நாம் Daniel M Ross என்பவர் எப்படி Porn Addictionல் இருந்து வெளியே வந்தார் என்பதை பார்த்துக் கொண்டு இருக்கிறோம். வியாழன் மதியம் 10 மாத குழந்தையின் அழுகையை control செய்ய திணறிய Daniel M Ross, தன் குடும்பத்தாரிடம் ஆத்திரமாக கத்தினார். ஆனால் அப்படி அவர் கோபப்பட்டதன் காரணம், 2 நாட்கள் முன்பு, செவ்வாய் அன்று அவர் பார்த்த ஆபாசபடம் என்பதை உணர்ந்தார். பொதுவாகவே அவர் ஆபாசபடம் பார்த்து முடிந்ததும், தனக்குள் ஒரு காற்று போல, அசுத்த ஆவி உள்ளே நுழைவதை பார்ப்பார். அவர் இச்சை என்னும் கதவைத் திறந்தபோது, அந்த திறந்த கதவின் வழியாக, கோபம், மூர்க்கம், ஆத்திரம் என பல பேய்கள் உள்ளே வந்து விட்டதாக கூறுகிறார் Daniel M Ross.
இதை அவர் உணர்ந்து விட்டார். அதன்பின் அவர் வாழ்வில் என்னவெல்லாம் வந்தது?
- அதீத குற்ற உணர்வு
- பொறுமையின்மை
- தனிமை
- பிடிவாதம்
- ஆத்திரம்
ஒரு ஜெபிக்கிற வீட்டில் பிறந்து வளர்ந்த Daniel M Rossஆல், தனக்கு நேரிடும் மாற்றத்தை சுலபமாக புரிந்து கொள்ள முடிந்தது. அன்னிய பாஷை பேசும் அவருக்கு, தனக்குள் அசுத்த ஆவிகள் நுழைவதை உணர முடிந்தது. அதன் பின்னர் தன் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களையும் (குற்ற உணர்வு, தனிமை, பிடிவாதம், ஆத்திரம்) உணர முடிந்தது. அவரால் இப்பாவத்தில் தொடர்ந்து இருக்க முடியவில்லை. மாற்றத்தை விரும்பினார். கஷ்டப்பட்டு பாவத்திலிருந்து வெளிவருவார். மீண்டும் மீண்டும் விழுவார். மாதத்துக்கு ஒருமுறை அல்லது மூன்று மாதத்துக்கு ஒருமுறை, இந்த பாவத்துக்குள் விழுந்து விடுவார். அவரால் இந்த விழுதலை தாங்க முடியவில்லை. நிரந்தர தீர்வுக்காக ஏங்க ஆரம்பித்தார். (இன்று நம்மில் அனேகர் கூடஇதே நிலையில் இருக்கிறோம் அல்லவா! ஜெயம் எடுத்த தேவன் நம்முடன் இருக்கிறார். சோர்ந்து போகாதிருங்கள்)
முதலாவது, தன் மனைவியிடம் தன்னை வெளிப்படுத்தினார் Daniel M Ross. “நான் Porn Video பார்ப்பேன். சுய இன்பம் செய்வேன். Nude Chat செய்வேன். என்னால் இந்த பாவத்திலிருந்து வெளிவர முடியவில்லை” என்று தன் மனைவியிடம் ஒத்துக் கொண்டார் Daniel M Ross. அவரது மனைவி, தன் கணவரை குற்றப்படுத்தவில்லை. தன் மீ தவறு என அவர் துவண்டும் போகவில்லை. அவர் செய்த ஒரே காரியம், தன் கணவரின் கையைப் பிடித்து, கணவரோடு இணைந்து தன் கணவரின் விடுதலைக்காக ஜெபித்தார். தன் மனதினுள் ஒரு விடுதலையை உணர்ந்தார் Daniel M Ross. “இனி எதுவும் இல்லை. நான் விடுதலை பெற்றுக் கொண்டேன்” என அவர் யோசித்தார். ஆனால் மீண்டும் பாவத்தில் விழுந்தார் Daniel M Ross.
இதன்பின்னர் தான், வியாழன் அன்று நடந்த சம்பவம். இச்சம்பவம் அவரை வெகுவாக பாதித்தது. தனக்கு இன்னும் அதிகமான prayer support வேண்டும் என நினைத்தார். தன் குடும்பத்தில் ஜெபிக்கும் பிள்ளைகளுக்கு, ஒரு message அனுப்பினார். “நான் சில காரியங்களை confess செய்ய வேண்டும். உங்களோடு ஜெபிக்க வேண்டும். நேரம் கிடைக்கும்போது நாம் சந்திக்கலாம்” என அனுப்பினார். குடும்பத்தினர் ஒரு நேரத்தைக் குறித்து கூடி விட்டனர்.
Daniel M Rossக்கு தூக்கு மேடைக்கு போவதைப் போல இருந்தது. ஏனெனில் அவர் இப்போது தன் குடும்பத்திடம், மாம்சத்தின் இச்சைக்கு அடிமையானதை பற்றி சொல்ல இருக்கிறார். அவர் open செய்த கதவின் வழியாக, கோபத்தின் ஆவி நுழைந்து, குடும்பத்தினரிடம் அவரை மூர்க்கமாக நடக்க வைத்தது. அதை இப்போது வெளிப்படுத்த நினைக்கிறார்.
தன் மனைவியிடம், “நான் எல்லாரிடமும் உண்மையைச் சொல்லப் போகிறேன்” என சொல்லும்போது, “வேதத்தை படித்து, பரிசுத்த ஆவியானவர் எப்படி வழிகாட்டுகிறாரோ, அப்படி செய்யுங்கள்” என கூறி விட்டார் மனைவி. இந்த இடத்தில், அவரது மனைவியைப் பாராட்ட வேண்டும். தன் கணவனுடைய முடிவில் அவர் தலையிடவில்லை, அதே சமயம் உனக்கு தோணுவதை செய் என்றும் சொல்லவில்லை. பரிசுத்த ஆவியானவரின் வழி காட்டுதலைக் கேட்க சொன்னார். மனைவியிடமிருந்து இந்தக் காரியத்தை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். நம் துணையைக் குற்றப்படுத்தவும் கூடாது, அவரை விட்டுக்கொடுக்கவும் கூடாது. இந்தக் காரியத்தை உறவினர்களிடம் கூறினால், அந்த மனைவிக்கும் அது அசிங்கம்தானே. அந்த இடத்தில் மனைவியும் தலைகுனிய வேண்டும். ஆனாலும் கணவரின் உணர்வுக்கும், பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலுக்கும் மதிப்பு கொடுத்தார் Daniel M Rossன் மனைவி.
குடும்பம் கூடிவிட்டார்கள். பேச ஆரம்பித்தார் Daniel M Ross. யாருடைய கண்களையும் பார்த்து பேச அவருக்கு தைரியமில்லை. மிகவும் அவமானமாக உணர்ந்தார். Porn பார்த்தது, Dating appல் நேரம் செலவளித்தது, Nude Photos exchange செய்தது, என அவர் செய்த அனைத்தையும், தன் மனைவியின் முன், குடும்பத்தார் அனைவரிடமும் கூறினார் Daniel M Ross. அவருக்கு இப்போது தேவை, “என்னில் நுழைந்திருக்கிற எல்லா அசுத்த ஆவிகளையும் நான் துரத்த வேண்டுமானால், இப்போது இந்த அறிக்கை(confess) முக்கியமானது. அவர்களுடைய ஜெபம் எனக்குத் தேவை” தன் இதயத்தை உலுக்கினாலும், குடும்பத்தாரிடம் அறிக்கையிட்டார் Daniel M Ross.
பின்னர், குடும்பத்தார் அனைவரும் ஜெபித்தார்கள். Daniel M Rossம் ஜெபித்தார். ஆனால் அன்றைய ஜெபம் அவருக்கு வித்தியாசமாக இருந்தது. முதலில் அன்னிய பாஷையில் ஜெபித்தார், பின்னர் அன்னிய பாஷையில் கத்தினார், பின் அன்னிய பாஷையில் அழுதார். பரிசுத்த ஆவியானவரின் தலையீடு அதிகமாக இருந்தது. ஏதோ ஒன்று உடைந்ததை உணர்ந்தார்.
அவருக்காக ஜெபித்த குடும்பத்தினரில் பலர் கண்ணீர் விட்டு ஜெபித்தனர். அசுத்த ஆவி Daniel M Rossன் உடலை விட்டு வெளியேறியது.(அசுத்த ஆவி உள்ளே நுழைவதை பார்க்க முடிந்த அவரால், அது வெளியேறுவதை பார்க்க முடியாதா?) அவரால் நிற்க கூட முடியாமல் போனது. கர்த்தரை துதித்து விட்டு, எல்லாரும் பிரிந்து சென்றனர். இதோடு ஜெபம் முடிந்ததா? இல்லை. அவருடைய மனைவி அவரிடம் வந்து, “ஏதாவது சாப்பிட்டீர்களா?” என கேட்டார். இல்லை என பதில் கொடுத்ததும், “நாம் உபவாசமாக இந்த ஜெபத்தை தொடரலாமா?” என ஊக்கப்படுத்தி, அந்த நாள் முழுவதும் கணவன் மனைவியாக உபவாசமாக ஜெபித்தார்கள். தண்ணீர் கூட குடிக்காமல், முழு உபவாசமாக இருவரும் ஜெபித்து, பூரண விடுதலையைப் பெற்றுக் கொண்டார் Daniel M Ross.
அதோடு நிற்கவில்லை. ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில், உபவாசமிருந்து ஜெபிப்பதாக பொருத்தனை செய்தார்கள். இன்றும் ஒவ்வொரு மாதத்தின் ஒன்றாம் தேதியிலும், முழு உபவாசமிருந்து, அந்த மாதம் முழுவதுக்கு சேர்த்து, பலவானை முந்திக் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள் அந்த தம்பதிகள்.
இப்படித்தான் Daniel M Ross முழுமையான வெற்றி பெற்றார். அவர் விடுதலை பெற்றார். மற்றவர்கள் விடுதலை பெற வேண்டும் என்பதற்காக, தன் சாட்சியை இலவசமாக வெளியிட்டு வருகிறார். கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும்.
நாம் Pastor.Vlad Savchuk அவர்கள், எப்படி இந்த பாவத்திலிருந்து வெளிவந்தார்கள் என்பதைப் பார்த்தோம். Daniel M Ross என்பவர் இந்த பாவத்திலிருந்து வெளிவந்ததை பார்த்தோம். இவர்கள் இருவரும் என்ன செய்தார்கள்? நாம் கற்றுக் கொள்ள வேண்டிய காரியங்கள் என்ன? என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.
Leave a Reply