நிம்ரோத்

பூமியில் இராட்சதர்கள் பெருகி, மனிதர்களை வாழ விடாமல் செய்ததாலும், பூமியில் பாவம் பெருகி விட்டதாலும், தேவன் மனிதர்களை அழிக்க முடிவு செய்தார். ஆனாலும் பரிசுத்த வித்து இருந்த நோவா மற்றும் அவரது 3 மகன், 3 மருமகள், மனைவி என்று 8 பேரை பேழையில் வைத்து பாதுகாத்தார் என்று பார்த்தோம். நோவாவுடைய மகனான காம் ஓரினச்சேர்க்கை பாவத்தில் ஈடுபட்டதால், தேவன் ஆசீர்வதித்த பூமியில் சாபத்தை கொண்டு வந்தார் நோவா. 

நோவா சபித்த காமுடைய குமாரன் தான் கூஷ். நோவா தன் மகனாகிய காமை சபிக்கவில்லை. காமின் குமாரன் கானானைத்தான் சபித்தார். ஏனெனில் தேவன், ஏற்கனவே நோவாவையும், அவன் மூன்று குமாரரையும், அவர்கள் மனைவிகளையும் ஆசீர்வதித்திருந்தார். நோவாவால் மகனை இப்பொழுது சபிக்க முடியாது, எனவே நோவா பேரனுக்கு சாபத்தைக் கொடுத்தார்.

நம்மில் அநேகர் இந்த வேத வசனத்தை வாசிக்கும் போது, கர்த்தருக்கு முன்பாக பலத்த வேட்டைக்காரன் நிம்ரோத் என்று ஈசியாக வாசித்து விட்டு, கடந்து செல்கிறோம். ஆனால் உண்மையில் இந்த நிம்ரோத் என்பவன் யார்? நிம்ரோத் என்பதற்கு ‘எதிர்ப்பவன்’ ‘நாம் புரட்சி செய்வோம்’ என்று அர்த்தம். உண்மையில் நிம்ரோத் மனிதர்களின் ஆத்துமாவை பிடித்து அழித்தவன். லூசிபரின் திட்டங்களை நிறைவேற்றியவன். கொடுங்கோலான சர்வாதிகாரி. பாபிலோன் என்ற பெரிய ராஜ்யத்தின் ஸ்தாபகர். இப்போது பாபிலோன் என்பது சர்வாதிகார நாடு ஈராக். சதாம் ஹுசைன் என்ற சர்வாதிகாரி, நிம்ரோத்தை நினைவுபடுத்தியவர்.

இதுவரை நோவாவின் சந்ததியாகிய மக்கள், கூட்டமாக ஒரே இடத்தில் வாழ்ந்தார்கள். கர்த்தர் நீங்கள் பலுகிப் பெருகி பூமியை நிரப்புங்கள் என்று கட்டளை கொடுத்திருந்தார். அவரது கட்டளையை முறியடிக்க சாத்தான் நினைத்தான். மக்கள் ஒரே இடத்தில் வாழ்ந்தார்கள். முதலில் ஆதாமிடம், பலுகி பெருகி பூமியை நிரப்ப சொன்னார், அது தோல்வியடைந்து இப்போது நோவாவிடம் பூமியை நிரப்புங்கள் என்று சொல்லியிருக்கிறார்.

 தேவனுடைய பூமியை நிரப்புகிற கட்டளையை மறக்க வைத்த சாத்தான், ஒரே ராஜ்யமாக மக்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வர நினைத்தான். அதற்காக அவன் தெரிந்து கொண்டவன் தான் நிம்ரோத். எல்லா மக்களையும் ஒரே தேசமாக தனது ஆட்சிக்குள் கொண்டுவர முடியும் என்று நிம்ரோத் எண்ணினான். தேவனுக்கு மேலாக தன் சிங்காசனத்தை உயர்த்த எண்ணிய லூசிபரின் ஆசையை நிறைவேற்ற முனைந்தவனாக, வானத்தைத் தொடும் பாபேலை கட்ட ஆரம்பித்தான்.

பூமியை நிரப்புங்கள் என்பது தேவ திட்டம், பூமியில் சிதறிப் போய்விடக் கூடாது என்பது சாத்தானுடைய திட்டம். அவர்கள் கட்டிய நகரம்தான் பாபிலோன். கட்டிய கோபுரம் பாபேல் கோபுரம். எல்லா இராட்சதரும் அழிந்து போய் விட்டார்கள், பரிசுத்த வித்தாகிய நோவா குடும்பம் மட்டும் தான் பூமியில் இருந்தது. பின்னர் எப்படி மீண்டும் பாவம் வந்தது? நோவா காமின் குமாரனாகிய கானானை சபித்தார் அல்லவா, அதன் மூலமாக பாவம் வந்து விட்டது. கானானுக்கு எப்படி தெரிந்தது பழைய பாவங்கள்? தூதர்கள் உலக அழிவுக்கு முன் ஜனங்களிடம் வந்து, நிறைய காரியங்கள் கற்றுக் கொடுத்தாக பார்த்தோம் அல்லவா? அவை எல்லாம் அங்கிருந்த குகையில் எழுதப்பட்டிருந்ததை கானான் வாசித்து, அதன் மூலமாக மீண்டும் பூமியில் பாவத்தை பரப்ப ஆரம்பித்தான். பெற்றோரின் வார்த்தைகள் பிள்ளைகள் வாழ்வில் நிச்சயமாக நடக்கும் என்பதன் ஆதாரம் கானான்.

பாபிலோனைக் கட்டிய நிம்ரோத், பாபிலோனில் மக்கள் வழிபடுவதற்கு அநேக விக்கிரகங்களை உண்டு பண்ணினான். ஜோதிடம் சூரிய வணக்கம் என்பவற்றை மக்கள் பின்பற்ற காரணமாய் இருந்தவன் நிம்ரோத். உலகின் எல்லா பொய்யான வழிபாடுகளும், மார்க்கங்களும் பாபிலோனிலிருந்தே உற்பத்தியாகின. வேதாகமம் பாபிலோனை சாத்தானின் நகரமாக சித்தரிக்கிறது. சாத்தான் மனிதக்குலத்தை அழிக்க விரும்பி, பாபிலோன் என்னும் ராஜ்யத்தை உருவாக்கினான். தன் திட்டத்திற்கு நிம்ரோத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தினான். நானே உலக சாம்ராஜ்யத்தின் தலைவன் என நிம்ரோத் கூறினான். பாபிலோனிய தெய்வங்களில் முக்கியமானது முர்தக்(Marduk). இந்த விக்கிரக வழிபாடாகிய போலிசமயம் உலகம் எங்கும் உள்ள எல்லா மனித சமயத்துக்கும் தாய் சமயம்.

 நிம்ரோத்தின் கனவு பாபேல் கோபுரம் ziggurat. Pyramidal stepped temple tower. தங்களுக்கு பெயர் உண்டாக நிம்ரோத்தும் அவன் மனைவி சிம்ராஸ்ம் இணைந்து கட்டிய கோபுரம் தான் பாபேல் கோபுரம். தண்ணீரால் தங்கள் முன்னோரை தேவன் அழித்து போட்டதை அறிந்திருந்த நிம்ரோத், இனி தண்ணீர் மூலமாக அழிவு வராதபடி, வானை எட்டுமளவு கோபுரம் கட்ட நினைத்தான். ஆனால், மண்ணினால் கட்டினால், கோபுரம் இடிந்து விடும், எனவே மண்ணை சுட்டு செங்கல் கண்டுபிடித்தான். கோபுரம் கட்ட ஆரம்பித்தான்.  அந்தக் கோபுரத்தில் உள்ளே 12 zodiac sign இருந்ததாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். அங்கே இருந்து உலகுக்கு பரவியது தான், மந்திர வித்தைகளும், விக்கிரகங்களும்.

 நிம்ரோதைப் போலவே அவன் மனைவி சிம்ராசும், மேட்டிமை, பெருமை நிறைந்தவர். சிம்ராஸ்க்கு சிலை செய்து மக்களை வணங்க செய்தான். அவளுக்கு அஷ்டரோத் என்றும் பெயர், அதன் அர்த்தம் கோபுரங்களைக் கட்டிய பெண் தெய்வம். கொடூரமாக வேலை வாங்க, பல தந்திரங்களை கையாண்டார்கள். ஒரு குறிப்பிட்ட தூரம் கோபுரம் உயர்ந்தவுடன், “ஏய் கடவுளே, பார்த்தீரா? உம் பரலோகத்தை எட்டுமளவு ஒரு கோபுரம் கட்டப் போகிறேன். இனி எப்படி நீர் மழையை அனுப்பி இந்த உலகத்தை அழிக்கப் போகிறீர் என்று பார்க்கலாம்” என்று கடவுளுக்கே சவால் விட்டான் நிம்ரோத். நிம்ரோத் தான் நினைத்தபடியே பெரிய கோபுரத்தை கட்ட ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் அந்த கோபுரம் உயரமாக ஆரம்பிக்கும் போது, எல்லா மக்களையும் அழைத்து, “இனி எந்த கடவுள் தண்ணீரை அனுப்பி நம்மை அழிக்கப் போகிறார் பார்க்கலாம்… இனி எவ்வளவு தண்ணீர் வந்தாலும், நம்மால் இந்த கோபுரத்துக்குள் சென்று நம்மை காப்பாற்றிக் கொள்ள முடியும். இனி நமக்கு அழிவு என்பதே கிடையாது. இந்த பூமி முழுவதும் எனக்கு சொந்தமானது. நானே இதன் ராஜா” என்று சொல்லி புது ஆட்சி அமைப்பையும், புது மதத்தையும், புதிய சிலை வழிபாடுகளையும் உருவாக்கினான் நிம்ரோத்.

