மோசேயின் மனைவி

இந்த மோசே தான், ஆண்டவரிடமிருந்து கற்பனைகளை பெற்றுக் கொண்டு வந்தவர். பிற ஜாதிகளிடம் கலக்கக்கூடாது என்று மக்களுக்கு உத்தரவு கொடுத்தவர். ஆண்டவரிடமிருந்து கட்டளை பெற்று மக்களை வழிநடத்தியவர். இதே மோசே என்ன தவறு செய்கிறார்? எத்தியோப்பிய ஸ்திரீயை விவாகம் செய்து கொள்கிறார். வழிநடத்திய அவரே தவறு செய்ததால் மிரியாமுக்கு கோபம் வருகிறது. மிரியாமும் ஆரோனும் அவர் மேல் கோபம் கொள்கிறார்கள். ஆனால் அடுத்த நொடியே ஆண்டவருக்கு மிரியாமின் மேல் கோபம் வருகிறது. உலகப் பிரகாரமாக பார்த்தால் இதில் என்ன நியாயம் இருக்கிறது என்று தோன்றும். ஆனால் ஆண்டவரின் பார்வை வேறு மனிதர்களின் பார்வை வேறு. எல்லா விஷயத்திலும் மனிதர்கள் பார்க்கிற படி ஆண்டவர் பார்க்க மாட்டார். மோசேயை தவறாகப் பேசிய காரணத்தினால் ஆண்டவர் மிரியாமுக்கு குஷ்டரோகத்தை கட்டளையிட்டார். ஆனால் மோசேயும் வேறு தேசத்தை சேர்ந்த ஸ்திரீயை விவாகம் பண்ணியது தவறு தானே. ஆண்டவருடைய செயல்களை புரிந்து கொள்ளவே முடியாது. மிரியாமுக்கு, ஏழு நாட்கள் அவள் புறம்பாக இருக்க வேண்டிய நிலை வந்தது. ஆனால் அதே இடத்தில் மோசேயின் கீழ் அடங்கியிருந்தவர் யோசுவா.

இந்த பகுதியில் மோசேக்கு இன்னொரு மனைவி இருந்ததாக எழுதினோம். எத்தனை பேரால் அதை ஏற்றுக்கொள்ள முடிந்தது என்பது தெரியவில்லை. ஆனால் வரலாற்று ஆசிரியர்கள் கருத்துக்களை சமர்ப்பிக்க வேண்டியது எங்கள் பொறுப்பு.

முதல் கருத்து:

இக்கருத்து பரவலாக கூறப்பட்டாலும், ஏற்றுக்கொள்ள கூடியதா என்பது தெரியவில்லை. அதாவது, மோசேக்கு மூன்று மனைவிகள் இருந்ததாக கூறுகிறார்கள் சிலர். வேதத்தில் மோசேயின் மாமன் என்று இரண்டு இடத்தில், இரு வேறு பெயர்கள் கூறப்பட்டிருக்கும்.

இவ்விரு வசனங்களின்படி, மோசேக்கு எத்திரோ என்கிற மாமனாரும், ரெகுவேல் என்கிற மாமனாரும் மீதியான் தேசத்தில் இருந்ததாகவும்,  ஆகவே மீதியானிய பெண்கள் இருவரை மோசே திருமணம் செய்திருந்ததாகவும், அதன்பின் வருகிற வழியில் எத்தியோப்பிய தேசத்து பெண்ணை திருமணம் செய்ததாகவும் கூறுகிறார்கள். எனவே இந்த கருத்தின்படி மோசேக்கு மூன்று மனைவிகள்.

இரண்டாவது கருத்து

மோசே ஒரே ஒருவரைத் தான் திருமணம் செய்தார். அது சிப்போராள் என்று கூறுவார்கள். மோசே வாழ்ந்த எகிப்துக்கு கீழ்ப்பக்கத்தில்தான் எத்தியோப்பியா (கூஷ்) இருக்கிறது. ஆனால் மோசே திருமணம் செய்த பெண் எத்தியோப்பிய தேசத்தை சார்ந்தவர்.  சிப்போராளோ, மீதியான் தேசத்தை சார்ந்தவர்.

எனவே மோசேக்கு ஒரு மனைவி தான் என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் வேத அறிஞர்கள்.

மூன்றாவது கருத்து

The Hebrew clause עַל-אֹדוֹת הָאִשָּׁה הַכֻּשִׁית אֲשֶׁר לָקָח: כִּי-אִשָּׁה כֻשִׁית, לָקָח. (‘because of the Cushite woman which he married’ (literally took), ‘for he had married a Cushite woman’) strongly implies a recent marriage.

நேரடியான மொழிபெயர்ப்பில், தற்போது நடந்த திருமணத்தைக் குறித்து மிரியாம் சண்டை போட்டதாக தெரிகிறது.

நான்காவது கருத்து

மிரியாம் சிறு வயதிலேயே, மோசேயை நாணற்பெட்டியில் விடும்போது, எகிப்து பார்வோனின் குமாரத்தியிடம் சென்று, பிள்ளையை வளர்க்க, தன் தாயையே ஏற்பாடு செய்தவர். அவ்வளவு பாசமான மிரியாம், மோசே 40 வருடங்கள் திருமணம் செய்து வாழ்ந்து வந்த, சிப்போராளைப் பார்த்து இப்படி பேச அவசியம் இல்லை. 40 வருடம் கடந்து, பின்னர் மோசேயிடம் நீ திருமணம் செய்தது தவறு என்று கூற முடியாது. எனவே மோசே அப்போதுதான் திருமணம் செய்தார் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.

மறைமுக காரணம்

சிப்போராள் மீதியான் தேசத்தை சேர்ந்தவர்.

எனவே மீதியான் என்பது ஆபிரகாமின் வம்சம். அதாவது சேமின் சந்ததி. ஆனால் எத்தியோப்பியர்கள் என்பது கூஷ் இன மக்கள் என்று ஆங்கில வேதத்தில் உள்ளது. கூஷ் காமின் சந்ததி. கூஷ் நிம்ரோத்தைப் பெற்றான் என்ற வசனத்தின் விளக்கம் ஏற்கனவே பதிவிடப்பட்டது. எனவே எத்தியோப்பிய ஸ்திரீ காம் இனத்தை சேர்ந்தவர்.

நோவாவின் ஆசீர்வாதம், கானான் எல்லாருக்கும் அடிமையாய் இருப்பான் என்பது. சேமின் சந்ததியை தான் தேவன் ஆசீர்வதித்தார். எனவே தான் காம் சந்ததியை மிரியாம் வெறுத்ததாக கூறுவர்.

இதில் இன்னொரு சுவாரஸ்யமான விளக்கம் என்னவெனில், காம் இன மக்களை, மிரியாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், தேவன் அவர்களை ஏற்றுக்கொண்டார் என்பதன் அடையாளமாக எத்தியோப்பிய ஸ்திரீ உள்ளே வந்ததாக அறிஞர்கள் கருதுகிறார்கள். புறஜாதிகளையும் நான் ஏற்றுக்கொள்வேன் என்று தேவன் மறைமுகமாக கூறிய தருணமாக இது பார்க்கப்படுகிறது.

இஸ்ரவேலர் அழிக்க வந்த சந்ததி இவர்களே. கானான் தேசத்தில் இருந்த இந்த மக்களை வென்று தான் இஸ்ரவேலர் தங்கள் தேசத்தை சுதந்தரித்துக் கொண்டார்கள். அதாவது நோவாவின் ஆசீர்வாதம் அங்கே நிறைவேறியது. 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *