இஸ்ரேல்-12 (யோசுவா)

யோசுவா

ஆதாமிலிருந்து, மோசேயின் மனைவி வரை நாம் கடந்த பதிவுகளில் பார்த்தோம். மோசே தவறு செய்தபோதும், மோசேயின் கீழ் அடங்கி இருந்தவர் யோசுவா. இன்னொரு சிறப்பான குணாதிசயம் என்னவென்றால், இந்த யோசுவா, கர்த்தருடைய சமுகத்தை விட்டு பிரியாதிருந்தவர். அதனால் தான் மோசேயின் பிள்ளைகளைத் தேவன் தெரிந்து கொள்ளாமல், யோசுவாவைத் தெரிந்து கொண்டார் கர்த்தர்.

யோசுவா என்றாலே சிறுவயதிலிருந்தே நமக்கு கற்றுக் கொடுத்திருப்பது எரிகோ மதில்தான். யோசுவா எரிகோ பட்டணத்தைப் பிடித்தார் அல்லவா!. எரிகோ மதில் எப்படி இருந்தது தெரியுமா? எரிகோவை சுற்றிலும், இரண்டு சுவர்கள் இருந்தன. அந்தக் காலத்தில், விமானங்கள் எல்லாம் இல்லாததால், வான்வெளி தாக்குதல்கள் கிடையாது. எனவே, உயரமான சுற்று சுவர் கட்டினால் போதும், அந்த பட்டணம் பாதுகாப்பாக இருக்கும். அப்படித்தான் எரிகோ பட்டணமும், அங்கே இரண்டு பெரிய மதில் சுவர்கள் பட்டணத்தை சுற்றிலும் இருந்தது. வெளிப்புற சுவர்(மதில்) 12 முதல் 15 அடி அகலமானது, உட்புற சுவர் 6 அடி அகலமானது. இரண்டு சுவர்களுக்கும் இடையே, வெற்றிடம் 9 அடி அகலத்தில் இருந்தது.  அந்த எரிகோ மதிலின் மேல் நான்கு இரதங்கள் போகும் அளவுக்கு அகலம் இருந்தது. அதாவது அந்த மதிலின் மேல் கிட்டத்தட்ட நான்கு கார்கள் ஒரே நேரத்தில் செல்லலாம். அவ்வளவு அகலமான சுவர். அந்த சுவரை வெளிப்புறமாக சாய்த்து கட்டியிருந்தார்கள். ஒருவேளை பெரிய பூமி அதிர்ச்சி ஏற்பட்டால், மதில் வெளிப்புறமாக விழும் அளவுக்கு கட்டியிருந்தார்கள். அந்த மதில் சுவரின் உள்ளேயே, அதாவது சுவருக்குள், உட்புறமாக ராணுவ சிப்பாய்களின் வீடுகள், விபச்சார விடுதி, சாராயம் விற்கும் இடம் போன்ற இடங்கள் இருந்தன.

இஸ்ரவேலர் ஆறு நாட்கள் தினமும் ஒருமுறை அந்த மதிலை சுற்றி வரும் போது, எரிகோ ராஜா எதுவுமே பண்ணவில்லை. ஏனென்றால் அவருக்குள் ஒரு தைரியம் இருந்தது. இவ்வளவு பலமான மதிலை இந்த இஸ்ரவேலரால் எதுவும் செய்ய முடியாது என்று இருந்து கொண்டார். ஆனால் ஏழாவது நாள் ஏழு தரம் சுற்றும் போது மதில் கீழே விழுந்தது. எப்படி விழுந்தது? மதில் உட்புறமாக விழுந்தது. அதனால் தான் எரிகோவின் குடிகள் எல்லாரும் அதிர்ச்சி அடைந்து விட்டனர். அவர்கள் அந்த நேரத்தில் யுத்தத்துக்கு தயாராக இல்லை. அவர்கள் அந்த தாக்குதலை எதிர்பார்க்கவும் இல்லை. மதில் வெளிப்புறம் விழுந்தால் கூட, அது பூமியதிர்ச்சி என்று நினைக்கலாம், ஆனால் வெளிப்புறம் சாய்வாக இருக்கும் மதில், உட்புறமாக விழுந்தது, எரிகோவின் மக்களை செயல்பட விடாமல் தடுத்தது. அந்த யுத்தம் கர்த்தருடைய யுத்தம்.

கர்த்தர் ஒவ்வொரு யுத்தத்திலும் இஸ்ரவேலருடன் இருந்தார். யோசுவா சொல் கேட்டு, சூரியன் அப்படியே நின்றது என்று பார்க்கிறோம். அந்த அளவுக்கு தேவனையே சார்ந்து யுத்தத்தை நடத்தியவர் யோசுவா.

கர்த்தர் தாமே யோசுவாவோடு இருந்து யுத்தங்களை நடப்பித்தார். மோசே பிடித்த பட்டணங்களையும் யோசுவா பிடித்த பட்டணங்களையும் இணைத்து இஸ்ரேல் என்ற குட்டி நாடு உருவானது. நாம் பார்க்க இருக்கிற இஸ்ரேல் தேசம் இப்பொழுது உருவாகி விட்டது.

யோசுவா தேசத்தை 12 பிரிவுகளாகப் பிரித்தார். நாம் அறிந்தபடி, லேவி கோத்திரத்துக்கு பங்கு கிடையாது, அதற்கு பதிலாக யோசேப்பின் குமாரர் இருவருக்கும் பங்கு கொடுக்கப்பட்டது.1 கோத்திரத்துக்கு, 4 லேவி பட்டணங்கள் என்ற கணக்கில், ஒவ்வொரு கோத்திரத்துக்கும் நான்கு நான்கு லேவிய பட்டணங்கள் கட்டிக்கொடுத்தார் யோசுவா. (4*12=48 லேவிய பட்டணங்கள்) இது தேவனின் திட்டம். லேவியர் ஆசாரிய ஊழியம் செய்ய அழைக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு சொந்தமாக பட்டணம் கிடையாது. லேவியருக்கு இரண்டு ஊழியங்கள் இருந்தது. முதலாவது ஆண்டவருக்கு ஆராதனை செய்வது. இரண்டாவது ஜனங்களுக்கு நியாயப்பிரமாணத்தை கற்றுக் கொடுப்பது. ஒரே இடத்தில் எல்லா லேவியரும் இருந்தால், மக்களுக்கு நியாயப் பிரமாணத்தைக் கற்றுக் கொடுக்க முடியாது என்ற காரணத்தினால், ஒவ்வொரு பட்டணத்திலும் நான்கு திசைகளிலும் லேவியருக்கு பட்டணம் கட்டிக் கொடுக்கப்பட்டது.

யோசுவாவும், தன் தலைமையான மோசேயைப் போல, இறப்பதற்கு முன் ஒரு பிரசங்கம் செய்கிறார். யோசுவாவுடன் கானானுக்குள் நுழைந்தவர்கள் இளைஞர்கள். அவர்களுக்கு செங்கடல் பிளந்தது, 10 வாதை பற்றி கூறினால், அது வெறும் கதையாகத் தெரியும் என்பதால் தான், எரிகோ மதில், சூரியன் மனிதன் பேச்சைக் கேட்பது போன்ற அசாதாரண காரியங்கள் நடந்தது. தன் வல்லமையை விளங்கப் பண்ணினார் கர்த்தர். கடைசியாக யோசுவாவும், கர்த்தரை விட்டு அந்நிய தேவ வழிபாட்டுக்கு செல்லக் கூடாது என்று பிரசங்கிக்கிறார். ஏனெனில் ஆண்டவர் அவர்களின் தேவனாக, அவர்கள் நடுவே இருக்க விரும்பினார். அன்றும், இன்றும், யூதர்கள் அந்தக் கட்டளைக்கு கீழ்ப்படியவே இல்லை என்பது கசப்பான உண்மை.

Similar Posts

  • |

    இஸ்ரேல்- 47 (Operation Wrath of God – Mossad)

    1972ல் ஜெர்மனியில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் பங்கேற்க சென்ற வீரர்களில், 3 பேரை Black September கடத்திக்கொன்று விட்டு, 8 பேரை பணையக்கைதியாக பிடித்துக்கொண்டு போய், அவர்களையும் கொன்று விட்டது. இதை கடந்த பதிவில் பார்த்தோம். அப்போது அதிபராக இருந்த Golda Meir என்பவர், “11 பேருக்காக, அவர்கள் ஒவ்வொருவரும் வேட்டையாடப் படுவார்கள்” எனக் கூறினார். அப்போது, யாருக்கும் எதுவும் புரியவில்லை. ஆனால் மொசாட் தனது வேலையை ஆரம்பித்து விட்டது. செப்டம்பர் 5, 1972ல் 3 பேர் கொல்லப்பட்டு,…

  • |

    Day 111 (21-04-2025)

    Scripture Portion: 2 Samuel 1-4 2 சாமுவேல் 1 1சவுல் மரித்தபின்பு, தாவீது அமலேக்கியரை முறிய அடித்து, சிக்லாகுக்குத் திரும்பிவந்து, இரண்டு நாள் அங்கே இருந்த பிற்பாடு, 2மூன்றாம் நாளிலே ஒரு மனுஷன் சவுலின் பாளயத்திலிருந்து புறப்பட்டு, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, தன் தலையின்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டு, தாவீதினிடத்தில் வந்து, தரையிலே விழுந்து வணங்கினான். 3தாவீது அவனைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வந்தாய் என்று கேட்டதற்கு, அவன்: இஸ்ரவேலின் பாளயத்திலிருந்து தப்பிவந்தேன் என்றான். 4தாவீது அவனைப்…

  • |

    இஸ்ரேல்–32 (ஆங்கிலோ சாக்சன் சாம்ராஜ்யம்)

    உலக அளாவில் பெரிய சாம்ராஜ்யங்களாக இருந்த அசீரிய சாம்ராஜ்யம், பாபிலோன் சாம்ராஜ்யம், மேதிய பெர்சிய சாம்ராஜ்யம், கிரேக்க சாம்ராஜ்யம், ரோம சாம்ராஜ்யம் பற்றி பார்த்தோம் அல்லவா? அடுத்ததாக ஆறாவதாக வந்த சாம்ராஜ்யம் பற்றி பார்க்கலாம். ஆங்கிலோ சாக்சன் சாம்ராஜ்யம் ஆறாவதாக வந்த சாம்ராஜ்யம் ஆங்கிலேயர்கள். சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யம் என்று இங்கிலாந்தை தான் கூறுவார்கள். கிரேக்க சாம்ராஜ்யம் கூட அப்படி கிடையாது. ஆங்கிலேயர் ஆட்சியில் தான், அவர்கள் ஆட்சிக்குட்பட்ட ஏதாவது ஒரு நாட்டில், எப்போதும் பகல் இருந்து…

  • |

    Day 77 (18-03-2025)

    Scripture Portion: Deuteronomy 21-23 உபாகமம் 21 1உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கும் தேசத்தில், கொலை செய்யப்பட்டுக்கிடக்கிற ஒருவனை வெளியிலே கண்டு, அவனைக் கொன்றவன் இன்னான் என்று தெரியாதிருந்தால், 2உன் மூப்பரும் உன் நியாயாதிபதிகளும் புறப்பட்டுப்போய், கொலைசெய்யப்பட்டவனைச் சுற்றிலும் இருக்கும் பட்டணங்கள் மட்டும் அளப்பார்களாக. 3கொலைசெய்யப்பட்டவனுக்குச் சமீபமான பட்டணத்து மூப்பர், வேலையில் பண்படாததும் நுகத்தடியில் பிணைக்கப்படாததுமான ஒரு கிடாரியைப் பிடித்து, 4உழுது விதையாத தரிசான பள்ளத்தாக்கிலே அதைக் கொண்டுபோய், அந்தப் பள்ளத்தாக்கிலே அதின் தலையை வெட்டிப்போடக்கடவர்கள். 5உன்…

  • |

    Day 46 (15-02-2025)

    scripture Portion: Leviticus 8-10 லேவியராகமம் 8 1கர்த்தர் மோசேயை நோக்கி: 2நீ ஆரோனையும் அவன் குமாரரையும் வரவழைத்து, வஸ்திரங்களையும், அபிஷேகத்தைலத்தையும், பாவநிவாரணபலிக்கு ஒரு காளையையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒரு கூடையில் புளிப்பில்லா அப்பங்களையும் கொண்டுவந்து, 3சபையையெல்லாம் ஆசரிப்புக்கூடாரவாசலுக்கு முன்பாகக் கூடிவரச்செய் என்றார். 4கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே மோசே செய்தான்; சபை ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாகக் கூடினபோது, 5மோசே சபையை நோக்கி: செய்யும்படி கர்த்தர் கட்டளையிட்ட காரியம் இதுவே என்று சொல்லி, 6கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, மோசே ஆரோனையும் அவன் குமாரரையும் வரவழைத்து, அவர்களை…

  • |

    Day 121 (01-05-2025)

    Scripture Portion: 2 Samuel 5: 1-10, 1 Chronicles 11-12 2 சாமுவேல் 5 (5: 1-10) 1அக்காலத்திலே இஸ்ரவேலின் கோத்திரங்களெல்லாம் எப்ரோனிலிருக்கிற தாவீதினிடத்தில் வந்து: இதோ, நாங்கள் உம்முடைய எலும்பும் உம்முடைய மாம்சமுமானவர்கள். 2சவுல் எங்கள்மேல் ராஜாவாயிருக்கும்போதே இஸ்ரவேலை நடத்திக்கொண்டுபோனவரும், நடத்திக்கொண்டு வந்தவரும் நீரே; கர்த்தர்: என் ஜனமாகிய இஸ்ரவேலை நீ மேய்த்து, நீ இஸ்ரவேலின்மேல் தலைவனாயிருப்பாய் என்று உம்மிடத்தில் சொன்னாரே என்றார்கள். 3இஸ்ரவேலின் மூப்பர் எல்லாரும் எப்ரோனிலே ராஜாவினிடத்தில் வந்தார்கள்; தாவீது ராஜா எப்ரோனிலே கர்த்தருக்கு முன்பாக அவர்களோடே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *