இஸ்ரேலின் புலனாய்வு பிரிவு அல்லது உளவுபடையின் பெயர் Mossad. பொதுவாக, உலக அரசியல் செய்திகளை படிப்பவர்களுக்கு Mossad பற்றி தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. ஒரு குட்டி நாடாக இருந்து கொண்டு, மற்ற நாடுகளை ஆட்டிப்படைக்கும் திறன் இந்த மொசாட் மூலமே இஸ்ரேலுக்கு கிடைத்தது. இந்த மொசாட் மற்றும் இஸ்ரேல் இணைந்து, மற்ற நாடுகளை கதற விட்ட கதையைத் தான் பார்க்க இருக்கிறோம். இன்று மொசாட் பற்றிய சிறு அறிமுகம்.
மொசாட் உறுப்பினர்கள் இஸ்ரேலில் இருப்பார்கள் என்று நினைத்தால் அது தவறு. எல்லா நாடுகளுக்குள்ளும் அவர்கள் இருப்பார்கள். ஒரு பெரிய கம்பெனியின் ஓனராக இருக்கலாம், அல்லது நம் பக்கத்து வீட்டு காரராக இருக்கலாம். அவ்வளவு உறுப்பினர்கள் யாருக்கும் தெரியாமல், எல்லா நாடுகளிலும் இருந்து மொசாடுக்காக வேலை செய்வார்கள்.
மொசாட் என்ன செய்வார்கள்? இஸ்ரேலுக்கு எதிராக யாராவது திட்டம் போட்டால் போதும், எப்படியாவது இஸ்ரேலின் காதுகளுக்கு வந்துவிடும். அவ்வளவுதான். அந்த திட்டம் போட்ட அனைவரும் எந்த நாடுகளில் இருந்தாலும், தேடிப் போய் கொன்று விடுவார்கள்.
இந்த இடத்தில் எனது தனிப்பட்ட கருத்து, அவர்கள் கொலை செய்வதால் கெட்டவர்கள் என்பது அர்த்தம் அல்ல. என்னோடு இஸ்ரேல் முதல் அத்தியாயத்திலிருந்து பயணம் செய்தவர்களுக்கு நிச்சயமாக தெரிந்து இருக்கும், அவர்கள் வாழ எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்று. இன்றும் போராடிக் கொண்டு தான் இருக்கிறார்கள், அவர்களுடைய தேசத்துக்காக. அசீரியரின் ராஜா கிமு722ல் சிறைபிடித்து போய், அவர்கள் தலைகளை வெட்டி, குவியலாக்கி மகிழ்ந்தான். அவர்கள் அலறும் ஓசையை இரசித்தான், என்பதில் ஆரம்பித்து, ஹிட்லர் வரை தங்கள் நாட்டுக்கு திரும்ப முடியாமல், வேறு தேசத்திலும் வாழ முடியாமல் கஷ்டப்பட்டார்கள். இன்றைக்கு அவர்கள் போராடவில்லை என்றால், மீண்டும் அதே போராட்டம் தொடரும். அதனால்தான் அவர்கள் போராடிக்கொண்டு இருக்கிறார்கள்.
அப்படியானால் கொலை செய்வது தவறில்லையா எனக் கேட்டால், கொலை செய்வது தவறுதான். ஆனால் இது யுத்தம். தேசத்துக்காக நடக்கும் யுத்தம். அதுவும் போக, அவர்கள் பழைய ஏற்பாட்டின் சத்தியத்தை இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளாமல், பழிக்கு பழி என்று இருக்கிறார்கள். அதனால்தான், தேவன் இஸ்ரவேலருக்காக தினமும் ஜெபிக்கும்படி கூறினார்.
நமது வரலாறில், முதல் உலக யுத்தம் நடைபெற காரணம் ஒரு தனிமனிதன் கொல்லப்பட்டதுதான். Franz Ferdinand என்பவர் கொல்லப்பட்டதால், Austria மற்றும் Serbiaக்கு இடையில் சண்டை. Serbiaக்கு ஆதரவாக Russia வரவும், Austriaக்கு ஆதரவாக Germany வந்து. இப்படியே உலக நாடுகள் Austria & Serbiaக்கு ஆதரவாக வந்ததுதான் முதல் உலக யுத்தம். இந்த யுத்தம் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டதால் முடிவுக்கு வந்தது. அந்த ஒப்பந்தத்தில், நிதி இழப்பீடு, ஆயுதம், ஜெர்மனியின் சில நிலங்கள், overseas colonies எல்லாவற்றையும், ஜெர்மனி இழப்பீடாக கொடுத்தது. இதோடு யுத்தம் முடிவுக்கு வந்தது.
