியக்கடவுளை ரோமுக்கு கொண்டு வந்தனர். இவர் பெயர்‌Ba-al. இவரது பிறந்த நாள் டிசம்பர் 25.
  • ரோம சக்ரவர்த்தி டையக்ளீசியன் என்பவர் டிசம்பர் 25ஐ வெகுவிமர்சையான பண்டிகை ஆக்கினார்.
  • பகல் நேரம் அதிகமாக இருக்கும் காலம் ஆரம்பிப்பது டிசம்பர் 25 ல் தான்.
  • ஆரியர்களின் சூரியக் கடவுள் மித்ரன் பிறந்தநாள் டிசம்பர் 25
  • யூதர்கள் ஹனுக்கா பண்டிகை கொண்டாடுவது டிசம்பர் 25

யார் ஆரம்பித்தார்கள்?

கிபி 330ல் கான்ஸ்டன்டைன் என்ற ரோம அரசன், ஒரு போரில் தோற்றுவிடுகிற இடத்தில் இருக்கும்போது, தனது கனவில் சிலுவை அடையாளம் கண்டார். இதை எடுத்துப்போனால் வெற்றி என்று அறிந்த அவர், அனைத்து படைவீரர்கள் கையிலும், சிலுவை அடையாளம் பொறித்த வாளைக் கொடுத்து, அந்தப் போரில் மிகப்பெரிய வெற்றி அடைந்திருக்கிறார். வெற்றி பெற்று திரும்பிய மன்னர், தனக்கு நடந்ததை தன் தாயிடம் கூறும்போது, தாய் ஒரு மறைமுக கிறிஸ்தவளானபடியால், இயேசுவைப் பற்றி எடுத்துக் கூறியிருக்கிறார். அந்த மன்னனும் இயேசுவை ஏற்றுக்கொண்டான்.

அதுவரையிலும், அதாவது கிபி 300 வரையிலும் ரோம அரசர்கள், கிறிஸ்தவர்களை சிறைப்பிடித்து கொடுமைப்படுத்தினர். யூதர்கள் ஒரு பக்கத்தில் கிறிஸ்தவரை எதிர்க்கும்போது, ரோமர்கள் சிலரை சிங்கத்திற்கு இரையாக்கினார்கள். சிலரை தீயிட்டுக் கொளுத்தினார்கள். இப்படிப்பட்ட நேரத்தில்தான், ரோம அரசன் ஒருவன் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டார்.

கிறிஸ்தவத்தை அரசாங்க மதமாக மாற்றினார். கிறிஸ்தவர்களாக மாறியவர்களுக்கு அரசாங்க சலுகைகள் கொடுத்தார். வரியை கேன்சல் செய்தார். அரசாங்க வேலை, பணம், வசதி வாய்ப்புகளுக்கு ஆசைப்பட்டு, அநேகர் கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக் கொண்டனர். உபத்திரவத்தில் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு நெருங்கிய மக்கள், ஆசீர்வாதத்தில் பின்தங்க ஆரம்பித்தனர். இப்பொழுது புதிய பிரச்சனை என்னவெனில், ரோமர்களுக்கு மாதத்திற்கு ஒரு பண்டிகை என வெகு விமர்சையாக கொண்டாடிக் கொண்டிருந்தனர். இப்பொழுது கிறிஸ்தவ மதத்தைத் தழுவியவர்களுக்கு, எந்த பண்டிகையும் இல்லை. ரோமர்கள் கண் கவரும் வகையில் பல சிலைகளை தொழுது கொண்டு இருப்பார்கள். இப்பொழுது கிறிஸ்தவத்தில், தேவன் ஆவியாக இருக்கிறார் அவருக்கு உருவம் இல்லை என்ற கருத்தை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அநேகர் பின்வாங்க ஆரம்பித்தனர். முறுமுறுக்க ஆரம்பித்தனர்.

மக்களை உற்சாகப்படுத்துவதற்காக ரோம தெய்வம், ஒரு பெண் கையில் குழந்தையுடன் இருக்கும் சிலையை, ஆலயத்தில் கொண்டு வந்து வைத்து, இதுதான் மரியாள் எனவும், அவர் கையில் இருக்கும் குழந்தை இயேசு எனவும் கூறிவிட்டார். டிசம்பர் மாதம் 25ஆம் தேதி, ரோமர்கள் கொண்டாடும் வெகு விமர்சையான பண்டிகையை இயேசுவின் பிறப்பின் பண்டிகையாக அறிவித்துவிட்டார். இப்படித்தான் கிறிஸ்தவத்துக்குள் பண்டிகைகள் வந்தது.

கான்ஸ்டன்டைன் மன்னன் மூலம், பண்டிகை வந்தது. சிலை வழிபாடு வந்தது. தொடர்ச்சியாக பாவமன்னிப்பு சீட்டு, போப் ஆட்சி எல்லாம் உருவாகியது. கிறிஸ்தவம் மதமாக உருவாகியது.

ஈஸ்டர் பண்டிகையா? உயிர்த்தெழுந்த நாள் பண்டிகையா?

நிச்சயமாக ஈஸ்டர் பண்டிகை என்பது கிறித்தவ பண்டிகை கிடையாது. அப்படியானால் நான் ஈஸ்டர் கொண்டாடக்கூடாதா? என்று கேட்டால், நாம் ஒவ்வொரு நாளும் உயிர்த்தெழுந்த பண்டிகையைக் கொண்டாடலாம். ஒருநாளைக் குறித்து, அதில் பண்டிகை கொண்டாடுவது தவறல்ல. ஆனால் கர்த்தருக்கு மகிமையாக கொண்டாட வேண்டும். ஈஸ்டர் என்பது இஷ்டார் என்ற தேவதையின் பெயர். அந்த தேவதையின் நாமத்தில் கொண்டாடாமல், கர்த்தருடைய உயிர்த்தெழுந்த திருநாள் என்று, Happy Resurrection Day சொல்லி கொண்டாடலாம்.

பாபேல் கோபுர காலத்தில், நிம்ரோத் என்பவர் மனைவியாக இருந்த செமிராஸ் தான் பிற்காலத்தில் இஷ்தார் தெய்வமாக மாறினார். இவர் விபச்சாரம், பாலியல் உணர்வு போன்ற காரியத்துக்கு பெயர் போன தெய்வம்.  அசீரியர்களின் இதிகாசம், Book of Gilgamesh என்றொரு புத்தகம் உள்ளது. இந்த இஸ்தார் தேவதையை யார் யாரெல்லாம் திருமணம் செய்கிறார்களோ, அவர்கள் கொல்லப்பட்டனர். எனவே, இஸ்தார் எவ்வளவு வற்புறுத்தினாலும், கில்கமேஷ் இஷ்தாரை திருமணம் செய்ய மறுத்து விட்டார்.

இதே இதிகாசத்தின் கிளைக்கதை, இஷ்தாரின் கணவன் தம்மூஸ். தேவாலயத்தில் தம்மூஸ்க்காக அழுகிறார்கள் என்று எசேக்கியேல் தீர்க்கதரிசி கூறிய தம்மூஸ் இவரே. தம்மூஸ் தன் நாற்பதாவது வயதில் சில மிருகங்களால் கொல்லப்படுகிறான். அப்பொழுது இஷ்தார், “தம்மூஸ் மரிக்கவில்லை. நரகத்துக்கு சென்று விட்டான். நான் போய் அவனை மீட்டு வருகிறேன். 40 நாட்கள் அவனுக்காக துக்கம் கொண்டாடுங்கள். 40வது நாளின் முடிவில், முட்டையிலிருந்து குஞ்சு வருவது போல, தம்மூஸ் முட்டையிலிருந்து வருவான்” என்று கூறினாள்.  வசந்த காலத்தையும் வளமையையும் குறிக்கும் முயல், இத்தேவதையோடு ஒப்பிடப்பட்டது.

பாதாள உலகிற்கு நுழைய போராடிய இஸ்தார் காவலாளியால் மறுக்கப்பட்டாள். ஏழு வாசல்கள் உள்ள அந்த பாதாள உலகில், ஒவ்வொரு வாசலுக்கு ஒவ்வொரு உடையாக அவளை நிர்வாணமாக்கி உள்ளே விட்டார்கள். ஒரு ஈயின் உதவியால் தம்மூஸைக் கண்டு பிடித்தாள். ஆனாலும் அவனை மீட்டுக் கொண்டு வர முடியவில்லை. திரும்பி பூமிக்கு வந்தவள், “தம்மூஸை என்னால் மீட்டு வர முடியவில்லை. நீங்கள் என்பேரில் பண்டிகை கொண்டாடுங்கள்” என்று பண்டிகை அறிவித்தாள். அதுதான் இஸ்தார் பண்டிகை. நாற்பது நாட்கள் துக்க நாட்கள் முடிந்து, பின்பு ஒருவாரம் இஷ்தாருக்கு பண்டிகையாக, அசீரியர், பாபிலோனியர், ரோமர் கொண்டாடினர். ரோமர்களிடம் இருந்து ஆலயத்துக்குள் வந்து விட்டது. இஸ்தார் பண்டிகையை ஆலயத்துக்குள் கொண்டு வந்து வைத்து, இது கிறிஸ்து உயிர்த்தெழுந்த பண்டிகை. அந்த நாற்பது நாட்கள், கிறிஸ்து உபவாசம் இருந்த நாட்கள் என்று கொண்டு வந்து விட்டனர். என்ன ஒரு பரிதாபமான ஆவிக்குரிய நிலை. என்றாவது ஒருநாள், அவர் ஊழியம் ஆரம்பித்த நாட்களில் தான், நாற்பது நாள் உபவாசம் இருந்தார். நாம் ஏன் இறப்பின் போது அதை அனுசரிக்கிறோம்? என்று கேட்டிருப்போமா?

அப்படியானால் அந்த 40 நாட்கள் உபவாசம் இருப்பது தவறா? அருமையாக ஒருமுறை ஒரு ஊழியர் கூறினார்.

எனவே உபவாசம் இருப்பவர்கள், மற்றவர்களைக் குறையாக பார்க்கக்கூடாது. உபவாசம் இராதவர்கள், உபவாசிப்பவர்களை ஏளனமாக பார்க்கக்கூடாது. நாட்களை விசேஷித்துக் கொண்டாலும், அது கர்த்தருக்காக. விசேஷிக்காவிட்டாலும் அது கர்த்தருக்காக என்று கூறினார். என்ன செய்தாலும், மற்றவர்களை நோக்காமல், தேவநாமம் மகிமைக்காக செயல்படுவோம்.

கிறிஸ்தவ பண்டிகைகள் நான் கொண்டாடக் கூடாதா என்றால், சந்தோஷமாக கொண்டாடலாம். ஆனால், ஈஸ்டர் என்பதற்கு பதிலாக, உயிர்த்தெழுந்த திரு நாள் வாழ்த்துக்கள் என்று கூறி, நம் தேவனுடைய நாமத்துக்கு மகிமையை செலுத்தலாம். அப்படியானால் வேதாகமத்தில் கூறியிருக்கிற பண்டிகைகள் தான் கொண்டாட வேண்டுமா? அப்பண்டிகைகளுக்கும் எனக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? அல்லது அது இஸ்ரவேலர் மட்டும் கொண்டாடும் யூதர்களுடைய பண்டிகையா? அடுத்த பதிவில் பார்ப்போம்.

Astrologers believe the Chinese astrologers’ discovery was a type of shooting or exploding star, that shone brightly in the sky. 

Records indicate that there was a new star that remained bright in the sky for two months in 5BC – around the time that Jesus was thought to have been born. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *