Soul Ties
கர்த்தருடைய நாமத்தினால் உங்கள் யாவருக்கும் வாழ்த்துக்கள். 2024ஆம் ஆண்டில், Porn Addiction பற்றி, அந்த அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுவது பற்றி, நாம் நமது தளத்தில் பதிவிட்டிருந்தோம். Pastor.Vlad என்பவருடைய வாழ்க்கையிலிருந்து அனேக காரியங்களைக் கற்றோம்.
Small Recap:
Scientific:
- Pornography பார்த்து, screenல் திருப்தியாகும் ஒருவரால், தங்கள் வாழ்க்கைத் துணையுடன் இணைந்து தாம்பத்தியம் நடத்துவது கடினமாக இருக்கும்
- ஒவ்வொரு முறை porn பார்க்கும்போதும், நமது மூளை “dopamine” release செய்கிறது. “Dopamine” என்பது feel good chemical. எனவே screenல் பார்க்கும்போது, அந்த Dopamine ரிலீஸ் ஆகி, இப்போதுதான் நீ சந்தோஷமாய் இருக்கிறாய் என்று சொல்லும். அதனால், normal lifeல் தாம்பத்தியம் boring ஆக இருக்கும்.
- உங்கள் துணையை திருப்தி படுத்துவது முடியாததாக இருக்கும்.
- Alone time, Stress timeல் உங்கள் மூளை automatic ஆக, porn videos பார்க்கத் தூண்டும்.
இப்படி சில காரியங்களை நாம் ஏற்கனவே 10 பதிவுகளில் பார்த்திருக்கிறோம்.
Spiritual:
- ஒரு மனிதன் ஆபாச படத்துக்கு அடிமையாக இருந்தால், நல்ல ஒரு prayer partnerஐக் கண்டுபிடித்து, அவருடன் இணைந்து ஜெபிக்க வேண்டும்.
- தினமும் வேதவாசிப்பு, ஜெபம் மிகவும் அவசியம்.
- Fasting தான் நம் மாம்சத்தைக் கட்டுப்படுத்தி, ஆவியை உயிர்பெற செய்யும். எனவே உபவாசம் அவசியம்.
- பாவம் செய்து விட்டேன் என்ற குற்ற மனசாட்சியில் உழன்று போகாமல், நான் பாவம் செய்தாலும் என்னை மன்னிக்க கர்த்தர் இருக்கிறார் என்று ஜீவனைப் பேச வேண்டும். மரணமும் ஜீவனும் நம் நாவின் அதிகாரத்தில் இருக்கிறது என்று பார்த்தோம்.
இப்படி சில காரியங்களை செய்தால் விடுதலை பெற முடியும் என்று ஆவிக்குரிய ரீதியில் பார்த்தோம்.
இதனுடைய தொடர்ச்சி தான் இப்பதிவு. சிலர் இதையெல்லாம் follow பண்ணுகிறார்கள். சில மாதங்கள் வரையிலும், அவர்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்றிருப்பார்கள். ஆனால் மீண்டும் அவர்கள் அந்த பாவத்துக்குள் சென்றிருப்பார்கள். ஏன்? ஒருமுறை விடுதலை பெற்ற பிறகு மீண்டும் மீண்டும் ஏன் அந்த பாவத்துக்குள் நுழைய வேண்டும்? நம் தேவனால் முழுமையான விடுதலையை தர முடியாதா? இதைப் பற்றி தான் வரும் பதிவுகளில் பேசப் போகிறோம்.
நான் ஒரு ஊழியரின் (Rikhard Hartikainen) interview கேட்டுக்கொண்டிருந்தேன். அதன் மொத்த கருத்துக்களையும் சுருக்கி, மிகவும் சுருக்கமாக இந்த பதிவில் பதிவிடுகிறேன். பொறுமையாக வாசியுங்கள்.
Rikhard Hartikainen இவருடைய அப்பாவின் VHS கேசட்டுகளின் மூலம், நான்கு வயதில் pornography பார்த்திருக்கிறார். அதன்பிறகு, அவர் எங்கெல்லாம் சென்றாரோ, அங்கெல்லாம் porn அவரைத் தேடி வந்துள்ளது. (பாவம் உன்னைத் தொடர்ந்து பிடிக்கும் என்பது எவ்வளவு உண்மை!) சிறு வயதில் நண்பர்களுடன் அருகிலிருந்த forestக்கு விளையாட சென்றுள்ளார். அங்கே ஒரு கல்லின் அடியில், Porn Magazine இருந்தது. மிக இளம் வயதிலேயே, இந்த மனிதருக்கு, Porn(ஆபாச படங்கள்), Lust(காமம்), Masturbation(சுய இன்பம்) எல்லாம் வாழ்வில் நுழைந்து விட்டது.
அதன்பிறகு, இவருடைய தாய், தந்தை இரட்சிக்கப்பட்டு, pastor ஆகியது வேறு கதை. ஆனால் இந்த வாலிபரின் வாழ்வில், 4 வயதில் உள்நுழைந்த porn, தொடர்ந்து அவர் வாழ்வில் இருந்து கொண்டே தான் இருந்தது.
வளர வளர, அவருக்குத் தெரிந்தது, ஒரு பாஸ்டரின் மகனாக தாம் தவறு செய்து கொண்டிருக்கிறோம் என்பது. எனவே, மிகவும் முயற்சி எடுத்தார், fasting போட்டார். 40 நாள் fasting முடிந்ததும், 40 நாட்களுக்கும் சேர்த்து ஒரே நாளில் videos பார்ப்பார். பெற்றோரிடம் அவரது நிலையைக் கூறியபோது “Don’t Masturbate” என கூறினார்கள். ஆனால் அதை control செய்ய முடியாமல் போனபோது, அவருக்கு புரிந்து விட்டது, “இது demonic” என்று. வெகு முயற்சிகளுக்கு பின்னர், அவரும் porn உடன் வாழ பழகி விட்டார் என்றே சொல்லலாம்
இவரது 22வது வயதில், இவருடைய ஆலயத்தில் ஒரு deliverance meeting நடந்திருக்கிறது. “ஆண்டவரிடம் confess பண்ணுங்க” என்று கூறிய போது, அநேகர் கண்ணீருடன் ஜெபிக்கும்போது இவருக்கு, தானும் ஒரு பாவத்தில் உள்ளோம் என்பது நினைவில் இல்லை. எனவே அந்த ஊழியரிடம் ஜெபிக்க, எல்லாரும் prayer lineல் நிற்கும்போது, இவர் சுற்றிலும் பார்க்கிறார். “இவங்களைப் போல எல்லாம் நான் எந்த crimeயும் செய்யலை” என்று மனதில் சொல்லிக் கொண்டார்.
இவரது முறை வரும்போது, அந்த பாஸ்டர் இவர் தலையின் மீது அவரது கைகளை வைத்ததும், ஒரு மூடை சிமெண்ட் இவர் தலையில் வைத்தது போன்ற பாரம் தோன்ற, தன்னை அறியாமல், “உர்ர்ர்ர்” என்று உறுமினார். இரண்டாவது முறையாக பாஸ்டர் மீண்டும் இவர் தலையில் கை வைக்கவும், கோபத்தில் சத்தம் போட ஆரம்பித்தார். பின்னர் தான் இவருக்குப் புரிந்தது, உள்ளே இருக்கும் பிசாசின் வேலை என்று.
“Who are you in this body?” என்று பாஸ்டர் கேட்கவும், இவரது இதயத்துக்குள் சத்தம் கேட்டது “Lust” என்று. எனவே இவரும் Lust என்று சொன்னார். இரண்டாவது கேள்வி கேட்கும்போதும், அவருக்கு சத்தம் கேட்டது, அவர் அந்த பதிலைச் சொன்னார். ஆனால் மூன்றாவது கேள்வியிலிருந்து, அவரால் அந்த பிசாசை control செய்ய முடியவில்லை. பிசாசு பேசத்தொடங்கி விட்டது. இவருக்கு பிசாசு பேசுவது எல்லாம் தெள்ளத்தெளிவாக கேட்டிருக்கிறது, ஆனால் பிசாசு control செய்து, அதுவே பதில் கொடுத்திருக்கிறது.
பாஸ்டர் கடைசியாக, “Come out Right now” என்று கூற, இவரது கையில் பயங்கரமாக தீ எரிவதைப் போல உணர்ந்து இருக்கிறார். இவரது கையால் சுய இன்பம் செய்தமையால், அந்தக் கையில் அவ்வளவு வெப்பம் வந்திருக்கிறது. கடைசியாக, ஏதோ ஒன்று அவரை விட்டு போய்விட்டது என்பதை உணர்ந்திருக்கிறார். தான் free ஆகி விட்டோம் என்பது புரிந்தது. அது அவருடைய முதல் விடுதலையின் அனுபவம்.
ஆனால் அன்று இரவே, ஒரு பாலியல் கனவால் தொந்தரவு வந்துள்ளது. அது ஒரு very intense sexual dream. அவருக்கு ஒன்றுமே புரியவில்லை, தான் இன்னும் விடுதலை ஆகவில்லையோ என்றும் நினைத்து இருக்கிறார்.
ஒரு பாஸ்டரின் மகனாக இருந்ததால் அவருக்கு, கொஞ்சம் வேத அறிவும், பிசாசுகளைப் பற்றிய அறிவும் இருந்திருக்கிறது. எனவே, “இது சாத்தானுடைய trick. நான் விடுதலை ஆகவில்லை என்று என்னை நம்பப் பண்ணுகிறான். But actually, I got Deliverance” இதையே திரும்ப திரும்ப யோசிக்கும்போது, அந்த dream faded away. அதன்பிறகு அவருக்கு முழுமையான விடுதலை வந்து விட்டது.
அவர் முழுமையாக விடுதலை அடைந்து விட்டார். இது அவருடைய முதல் விடுதலையின் அனுபவம்(Deliverance Experience). ஏன் முதல் விடுதலையின் அனுபவம் என்று சொல்கிறேன்? அப்படியானால், இன்னமும் விடுதலை இருக்கிறதா? ஒரு முறை விடுதலை அடைந்தால், பாவம் செய்யாமல் இருக்க முடியாதா? தொடர்ந்து விடுதலை வாங்கிக் கொண்டே இருக்க வேண்டுமா? அல்லது, முதல் விடுதலையின் தொடர்ச்சியாக இன்னொரு ஆழமான விடுதலை இருக்கிறதா? தொடர்ந்து பார்க்கலாம்.








Leave a Reply