பொதுவாக ஒரு யுத்தம் நடந்தாலே, அங்கு பஞ்சம், உயிரிழப்பு வரும். அதோடு ஜெர்மனி agreement காரணமாக நிறைய இழந்ததால், ஜெர்மனிக்கு பலத்த அடி. மக்கள், இராணுவ வீரர்கள் எல்லாரும் சோர்ந்து இருந்தனர். ஹிட்லர் ஒரு பெயிண்டர். அவர் முதல் உலக யுத்தத்தில் கலந்து கொண்டார். யுத்தம் முடிந்த பின்னர், தன் நாட்டில் சோர்வடைந்த வீரர்களுக்கு மேடை போட்டு பேச ஆரம்பித்தார். கொஞ்சம் கொஞ்சமாக வீரர்களை தட்டி எழுப்பினார். அப்படியே power அவர் கைக்கு வந்தது. அதன்பிறகுதான் யூத எதிர்ப்பு கொள்கையைக் கொண்டு வந்தார்.
யூதர்கள் அரசாங்க பணியில் இருக்கக்கூடாது. பிஸினஸ் பண்ணக்கூடாது. அவர்கள் வைத்திருக்கும் கடையில் ஜெர்மானியர்கள் எதுவும் வாங்கக்கூடாது. யூத பிள்ளைகள், பள்ளியில், கல்லூரியில் படிக்கக்கூடாது என பல சட்டம் கொண்டுவந்தார். மக்களை பிரிக்க ஆரம்பித்தார். Pure Germanian மக்கள் தனியாக, யூதர்கள் தனியாக என பிரித்தார். தாத்தா பாட்டி யாராவது ஒருவர் யூதனாக இருந்தாலும், அவனை யூதன் என முத்திரை குத்தினார். ஊனமுற்றவர்களை தனியே பிரித்தார். 1939-1945 இரண்டாம் உலக யுத்தம் நடக்கிறது. இதில் முக்கியமாக யூதர்கள் தான் கொல்லப்பட்டார்கள். அவர்கள் தான் அவ்வளவு பாடுகளையும் அனுபவித்தார்கள். 60,00,000 யூதர்களை கொலை செய்தார் ஹிட்லர். பெண்கள், கர்ப்பிணிகள், பிள்ளைகளை விஷவாயு அறையில் அடைத்து கொலை செய்தார். ஆண்களை வேலை செய்ய சொல்லி, ஓய்வு கொடுக்காமல் கொலை செய்தார்.
உங்களுக்கு புத்தகம் படிக்க நேரம் இருக்காது. ஆனால் இதைக் கேட்க நேரமிருந்தால் நிச்சயமாக கேளுங்கள். ஒரு யூதன் எவ்வளவு கஷ்டப்பட்டு தன்னை காப்பாற்றிக் கொள்ள முயற்சி செய்திருக்கிறான் என்பதை அறியலாம்.
இந்த 1930-1947 வரை, உலகம் முழுவதிலும் சிதறியிருந்த யூதர்களை, இஸ்ரேலுக்கு கொண்டு செல்ல பாடுபட்ட ஒரு நிறுவனத்தின் பெயர் தான் mossad. அப்போது இஸ்ரேல் என்ற நாடு கிடையாது, ஆனால் பாலஸ்தீனியரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி, அனேக இடங்களைக் கைப்பற்றி இருந்தார்கள். இப்போது இருக்கும் மொசாட் அதுதானா என்று கேட்டால், நிச்சயமாக இல்லை. ஆனால் அந்த நிறுவனத்தின் பெயரை வைத்துக்கொண்டார்கள்.
யுத்தத்துக்கு பிறகு, ஐநா சபை தூண்டுதலின் பேரிலும், அமெரிக்காவின் ஆதரவிலும், இஸ்ரேல் உருவாக்கப்படுகிறது. பாலஸ்தீன தேசத்தை இராண்டாகப் பிரித்தார்கள், பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரவேல் என் பிரிக்கப்பட்டது. 1948 மே14ல் இஸ்ரேல் உருவாகியது, அடுத்த நாளே, மே15ல் சுற்றிலுமிருந்த அரபு நாடுகள், இஸ்ரேலின் பேரை உலக வரைபடத்திலிருந்து நீக்க வேண்டும் என் போருக்கு வந்தது. ஆனால், அந்த யுத்தத்தில் இஸ்ரேல் வெற்றி பெற்றது. அதைப்பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.
இப்போது ஜூன் மாதம், முதல் PM David Ben Gurion ஒரு உளவு நிறுவனம் அமைக்க வேண்டும். அது மிகவும் வலுவானதாக இருக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதில் 3 பிரிவுகள் இருக்க வேண்டுமென உத்தரவிட்டனர்.
1 – Aman – Bureau of Military Intelligence
2 – Mosad – Political Department of Foreign Affairs
3 – Shin Bet – Department of Security
இந்த 3 பிரிவையும் சேர்த்து மொசாட் என்று சொல்வார்கள். “Central Institute for Intelligence and Special Operations” என்பது மொசாட்டின் விளக்கம். இந்த மொசாட்டின் தலைவர் இஸ்ரேல் PMக்கு மட்டும்தான் Report செய்ய வேண்டும். வேறு யாரும் அவரை கேள்வி கேட்க முடியாது.
1948,1949ல் அமெரிக்காவின் உளவுபடை Central Intelligence Agency(CIA), mosaadக்கு training கொடுத்தார்கள். Reuven Shiloah (Hebrew: ראובן שילוח; 20 December 1909 – 10 May 1959) was the first Director of the Mossad from 1949 to 1953.
தங்கள் வாழ்வில் அடிபட்டவர்கள், சுலபமாக யாரையும் நம்ப மாட்டார்கள். அதேதான் இஸ்ரேல் தேசமும். எந்த தேசத்தையும் இஸ்ரேல் நம்பாது. அமெரிக்கா தான், இஸ்ரேலுக்கு உளவுபடை பயிற்சி கொடுத்தது. ஆனால் அந்த அமெரிக்காவுக்குள்ளேயே ஆளை வைத்து, உளவு பார்த்தது இஸ்ரேல். அமெரிக்காவின் இரகசிய கோப்பு, Jonathan என்பவர் மூலமாக இஸ்ரேலுக்கு கிடைத்தது. ஆனால் CIA அதைக் கண்டுபிடித்து விட்டது. இஸ்ரேல் அமெரிக்காவிடம் உண்மையை ஒத்துக்கொண்டு, அந்த Jonathanஐ விடுவிக்க கேட்டது. ஆனால் கிட்டத்தட்ட 12 வருடங்கள் அமெரிக்காவின் சிறையில் இருந்துவிட்டு, பின்னர் விடுவிக்கப்பட்ட Jonathan, இப்போது இஸ்ரேல் குடியுரிமை பெற்று அங்கே வாழ்கிறார்.
இந்த மொசாட் எவ்வளவு கொடூரமான வேலை செய்யும் என்பதை, நாம் வரும் பதிவுகளில் பார்க்க இருக்கிறோம். ஈரானில் அனுஆயுதம் தயாரிக்க சில விஞ்சானிகள் வேலை பார்த்தனர். வெளியே யாருக்கும் அவர்கள் Scientist என்பது கூட தெரியாது. ஆனால் 4 பேரையும் வரிசையாக கொன்று போட்டது மொசாட். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், எந்த கொலை செய்தாலும், மொசாட் தான் செய்தது என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு செய்யும். ஈரானில் கொலை செய்ததற்கு காரணம், ஈரான் அனுஆயுதம் தயாரித்தால், முதலில் யுத்தம் செய்வது இஸ்ரேலுடன் தான். அதனால்தான் ஆரம்பிக்கும்போதே நிறுத்தி விட்டார்கள். இப்படி கொடுமையான வேலைகள் செய்தாலும், சாகச வேலையும் செய்வார்கள் மொசாட் பிரிவினர். வரும் பதிவுகளில் சிலவற்றைப் பார்க்கலாம்.
Leave a Reply