இதுவரையில் 48 பதிவுகள் இஸ்ரேலைப்பற்றி பதிவிட்டிருக்கிறோம். தற்போதுள்ள சூழலில், இஸ்ரேலின் யுத்தம் பற்றி பல பதிவுகள் வெளியிடலாம். ஆனால், அதை வெளியிடப் போவதில்லை. ஆகவே இந்த பதிவுடன், இஸ்ரேலைப் பற்றிய என் பதிவை முடிக்கிறேன். ஒருவேளை இஸ்ரேலுக்கு இப்போது என்ன நடக்கிறது என நீங்கள் அறிய விரும்பினால், Tamil Pokkisham என்ற YouTube Channelல் தினமும் மிக தெளிவான அப்டேட்டுகள் கிடைக்கிறது. (நான் தமிழ் பொக்கிஷத்தின் மூலம் நிறைய காரியங்கள் அறிந்து கொண்டதினால் இதை ஒரு suggestionஆக உங்கள் முன் வைக்கிறேனே ஒழிய, எனக்கும் அந்த channelக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.)
https://www.youtube.com/watch?v=FgEmx4CoO7A
https://www.youtube.com/watch?v=_YWgfQvVulY&rco=1
வேதத்தில் அதிகம் பிடித்த அதிகாரம் என்றால், அது ரோமர் 11ம் அதிகாரம்தான். அதேபோல கொஞ்சம் மனதை நெருடலாக்கும் அதிகாரம் என்றாலும், அதுவும் ரோமர் 11ம் அதிகாரம்தான்.
- கர்த்தாவே, உம்முடைய தீர்க்கதரிசிகளை அவர்கள் கொலைசெய்து, உம்முடைய பலிபீடங்களை இடித்துப்போட்டார்கள்; நான் ஒருவன்மாத்திரம் மீதியாயிருக்கிறேன், என் பிராணனையும் வாங்கத்தேடுகிறார்களே என்று இஸ்ரவேலருக்கு விரோதமாய் விண்ணப்பம்பண்ணினபோது,
4. அவனுக்கு உண்டான தேவஉத்தரவு என்ன? பாகாலுக்கு முன்பாக முழங்காற்படியிடாத ஏழாயிரம்பேரை எனக்காக மீதியாக வைத்தேன் என்பதே.
5. அப்படிப்போல இக்காலத்திலேயும் கிருபையினாலே உண்டாகும் தெரிந்துகொள்ளுதலின்படி ஒரு பங்கு மீதியாயிருக்கிறது.இஸ்ரேலில் அநேகர் இன்னும் மேசியாவை ஏற்றுக் கொள்ளவில்லைதான். அதற்காக அங்கு யாருமே இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை என கூறிவிட முடியாதே. இப்போதும் ஒருகூட்ட யூதர்கள் மேசியானிக் யூதர்களாக அங்கு இருக்கிறார்கள்.
- இப்படியிருக்க, விழுந்துபோகும்படிக்கா இடறினார்கள் என்று கேட்கிறேன், அப்படியல்லவே; அவர்களுக்குள்ளே வைராக்கியத்தை எழுப்பத்தக்கதாக அவர்களுடைய தவறுதலினாலே புறஜாதிகளுக்கு இரட்சிப்பு கிடைத்தது.
12. அவர்களுடைய தவறு உலகத்திற்கு ஐசுவரியமும், அவர்களுடைய குறைவு புறஜாதிகளுக்கு ஐசுவரியமுமாயிருக்க, அவர்களுடைய நிறைவு எவ்வளவு அதிகமாய் அப்படியிருக்கும்.அவர்கள் தவறினதால், புறஜாதிகளுக்கு இரட்சிப்பு கிடைத்தது என பவுல் கூறுகிறார். “அவர்கள் தவறினதால்தான் நமக்கு இரட்சிப்பு… இல்லையெனில் தேவன் இன்றும் இஸ்ரேலின் தேவனாகவே இருப்பார்… நாம் புறஜாதியாகவே இருப்போம்” என்பது இதன் அர்த்தமா? இல்லை. இயேசு பிறக்குபொழுதே, இஸ்ரேலின் பாவத்தை மட்டும் சுமந்து தீர்ப்பவராக அல்ல, உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்ப்பவராகத்தான் வெளிப்பட்டார்.
11.Did God’s people stumble and fall beyond recovery? Of course not! They were disobedient, so God made salvation available to the Gentiles. But he wanted his own people to become jealous and claim it for themselves.
ஆபிரகாமின் நாட்களில், முழு உலகத்திலும் ஒரு வைராக்கியமானவராக இருந்த ஆபிரகாமை தேவன் தெரிந்து கொண்டு, அவர் சந்ததியை ஆசீர்வதித்தார். அதனால்தான் இஸ்ரவேலர் விசேஷமானவர்கள். ஆனால் அவர்கள் தேவனை விட்டு பின்வாங்கினார்கள். அன்னிய தெய்வத்தை பின்பற்றினார்கள். கடைசியாக இயேசு அவர்களை மீட்பதற்காக வந்த, அந்த இரட்சிப்பையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒருவேளை அவர்கள் இயேசுவை ஏற்றுக் கொண்டிருந்தாலும், புறஜாதியாகிய நமக்கு அவர்கள் மூலம் இரட்சிப்பு வந்திருக்கும். (ஏனெனில் உலகம் முழுவதையும் இரட்சிக்க இயேசு வந்தார்) ஆனால் அவர்கள் இயேசு கொடுத்த இரட்சிப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. என்றாலும்கூட, தேவன் நம்மீது கிருபை பாராட்டி, அவ்வளவு பெரிய இரட்சிப்பை நமக்கு கொடுத்திருக்கிறார்.
- மேலும், சகோதரரே, நீங்கள் உங்களையே புத்திமான்களென்று எண்ணாதபடிக்கு ஒரு இரகசியத்தை நீங்கள் அறியவேண்டுமென்றிருக்கிறேன்; அதென்னவெனில், புறஜாதியாருடைய நிறைவு உண்டாகும்வரைக்கும் இஸ்ரவேலரில் ஒரு பங்குக்குக் கடினமான மனதுண்டாயிருக்கும்.
நாம் இரட்சிக்கப்பட்டு விட்டோம். சரிதான். ஆனால் புறஜாதியாராகிய நமக்கு தேவன் ஒரு கணக்கு வைத்திருக்கிறார். அந்த கணக்கை எட்டும்வரையிலும், ஒரு பங்கு இஸ்ரவேலர் இயேசுவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என வேதம் சொகிறது. அப்படியானால் என்ன? நாம் ஒழுங்காக வேலை செய்யவில்லை. அதாவது இயேசு இரட்சிப்பைக் கொடுத்து, 2000 வருடங்கள் ஆகிறது. ஆனால் இன்னமும், புறஜாதியாரின் நிறைவு உண்டாகவில்லை. எவ்வளவு வேதனை அல்லவா? நாம் வெகு சுலபமாக, இஸ்ரேலரை குறை சொல்கிறோமே. அவர்கள் இன்னமும் இயேசுவை அறியாததன் காரணம், நாம் நம் ஜனங்களை இன்னும் இயேசுவிடம் வழி நடத்தவில்லை. இத்தனை வருடங்கள் இஸ்ரேலர், தேசம் இன்றி ஒடுக்கப்பட்டு இப்போதும் போர் செய்து, இவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்றால், நாம் நமது ஜனங்களை இயேசுவிடம் வழி நடத்தாமல் இருப்பதுதான் காரணம்.
- சில கிளைகள் முறித்துப்போடப்பட்டிருக்க, காட்டொலிவமரமாகிய நீ அவைகள் இருந்த இடத்தில் ஒட்டவைக்கப்பட்டு, ஒலிவமரத்தின் வேருக்கும் சாரத்துக்கும் உடன்பங்காளியாயிருந்தாயானால்,
18. நீ அந்தக் கிளைகளுக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டாதே; பெருமைபாராட்டுவாயானால், நீ வேரைச் சுமக்காமல், வேர் உன்னைச் சுமக்கிறதென்று நினைத்துக்கொள்.
19. நான் ஒட்டவைக்கப்படுவதற்கு அந்தக் கிளைகள் முறித்துப்போடப்பட்டதென்று சொல்லுகிறாயே.
20. நல்லது, அவிசுவாசத்தினாலே அவைகள் முறித்துப்போடப்பட்டன, நீ விசுவாசத்தினாலே நிற்கிறாய்; மேட்டிமைச் சிந்தையாயிராமல் பயந்திரு.
21. சுபாவக்கிளைகளை தேவன் தப்பவிடாதிருக்க, உன்னையும் தப்பவிடமாட்டார் என்று எச்சரிக்கையாயிரு.
22. ஆகையால், தேவனுடைய தயவையும் கண்டிப்பையும் பார்; விழுந்தவர்களிடத்திலே கண்டிப்பையும், உன்னிடத்திலே தயவையும் காண்பித்தார்; அந்தத் தயவிலே நிலைத்திருப்பாயானால் உனக்குத் தயவுகிடைக்கும்; நிலைத்திராவிட்டால் நீயும் வெட்டுண்டுபோவாய்.
23. அன்றியும், அவர்கள் அவிசுவாசத்திலே நிலைத்திராதிருந்தால் அவர்களும் ஒட்டவைக்கப்படுவார்கள்; அவர்களை மறுபடியும் ஒட்டவைக்கிறதற்கு தேவன் வல்லவராயிருக்கிறாரே.
24. சுபாவத்தின்படி காட்டொலிவமரத்திலிருந்து நீ வெட்டப்பட்டு, சுபாவத்திற்கு விரோதமாய் நல்ல ஒலிவமரத்திலே ஒட்டவைக்கப்பட்டிருந்தால், சுபாவக்கிளைகளாகிய அவர்கள் தங்கள் சுய ஒலிவமரத்திலே ஒட்டவைக்கப்படுவது அதிக நிச்சயமல்லவா?மேற்கண்ட வசனங்களை படியுங்கள். நாம் காட்டொலிவ மரங்கள். இஸ்ரேலர் நல்ல ஒலிவ மரம். நல்ல ஒலிவ மரத்தின் சில கிளையை வெட்டி விட்டு, அந்த கிளை இருந்த இடத்தில், காட்டொலிவ மரமாகிய நாம் ஒட்ட வைக்கப்பட்டு உள்ளோம். நல்ல ஒலிவ மரத்தின் கிளை வெட்டப்பட காரணம், தேவனுடைய கண்டிப்பு. அதேபோல காட்டொலிவ மரத்தின் கிளை, அங்கே நல்ல மரத்தில் ஒட்டப்படுவதற்கு காரணம் தேவனுடைய தயவு. அந்த தயவில் நாம் நிலைத்திருக்கா விட்டால், நமக்கும் தேவனுடைய கண்டிப்பு கிடைக்கும். அதேபோல, தேவனுடைய தயவுக்கு அவர்கள் வந்துவிட்டால், அவர்கள் ஒலிவ மரத்தில் ஒட்டப்படுவார்கள்.
அவர்களும் ஒட்டப்பட்டு இருக்க வேண்டும், நாமும் வெட்டப்பட்டு விடாமல், ஒட்டப்பட்டு இருக்க வேண்டும். இதுதான் நம் வாழ்வின் நோக்கம். நாங்கள் தேவனுடைய சொந்த ஜனங்கள் என இன்றும் இஸ்ரேலர் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் எல்லாரும் இயேசுவிடம் வரவேண்டுமானால், புறஜாதிகளாகிய நம் ஜனங்களின் இரட்சிப்பு அவசியம். எல்லாரும் ஊழியம் செய்யவேண்டும் என சொல்லவில்லை. எல்லா ஊழியங்களையும் விட மேலான ஊழியம், ஜெபிப்பது. ஜெபிக்கும் மக்களுக்காக தேவன் காத்திருக்கிறார். நமக்காக மட்டுமல்ல, இஸ்ரவேலருக்காகவும் அவர்களுடைய இரட்சிப்புக்காகவும் தொடர்ந்து ஜெபிப்போம்.
“ஆபிரகாம் என்பவர் யாரோ ஒருவர்… அவர் இஸ்ரேலுக்கு பிதா. இஸ்ரவேலர் என்பது யாரோ ஒருவர். நான் ஒரு புறஜாதி” என நம்மைக்குறித்து எண்ணக்கூடாது. நம்மை இயேசு ஏனோ தானோ என்று தத்தெடுக்கவில்லை. நாம் அவருடைய சொந்த பிள்ளைகள். இது உண்மை என்றால், நாம் ஆவிக்குரிய உலகில், ஒரு இஸ்ரவேலன் தான். நாம் ஆவிக்குரிய உலகில் ஒரு ஆபிரகாமின் சந்ததிதான். ஆகவே, இஸ்ரேலின் மக்களுக்காக, இஸ்ரேல் தேசத்துக்காக ஜெபிப்பது நம் கடமை. அதை தவறாமல் செய்வோம். கர்த்தருடைய கிருபை தொடர்ந்து நம்மோடு இருக்கட்டும். ஆமென்
Leave a Reply