இஸ்ரேல்-20 ( தாவீது – இஸ்ரவேலர் பாளையமிறங்கிய வரிசை)

தாவீது -3 (இஸ்ரவேலர் பாளையமிறங்கிய வரிசை)

ஆதாம் கீழ்ப்படியாததால், (சாகவே சாவான்)ஜீவனை இழந்தான். எனவே மனிதன் முழுமையாக கீழ்ப்படிந்து, அதன் மூலம் இழந்த ஜீவனை மறுபடி பெற்றுக்கொள்ளும்படி, தேவன் நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தார். ஆனால், அப்போதும் மனிதர்களால், கீழ்ப்படிய முடியவில்லை. பொய் சொல்லக்கூடாது என்று தேவன் சொல்லி இருக்க, மனிதன் சுலபமாக பொய் சொல்லி பாவம் செய்து விட்டான். அதை சரிசெய்ய வேண்டுமானால், ஏதோ ஒன்று செய்ய வேண்டும். தேவன், ஆசரிப்பு கூடாரம் என்ற ஒன்றை, மோசேக்கு காண்பித்து, ஆசரிப்பு கூடாரம் அமைத்து, அதில் பலிகள் கொடுக்கச் சொன்னார். அதோடு ஆசரிப்புக்கூடாரம் என்பது, தேவன் வாசம் பண்ணும் இடம். அந்த ஆசரிப்பு கூடாரத்தை வனாந்திர பயணத்தின்போது, தங்கும் இடத்தில், நடுவாக அமைத்து, அதை சுற்றிலும் இஸ்ரவேலரின் கூடாரங்கள் இருக்க வேண்டும் என்று தேவன் கட்டளை கொடுத்தார். சரியாகச் சொல்ல வேண்டுமானால், தேவன் இஸ்ரவேலரின் நடுவே வாசம் பண்ண விரும்பி, அவர்கள் நடுவே வாசம் பண்ணினார்.

முதலாவது, மோசே பாளையத்துக்கு புறம்பாக, ஆசரிப்பு கூடாரத்தை நிறுவி, அங்கே போய் கர்த்தருடன் பேசினார். யாத்திராகமம் 33: 7-11ல் மோசே, ஆசரிப்பு கூடாரத்துக்குள் சென்று, கர்த்தருடன் பேசுவது கூறப்பட்டிருக்கும். இந்த ஆசரிப்பு கூடாரத்தில் தான், யோசுவா ஆசரிப்புக் கூடாரத்தை விட்டு பிரியாதிருந்தார். இங்கு தான், மோசேயோடு கர்த்தர் முகமுகமாக பேசினார் என்று பார்க்கலாம்.

தேவன் மோசேயைக் கூப்பிட்டு, ஜனங்கள் நடுவில், நான் வசிக்கும்படி, ஒரு ஸ்தலம் உருவாக்க வேண்டும். நான் உனக்கு காட்டுகிற மாதிரியின்படி மட்டுமே அதை உருவாக்க வேண்டும் என்று கூறினார். அதுதான் ஆசரிப்பு கூடாரம்.

அதற்கு பின்னர்தான், மோசே அந்த வேலைகளை எல்லாம் சரியாக செய்து முடித்தார். ஆசரிப்பு கூடாரத்தை நடுவில் அமைத்து, மற்ற 12 கோத்திர மக்களும் எப்படி அதைச் சுற்றிலும் தங்க வேண்டும் என்பதை, எண்ணாகமம் 2,3 அதிகாரங்களில் கூறி இருக்கிறார். 20 வயது முதல், 50 வரையுள்ள ஆண்கள், ஒவ்வொரு கோத்திரத்திலும் எத்தனை பேர் என்று, தேவன் கணக்கு எடுக்க சொன்ன வேதத்தின் முதல் சென்செஸ் அது.

ஆசரிப்பு கூடாரத்தை ஒட்டி, உடனடியாக வேறு கோத்திர ஜனங்களை தங்க தேவன் அனுமதிக்கவில்லை. ஆசரிப்பு கூடாரத்தை பாதுகாக்கும் பணியை லேவியருக்குக் கொடுத்தார். லேவியர்களான, கோகாத் புத்திரர், கெர்சோன் புத்திரர், மெராரி புத்திரர் மூன்று பக்கங்களிலும், வாசலுக்கு எதிராக, மோசேயும் ஆரோனும் இருக்க வேண்டும். இவர்கள் தான் மற்ற மக்கள் ஆசரிப்பு கூடாரத்துக்கு அருகில் வராதபடிக்கு பாதுகாக்க வேண்டும். இந்த லேவியர்களுமே, ஆசரிப்பு கூடாரத்தில், பரிசுத்த ஸ்தலம், மகா பரிசுத்த ஸ்தலத்திலுள்ள பொருட்களை பார்க்க கூடாது.

கோகாத்தியரின் வேலை

வனாந்திரத்தில், ஒரு இடத்திலிருந்து கிளம்ப வேண்டுமானால், முதலில் மேகம் மேலே எழும்பும். உடனே, ஆரோனும் அவர் குமாரனும், முதலாவது பரிசுத்த ஸ்தலம், மகா பரிசுத்த ஸ்தலத்தின் பொருட்களை மூட வேண்டும். அதன் பின்னர், கோகாத் புத்திரர் அவைகளை, தூக்கி செல்ல வேண்டும். கோகாத் புத்திரர் எந்த பொருளையும் பார்க்க கூடாது. தூக்கி செல்வது மட்டுமே அவர்கள் வேலை.

கெர்சோனியரின் வேலை

அதேபோல, தொங்கும் திரைகள், திரைச்சீலை ஆசரிப்பு கூடார வாசல் மறைவு எல்லாவற்றையும் தூக்கிச் செல்வது கெர்சோன் புத்திரர் பணி.

மெராரியரின் வேலை

மெராரி புத்திரர், பலகை, தூண், தாழ்ப்பாள், வெண்கல பாதங்கள் போன்றவற்றை சுமந்து செல்ல வேண்டும். இது மெராரி புத்திரர் பணி.

இப்படி நேர்த்தியாக, யார் ஆசரிப்பு கூடாரத்தை சுற்றிலும் இருக்க வேண்டும்? யார் எதை சுமக்க வேண்டும் என்பதை தேவன் கூறினார். இவ்வளவு நேர்த்தியாக தேவன் ஆசரிப்பு கூடாரத்தை செய்ய சொல்லி, ஜனங்களின் நடுவில் வாசம் செய்தார். தேவன் ஜனங்களின் நடுவே வாசம் செய்தார் என்பதால், நாம் ஆசரிப்பு கூடாரம் நடுவில் இருந்ததாகவும், ஜனங்கள் அதை சுற்றிலும் வசித்ததாகவும் நினைப்போம். ஆனால், உண்மை அது அல்ல. வேதத்தை ஆராய்கிற வேத ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன என்றால், கீழ்க்கண்ட படத்தில் உள்ளது போல, அவர்கள் பாளையமிறங்கினார்களாம்.

பொதுவாக, சுற்றிலும் இருந்தார்கள் என்றால், வடக்கு, கிழக்கு திசையில் மட்டுமல்லாது, வட கிழக்கு திசையிலும்(சுற்றி வட்டமாக) இருந்தார்கள் என்று நினைப்போம். அது தவறானது. அவர்கள் ஒருவர் பின் ஒருவராக இருந்தார்கள் என்று வேத அறிஞர்கள் கூறுகிறார்கள்.

சரியாக இப்படித்தான் பாளையமிறங்கியிருக்கிறார்கள். கிழக்கு திசையில், செபுலோன், இசக்கார், யூதா கோத்திரம் இருந்தால், அதற்கு தலையாக யூதா கோத்திரம் இருந்து நடத்தி வந்திருக்கிறார்கள். எனவே யூதா, தாண், ரூபன், எப்ராயீம் என்ற கோத்திரங்கள் தலைவர்களாய் இருந்திருக்கிறார்கள்.  முதலில் எந்த கோத்திரம் செல்ல வேண்டும் என்பது முதற்கொண்டு தேவன் வழி நடத்தி இருக்கிறார் என்பதை கீழ்க்கண்ட வசனங்களில் பார்க்கலாம்.

தேவன் சொல்லியபடி தான், மோசே ஆசரிப்பு கூடாரத்தை செய்தார். தேவன் கூறியபடி தான், மக்களை, கோத்திரம் கோத்திரமாக பாளையமிறங்கச் செய்தார். நாம் ஏற்கனவே, பண்டிகைகள் பற்றிய பதிவில், இஸ்ரவேலர் எகிப்திலிருந்து கானான் வரும்வரையும் எது செய்தாலும், அது ஒரு தீர்க்கதரிசன செயல் என்று பார்த்தோம். இங்கே, அவர்கள் பாளையமிறங்கி இருந்தது கூட, சிலுவை போன்ற அமைப்பில். பரலோகத்திலிருந்து கீழே நோக்கி பார்த்தால், இஸ்ரவேல் ஜனங்கள் சிலுவை போன்ற அமைப்பில் தான் இருந்திருப்பார்கள்.

நாம் தாவீதையும், உடன்படிக்கை பெட்டியையும் பார்த்துக்கொண்டு வருகிறோம். இடையில், ஏன் இந்த பதிவு என்றால், ஆசரிப்பு கூடாரம், உடன்படிக்கை பெட்டியை தேவன் எவ்வளவு பத்திரமாய் பாதுகாத்து கொண்டு வருகிறார் என்பதற்காகத்தான்.

கோகாத் புத்திரர் பரிசுத்த பொருட்களான, உடன்படிக்கை பெட்டி, குத்து விளக்கு, அப்ப மேசை, தூப பீடம், பலிபீடம், தண்ணீர் தொட்டி, கத்தரி, கரண்டிகள், பாத்திரங்கள் என்று, ஆசரிப்பு கூடாரத்தின் முக்கியமான பொருட்களை தூக்கினாலும், அவைகளை ஆரோன் குடும்பத்தார் மூடும்போது கூட பார்க்க கூடாதாம். பார்த்தால் செத்து விடுவார்களாம். அவ்வளவு பயங்கரமானது உடன்படிக்கை பெட்டி. அதேபோல, அவ்வளவு பரிசுத்தமானது ஆசரிப்பு கூடாரம்.

இந்த ஆசரிப்பு கூடாரத்தை இஸ்ரவேலர், எங்கே வைத்தார்கள்? உடன்படிக்கை பெட்டிக்கு உரிய கனத்தைக் கொடுத்தார்களா? என்பதுதான் வரும் பதிவுகளில் பார்க்க இருக்கிறோம். தாவீது என்ன செய்தார்? ஏன் தாவீது முக்கியமானவர் என்பதையும் வரும் பதிவுகளில் காணலாம்.

Similar Posts

  • |

    Day 168 (17-06-2025)

    Scripture Portion: Proverb 25-26 நீதிமொழிகள் 25 1யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் மனுஷர் பேர்த்தெழுதின சாலொமோனுடைய நீதிமொழிகள்: 2காரியத்தை மறைப்பது தேவனுக்கு மேன்மை; காரியத்தை ஆராய்வதோ ராஜாக்களுக்கு மேன்மை. 3வானத்தின் உயரமும், பூமியின் ஆழமும், ராஜாக்களின் இருதயங்களும் ஆராய்ந்துமுடியாது. 4வெள்ளியினின்று களிம்பை நீக்கிவிடு, அப்பொழுது தட்டானால் நல்ல உடைமை பிறக்கும். 5ராஜாவின் முன்னின்று துஷ்டரை நீக்கிவிடு, அப்பொழுது அவனுடைய சிங்காசனம் நீதியினால் நிலைநிற்கும். 6ராஜாவின் சமுகத்தில் மேன்மைபாராட்டாதே; பெரியோர்களுடைய ஸ்தானத்தில் நில்லாதே. 7உன் கண்கள் கண்ட பிரபுவின்…

  • |

    Day 351 (17-12-2025)

    Scripture Portion: Philippians 1-4 பிலிப்பியர் 1 1இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரராகிய பவுலும் தீமோத்தேயும், பிலிப்பி பட்டணத்தில் கிறிஸ்து இயேசுவுக்குள்ளான பரிசுத்தவான்கள் அனைவருக்கும், கண்காணிகளுக்கும், உதவிக்காரருக்கும் எழுதுகிறதாவது: 2நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. 3சுவிசேஷம் உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நாள்முதல் இதுவரைக்கும் நீங்கள் அதற்கு உடன்பட்டவர்களானபடியால், 4நான் பண்ணுகிற ஒவ்வொரு விண்ணப்பத்திலும் உங்கள் அனைவருக்காகவும் எப்போதும் சந்தோஷத்தோடே விண்ணப்பம்பண்ணி, 5உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று நம்பி, 6நான் உங்களை நினைக்கிறபொழுதெல்லாம்…

  • |

    Day 112 (22-04-2025)

    Scripture Portion: Psalm 6, 8-10, 14,16,19,21 சங்கீதம் 6 (நெகினோத் என்னும் வாத்தியத்தில் செமினீத் என்னும் இராகத்தால் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.) 1கர்த்தாவே, உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாதேயும், உம்முடைய உக்கிரத்திலே என்னைத் தண்டியாதேயும். 2என்மேல் இரக்கமாயிரும் கர்த்தாவே, நான் பெலனற்றுப்போனேன்; என்னைக் குணமாக்கும் கர்த்தாவே, என் எலும்புகள் நடுங்குகிறது. 3என் ஆத்துமா மிகவும் வியாகுலப்படுகிறது; கர்த்தாவே, எதுவரைக்கும் இரங்காதிருப்பீர். 4திரும்பும் கர்த்தாவே, என் ஆத்துமாவை விடுவியும்; உம்முடைய கிருபையினிமித்தம் என்னை இரட்சியும். 5மரணத்தில் உம்மை நினைவுகூர்வதில்லை, பாதாளத்தில் உம்மைத் துதிப்பவன் யார்? 6என் பெரு­மூச்சினால்…

  • |

    Day 318 (14-11-2025)

    Scripture Portion: Matthew 28, Mark 16 மத்தேயு 28 1ஓய்வுநாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் விடிந்துவருகையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்கவந்தார்கள். 2அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்திறங்கிவந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின்மேல் உட்கார்ந்தான். 3அவனுடைய ரூபம் மின்னல்போலவும், அவனுடைய வஸ்திரம் உறைந்தமழையைப்போல வெண்மையாகவும் இருந்தது. 4காவலாளர் அவனுக்குப் பயந்ததினால் திடுக்கிட்டுச் செத்தவர்கள்போலானார்கள். 5தூதன் அந்த ஸ்திரீகளை நோக்கி: நீங்கள் பயப்படாதிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று…

  • |

    Day 284 (11-10-2025)

    Scripture Portion: Matthew 8:1-13, Luke 7 மத்தேயு 8 (1-13) 1அவர் மலையிலிருந்து இறங்கினபோது, திரளான ஜனங்கள் அவருக்குப் பின்சென்றார்கள். 2அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் வந்து அவரைப் பணிந்து: ஆண்டவரே! உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றான். 3இயேசு தமது கையை நீட்டி அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். உடனே குஷ்டரோகம் நீங்கி அவன் சுத்தமானான். 4இயேசு அவனை நோக்கி: இதை நீ ஒருவருக்கும் சொல்லாதபடி எச்சரிக்கையாயிரு; ஆயினும், அவர்களுக்குச்…

  • |

    Day 77 (18-03-2025)

    Scripture Portion: Deuteronomy 21-23 உபாகமம் 21 1உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கும் தேசத்தில், கொலை செய்யப்பட்டுக்கிடக்கிற ஒருவனை வெளியிலே கண்டு, அவனைக் கொன்றவன் இன்னான் என்று தெரியாதிருந்தால், 2உன் மூப்பரும் உன் நியாயாதிபதிகளும் புறப்பட்டுப்போய், கொலைசெய்யப்பட்டவனைச் சுற்றிலும் இருக்கும் பட்டணங்கள் மட்டும் அளப்பார்களாக. 3கொலைசெய்யப்பட்டவனுக்குச் சமீபமான பட்டணத்து மூப்பர், வேலையில் பண்படாததும் நுகத்தடியில் பிணைக்கப்படாததுமான ஒரு கிடாரியைப் பிடித்து, 4உழுது விதையாத தரிசான பள்ளத்தாக்கிலே அதைக் கொண்டுபோய், அந்தப் பள்ளத்தாக்கிலே அதின் தலையை வெட்டிப்போடக்கடவர்கள். 5உன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *