Soul Ties
மாம்சமா? பிசாசா?
ஓரு ஊழியருடைய சாட்சியைப் பற்றி கடந்த இரு பதிவுகளில் பார்த்தோம். அவர் முதன் முறை அசுத்த ஆவிகளின் பிடியிலிருந்து ஒரு விடுதலையைப் பெற்றுக்கொண்டாலும், சில வருடங்களில் அதே பாவம் பின் தொடர்ந்தது. அதற்கு காரணம் Soul tie and generational curses என்று பார்த்தோம். அதற்கு பின்னர் அவருக்கு ஒரு deep deliverance தேவைப்பட்டது.
ஒருவேளை நம்முடைய வாழ்விலும் கூட, ஏதோ ஒரு பாவம் நம்மை பின் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கலாம். நாம் அதை பிசாசின் தாக்குதலாக இருக்குமோ என்று யோசிக்கலாம். அதற்கான பதிவு தான் இது. எல்லா தாக்குதல்களும் பிசாசின் தாக்குதல்கள் அல்ல. நம் மாம்சமே பல பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கும்.
“பிசாசு பிடித்தவன்” (Demon Possession) என்பது வேறு, “பிசாசின் தாக்குதலில் இருப்பவன்” (Demonic Attack) என்பது வேறு. பிசாசு பிடித்திருந்தால், அது ஒரு மனிதனின் உடலையும் மனதையும் கட்டுப்படுத்தும். பிசாசின் தாக்குதலில், வெளியிலிருந்து ஒரு மனிதனை தாக்கும். (எ.கா) அதிக பயம், மன அழுத்தம், ஆவிக்குரிய போராட்டம்.
(குறிப்பு: இங்கு கிறிஸ்தவன் என்று குறிப்பிடப்படுவது பெயர் கிறிஸ்தவர்களை அல்ல, இயேசுவை ஏற்றுக்கொண்டு இரட்சிக்கப்பட்டவர்களை)
ஒரு கிறிஸ்தவனுக்கு பேய் பிடிக்குமா? இந்தக் கேள்வியை பல நேரங்களில் யோசிக்கவே மாட்டோம். ஒருவர் வந்து உங்களுக்குள் அசுத்த ஆவி இருக்கிறது என்று கூறினால், அந்த ஊழியரின் பின்னாலேயே சென்று விடுவோம்.
எப்போது ஒரு மனிதன் இயேசுவை ஏற்றுக்கொள்கிறானோ, அப்பொழுதே ஆவியானவர்(Holy Spirit) அவனுக்குள் வந்து வாசம் செய்ய ஆரம்பித்து விட்டார். இதன்பின், ஒரு மனிதனுக்குள் பிசாசு வாசம் செய்ய (தங்க) முடியாது. வெளியிலிருந்து attack செய்யலாம். அதாவது அவனுக்கு Demon Possession இருக்காது, Demonic attacks இருக்கலாம்.
ஒரு மனிதன் இயேசுவை ஏற்றுக்கொண்ட பின்னர், ஆவியானவர் அவனுக்குள் வசிக்கிறார் என்றால், ஏன் பிசாசின் தாக்குதல்கள்(Demonic attacks) வருகிறது? நம் மாம்சம் இடம்கொடுப்பதால் தான் பிசாசால் நம்மைத் தாக்க முடியும். மாம்சமா? பிசாசா? என்பதைப் பற்றி தான் பார்க்க இருக்கிறோம்.
மாம்சம்:
மாம்சம் என்றால் சரீரமா? அதாவது flesh என்ற மாம்சமும், Body என்று சொல்லப்பட்ட சரீரமும் ஒன்றா? இல்லை. சரீரம் என்று சொல்லப்படும் உடல், சாதாரண உடல் மட்டுமே. ஆனால் மாம்சம் என்பது மனிதனின் வீழ்ந்த இயல்பு (Human fallen nature). மாம்சம் என்றால் பாவத்துக்குள் இழுக்கும் மனிதனின் இயல்பு.