கோபுர கட்டிட வேலையின் இடையில் நிம்ரோத் இறந்து விட்டான். அதுவும் பாதி வயதில் மரித்துவிட்டான் என்பதால், இனி மக்கள் தன் பேச்சைக் கேட்க மாட்டார்கள் என்று நினைத்த சிம்ராஸ், “நிம்ரோத் எங்கேயும் போகவில்லை. சூரியனுக்கு போய் சூரியகடவுள் ஆகிவிட்டார், அந்த சூரிய ஒளியின் மூலம் என் வயிற்றில் மீண்டும் பிள்ளையாய் பிறப்பார்” என்று மக்களை ஏமாற்றி நம்ப வைத்தாள். பின்னர் கள்ள உறவின் மூலம் ஒரு குழந்தைக்குத் தாயானாள். மக்களிடம், ‘நிம்ரோத் என் கனவில் தோன்றி, என் வயிற்றில் பிறப்பதாகக் கூறினார்’ என்று மக்களை ஏமாற்றி, மீண்டும் பாபேல் கோபுரத்தைக் கட்ட வைத்தவள் சிம்ராஸ். அவளுக்கு குழந்தை பிறந்த பிறகு, அவள் குழந்தையுடன் இருக்கும் சிலையை நகரத்தில் ஆங்காங்கே வைத்து, மக்களை வணங்க வைத்தவள். பெண்களை பலவந்தம் பண்ணி விபச்சாரத்தில் ஈடுபடுத்தினாள். கோவில்களில் விபச்சாரம் நடத்துவது அறிமுகப்படுத்தினாள்.

ஒரே இடத்தில் மக்களை ஒரே ராஜ்யமாக அடைக்க நினைத்ததால், தேவன் பாஷைகளைத் தாறுமாறாக்கினார். மக்கள் பூமியெங்கும் சிதறிப் போனர். ஆனால் மக்களுடன் பாபிலோனிலிருந்த விக்கிரக வழிபாடும், வேசித்தனமும் இணைந்து சென்றது. செமிராமிஸ் வயிற்றில் மீண்டும் நிம்ரோத் பிறப்பான் என்று கூறிய கதை, பிரிந்து சென்ற எல்லா நாடுகளுக்கும் போனது. ராசி பலன், ஜோதிடம் எல்லாம் மக்களுடன் வேறு நாடுகளுக்கு சென்றது. இன்றும் எல்லா நாடுகளிலும் இருக்கிறது. எனவே தான், அவன் கர்த்தருக்கு முன் பலத்த வேட்டைக்காரனான நிம்ரோத்.

இந்த நிம்ரோத் ஆரம்பித்த ஒரே ராஜ்யம், ஒரே மொழி, ஒரே கடவுள் என்பது அன்றோடு அழியவில்லை. இன்றும் இருக்கிறது. நிம்ரோத் விட்டுச் சென்ற அதே கோபுர வடிவில் தான், European Union HQ உள்ளது. அவர்கள் வெளியிட்ட ஒரு போஸ்டரில், பாபேல் கோபுர படமும், ஒரு கிரேன் அதற்கு பின்னாக இருப்பதை போலவும் வெளியிட்டார்கள். அதற்கு அர்த்தம் கோபுரம் இன்றும் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த பாபேல் கோபுரத்தைக் கட்டியதால் பாஷைகள் பிரிந்தது. இந்த போஸ்டரில், Many tongues, One Voice என்று எழுதப்பட்டிருக்கும். உலக நாடுகளின் சமாதானத்துக்காக இந்த யூனியன் இருக்கிறது என்று சொல்லி, இதன் கீழ் உலக நாடுகள் இணைந்து கொண்டிருக்கிறது, நாமும் கூட சம்பந்தமே இல்லாமல் Union of India என்று தான் Driving Licence கூட பெறுகிறோம். நிம்ரோத் ஆரம்பித்தது இன்றும் உள்ளது. கர்த்தரின் வருகை வரை இருக்கும்.

இப்படிப்பட்ட கல்தேயர் பட்டணத்தில் இருந்து ஆபிரகாமைத் தெரிந்தெடுத்து, அவரை எருசலேமுக்குக் கொண்டு வந்தார் தேவன். பாபிலோன் தேசம் தான் கல்தேயர் தேசம். அத்தேசத்திலே சேமின் சந்ததி இருந்து விட்டதாகவும், மற்ற சந்ததிகள் உலகம் முழுவதும் பிரிந்து போனதாகவும் கூறுகிறார்கள். இந்த நோவாவுடைய 3 குமாரரின் மூலமாக, உலகமெங்கும் மக்கள் பரவ ஆரம்பித்தார்கள்.

பாபிலோனில் பிறந்து, விக்கிரகம் செய்யும் தொழில் செய்து வந்த ஆபிரகாமின் வழித்தோன்றல் தான் இஸ்ரவேலர். வரும் பதிவுகளில் தொடர்ச்சியாக பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *