உலக அளாவில் பெரிய சாம்ராஜ்யங்களாக இருந்த அசீரிய சாம்ராஜ்யம், பாபிலோன் சாம்ராஜ்யம், மேதிய பெர்சிய சாம்ராஜ்யம், கிரேக்க சாம்ராஜ்யம், ரோம சாம்ராஜ்யம் பற்றி பார்த்தோம் அல்லவா? அடுத்ததாக ஆறாவதாக வந்த சாம்ராஜ்யம் பற்றி பார்க்கலாம்.

ஆங்கிலோ சாக்சன் சாம்ராஜ்யம்

ஆறாவதாக வந்த சாம்ராஜ்யம் ஆங்கிலேயர்கள். சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யம் என்று இங்கிலாந்தை தான் கூறுவார்கள். கிரேக்க சாம்ராஜ்யம் கூட அப்படி கிடையாது. ஆங்கிலேயர் ஆட்சியில் தான், அவர்கள் ஆட்சிக்குட்பட்ட ஏதாவது ஒரு நாட்டில், எப்போதும் பகல் இருந்து கொண்டே இருக்கும். அவ்வளவு நாடுகளை ஆங்கிலேயர் அரசாண்டார்கள்.

ஒரு விஷயத்தை நினைவில் வைக்க வேண்டும். ரோமர்கள் கிட்டத்தட்ட 1700 வருடங்கள் ஆட்சி செய்தார்கள். கிமு330களில் கிரேக்க சாம்ராஜ்யம் வந்தது. இயேசு பிறந்த போது ரோமர்கள் ஆட்சியைப் பிடித்தனர். கிபி 330களில் ரோம சாம்ராஜ்யத்தில் முக்கியமான கான்ஸ்டன்டைன் மன்னர் வந்தார், கிறிஸ்தவம் அரசாங்க மதமாக மாறிவிட்டது. நாம் பார்த்துக் கொண்டிருப்பது இஸ்ரவேலரின் வரலாறு. கிறிஸ்தவர்கள் அல்ல, யூதர்கள் பற்றி படிக்கிறோம். எனவே கிபி 70களில் எருசலேம் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டது. யூதர்கள் உலகமெங்கும் சிதறி விட்டனர். இந்தியாவில் கேரளாவில் கூட யூதர்கள் வாழ்ந்தனர். நாம் யூதர்களைப் பற்றி படிக்கிறோம். யூதர்களில், பாரம்பரிய யூதர்கள்(இயேசுவை ஏற்றுக்கொள்ளாதவர்கள்), மேசியானிக் யூதர்கள் (இயேசுவை ஏற்பவர்கள்) இருக்கிறார்கள். கான்ஸ்டன்டைன் மன்னர் வளர்த்தது கூட கிறிஸ்தவம் தான் தவிர, யூதர்களை வெறுக்கவே செய்தார்.

ரோம சாம்ராஜ்யத்தின் தோல்விக்கு மிகப்பெரிய காரணமாக கருதுவது, மார்ட்டின் லூத்தரின் எழுச்சி. போப்கள் தங்களை தெய்வமாக கருதுகிறார்கள், மரித்தவர்களின் பாவத்தை கூட, காசு கொடுத்தால் இயேசு மன்னிப்பார், பரலோகம் போகலாம் என்ற போப்களின் கருத்தை வெறுத்தார். தனியாக புராட்டஸ்டென்ட் பிரிவை ஆரம்பித்தார். இப்படி கிறிஸ்தவர்களின் அறியாமையை பாவத்தை சுட்டிக்காட்டி மறுமலர்ச்சியைக் கொண்டு வந்தவர் மார்ட்டின் லூத்தர் தான்.

இன்று நம் கைகளில் வேதம் இருக்கிறது. ஒரு காலத்தில், வீட்டில் வேதம் வைத்திருந்தால் அது பாவம் (தெய்வ குற்றம்) என்று சொல்லி, மக்களின் அறியாமையை பயன்படுத்தி, வேதம் யார் வீட்டிலும் இல்லாமல் பார்த்துக்கொண்டார்கள். போப் என்ன கருத்து சொல்கிறாரோ, அதுதான் தேவனுடைய வார்த்தையாய் மக்களை சென்று அடைந்தது. இதற்கு எதிராக போராடியவர் மார்ட்டின் லூத்தர். கிறிஸ்தவர்களின் இன்றைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு, மார்ட்டின் லூத்தரின் போராட்டம் தான் காரணம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்த மார்ட்டின் லூத்தர் யூதர்களின் மன மாற்றத்திற்காக 1537 வரை போராடினார். அதன் பின்னர் அவர் எழுதிய On The Jews And Their Lies என்ற புத்தகத்தால், அதிகம் பாதிக்கப்பட்டது யூதர்களே. யூதர்களின் பள்ளி தீ வைக்கப்பட வேண்டும், ஜெப ஆலயங்கள் அழிக்கப்பட வேண்டும், சொத்து பறிமுதல் செய்யப்பட வேண்டும், யூதர்களுக்கு கருணையே காண்பிக்க கூடாது என்றார். இப்புத்தகம் இரண்டாம் உலகப்போரில், ஹிட்லரின் படையில் உள்ள அனைவரிடமும் இருந்ததாம். ஹிட்லர் யூதர்களை கொடூரமாக கொள்ளையிட இப்புத்தகமும் ஒரு காரணம்.   

ரோமின் வீழ்ச்சி 1798லே ஆரம்பித்து விட்டது. ரோம சாம்ராஜ்யம் ஆரம்பித்தது கிமு 27களில் இருக்கலாம். கிபி 395ல், அதாவது கான்ஸ்டன்டைன் அரசர் காலத்துக்கு பிறகு, ரோம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. வெஸ்டர்ன் ரோம்(Western Rome) மற்றும் ஈஸ்டர்ன் ரோம்(Eastern Rome) என்று பிரிந்த ராஜ்யத்தில், வெஸ்டர்ன் ரோம் கிபி476ல் முடிவுக்கு வந்தது. கிபி 395ல் ஆரம்பித்த ஈஸ்டர்ன் ரோம், கிட்டத்தட்ட 1000 ஆண்டுகள், அதாவது கிபி1453 வரை ஆட்சி செய்தது. ரோம சாம்ராஜ்யத்தில், போப்க்கு கீழே இருந்த பத்து நாடுகளில் பிரிந்து போன ஒன்று, ஆங்கிலோ சாக்சன். அதுதான் தற்போதைய இங்கிலாந்து. உண்மையைச் சொல்ல வேண்டுமானால், ஆண்டவர் இங்கிலாந்துக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தார். உலகம் முழுவதும் அவர்களின் ராஜ்யம் பரவியது.

முதல் மகாராணி விக்டோரியா அம்மையாரிடம், “எப்படி உங்கள் ராஜ்யம் இவ்வளவு வேகமாக பரவுகிறது?” என்று கேட்கும்போது, “எங்கள் கைகளில் இருப்பது வேதாகமம். அது எங்களை உலகம் முழுவதும் அழைத்துச் செல்கிறது” என்று பதிலளித்தார். சுவிசேஷம் பரவியது ஆங்கிலேயரால் தான். ஆனால் அவர்கள் கட்டாயப்படுத்தவில்லை. அப்படி கட்டாயப்படுத்தி மதத்தை திணித்து இருந்தார்களானால், இந்தியா எப்பொழுதோ பெயர் கிறிஸ்தவ நாடாகவாவது மாறி இருக்கும்.

முதல் உலக யுத்தம் நடைபெற்றபோது, இங்கிலாந்து தோற்கும் நிலையில் இருந்தது. அப்போது இருந்த யூத விஞ்சானி Chaim Weizmann வைஸ்மேன் என்பவர், ஒரு வெடிமருந்து கண்டுபிடித்து இங்கிலாந்தை வெற்றி பெற வைத்தார். எனவே 1918ல் எருசலேம் துருக்கியர்களிடமிருந்து ஆங்கிலேயர் வசம் வந்தது.

ஆங்கிலேயர் எருசலேமை பிடித்தது ஒரு அற்புதமான நிகழ்வு. ஒரு குண்டு கூட எருசலேம் மீது போடாமல், அதைப் பிடித்தனர். அப்போது இருந்த General Allen P என்பவர், குதிரையில் போய்க்கொண்டு இருப்பவர், எருசலேம் பட்டணத்துக்குள் வரும்போது இறங்கி நடந்து வருவார். “என் ஆண்டவர் கழுதையின் மேல் வந்தார். அவர் ஒருவருக்கே அந்த தகுதி. நான் அப்படி நடக்கக்கூடாது” என்று சொல்வாராம். அவ்வளவு பயபக்தியாய் எருசலேம் ஆங்கிலேயரால் கைப்பற்றப்பட்டது.

வைஸ்மேன் ஒரு அறிவியல் ஆராய்ச்சி மையம் வைத்திருந்ததால், அதன் மூலம் ஆங்கிலேயர்களுக்கு போரில் உதவி செய்ய, அவரிடம், “உங்களுக்கு வேண்டியதைக் கேளுங்கள்” என்று ஆங்கிலேயர் டீல் கேட்க, “எங்கள் தேசம் எங்களுக்கு வேண்டும்” என்று கேட்டார். கிபி 70ல் யூதர்கள் இருந்த எருசலேம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. அதன்பின் கிபி129ல் Hadrian என்பவரால் எருசலேம் மீண்டும் கட்டப்பட்டு Roman colony named Aelia Capitolina பெயரிடப்பட்டது. 330களில் கான்ஸ்டன்டைன் மன்னன் வரும்வரையில் எருசலேம் என்ற பெயரே இல்லாமல் போய்விட்டது. இஸ்ரேல் என்ற பெயரோ சுமார் 2000 வருடங்களாக (கிபி 70 – கிபி 1948) உலக வரைபடத்திலேயே இல்லாமல் போய்விட்டது.

வைஸ்மேன் மூலம் போரில் ஆங்கிலேயர் வெற்றி பெற்றதால், டீலின்படி அப்போது ஆங்கிலேயர், வைஸ்மேனுக்காக, தேசத்தைக் கணக்கெடுத்து, இரு பகுதி அரேபியர்களுக்கு. ஒரு பகுதி யூதர்களுக்கு என்று பிரித்தார்கள்.  தேவனுடைய தேசத்தை ஆங்கிலேயர் பங்கு போட்டது அவர்களின் வீழ்ச்சிக்கான காரணம். 1920ல் இருந்து 1948 வரை இஸ்ரேல் என்ற பெயர் இருந்தாலும், அது தனி நாடு அல்ல. அவர்கள் ஆங்கிலேயருக்கு கீழ் இருந்தார்கள். இந்தியா ஆங்கிலேயருக்கு அடிமையாக இருந்தது போல இஸ்ரேலும் 1948 வரை இருந்தது.

1948, மே 15 அன்று உங்களுக்கு சுதந்திரம் அளிக்கிறோம்‌ என்று ஆங்கிலேயர் ஒத்துக்கொண்டார்கள். உடனே அரபு நாடுகள் ஒன்றுகூடி இஸ்ரவேலருக்கு எதிராக யுத்தம் அதேநாளில் நடக்கும் என்று அறிவித்தது. எனவே இந்த ஆங்கிலேயர், மே 14லேயே சுதந்திரம் கொடுத்துவிட்டு, அன்றே அங்கிருந்த எல்லா ஆங்கிலேயரும் அவசரம் அவசரமாக வெளியேறினர். அப்படி வெளியே சென்றவர்கள், போகும்போது அவர்களிடமிருந்த 700 யுத்த tankஐயும் ஜோர்டான் கையில் கொடுத்து விட்டு சென்றனர். அதாவது இஸ்ரேலுக்கு எதிராக போரிட இருந்த Jordaan அரேபியர்களுக்கு, மறைமுகமாக ஆங்கிலேயர் உதவி செய்தனர். தேவ சித்தத்துக்கு எதிரான இந்தக் காரியம் ஆங்கிலேயரின் வீழ்ச்சிக்கான காரணம். இஸ்ரேலரை தொடுபவர்கள் யாராக இருந்தாலும் தேவன் சும்மா இருக்க மாட்டார்.

இன்று நாமும் கூட ஆவிக்குரிய இஸ்ரவேலர்கள் தான். தேவன் நமக்காகவும் வைராக்கியமாய் இருக்கிறார். உன்னை தொடுபவன் என் கண்மணியை தொடுகிறான் என்று தேவன் கூறிய வாக்குத்தத்தம் நமக்கானது தான். தேவன் மீது நாமும் விசுவாசமாக இருந்து, வைராக்கியமாக இருந்து, இஸ்ரவேலரின் வாக்குத் தத்தத்தை சுதந்தரிப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *