தாவீது –5

தாவீது சுதந்தரித்த எல்லை – இராட்சதர்கள் யார்?

இஸ்ரவேல் என்ற நாடு, ஆபிரகாம் என்கிற ஒரு மனிதனின், குடும்பம் என்பது நமக்கு தெரியும். தேவன் ஆபிரகாமுக்கு 3 வித ஆசீர்வாதங்கள் கொடுத்தார் என்பது வேதத்தில் உள்ளது.

1. இந்த தேசத்தை உனக்கு கொடுத்தேன் என்று ஒரு நிலத்தைக் கொடுத்தார். (Land)

2. உன் சந்ததி ஒரு நாடாக உருவாகுவார்கள் என்று தேச ஜனங்கள் வாக்களித்தார். (People)

3. உனக்கும் உனக்கு பின் வரும் சந்ததிக்கும் நித்திய உடன்படிக்கை ஏற்படுத்துவேன் (பரிசுத்த வித்து -Seed)

பரிசுத்த வித்து எப்படி ஆதாமிலிருந்து பயணம் செய்தது என்று, ஏற்கனவே பார்த்தோம். அதேபோல, யாக்கோபின் பிள்ளைகள் 70 பேராக எகிப்துக்கு சென்றார்கள், அங்கே அடிமையாக இருந்தபடியால், எகிப்தியரோடு கலக்காமல், தனியாக எபிரேயர் என்ற இனமாக உருவாகி, கிட்டத்தட்ட 30லட்சம் பேராக திரும்பி வந்தார்கள். எனவே, ஆபிரகாமுக்கு வாக்களித்த ஒரு தேச ஜனங்களும் கிடைத்தார்கள். ஆபிரகாமுக்கு தேவன் ஒரு எல்லை வாக்களித்திருந்தார்.

God to Abraham – 10 Tribes

அதேபோல மோசேக்கும் ஒரு வாக்குத்தத்தத்தை தேவன் வாக்கு கொடுத்தார். கானான் தேசத்தில் இந்த ஜனங்களை எல்லாம் நீங்கள் வெற்றி பெற்று தேசத்தை சுதந்தரிப்பீர்கள் என்றார்.

God to Moses – 6 Tribes

யார் இந்த கானானியர்? நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம், ஏனோக்கின் புத்தகத்தின்படி(Book of Enoch), நோவாவின் காலத்தில், 120 தேவபுத்திரர் மனுஷ குமாரத்திகளுடன் கலந்ததால், இராட்சத இனம் (The Anakim and Nephilim) உருவானது. அந்த இராட்சதர், மற்ற மனுஷருடன் கலக்கும்போது, இராட்சதர்கள் உருவானார்கள். இந்த 120 இராட்சதர்களும், அவர்களுக்குள் கலக்கும்போது, ஒரிஜினல் இராட்சதர்(Giants) உருவானார்கள், அவர்களை ஏனாக்கின்(Anak) புத்திரர் “Anakim” என்று அழைத்தார்கள். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், இரண்டு வகையான இராட்சதர்கள் இருந்தார்கள். ஒன்று, ஒரிஜினல் இராட்சதர் ஏனாக்கின் புத்திரர் Anakim, மற்றொன்று, கலப்பின இராட்சதர்கள் Nephilim. இந்த இராட்சத இனம்தான் கானான் முழுவதும் நிரம்பி இருந்தது. ஆபிரகாமின் சந்ததி இவர்களுடன் கலந்து, தங்கள் பரிசுத்த வித்தைக் கெடுக்கக்கூடாது என்பதற்காகத்தான், தேவன் அவர்களை எகிப்துக்கு கொண்டு சென்று பாதுகாத்தார். இப்போது மீண்டும் இந்த தேசத்துக்கு அழைத்துவரும்போது, அந்த இராட்சதர்களை துரத்திவிட்டு தான் உள்ளே செல்ல வேண்டும். மோசேக்கு வாக்கு கொடுக்கும்போது, தேவன் சொல்கிற அத்தனை தேசமும் இராட்சதர்கள் இருக்கும் பட்டணம். ஆனாலும் மோசே தேவனை நம்பி ஜனங்களை அழைத்து வந்துவிட்டார். இப்போது ஒவ்வொரு கோத்திரத்தில் ஒருவராக, 12 பேரை அனுப்பி, தேசத்தை சுற்றி பார்க்கும்படி மோசே அனுப்பிகிறார். யோசுவா, காலேப் தவிர மற்ற 10 பேரும் என்ன சொன்னார்கள் என்பதை கீழே பார்க்கலாம்.

அவர்கள் பார்வைக்கு வெட்டுக்கிளி என்பது நாம் சாதாரணமாக வாசித்து போயிருப்போம். ஆனால் உண்மையில் அவர்கள் அப்படித்தான் இருந்தார்களாம். ஏனோக்கின் புத்தகத்தில் 300 Cubits உயரம் இருந்தார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது. 1 cubit is 18 inches (46 cm) என்றால், அவர்கள் 450 feet (140 m) இருந்திருப்பார்கள். முதலாவது இதைப்பற்றி படிக்கும்போது, என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அது எப்படி அவ்வளவு உயரம் இருக்க முடியும் என்று யோசித்தேன். ஒருமுறை ஏதோ ஒரு செய்தியில், பண்டைய மனிதர்கள் மிகவும் உயரமாக இருந்ததாகவும், வரவர மனிதனின் உயரம் குறைந்து 6 அடிக்கு வந்ததாகவும் படித்தேன். 450 அடியில் மனிதன் இருந்திருப்பானா என்பது இன்னமும் எனக்கு குழப்பமே. ஒருவேளை, அவன் 15 அடி உயரமாக இருந்திருக்கலாம் என்பதை ஏற்றுக்கொண்டேன். அதுவும் வேத வசனங்களை வைத்துதான்.

