திருமணத்துக்கு பிறகு ஆபாச படம்

இந்த deliverance பற்றி எழுத உள்ளத்தில் உந்தப்பட்ட எனக்கு, உண்மையில் எப்படி ஆரம்பிக்க வேண்டும்? எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்ற புரிதல் இல்லை. அந்த நேரத்தில், என் நண்பர் ஒருவரிடம் இருந்து எனக்கு whatsapp message வந்தது, “உன் ministryக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறேன்” என்று. அவரிடம் இதைப்பற்றி நான் பேசும்போது, அழகான ஒரு விளக்கம் கொடுத்தார்.

According to Bible, we can’t resist but we have to run away from the sin like Joseph.

Many Youths are thinking that, Porn addiction will go, after marriage. That’s nor true. It will chase them, after marriage too.

இதுதான் எனக்கு அவர் கொடுத்த விளக்கம். மிகவும் அழகாக, அடுத்த pointக்கு நேராக, நண்பர் மூலம் என்னைக் கொண்டு சென்ற பரிசுத்த ஆவியானவரை ஸ்தோத்தரிக்கிறேன். இன்றைய தலைப்பு திருமணத்துக்கு பிறகு ஆபாச படம்.

ஒருவேளை இன்று உங்கள் மனைவி ஆபாசபடம் பார்க்கலாம், அல்லது உங்கள் கணவர் ஆபாசபடம் பார்க்கலாம். நீங்கள் நினைவில் வைக்க வேண்டிய ஒன்று, உங்கள் துணையினுடைய அந்த அடிமைத்தனத்துக்கு நீங்கள் காரணமல்ல. உங்களை சந்திப்பதற்கு முன்பாகவே, அவர் அந்த அடிமைத்தனத்தில் இருந்திருப்பார். ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், நம் வாழ்க்கைத்துணை தவறும்போது, நம்மை அறியாமலேயே, நம் மனதில் ஒரு குற்ற உணர்வு வந்து விடும். “அவருடைய இந்த தவறான பழக்கம் என்னால் தான்.. நான் அவரை திருப்தி படுத்தவில்லை” என நினைப்போம்.

ஒருவேளை நீங்கள் ஆபாசபடம் பார்ப்பவராக இருந்தால், உங்களைக் குற்றப்படுத்த இந்த பதிவு இல்லை. ஆனால் நீங்கள் தெரிந்து கொள்வதற்காக இந்த பதிவு. “என் கணவர் என்னை திருப்திபடுத்தவில்லை. அதனால் சிக்கி விட்டேன்” அல்லது “என் மனைவி என்னை திருப்திபடுத்தவில்லை. அதனால் இந்த இரகசிய பாவத்தில் சிக்கி விட்டேன்” என்ற எண்ணத்தை உங்கள் மனதில் இருந்து தூர தூக்கிப் போடுங்கள். நீங்கள் உங்கள் துணையை(கணவரை) சந்திப்பதற்கு முன்பாகவே, நீங்கள் ஆபாசபடம் பார்த்து, அந்த பாவத்தின் கதவை, உங்கள் வாழ்வில் பெரிதாக open செய்து வைத்துவிட்டீர்கள். இதை ஒத்துக் கொள்ளுங்கள். எனவே தேவையில்லாமல் உங்கள் துணைவரின் மீது வெறுப்பை வளர்க்காதீர்கள்.

இதைப் படித்தவுடன், “அப்படியானால் தவறு என் மீதுதான்” என்று குற்ற உணர்ச்சிக்கு உள்ளாகாதீர்கள். குற்ற உணர்ச்சியை வைத்து ஒன்றும் செய்ய முடியாது. நம்மில் பலர் இப்படித்தான் நினைக்கிறோம். ஒன்று, “என் இந்த தவறுக்கு காரணம் இவர்தான்” என யாரோ ஒருவரைக் குற்றப்படுத்துவோம்… அல்லது, “ஐயோ நான் பாவி” என குற்ற உணர்ச்சியில், நம்மை நாமே தண்டித்துக் கொண்டிருப்போம். இடைப்பட்ட நிலையிலிருந்து யோசிக்க மாட்டோம்.

“ஐயோ நான் தவறு செய்கிறேனே. தேவன் இனி என்னை மன்னிக்க மாட்டாரா? அவரை விட்டு வெகு தொலைவில் சென்று விட்டேனா?” என்ற குற்ற உணர்ச்சியை தூர தூக்கி எறியுங்கள். அப்படி தேவனை விட்டு நீங்கள் தூரம் போனதாக நினைத்தால் உங்கள் மனதில் என்ன இருக்கிறது தெரியுமா?

“ஆபாசபடம் பார்ப்பது என்பது மிகவும் பெரிய பாவம். அதிலிருந்து எனக்கு விடுதலை கொடுக்குமளவுக்கு என் தேவனுக்கு வல்லமை இல்லை. மற்ற எல்லா பாவங்களையும் இயேசு சிலுவையில் சுமந்து விட்டார். ஆனால், இந்த ஒரு பாவத்தை மாத்திரம் சுமக்க மறந்து விட்டார்” என்று நினைக்கிறீர்கள் என அர்த்தம். நம் தேவனுக்கு விடுதலை கொடுக்க வல்லமை இல்லை என்று நினைக்கிறீர்களா? நம் தேவனுடைய வல்லமையைப் பார்க்கிலும், பிசாசின் வல்லமை பெரிதானதா?

இதைப் பற்றி மறுபடி மறுபடி சிந்தியுங்கள். தேவன் வல்லமையுள்ளவரா? பிசாசு வல்லமையுள்ளவனா? சிந்தித்தால் வெகு சுலபமாக இந்த குற்ற உணர்ச்சியிலிருந்து வெளிவரலாம். குற்ற உணர்ச்சியை தருவது பிசாசு. நம் மனதில் குற்ற உணர்ச்சியை விதைத்தே, நம்மை தேவனிடமிருந்து பிரிப்பதில் வல்லவன் அவன்.

குற்ற உணர்ச்சி என்பது பாவ உணர்வு அல்ல. பாவ உணர்வு அடைந்தால்தான், தேவனிடம் திரும்ப முடியும். பாவ உணர்வு உண்மையில் நல்லது. “நான் பாவி” என ஒருவன் உணர்ந்தவுடன் உடனடியாக, “இயேசு சிலுவையில் என் பாவத்தை மன்னித்து விட்டார். அவர் இரத்தம் என்னை சுத்தமாக்கி விட்டது. நான் இப்போது இயேசுவிடம் வந்தால் எனக்கு விடுதலை கிடைக்கும்” என்பதை உணர்ந்தால், அது நல்லது. அதுதான் பாவ உணர்வு. ஆனால் உண்மை அப்படி இல்லையே. “நான் ஆபாச படம் பார்த்து விட்டேன். நான் பாவி. நான் தேவனை விட்டு தூரமாகி விட்டேன். எவ்வளவு நாட்கள் பின்வாங்கி போய்விட்டேன். எனக்கு மன்னிப்பே கிடையாது” என்றல்லவா நினைக்கிறோம். அப்படியென்றால், அது குற்ற உணர்ச்சி. நமது குற்ற உணர்ச்சியை பிசாசு உபயோகித்துக் கொண்டிருக்கிறான் என்பது உண்மைதானே!

இந்த பதிவுகள் உங்களுக்கானது என்று தோன்றினால், உங்களிடம் சொல்ல விரும்புவது ஒன்றுதான். உங்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது. உங்கள் வாழ்வு திரும்ப கட்டப்படும். அதைப்பற்றி வரும் பதிவுகளில் பார்க்க இருக்கிறோம். இப்போது நம் துணையின் விடுதலைக்கு, நமக்கு சில அர்ப்பணிப்புகள் (commitments) தேவை.

  1. முதலாவது ஆழ்ந்த பெருமூச்சு எடுத்து விடுங்கள். நீங்கள் இப்போது தனியாக இல்லை. You are not alone! உங்களுடன் நாங்களும் இருக்கிறோம், தேவன் இருக்கிறார், பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார், தேவன் தந்த வேதம் இருக்கிறது, நல்ல சபை இருக்கிறது. அதனால், நீங்கள் தனியாக இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
  2. இரண்டாவது, உங்கள் வாழ்க்கை துணையின் பாவம் என்பது, உங்கள் தவறல்ல. அனேகர் தங்களை தாங்களே குற்றம் சுமத்திக் கொள்கின்றனர். அது உங்கள் தவறல்ல. உங்களைப் பார்ப்பதற்கு முன்னரே அவர், ஆபாச படத்தின்(pornography) மூலமாக, பலரைப் பார்த்து, தன் இச்சையை தீர்த்துக் கொண்டார். அப்படியானால், இது அவருடைய தவறு என்றும் எண்ணக்கூடாது. அது அவருடைய பலவீனம். அவருடைய பலவீனத்தில் நீங்கள் துணையாக இருக்க வேண்டும். உங்கள் வாழ்வில் நெருக்கிக் கொண்டிருக்கும் இந்த காரியம், உங்கள் இருவரின் தவறல்ல. பின்னாலிருந்து செயல்படுவது சில ஆவிகள்.
  3. மூன்றாவது அவருக்கு தேவை, உங்களது அன்பான பேச்சு. உங்களது குத்திக்காட்டும் பேச்சு அவருக்கு தேவை கிடையாது, அவருடன் கைகோர்த்து இதற்காக ஜெபியுங்கள். ஒருவேளை அவர் ஜெபிக்க விரும்பவில்லை என்றால், உங்களது துணைக்காக நீங்கள் ஆண்டவர் பாதத்தில் அமர்ந்திருக்க வேண்டும்.
  4. நான்காவதாக, நீங்களும் உங்கள் துணையும் ஜெபித்தாலும் கூட, நிச்சயமாக இன்னொருவர் துணை உங்களுக்கு உதவும். உங்கள் விடுதலைக்காக (Deliverance) ஜெபிக்க கூடிய ஒருவர் தேவை. சில சபைகளில், Deliverance meeting நடக்கும். அதில் நீங்கள் இருவரும் சென்று பங்கேற்கலாம். ஜெபிக்க கூடிய எத்தனையோ தளங்கள், பெரிய ஊழியர்களின் 24 மணி நேர ஜெப உதவிகள் இருப்பதை நாடலாம். நம் சபை போதகரை நாடலாம். தெரியாத ஒருவருக்கு, Email மூலமாக ஜெப தேவையை அனுப்பலாம். விடுவிக்கும் அபிஷேகம் (Deliverance Annointing) கொண்ட ஒருவர் ஜெபம் உங்களுக்கு தேவை.
  5. உங்கள் உபவாச ஜெபமும், உங்களுக்காக அதிகாரத்துடன் ஜெபிக்கும் ஒருவரும், உங்களுக்கு தேவை என்பது நிச்சயம்.

இதெல்லாம் செய்தால், உடனே விடுதலை கிடைத்து விடுமா? நாம் தொடர்ச்சியாக இதைப் பற்றி, ஒரு 10 பதிவுகள் பார்க்க போகிறோம். சிலரது அனுபவங்கள் மூலமாக கற்றுக் கொள்ளப் போகிறோம். கர்த்தர் வெளிப்படுத்திய சில காரியங்களை கற்றுக்கொண்டு, விடுதலை பெறப்போகிறோம். சில அற்புதங்கள் உடனே நடக்கிறது. சில அற்புதங்கள் நடக்க சில வருடங்கள் ஆகும். தேவனுடைய வேளை (Gods Timing) எப்போது என்பது நமக்கு தெரியாது. ஆனால் நாம் கற்றுக்கொள்கிற காரியங்களை தொடர்ச்சியாக செய்யும்போது, ஒருநாள் நிச்சயமாக விடுதலை அடைவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *