நேற்றைய பதிவில், இஸ்ரேல் முன்னேறி தாக்கி எப்படி வெற்றி பெற்றது என்பதை பார்த்தோம். இன்றைய பதிவில், மொசாடின் பங்கு என்ன என்பதை பார்க்க இருக்கிறோம். அதாவது, இந்த யுத்தத்தின் பின்னணியில் மொசாட் செய்த சில சித்துவேலைகள் பற்றிய சுவாரசியமான தகவல்களைப் பார்க்க இருக்கிறோம்.
இந்த ஆறு நாள் யுத்தத்தில் எப்படி வெற்றி பெற்றார்கள் என்பதை இஸ்ரேல்-44வது பதிவில் பார்த்து விட்டோம். 1967 ஜூன் 5-1967 ஜூன்11 வரை 6 நாட்கள் யுத்தம் நடைபெற்றது. ஆனால் இந்த யுத்தம் நடைபெறுவதற்கு முன்பு, ஒன்றரை வருடத்துக்கு முன்பே மொசாடுக்கு தகவல் கிடைத்து விட்டது, அரபு நாடுகள் போர் செய்ய தயாராகின்றன என்று. எனவே இஸ்ரேல் எந்த நேரத்திலும் போர் செய்வதற்கு தயாராக இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டது மொசாட்.
இந்த யுத்தத்துக்கு இஸ்ரேல் இராணுவம் தயாராக வேண்டுமென்றால், முதலில் எந்தெந்த நாட்டுக்கு எவ்வளவு படைபலம் இருக்கிறது என்பது மொசாடுக்கு தெரிய வேண்டும். அவர்கள் கேள்விப்பட்ட வரையில் எகிப்தில் விமான படைகள் அதிகமாக இருக்கின்றன. எனவே முதலாவது எகிப்துக்கு மொசாடின் உறுப்பினர்களை அனுப்ப வேண்டும் என முடிவு செய்தது.
இஸ்ரேல் பலவிதமாக தாக்கப்பட்ட நாடு என்பதால், உலகம் முழுவதிலும் இஸ்ரவேலர்கள் பரவிக் கிடப்பர். அதனால் எகிப்துக்கு மொசாடின் உறுப்பினர்களை அனுப்புவது பெரிய காரியமல்ல. இப்போது விமான படைக்குள் மொசாட் ஏஜண்ட்களை அனுப்ப வேண்டும். அதற்கு மொசாட் செய்த காரியம் என்ன தெரியுமா?
ஒரு புதிய கமிட்டி உருவாக்கினார்கள். அதில் மன நல மருத்துவர்கள் தான் தலைவர்கள். தங்கள் ஏஜண்ட்களை எகிப்துக்கு அனுப்பிய மொசாட், அவர்கள் மூலம் மூன்று மாதமாக விமானப்படை வீரர்களின் தனிப்பட்ட அந்தரங்க தகவல்களை எடுத்தனர். இதற்கு ஏன் மனநல மருத்துவர் என்று யோசிக்கிறீர்களா? மனோதத்துவ விதத்தில் அவர்களை அடிப்பது தான் இஸ்ரேலின் பிளான்.
முதல் மூன்று மாதங்கள், எகிப்திலிருந்த ஏஜென்ட்கள், ஒவ்வொருவரின் தனிப்பட்ட தகவலையும் கொடுத்தனர். தனிப்பட்ட தகவல் என்பது, சின்ன சின்ன விஷயங்கள். அந்த வீரர் அணியும் உடையின் எடை, எந்த மாதிரி உடை அணிவார்? எப்பொழுது வீட்டுக்கு போவார்? நேராக வீட்டுக்கு செல்வாரா? காதலி இருக்கிறாளா? மனைவி பிள்ளைகள் இருக்கிறார்களா? வீட்டில் சண்டை போடுவார்களா? இப்படி சின்ன சின்ன தகவல்கள் மூன்று மாதங்களாக மொசாடால் கண்காணிக்கப்பட்டது.
மூன்று மாதம் முடிந்ததும், ஒவ்வொரு வீரரின் வீட்டுக்கும், அவர் இல்லாத நேரத்தில் லெட்டர் வந்தது… உன் கணவருடன் தொடர்பில் இருக்கும் பெண் என போட்டோ வந்தது. உன் கணவர் இந்த நேரத்தில் என்ன செய்தார் தெரியுமா? என போட்டோ வந்தது. எந்த குற்றமும் கண்டுபிடிக்க முடியாத படைவீரருடைய குழந்தை படிக்கும் பள்ளிக்கு கடிதம் வந்தது… இந்த குழந்தை சரியாக படிக்க முடியாத காரணம், அவன் தகப்பன் நோய், மற்றும் கள்ளத்தொடர்பு என்பது போல லெட்டர் போனது. ஒருமுறை லெட்டரோடு நின்றுவிடவில்லை. தொடர்ந்து லெட்டரும், கிஃப்ட் பாக்ஸ்ம் வந்து கொண்டே இருந்தன. ஒரு கட்டத்தில் சோர்ந்து போய்விட்டனர் வீரர்கள். பாதிபேர் வீட்டுக்கு போய் சண்டை போடுவதை தொடர விரும்பாமல், அங்கேயே தங்கி குடிக்க ஆரம்பித்தனர். பாதிபேர் லீவ் போட்டு சென்று, தங்கள் மனைவிமாரை சமாதானப்படுத்த சென்றனர். இந்த இடம் மொசாடுக்கு போதுமானதாக இருந்தது. தங்கள் ஏஜென்ட்களில் விமானப்படையில் சேர முடிபவர்களை எல்லாம் எகிப்துக்கு அனுப்பியது. கிட்டத்தட்ட 100 வீரரில் 30 வீரர் மொசாடைச் சேர்ந்தவராக இருந்தார்.
இவர்கள் இப்போது எகிப்து விமானப்படைக்கு வந்து, விமானங்கள் எங்கே நிறுத்தப்படுகிறது? இரு விமானத்துக்கு இடையில் எவ்வளவு தூரம்? விமானம் எப்படி பறக்கும்? விமான தளங்கள் எத்தனை இருக்கிறது? இரகசிய கோப்புகள்? இரகசிய கேமராக்கள் எல்லாவற்றையும் உளவு பார்த்தது. இப்படி உளவு வேலைக்கு வரும் ஒவ்வொரு நபரையும், மொசாடின் தலைவர் Amit உடன் தனிப்பட்ட சந்திப்பு நடைபெற்றதாம். எனவே எகிப்தின் விமானப்படை பற்றிய முழு விவரமும் இஸ்ரேலுக்கு வந்தது. இந்த தகவல்களை மொசாட் இஸ்ரேல் இராணுவத்துக்கு அறிவித்தது. இஸ்ரேல் இராணுவம், அதற்கு ஏற்றபடி பிளான் பண்ண ஆரம்பித்தது.
மொசாடின் ஏஜென்ட்கள் கொஞ்சமாக புரிய ஆரம்பித்தனர். எகிப்தின் விமானப்படையில், காலை 7.10க்கு மெஸ் ஆரம்பிக்கும். 7.20க்கு சாப்பிட வந்து, 8 மணிக்குள் சாப்பிட்டு முடிப்பர் வீரர்கள். 8.05க்குள் மெஸ்ஸை காலி செய்து, charge sheet வாங்க வந்து விடுவர். ஒருவர் தான் அதிகாரியாக இருந்து எகிப்தின் அத்தனை விமானத்துக்கும் charge sheet கொடுப்பார். எனவே இந்த process முடிய அரைமணி நேரம் ஆகும். கிட்டத்தட்ட 8.30க்கு fuel நிரப்ப விமானியிடம் விமானம் கொடுக்கப்படும். இவ்வளவு துல்லியமான குறிப்புகள் மொசாடின் மூலம், இஸ்ரேல் இராணுவத்துக்கு கிடைத்தது.
இந்த தகவல் மூலம், ஓரளவு இஸ்ரேல் திட்டம் போட முடியும். ஆனால் மொசாடுக்கு வந்த தகவல் உண்மைதானா? என்பதை மொசாட் அறிந்து கொள்ள விரும்பியது. இதற்காக மொசாட் தேடிச் சென்றது Morocco என்ற நாட்டை. “நீங்கள் நாங்கள் கேட்கும் தகவலைக் கொடுத்தால், நாங்கள் உங்களுக்கு தேவையான உதவிகள் செய்வோம்” என டீல் பேசியது மொசாட். Moroccoவின் அரசர் மிகவும் பயந்தார், “ஒருவேளை மொசாடின் ஏஜென்ட்கள் உள்ளே இருப்பதை பிற நாடுகள் கண்டுகொண்டால், பிரச்சனை ஆகிவிடுமே” என்று. அதற்கும் மொசாட் தீர்வு சொல்லியது. பிற நாடுகளுக்கு சற்றும் கேள்விப்பட்டு இருக்காத, அதி நவீன வாய்ஸ் ரெக்கார்டிங் டிவைஸ் கொடுத்தது. விஷயம் இதுதான். Moroccoவில் மற்ற எல்லா அரபு நாட்டின் அரசர்களுக்கும் ஒரு விருந்து நடந்தது. அந்த விருந்தில் கலந்து கொள்ளும் எல்லா அரசரிடமும், அவர்கள் நாட்டின் போர் படையைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
Morocco அரசர், பிற அரசர்கள் தங்கும் ஒவ்வொரு ரூமிலும், வாய்ஸ் ரெக்கார்டர் வைத்தார். ஒவ்வொரு அரசரிடமும், சிறிது நேரம் பேசிவிட்டு, இஸ்ரேல் பற்றி பேசுவார். 1967ல் Morocco நட்பு நாடு என்பதால், அரபு நாடுகள் தங்கள் நாட்டில் இருக்கும் போர்ப்படைகளின் விவரங்களைக் கூறி, இஸ்ரேலை அழிப்பதே தங்கள் தலையாய நோக்கம் என கூறினர். Morocco அரசர், அந்த ரெக்கார்டரை மொசாடிடம் ஒப்படைத்து விட்டார். இஸ்ரேலர்கள் அதை Hebrew மொழியில் மொழி பெயர்த்து, எல்லா விவரங்களையும் அறிந்து கொண்டனர். இதன் மூலம் மொசாட், யுத்தம் வருவது நிச்சயம் என்பதை அறிந்து கொண்டது, அதோடு ஒவ்வொரு நாட்டின் போர் வலிமைகள் என்ன என்பதையும் அறிந்து கொண்டது.
இந்த 1967 யுத்தத்தில், இஸ்ரேலிடம் இருந்தது வெறும் 300 விமானங்கள் மட்டுமே. அதுவும் அதி நவீன விமானம் கிடையாது. அந்த நேரங்களில் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு இப்போது இருப்பதைப்போல நட்பு நாடு கிடையாது. எனவே இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்தது, பிரிட்டனும், ஃபிரான்ஸ்ம் தான். அதே நேரத்தில் அரபு நாடுகளில் (Egypt, Syria, Jordan) மொத்தம் 660 விமானங்கள் இருந்தது. கிட்டத்தட்ட இஸ்ரேலை விட இருமடங்காக இருந்தது. அதிலும் எகிப்திடம் TU16 என்னும் போர் விமானம், சோவியத் ரஷ்யாவால் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த ஒரு விமானம் போதும், இஸ்ரேலை முழுமையாக அழித்து விடலாம். இதெல்லாம் சேர்ந்து அரபு நாடுகளுக்கு தைரியத்தைக் கொடுத்தது. ஆனால் இந்த விமானம் பற்றிய தகவல்கள் கிடைத்ததே, இஸ்ரேல் அடுத்தடுத்த திட்டங்கள் தீட்ட போதுமானதாக இருந்தது.
இந்த அரபு நாடுகள் என்பதில் முக்கியமானது, எகிப்து, சீரியா, ஜோர்தான். அதில் Jordan நாடு, மற்ற நாடுகளுக்கு தெரியாமல் இஸ்ரேலுடன் நட்பு நாடாக இரகசிய கூட்டணியில் இருந்துள்ளது. இந்த 1967 யுத்தத்தில், ஜோர்தான் அரசராக இருந்தவர் King Hussein. இவருடைய தாத்தா அரசராக இருக்கும்போது, இஸ்ரேலுடன் யாருக்கும் தெரியாமல் நட்பு பாராட்டினார். ஆனால் இதை அறிந்த பாலஸ்தீன தீவிரவாதிகள் (PLO) அவரைக் கொன்று விட்டனர். அதனால் தன் 15 வயதிலே அரசரானார். கண்ணுக்கு முன்னே தாத்தாவின் சாவைப் பார்த்த King Hussein, அதனால் PLO மீது, அதிருப்தி ஆகி, இஸ்ரேலோடு இரகசிய நட்புடன் இருந்தார். ஒருமுறை, இஸ்ரேல் மீது ஒரு தாக்குதல் நடந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்டவர்களை தேட, இஸ்ரேலுக்கு தன் நாட்டுக்குள் வர அனுமதி கொடுத்தார் King Hussein. இது உலக அளவில் பெரும் பேசுபொருளாக மாறியது. அமெரிக்கா ஜோர்தானிடம் கேள்வி கேட்க, வேறு வழியில்லாமல், “எங்களுக்குள் இரகசிய பேச்சு வார்த்தை உள்ளது” என ஒத்துக் கொண்டது ஜோர்தான். அதன்பின்னர், உள்நாட்டு கலவரங்கள் வெடிக்க, இதோடு இஸ்ரேலுக்கும் ஜோர்தானுக்கும் எந்த நட்பும் கிடையாது என அறிக்கை வெளியிட்டார் King Hussein. அதனால்தான் போரில் இஸ்ரேலுக்கு எதிராக வந்து பெரும் தவறிழைத்தது ஜோர்தான். இந்த ஜோர்தான், இஸ்ரேலுக்கு “எகிப்தின் அரசர் நாசருக்கு நிரவாகத்திறமை இல்லை” என்பதை ஏற்கனவே கூறியிருந்தது. அதோடு TU16 பற்றிய தகவல்களைக் கூறியதும் ஜோர்தான் தான்.
இந்த பிரச்சனைகள் ஒரு பக்கம் நடக்க, ரஷ்யாவுக்கு இஸ்ரேல் மீது சந்தேகம் வந்தது. எனவே “இஸ்ரேல் அதிகமான ஆயுதம் சேர்த்து, யுத்தத்துக்கு தயாராகிறார்கள்” என செய்தி வெளியிட்டது. USல் இருந்து இஸ்ரேலை சோதனை செய்ய வந்தவர்கள், இஸ்ரேலோடு ஒப்பிடும்போது, அரபு உலகம் தான் king என report கொடுத்தது. அமெரிக்காவிடம் இருந்து வந்த இந்த ரிப்போர்ட் அரபு உலகம் போர் செய்ய இன்னொரு முக்கிய காரணம். ஆனால் இந்த யுத்தம் முடிந்த பின்னர்தான், 10 அரபியனுக்கு சமமானவன், ஒரு இஸ்ரேலன் என்பது உலகத்துக்கே புரிந்தது. அமெரிக்காவின் இந்த ரிப்போர்ட்டை நம்பி தான், ஜோர்தானும் இஸ்ரேலை விட்டு, அரபு நாடுகளின் பக்கம் போனது. நடந்தது என்ன தெரியுமா? ஜோர்தானிடம்தான் எருசலேம் இருந்தது. இந்தப் போரில்தான் ஜோர்தான் எருசலேமை இழந்தது. ஆறு நாட்கள் யுத்தத்தில், இரண்டாவது நாளே, ஜோர்தானும் எகிப்தும் தங்கள் தோல்வியை ஒத்துக்கொண்டன.
எகிப்து என்பது ஒரு பெரிய நாடு. வரலாற்று பலம் உள்ளது. எகிப்து என்ற பெயரைக் கேட்டாலே நாடுகள் பயப்படும். அதோடு, எகிப்திடம் நிறைய படைபலங்கள் இருந்தது. ஆனால் எகிப்தை ஆண்ட நாசர் என்பவர், நிர்வாகத்திறமை இல்லாமல் இருந்தார். அதுதான் எகிப்தின் தோல்விக்கு காரணம். எகிப்து மற்றும் சீரியா நாடு இருக்கும் இஸ்ரேலின் எல்லைகளில், UN Peace keepers என்று UN Soldiers இருப்பார்கள். தன் படை மீதுள்ள நம்பிக்கையில், எகிப்து UNஐ வெளியேறச் சொல்லியது. இதுதான் முதல் தவறு. அதேபோல, நாசர் இராணுவ அதிகாரி அமீரிடம், “இஸ்ரேலுக்கு எதிராக நாம் போருக்கு செல்லலாமா?” எனக் கேட்க, “நம் பாதி படை ஏமன் நாட்டு போருக்கு போய் விட்டது” எனக் கூறியிருக்கிறார். (1960 முதல் 1970 வரையில் ஏமனில் யுத்தம் நடந்துள்ளது) ஆனால் அமெரிக்காவின் ரிப்போர்ட்டை நம்பிய நாசர், இஸ்ரேலை குறைத்து மதிப்பிட்டு போருக்கு ஆயத்தமாகிவிட்டார். இது இரண்டாவது தவறு. கடைசியில், நாசர், அமீர் இருவருமே தங்கள் பதவியை ராஜினாமா செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நாசர் தங்கள் நாட்டு வானொலியில், “இஸ்ரேலை இருந்த இடம் தெரியாமல் நாம் அழிக்கப்போகிறோம்” என அறிவிப்பு கொடுத்திருக்கிறார். இது அவர் செய்த மூன்றாம் தவறு. ஆக, இவர்களுடைய தவறினாலும், மொசாடுடைய தகவலினாலும், இஸ்ரேல் இராணுவத்தின் திட்டத்தாலும், இந்த யுத்தத்தில் வெற்றி இஸ்ரேலுக்கு வந்தது.
ஏற்கனவே எகிப்தின் விமானப்படை பற்றிய தகவல்களை எடுத்ததில், விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப காலை 8.30க்கு செல்வார்கள் என்பதை அறிந்துகொண்டு, அதற்கு முன்பாக அவர்கள் விமானத்தை தாக்க முடிவு செய்தார்கள். காலை 7.48க்கு இஸ்ரேல் முதல் தாக்குதல் நடத்தியது. 117க்கும் மேற்பட்ட விமானம் அழிக்கப்பட்டது. 11 விமான தளங்கள், 8 ரேடார் ஸ்டேஷன் நொறுக்கப்பட்டது. விமான தளங்கள் அழிக்கப்பட்டதால், விமானத்தால் ஓடுபாதை இல்லாமல், பறக்க முடியாது. ரேடார் ஸ்டேஷன் அழிக்கப்பட்டதால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் திட்டம் போட்டு, அதை சரியாக செய்து முடித்தது இஸ்ரேல். அமெரிக்கா கணக்கெடுக்கும்போது இஸ்ரேலில் 2லட்சம் வீரர்கள் இருப்பதாகவும், அரபு நாடுகளில் அதற்கு இரு மடங்காக இருப்பதாகவும் வெளியிட்டது. ஆனால் இஸ்ரேலின் முக்கிய சட்டங்கள் என்ற நமது இரண்டாவது பதிவில், எல்லா இஸ்ரவேலரும், பெண்கள் உட்பட அனைவரும் கட்டாயமாக, 2 வருடங்கள் இராணுவத்திலிருக்க வேண்டும் என்பதைப் பார்த்தோம் அல்லவா! எனவே யுத்தம் என்று வந்தால், அனைத்து இஸ்ரேலரும் யுத்தத்தில் பங்குபெறுவர் என்பதை அமெரிக்கா மறந்து போனது. இதுவும் அவர்கள் வெற்றிக்கு காரணம். அதேபோல, ஒவ்வொரு யூதனும், “இனி நாங்கள் யாரிடமும் அடிமைப்பட மாட்டோம்” என்ற வெறியுடன் போரிடுவான். ஆனால் எகிப்தோ, தன் மீது உள்ள நம்பிக்கையில் சரியான பயிற்சி கூட கொடுக்கவில்லை. எது எப்படியோ, இந்த வெற்றிக்கு பின்னர் மொசாடின் தந்திரம் இருக்கிறது என்பது மறுக்க முடியாது.
இந்த யுத்தம் முடிந்த பிறகு, 1970ல் பாலஸ்தீன தீவிரவாதிகளை (PLO) தன் நாட்டிலிருந்து வெளியேற்றியது யோர்தான். 1973ல் எகிப்தும், சீரியாவும் இஸ்ரேலுக்கு விரோதமாக போர் செய்ய அழைப்பு விடுக்கும்போது மறுத்து விட்டது ஜோர்தான். பல வருடங்கள் இரகசிய பேச்சு வார்த்தைக்கு பிறகு King Hussein 1990ல் சமாதான உடன்படிக்கை ஏற்படுத்தினார் இஸ்ரேல் மற்றும் ஜோர்தானுக்கு இடையில். பின்னர் 1994ல் இறந்தார் King Hussein.
Leave a Reply