Soul Ties
அவர்(Rikhard Hartikainen) முழுமையாக விடுதலை அடைந்து விட்டார். இது அவருடைய முதல் விடுதலையின் அனுபவம்(Deliverance Experience). ஏன் முதல் விடுதலையின் அனுபவம் என்று சொல்கிறேன்? அப்படியானால், இன்னமும் விடுதலை இருக்கிறதா? என்பதன் தொடர்ச்சி இப்பதிவில்.
(Rikhard Hartikainen) ஜெபக்கூட்டத்தில் விடுதலை பெற்றுக் கொண்டார். அதன்பிறகு ஊழியம் செய்ய ஆரம்பித்தார். அநேகருக்கு இரட்சிப்பு கிடைக்க காரணம் ஆனார். பின்னர் திருமணம் முடிந்து, ஊழியம் காரணமாக 3 வருடங்கள் அவரும் மனைவியும் வேறு வேறு நாட்டில் வசித்து வந்தனர். தொலைபேசியில் கணவன் மனைவி இடையே நல விசாரிப்புகள் இருந்தது.
சில மாதங்கள் அவரது வாழ்க்கை நன்றாக போய்க்கொண்டு இருந்தது. அதன் பின்னர், depression(மன அழுத்தம்) and tiredness(சோர்வு) அவரது வாழ்வில் நுழைய ஆரம்பித்தது. மூளை தானாக தன் பணியைச் செய்தது. “நீ மிகவும் சோர்வாக இருக்கிறாய், உனக்கு சந்தோஷ ஹார்மோன் Dopamine சுரக்க வேண்டுமென்றால், Pornography பார்க்க வேண்டும்” மூளை தொடர்ந்து கட்டளை கொடுத்தது. அவரும் அந்த பாவத்துக்குள் மறுபடியும் நுழைந்தார்.
Rikhard Hartikainenஆல் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தான் விடுதலை பெற்ற பாவத்துக்குள் மீண்டும் போய் சிக்கிக் கொண்டதால், Depression அதிகமாகி விட்டது. மனம் விடுதலைக்காக ஏங்க ஆரம்பித்தது. மனைவி வேறு அடிக்கடி கனவில் பிசாசுகளுடன் போராடுவதாக கூறினார். “மனைவியின் போராட்டத்துக்கு காரணம், நான் porn பார்ப்பதாக இருக்குமோ?” என்றும் உள்ளம் சிந்திக்க ஆரம்பித்தது.
அடுத்த விடுதலைக்காக தயாராகி விட்டார் Rikhard Hartikainen. ஒருநாள், Deliverance Minister (விடுவிக்கும் ஊழியர்) ஒருவரை வீட்டுக்கு அழைத்தார். இந்த முறை விடுதலையைப் பெற்றுக்கொள்ள, எந்த ஜெபக்கூட்டத்துக்கும் செல்லவில்லை. தன் அறையில், மனைவி மற்றும் அந்த ஊழியருடன் அமர்ந்து இருந்தார். ஊழியரிடம் பேசும்போது, எதையும் மறைக்காமல், எல்லாவற்றையும் confess செய்தார். தான் ஊழியம் செய்தாலும், மீண்டும் போய் ஒரு பாவத்துக்குள் சிக்கினதை எடுத்துக் கூறினார்.
“நாம் Prayer பண்ணலாமா?” என்று ஊழியர் கேட்டதும், Rikhard Hartikainen தலைசுற்றுவது போல உணர்ந்தார். தானும் ஒரு ஊழியர் என்பதால், தனக்குள் நடக்கும் மாற்றங்கள் அவருக்கு புரிந்தது. தன் எதிரில், மனைவி அமர்ந்து இருக்கிறார், அருகில் அந்த ஊழியர் அமர்ந்து இருக்கிறார். இவர்கள் முன் தனக்குள் பிசாசின் கிரியைகள் வெளிப்படுவதை காட்டலாமா என்றெல்லாம் அவர் யோசிக்கவில்லை. அவருக்குத் தேவையானது ஒரு விடுதலை. அதனால் முழுமையாக அந்த ஊழியரிடம் அடங்கிப் போனார்.
ஜெபம் செய்யும்போது, அவருக்குள் இருந்து யேசபேலின் ஆவி வெளியேறியது. யேசபேலின் ஆவி என்பது இச்சைக்குள் இழுக்கும் ஒரு ஒழுக்கக்கேடான பெண்ணின் ஆவி. Freemasonry வெளியேறியது. Freemason என்பது பலவிதமான நல்ல மனிதர்கள் ஒன்றிணைந்து தொண்டு செய்யும் இயக்கம், சகோதரத்துவத்தை முன்னிறுத்தி செயல்படும் ரகசிய கூட்டமைப்பு. இவர்கள் சில சடங்குகளை வெகு இரகசியமாக வைத்திருந்தார்கள்.
அடுத்ததாக, அந்த ஊழியர் அந்நிய பாஷையில் பேச பேச, Rikhard Hartikainen கை, தானாக செயல்பட ஆரம்பித்தது. வலது கையின் ஆள்காட்டி விரல், பெரு விரலும், இடது கையின் ஆள்காட்டி விரல், பெரு விரலும் இணைந்து ஒரு முக்கோணம் போன்ற சின்னம் உருவானது. அது Illuminati symbol என்பது இவருக்கு நன்றாகவே புரிந்தது.
‘இதெல்லாம் எப்படி எனக்குள் வந்தது? நானும் ஒரு ஊழியன் தானே’ என்று யோசிக்கும்போது, அதற்கான விடை கிடைத்தது. Jezebel and Freemason Spirits, இவர் செய்த காரியங்களால் இவருக்குள் வரவில்லை. மாறாக அது generational curse ஆக இவரைத் தொடர்ந்து வந்திருக்கிறது. இந்த ஆவிகளின் செயல்பாடு குடும்பத்துக்குள் பல ஆண்டுகளாக தொடர்ந்து வந்திருக்கிறது.
Rikhard Hartikainen தாத்தா, 3 அல்லது 4 திருமணங்கள் செய்தவர். தலைமுறை சாபம் அதனால் தொடர்ந்து வந்து கொண்டே இருந்திருக்கிறது. Rikhard Hartikainen அப்பாவும், அம்மாவும் திருமணம் செய்வதற்கு முன்னரே, இவர் பிறந்து விட்டார். அதன் பிறகு தான் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். எனவே திருமணத்துக்கு வெளியே பிறந்தவர் (Born out of wedlock). இந்த குறை தான் அவருக்குள் மீண்டும் மீண்டும் காம இச்சை வர முயற்சி செய்வதற்கு காரணமாக இருந்தது. (ஓரு குழந்தை பிறப்புக்கு உடன்படிக்கை மிகவும் அவசியம்)
அம்மாவின் வழியில், அம்மா குடும்பம் Jehovah witness சேர்ந்தவர்கள். ஆனால் அம்மா மட்டும் சிறு வயதிலிருந்தே நாத்திகராக இருந்து, நாத்திகராகவே இவரைப் பெற்று, திருமணமும் செய்து, அதன் பிறகு இரட்சிக்கப்பட்டு இருக்கிறார். எனவே, அம்மாவின் குடும்பத்தின் வழியாக, மன அழுத்த ஆவிகள் தொடர்ந்திருக்கிறது. அம்மாவே அடிக்கடி தற்கொலை செய்ய முயன்ற ஒரு பெண் தான்.
எல்லாவற்றிற்கும் காரியம் வெளிப்பட்டது. ஆனால் இல்லுமினாட்டி எப்படி உள்ளே வந்தது என்று பார்க்கும்போது, அது அதிர்ச்சியாக இருந்தது. Rikhard Hartikainen சிறுபையனாக இருக்கும்போது, அதிகமாக video games விளையாடுபவர். வீடியோ விளையாட்டுகளில், அதிகமான சின்னங்கள் மந்திரவாதம் தொடர்பாக, இல்லுமினாட்டி தொடர்பாக இருக்கும். ஒரு மனிதன் அதை தொடர்ந்து பார்க்கும்போது, வெகு சுலபமாக அவனுக்குள் நுழைய முடியுமாம். சில movies மூலமாகவும் நுழைந்திருக்கிறது.
கொஞ்சம் யோசித்து பார்ப்போம். அந்தக் காலத்தில், வீடியோ விளையாட்டுகளினால், அசுத்த ஆவிகள் ஒரு மனிதனுக்குள் குடியேறி, அவனை தடுமாற வைத்திருக்கிறது. நம் காலத்தில், நம் பிள்ளைகள் பார்க்கும் கார்ட்டூன்களில் பெரும்பான்மையானவைகளில், முக்கோண சின்னமும், ஒற்றைக்கண்ணும் தான் இருக்கிறது. அதை விட்டால் ஏலியன்ஸ் கான்செப்ட் வருகிறது. நம் பிள்ளைகளை சரியாக வளர்க்க வேண்டிய பொறுப்பு எப்படி நமக்கு இருக்கிறதோ, அதேபோல, நம் பிள்ளைகளை அசுத்த ஆவிகளின் பிடியில் சிக்காமல் காக்கும் பொறுப்பும் நமக்கு இருக்கிறது. நமக்குத் தெரிந்தே நம் பிள்ளை ஏதோ ஒரு காரியத்துக்கு அடிமையாகிறான் என்றால், அவன் ஏதோ ஒரு ஆவியுடன் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறான் என்பதை பெற்றோர் உணர வேண்டும்.
ஆக, Rikhard Hartikainen அவரிடமிருந்து, Spirit of Jezebel, Freemasonry and illuminati வெளியேறி விட்டது. பெருமூச்சு விட்டார். அவரால் 100 சதவீதம் சொல்ல முடியும், முழுமையாக விடுதலை பெற்றுக் கொண்டார் என்று. இந்த விடுதலையை அவர் பெற்றுக்கொள்ள, முந்தின தலைமுறைகளிடமிருந்து வந்த, அசுத்த ஆவிகளை, தலைமுறை சாபங்களை அவர் துரத்த தேவை இருந்தது. (Generational curse எப்படி break செய்வது என்று நாம் தொடர்ச்சியாக பார்க்கலாம்.)
எதிர்பாராத ஒரு காரியம் அப்பொழுது நடந்தது. திடீரென அந்த ஊழியர், Rikhard Hartikainen மனைவிக்காக ஜெபிக்க ஆரம்பித்தார். அந்த பெண்ணிடமிருந்து ஒரு அசுத்த ஆவி பேசத் தொடங்கியது. “How did you enter?” என்று அந்த ஊழியர் கேட்டபோது, Rikhard Hartikainen மனைவி சிரித்துக்கொண்டே, தனது கணவனை கைகாட்டினாள். நொறுங்கி போய் விட்டார் Rikhard. இதுதான் soul tie.
ஒரு ஆண் தவறு செய்யும்போது, அது அந்த ஆவி அவனது மனைவியுடனும் போராடுகிறது, அவனுடைய பிள்ளைகளிடமும் போராடுகிறது. ஒரு பெண் தவறு செய்தால், அது அவளது கணவர் மற்றும் பிள்ளைகளிடம் போராடுகிறது. இந்த உண்மையை இங்கே புரிந்து கொள்ளாமல் நாம் இருக்கிறோம். நாம் பூமியில் செய்யும் ஒவ்வொரு காரியத்துக்கும் எதிர்வினை, ஆவிக்குரிய உலகில் நடந்து கொண்டிருக்கிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
Soul tie மூலமாக அசுத்த ஆவிகளுக்கு ஒரு பெரிய கதவை திறந்து விடுகிறோம். உண்மையில் Rikhard Hartikainenக்கு, முதல் விடுதலையின் போதே, அசுத்த ஆவிகள் வெளியேறி விட்டன. அதன்பின்னர் அவருள் இருந்தது, தலைமுறை வழியாக வந்த காரியங்கள். அதற்கு ஒரு ஆழமான விடுதலை(deep deliverance) தேவைப்பட்டது.
அவருக்குள் இருந்த அசுத்த ஆவிகள் ‘எப்போது வெளியே வரலாம்’ என்று போராடிக் கொண்டு இருந்தன. ஆனால் Rikhard Hartikainen அடிக்கடி 40 நாட்கள் fasting போடுவாராம். அதிக நேரம் வேதம் வாசிப்பாராம், ஜெபிப்பாராம். அதனால் அவை வெளியில் வர முடியாமல் இருந்தன.
எப்போது இவர் தன் நாட்டிலேயே மனைவியை விட்டு, ஊழியத்துக்காக Sweden சென்றாரோ, அப்போது அம்மாவின் குடும்ப வழியாய் நுழைந்த மன அழுத்தம் வெளியே வந்தது. படிப்படியாக அசுத்த ஆவிகள் அவரை ஆட்கொள்ள ஆரம்பிக்க, அதற்குள் அவர் தகுந்த தேவ ஊழியரைப் பிடித்து, ஆழமான விடுதலை(deep deliverance) பெற்றுக் கொண்டார்.
அவரது மனைவி, அடிக்கடி பிசாசுடன் கனவில் போராடுவதாக கூறிய நாட்களில் எல்லாம், இவர் porn videos பார்த்து masturbate செய்த நாட்கள். இவர் எப்போதெல்லாம் பாவத்தில் விழுந்தாரோ, அப்போதெல்லாம் அவரது மனைவியையும் அசுத்த ஆவிகள் தொல்லை செய்தன. அதற்கு காரணம் soul tie. Soul tie, Generational Curse பற்றி தொடர்ச்சியாக பார்க்கலாம்.








Leave a Reply