ரோமர் 7: 18,19
- அதெப்படியெனில், என்னிடத்தில், அதாவது, என் மாம்சத்தில், நன்மை வாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்; நன்மைசெய்யவேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது, நன்மைசெய்வதோ என்னிடத்திலில்லை.
- ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன்.
பவுல் சொல்லி இருக்கிறார், மாம்சத்தில் நன்மை வாசம் பண்ணுவதில்லை என்று. நம் மாம்சத்தில் எந்த நல்ல காரியமும் இருக்க முடியாது.
நமக்குள் ஒரு fallen nature (வீழ்ந்த இயல்பு) இருக்கிறது. புரியும்படி சொல்ல வேண்டுமானால், நாம் பிறக்கும்போது நமக்கு ஒரு DNA இருக்கிறது. அந்த DNA நம் பெற்றோரிடமிருந்து வருகிறது, இன்னும் சொல்லப்போனால் அது ஆதாமிலிருந்து பல தலைமுறைகள் கடந்து நமக்கு வந்திருக்கிறது. விழுந்து போன மனிதனுடைய DNA அது. இதைக் கண்டதும் சோர்ந்து போக வேண்டாம், ஆபிரகாமும் அதே fallen natureல் பிறந்தவர் தான், தாவீதும் அதே fallen natureல் பிறந்தவர் தான்… இன்னும் சொல்லப்போனால் வேதத்தில் இருக்கும் பரிசுத்தவான்கள் அனைவருமே (இயேசுவைத் தவிர) fallen natureல் பிறந்தவர்கள் தான்.
பவுல் பிறக்கும்போதும் fallen natureல் பிறந்தார். அதனால்தான் அவர் மாம்சத்தைப் பற்றி பேசுகிறார். ஆனால் மரிக்கும்போது அதே fallen natureல் பவுல் மரிக்கவில்லை. இப்போது மீண்டும் மாம்சத்துக்கு வருவோம். மாம்சம் (அதாவது fallen nature) பாவத்தை விரும்புகிறது. அது தேவனுக்கு எதிரானது. அதனால்தான் மாம்சத்துக்கும், ஆவிக்கும் இடையே எப்பொழுதும் போராட்டம் இருக்கும்.
கலாத்தியர் 5: 19-21
- மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன, அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம்,
- விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள்,
- பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
பவுல் எழுதியிருக்கிறதை கவனித்துப் பாருங்கள். இவ்வளவு பெரிய லிஸ்ட்டை, மாம்சத்தின் கிரியைகள் (works of the flesh) என்று தான் கூறியிருக்கிறார். பிசாசின் கிரியைகள் (works of demons) என்று கூறவில்லை. நாம் பாவம் செய்வது, பிசாசின் கிரியை கிடையாது. நம் மாசத்தின்(fallen nature) கிரியை. நம் மாம்சம் பாவத்தை ஈர்க்கும். இந்தக் காரியங்களை நம் வாழ்வில் தூண்டும். அதற்குள், “நான் இந்த பாவத்தை செய்வதால், நான் பிசாசு பிடித்தவன்” என்றளவுக்கு யோசிக்க கூடாது. அது ஒரு பொய்.
மாம்சத்தின் செயல்பாடு:
யாக்கோபு 1:13,14
13. சோதிக்கப்டுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல.
- அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்.
முதலாவது நம் fallen nature நமக்கு சோதனையை தருகிறது. (சீரியல் பார்க்க ஆரம்பித்து இருப்போம்) இரண்டாவது, அது நம்மை கவரும். ஒவ்வொரு நாளும் மாலை 6 மணி ஆனால், நம்மை அறியாமல் இதயம் அந்த சீரியலுக்கு ஏங்க ஆரம்பித்து விடும். மூன்றாவது பாவம் செய்ய வைக்கும். இதைப் பார்க்காதே என பெற்றோர் சொன்னால், பெற்றோர் மீது கோபம் வரும், பெற்றோருக்கு தெரியாமல் பார்க்க ஆரம்பிப்போம். இப்படி பாவம் நம் வாழ்வில் நுழைந்து விடுகிறது. நான்காவது இந்த பாவம் தொடர்ந்தால், அது மரணத்துக்கு வழிவகுக்கும். (பாவத்தின் சம்பளம் மரணம்) இதுதான் ஒரு சுழற்சி. இதில் எந்த இடத்திலும் பிசாசு வரவே இல்லை.
நம் மாம்சம், முதலாவது ஒரு சோதனையைக் கொடுத்து, அதன் மூலம் நம்மை கவர்ந்து இழுத்து, பாவம் செய்ய வைத்து, மரணத்தைக் கொடுக்கிறது.
மாம்சத்தை எப்படி எதிர்க்க வேண்டும்?
கலாத்தியர் 5:24 கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.
நாம் மாம்சத்தை சிலுவையில் அறைய வேண்டும் என்று வேதம் சொல்கிறது, ஆனால் மாம்சத்தை வெளியேற்ற வேண்டும் என்று சொல்லவில்லை. பிசாசு பிடித்திருந்தால் மட்டுமே வெளியேற்ற வேண்டும். மாம்சத்தை சிலுவையில் அறைய வேண்டும்.
Demons we cast out (வெளியேற்ற வேண்டும்)
Flesh, we crucify (சிலுவையில் அறைய வேண்டும்)
சிலுவையில் அறைய வேண்டும் என்றால், சுய கட்டுப்பாடு (Self-Control), ஒழுக்கம் (Discipline) தேவை. பாவத்துக்கு வழிவகுக்கும் விஷயங்களை விட்டு விலக வேண்டும். வேதம் சொல்கிறது,
மத்தேயு 5: 29,30
- உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்து போடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்.
- உன் வலது கை உனக்கு இடறலுண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்து போடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்.
கண் இடறல் உண்டாக்கினால், பிடுங்கி போட வேண்டும் என வேதம் சொல்கிறது. அது உண்மையான பிடுங்கி போடுதல் என்ற அர்த்தம் அல்ல. ஒரு கண்ணைப் பிடுங்கினால் எவ்வளவு வலிக்குமோ, அவ்வளவு வலி இருந்தாலும், அந்தக் காரியத்தை செய்யக்கூடாது.
ஒரு சீரியலுக்கு அடிமையாகி விட்டீர்கள். அதிலிருந்து வெளியே வர முடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இப்போது தான் self control and discipline தேவைப்படுகிறது. மாலை 6 மணி ஆனால், அதைப் பார்க்கும்படி நம் மாம்சம் நம்மைத் தூண்டும்போது, அவளுக்கு அடுத்த்ததாக என்ன நடந்திருக்கும் என்ற ஆர்வம் நம்மைத் தூண்டும்போது, (முக்கியமான கட்டத்தில் ஒரு சீரியலை விட்டு வெளியே வரும்போது ஒரு வலி வருமே!) அவ்வளவு வலிகளையும் கடந்து ஜெபிக்க வேண்டும். அல்லது ஒரு ஆராதனை போட்டு விட்டு இணைந்து ஆராதிக்க வேண்டும். வலி இல்லாமல், சிலுவையில் அறைய முடியாது.
ரோமர் 6: 6,7
- நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ்செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம்.
- மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே.
மேற்கண்ட வசனத்தின்படி,
நாம் fallen natureஐ சிலுவையில் அறைந்தபின்னர்,
நமக்கு விடுதலை இருக்கிறது…
நமக்கு freedom இருக்கிறது…
நமக்கு deliverance இருக்கிறது.
தொடர்ந்து பிசாசின் தாக்குதல்கள் (Demonic attacks), Deliverance பற்றி பார்க்கலாம்.








Leave a Reply