Soul Ties

ஆவி, ஆத்துமா, சரீரம்

“கூடு விட்டு கூடு பாய்தல்” நாம் இன்றைய பகுதியை புரிந்து கொள்ள ஒரு சின்ன எடுத்துக்காட்டு தான் தவிர, இது வேதத்தின்படி தவறானது. “கூடு விட்டு கூடு பாய்தல்” என்றால் பொதுவாக ஒரு உடலை விட்டு மற்றொரு உடலுக்கு உயிர் / ஆவி போவது (reincarnation அல்லது body-switch) என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் வேதாகமத்தின் பார்வையில் இது நடைபெறாது.

உலகில் பரவும் கருத்தான, “கூடு விட்டு கூடு பாய்தல்”, இதைப்பற்றி கொஞ்சமேனும் அறிந்திருப்போம். நீங்கள் படம் பார்ப்பவர்களாக இருந்தால், சில திரைப்படங்களின் மூலம் இதைப்பற்றி அறிந்திருக்கலாம்.

சில திரைப்படங்களில், கோமாவில் இருக்கும் நோயாளியின் ஆவி, வெளியே அலைவது போல இருக்கும். உடல் என்பது வெறும் கூடு தான். அந்த ஆவி மட்டும்தான், பேச முடியும், உணர முடியும். அந்த ஆவி திரும்ப அந்த உடலுக்குள் சென்றால்தான் அந்த குறிப்பிட்ட நபர் பிழைக்க முடியும்.

குறிப்பிட்ட தமிழ் திரைப்படத்தில், ஹீரோவின் அப்பா உடலில், வில்லன் (body switch) நுழைந்து(கூடு விட்டு கூடு பாய்ந்து), பணம் கொள்ளை அடிக்க வைப்பார். கேமராவில் பார்க்க, அது ஹீரோவின் அப்பா கொள்ளையடித்தது போல இருக்கும். ஆனால் உண்மையில் வில்லன், அவரது உடலில் நுழைந்து இதைச் செய்திருப்பான். கொள்ளை அடித்த உடல் ஹீரோவின் அப்பாவாக இருந்தாலும், கொள்ளை அடித்தவர் வில்லன் என்பது படம் பார்க்கும் நபர்களுக்கு புரியும். உருவம் யாருடையதாக இருந்தாலும் பரவாயில்லை. யாருடைய ஆவி உள்ளே இருக்கிறதோ, அவர் தான் அந்த மனிதன்.

கதை படிப்பவர்களாக இருந்தால், கூடு விட்டு கூடு பாய்வது பற்றி நிச்சயம் சில கதைகளிலாவது படித்திருக்கலாம். எப்படியோ, “கூடு விட்டு கூடு பாய்தல்” என்பது பற்றி சிறிய அறிவு நமக்கு இருக்கிறது. இந்த உடல் என்பது ஒரு கூடு தான். உலக கருத்தின்படி, ஒரு மனிதன் அந்த கூட்டை விட்டு, வேறொரு கூட்டுக்குள் சென்று வாழ முடியும். இதன்மூலம், ஒரு மனிதனின் ஆவி தான் “அவன்” (“A person’s spirit is the real person”) என்பது புரிகிறதா? கூடுவிட்டு கூடு பாய்தல் என்னும் கருத்து தவறானதாக இருந்தாலும், வேதத்தை அறியாதவர்கள் கூட, ஒரு மனிதன் என்பது அவனுடைய ஆவி தான், அவன் சரீரம் அல்ல என்பதை அறிந்திருக்கிறார்கள்! என்பது ஆச்சரியம்தான். ஆனால் வேதாகமப்படி ஒரு மனிதனின் உயிர் மற்றொரு உடலில் குடியிருக்காது

எபிரெயர் 9:27 அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,

எனவே ஒரு உடலை விட்டு மற்றொரு உடலுக்கு போவது என்ற கருத்து வேதாகமத்தில் இல்லை. அப்படியானால் அது எப்படி நடக்கும்?

வேதாகமம் இதை உண்மையான ‘மனித ஆவி மாற்றம்’ என்று சொல்லாது.

சில சமயங்களில், “பிசாசின் தாக்குதல்” அல்லது “ஏமாற்றும் ஆவிகள்” என்று விளக்கப்படுகிறது.

1 தீமோத்தேயு 4:1 ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள்.

இப்போது நாம் ஏன் இந்த தேவையற்ற கருத்துக்களைப் பார்த்தோம் என்றால், ஒரு சிறிய புரிந்து கொள்ளுதலுக்காகத்தான். கோமாவில் இருக்கும் நபரின் ஆவி/ஆத்துமா, அந்த உடலுக்குள் நுழைந்தால்தான், அந்த நபர் உயிருள்ளவர். இல்லையென்றால், அவரது உடல் வெறும் கூடு தான். A person’s spirit is the real person.

வேறொரு திரைப்படத்தில், கொள்ளையடித்தவன் யார் என்றால், அந்த உடலுக்கு சொந்தக்காரன் அல்ல, அந்த ஆவி/ ஆத்துமாவுக்கு சொந்தக்காரன். எனவே “சரீரம்/உடல்(Body) என்பது வெறும் கூடுதான்.” ஒரு உலகப்பிரகாரமான மனிதனுக்கு கூட இந்த ஞானம் இருக்கிறது. எனவே, “நாம் யார்?” என்பது, நம்முடைய ஆவியைப் பொறுத்தது என்பதை நம்மால் அறிய முடிகிறது.

“நான் ஒரு ஆவி… எனக்கு ஒரு ஆத்துமா இருக்கிறது… நான் சரீரத்தில் வாழ்கிறேன்.”

“I am a Spirit, I have a Soul, I live in a Body.”

இவை தான் மையக்கருத்து(Core concept). இக்கருத்தைப் புரிய வைப்பதற்காகத்தான் வேதத்துக்கு புறம்பான காரியங்களை இப்பதிவில் இணைத்து, இவை வேதத்துக்கு புறம்பானவை என்று சொல்லி, அதற்கான விளக்கத்தையும் இணைத்துள்ளோம்.

பவுல் கூறுகிறார், 2கொரிந்தியர் 5: 8,9

8 நாம் தைரியமாகவேயிருந்து, இந்தத்தேகத்தை விட்டுக் குடிபோகவும் கர்த்தரிடத்தில் குடியிருக்கவும் அதிகமாய் விரும்புகிறோம்.

9 அதினிமித்தமே நாம் சரீரத்தில் குடியிருந்தாலும் குடியிராமற்போனாலும் அவருக்குப் பிரியமானவர்களாயிருக்க நாடுகிறோம்.

நம்முடைய topic, “Soul Ties” என்பதனால், ஆவி, ஆத்துமா, சரீரம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

தேவன் எப்படி பிதா, குமாரன், ஆவியானவராக இருக்கிறாரோ, அப்படியே நாமும் மூன்று பகுதிகளைக் கொண்ட மனிதர்கள் தான். நாம் ஒரு ஆவி, நமக்கு ஒரு ஆத்துமா இருக்கிறது, நாம் சரீரத்தில் வாழ்கிறோம்.

ஒரு கண்ணாடி முன் நின்று பார்க்கும்போது, நம் உடல் தெரிகிறது. “இதுதான் நான்” என்று நினைத்து, அந்த உடலை அழகாக்க அதிக பிரயாசப்படுகிறோம். ஆனால் உண்மையில் நாம் ஒரு ஆவி, நம் ஆவியை வைத்திருக்கும் ஒரு இடம் தான் சரீரம். இந்த உண்மை நமக்குப் புரிய வேண்டும்.

நம் உடல்தான் நம் சரீரம். மாம்சம் வேறு, சரீரம் வேறு என்பதை கடந்த பதிவில் பார்த்தோம். ஒரு மனிதன் இவன்தான் என்று, நாம் சரீரத்தை பார்க்கிறோம். ஆனால் உண்மையில், நாம் யார் என்பது, ஆவி தீர்மானிக்கிறது. நாம் ஒரு ஆவி. நமக்கு ஒரு ஆத்துமா இருக்கிறது. நாம் சரீரத்தில் வாழ்கிறோம்.

ஒரு மனிதனுடைய இதயமும், மூளையும் இணைந்தது தான் ஆத்துமா. வரும் பதிவுகளில் இதைக்குறித்து தெளிவாகப் பார்க்கலாம். நம்முடைய mind, will and emotions தான் ஆத்துமா. இதுதான் உலக ஞானம். ஆத்துமாவில் வாழ்வது என்றால், உலகத்தில் நாம் பார்ப்பதிலிருந்து கற்றுக்கொண்ட காரியங்கள், படித்ததிலிருந்து கற்றுக்கொண்ட காரியங்களை வைத்து தான் நாம் வாழ்கிறோம். இன்றும் அநேக ஜனங்கள் தங்கள் ஆவி உயிர்ப்பிக்கப்படாமல், வெறும் ஆத்துமாவிலேயே வாழ்ந்து மடிகின்றனர். தங்களுக்குள் இருக்கும் ஆவியைப் பற்றிய உணர்வு இல்லாமலே வாழ்ந்து முடிக்கின்றனர்.

அடுத்ததாக ஆவி, நம் தேவன் ஆவியாயிருக்கிறார். நாம் அவருடன் connect செய்ய வேண்டுமானால், நம் ஆவி உயிர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். அதற்காக பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டாம். இயேசுவை இருதயத்தில் விசுவாசிக்க வேண்டும். இரட்சிக்கப்பட வேண்டும்.

நம் ஆவி, ஆத்துமா, சரீரம் பற்றி தொடர்ச்சியாகப் பார்க்கலாம். மேலும் soul tie, Generational Curses பற்றி பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேவனுக்கு தூரமாகி விட்டேனா?

Am I away from God?

வாழும் சாட்சிகள்

Testimonies of God’s People

விடுதலை

ஆபாச பட அடிமைத்தனம்

இஸ்ரேல் – ஆய்வு கட்டுரை

(வேதாகம கால முதல் தற்போது வரை)

வேதாகம பண்டிகைகள்

(யூதர்களின் பண்டிகைகள்)

விசுவாச அறிக்கை

(தினமும் ஜெபிக்க சில அறிக்கைகள்)

நன்றியுடன் 21 நாட்கள்

December 2023

ஒரு வருட வேதாகம வாசிப்பு திட்டம்

2025 Chronological Bible Reading Plan