இங்கு ஒரு இராட்சத பட்டணத்தின் ராஜாவைப்பற்றி வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அவன் கட்டில் இரும்பினால் செய்யப்பட்டதாம் (அவ்வளவு weight). ஒன்பது முழ நீள கட்டிலாம் (அவ்வளவு Height). இங்கு 9 முழ நீளம் என்பது தவறான மொழிபெயர்ப்பு. 9 Cubits, அதாவது 13 அடி நீளம். எனவே இந்த இராட்சத ராஜா 12 அடி உயரமாக இருந்திருக்கலாம். நாம் 6 அடி, அவர் 12 அடி என்றால் கூட, அவர் பார்வைக்கு இஸ்ரவேலர் வெட்டுக்கிளிகள் தானே. உண்மையில் அங்கிருந்தவர்கள் இராட்சதர்கள் தானா? வேதத்தின் வசனங்கள் என்ன சொல்கிறது?

11.அவர்களும் ஏனாக்கியரையொத்த இராட்சதர் என்று எண்ணப்பட்டார்கள்; மோவாபியரோ அவர்களை ஏமியர் என்று சொல்லுகிறார்கள்.

20. அதுவும் இராட்சதருடைய தேசமாக எண்ணப்பட்டது; முற்காலத்தில் இராட்சதர் அதிலே குடியிருந்தார்கள், அம்மோனியர் அவர்களைச் சம்சூமியர் என்று சொல்லுகிறார்கள்.

உபாகமம் 2

ஆக வேதத்தின்படியும், இராட்சதர்கள் இருந்தார்கள், இராட்சத தேசம் இருந்தது என்பதை அறியலாம்.

மோசே இஸ்ரவேலரிடம் கடைசியாக பேசியது தான், உபாகமம் புத்தகத்தில் இருக்கும். அதில் ஆதி முதல் தேவன் தங்களை நடத்திவந்த விதம் குறித்து கூறினார். அவர் கூறியதில் ஒரு பழமொழி பேசியிருப்பார், ஏனாக் புத்திரருக்கு முன்பாக நிற்பவன் யார் என்று. அப்படி பழமொழி சொல்லும் அளவுக்கு அந்த இராட்சதர்கள் மிகவும் பெரியவர்கள்.

தேவன் இவர்களை ஜெயிப்பாய் என்று கூறினார். ஆனால் சுற்றி பார்த்த 10 பேர் மாற்றி சொன்னார்கள். எனவே தேவன், யோசுவா காலேப் தவிர வேறொருவரும் கானான் போவதில்லை என்பார்.

காலேப் போய் வந்த தேசத்தை அவனுக்கு கொடுப்பேன் என்று, தேவன் இங்கு வாக்குத்தத்தம் கொடுக்கிறார். இப்போது 40 வருடம் வனாந்திர பயணம். மோசேயும் மரித்து விட்டார். அடுத்து யோசுவா நடத்தி வந்தார். இப்போது யோசுவா 14ம் அதிகாரத்தில், தேசத்தை பங்கு போடுகின்றனர். ஆனால் எபிரோன் பக்கமே போகவில்லை. ஏனெனில் இன்னும் எபிரோன் சுதந்தரிக்கவேயில்லை. அப்போது காலேப் வந்து யோசுவாவிடம் பேசுகிறார். எனக்கு வாக்கு பண்ணியபோது 40 வயது. இப்போது எனக்கு 85 வயது. ஆனாலும் அதே பலத்தோடு இருக்கிறேன். நான் போய் சுதந்தரித்துக்கொள்கிறேன் என்று கேட்கிறார். இதனால்தான் தேவன் காலேபை வேறே ஆவி உள்ளவர் என்று கூறுகிறார். எனக்கு, வாக்கு கிடைத்து விட்டது, தேவன் தருவார் என்று சும்மா உட்காராமல், அதை சுதந்தரிக்க நினைக்கிறார். அப்பட்டணத்தில் ஏனாக்கியர் இருக்கிறார்கள் என்பது காலேபுக்கு தெரியும், ஆனாலும் அதை போய் சுதந்தரித்தார்.

தேவன் ஆபிரகாமுக்கு கொடுத்த எல்லை எல்லாம் இஸ்ரவேலர் வசம் வந்ததா என்றால், இன்னும் இல்லை. முக்கியமான பட்டணமாகிய (எருசலேம்) எபூசியர் பட்டணம் இன்னும் பிடிக்கப்படவில்லை. அந்த எபூசியர் பட்டணத்தை பிடித்தவர்தான் தாவீது. அதுபோல, கானானிலிருந்த எல்லா இராட்சதரையும் அழித்தவர் தாவீது. அடுத்த பதிவில் அதைப்பற்றி பார்க்கலாம். தாவீது வீழ்த்திய காத் ஊரானாகிய கோலியாத் கூட, இராட்சதன் தான், அவனும் 9 அடி உயரமுள்ளவன். பிற புராணங்களில் எப்படி இராட்சதர் பற்றி கூறுவார்கள் என்பது எனக்கு தெரியாது, ஆனால் வேத இராட்சதர்கள் மனித இனம்தான். அவர்களின் எலும்புகூடு அனேக இடங்களில் கிடைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *